இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதயம் கேட்குமே - 19 அனைத்து பாகங்கள் படிக்க
By Kadharasigai Published on 02-07-2024

Total Views: 659

இதயம் - 19

தன் அன்னை காலில் விழுந்து வணங்குவது அஞ்சனா என்று நினைத்து வாசுவும் சென்று தன் அன்னை காலில் ஜோடியாக விழுந்தான். மல்லிகா தன் மூத்த மகனின் செயலை கண்டு நகைத்தவாறே "டேய் என்னடா பன்ற" என்று கேட்டார். அருகில் இருந்தவளோ வாசு தன்னோடு சேர்ந்து மல்லிகா காலில் விழுவதை கண்டதும் படக்கென நிமிர்ந்து விட்டாள். "கோச்சிக்காம ஜோடியா ஆசிர்வாதம் பன்னுமா" என்று அருகில் இருப்பது அஞ்சனா என நினைத்து அவள் கையை பிடித்து கீழே இழுத்தான். "ஆஆஆ அம்மா" என்று வாசுவின் இழுப்பில் பொத்தென தரையில் விழுந்தவளின் குரலை அடுத்து "வாசு" என்ற கோபக் குரல் அஞ்சனாவின் குரல் வாசலில் கேட்டது. 'என்னடா வாசல்ல குரல் கேக்குது' என்ற குழப்பத்துடன் வாசலை பார்த்த வாசு அதிர்ந்து தன் அருகில் விழுந்தவளை பார்த்தான். யாழிசை விழுந்ததில் முகத்தை சுருக்கி வாசுவை முறைத்தவாறு எழுந்து நின்றாள். மல்லிகாவும் யாழிசைக்கு கை கொடுத்து தூக்கி விட்டார். "ஏன்டா இப்படி பன்ற" என்று மல்லிகா தன் மகனை கண்டிப்புடன் கேட்டவாறு யாழிசையின் கையை நீவி விட்டு "அடி எதும் பட்டுச்சாம்மா" என்று நலம் விசாரித்தார். "அதெல்லாம் ஒன்னும் ஆகலம்மா" என்று யாழிசை மென்மையாக பதில் கூறினாள். 

"என்ன வாசு இதெல்லாம் இத பாக்க வைக்க தான் என்னை வர சொன்னியா" என்று அஞ்சனா வாசு கூறியதற்காக புடவையை கட்டிக் கொண்டு வந்து நின்று கேட்டாள். "அதில்ல அஞ்சு ... அது நீன்னு நினைச்சி" என்று சமாதானமாக பேசியவாறே அவள் அருகில் சென்றான். "அவன் கிடக்கறான் நீ வாம்மா நா உனக்கு காபி போட்டு தரன்" என்று மல்லிகா யாழிசையை சமையலறைக்கு அழைத்துச் சென்றார். பரத் அனைத்தையும் பார்த்து புன்னகைத்தவாறே அவனும் சமையலறைக்குள் புகுந்துக் கொண்டான். பிரீத்தி கல்லூரிக்கு தயார் ஆகி வந்து வெளியில் அஞ்சனாவுடன் வாசு சண்டையிட்டுக் கொண்டிருப்பதை கண்டதும் 'ஐய்யய்யோ' என்று கதறியவாறே சமையலறை சென்றாள். அடுத்து பொன்னுரங்கமும் வாசுவை புருவமுடிச்சுடன் பார்த்தவாறு சமையலறையில் பேச்சு சத்தம் கேட்டதும் அங்கு சென்றார். 

"மல்லி யார்ம்மா வெளில வாசு எதுக்காக அந்த பொண்ணு கிட்ட சண்டை போட்டுட்டு இருக்கான்" என்று கேட்டவாறே நுழைந்தவர் உள்ளே இருந்த யாழிசையை கண்டதும் திகைத்து போனார். "இது ... இது இசை ஸ்டார்ஸ் ஓனர் யாழிசை தான" என்று பொன்னுரங்கம் ஆச்சரியத்துடன் கேட்க யாழிசை புன்னகையுடன் அவர் காலில் விழச் சென்றாள். பொன்னுரங்கம் பதட்டத்தில் பின்னால் நகர்ந்து "ஏம்மா நீ எவ்வளவு பெரிய ஆள் நீ போய் என் கால்ல விழலாமா" என்று கேட்டாள். "வயசுக்கு தான் அங்கிள் மரியாதை தரனும் பணத்துக்கும் வசதிக்கும் இல்லை" என்று கூறிய யாழிசை பொன்னுரங்கம் காலில் விழுந்து ஆசி பெற்றாள். 

"வாவ் நீங்க எப்படி மேக்கப் போடாமலே இவ்வளவு அழகா கலர்ரா இருக்கிங்க?" என்று ப்ரீத்தி ஆச்சரியமாக யாழிசையை பார்த்தவாறே கேட்டாள். "உன்னை மாதிரி கண்டத முகத்துல தேச்சிக்காததுனால" என்று பரத் யாழிசைக்கு முன் பதில் கூறினான். ப்ரீத்தி "அம்மாஆஆஆ" என்று ராகமிழுக்க யாழிசை சிரித்தவாறே "நா உனக்கு அந்த சீக்ரெட் சொல்லி தரன் ஆனா நீ அதை யார் கிட்டையும் ஷேர் பன்னக் கூடாது" என்று கூற ப்ரீத்தி வேகமாக கூற மாட்டேன் என்று தலையை ஆட்டினாள். "சரி வா" என்று யாழிசை ப்ரீத்தியை அணைத்தவாறு அழைத்துக் கொண்டு வெளியில் சென்றாள். இன்னமும் வெளியில் வாசு அஞ்சனாவை சமாதானம் செய்து முடிக்கவில்லை. யாழிசையும் அதை கண்டுகொள்ளாமல் சென்று விட்டாள். 

"பணம், பதவி, பேர், புகழ்ன்னு எல்லாம் இருக்க பொண்ணு இப்படி இருக்கு ஆச்சரியமா இல்லை" என்று பொன்னுரங்கம் கேட்க மல்லிகாவும் "ஆமாங்க முதல்ல கார் வந்ததும் நா வாசு லவ் பன்ற பொண்ணுன்னு தான் நினைச்சன் ... ஆனா யாழு இறங்கி செருப்பை வெளியில கழட்டி விட்டு உள்ள வரவுமே எனக்கு ரொம்ப பிடிச்சி போச்சி ... வாசல்ல ஒரு நொடி அந்த பொண்ணு நின்னு நம்ம செருப்பெல்லாம் வெளியே இருக்கவும் அந்த பொண்ணு செருப்பை கழட்டி விட்டு உள்ள வந்துச்சி ... நம்ம குடும்ப போட்டோவ ஹால்ல பாத்துட்டு அழகா சிரிச்சிட்டு ஆச்சரியத்துல புருவத்தை உயர்த்துச்சி பாருங்க எனக்கு அந்த பொண்ண ரொம்ப ரொம்ப பிடிச்சிருச்சி" என்று யாழிசையை பாராட்டினார். "நீங்க யாழுவ பாராட்னது போதும் போய் உங்க மூத்த மகனை கொஞ்சம் பாருங்க" என்று பரத் கூறவும் இருவரும் வெளியில் சென்றனர். 

"அஞ்சு புரிஞ்சிக்கோ அஞ்சு ... நா அது நிஜமாவே நீன்னு நினைச்சி தான் பன்னன்" என்று வாசு இவ்வளவு நேரமும் கூறியதையே திரும்பக் கூறினான். அஞ்சனா அதை நம்பாமல் "நீ என்னை அசிங்கப்படுத்த தான் எல்லாம் பன்ற வாசு" என்று கூறினாள். "இரண்டு பேரும் கொஞ்சம் சண்டை போடாம இருக்கிங்களா" என்று பொன்னுரங்கம் அதட்டவும் வாசு அமைதியாக தன் தந்தையை பார்த்தான். அஞ்சனா ஏதோ பேச போக வாசு அவள் கையை பிடித்து அவள் பேச்சை தடுத்தான். "இப்படி நீங்க சண்டை போட்டுக்கறதா இருந்த இங்க எதுக்கு வரனும் ... வெளில போய் போடுங்க" என்று பொன்னுரங்கம் கூற வாசு "அப்பா அப்பா சாரிப்பா ... இது தான் அஞ்சனா" என்று கூறியவன் அஞ்சனா கையை பிடித்து இழுத்து தன் தந்தை காலில் விழச் சென்றான். "வாசு நா யார் கால்லையும் விழுந்ததே இல்லை" என்று அஞ்சனா மெதுவாக கூறினாள். "இப்ப நீ விழுந்து தான் ஆகனும் அஞ்சு" என்று பற்களை கடித்தவாறு கூறிய வாசு தன் தந்தையிடம் ஆசி பெற்றப்பின் புன்னகையுடன் எழுந்து நின்றான். "அங்கிள் ஆசிர்வாதம் வாங்கனவங்களை வெறும் கையால வாழ்த்தக் கூடாது ... இந்த ஸ்வீட்ட கொடுங்க" என்று தட்டு நிறைய ஸ்வீட்டுடன் பொன்னுரங்கம் அருகில் நின்று தட்டை நீட்டினாள். பொன்னுரங்கமும் அதை எடுத்து புன்னகையுடன் தன் மகனிடம் நீட்ட வாசு வாங்கிக் கொண்டான். ஆனால் அஞ்சனா முகச்சுழிப்புடன் நின்று விழித்தாள். 

யாழிசை அவளின் முகபாவனையை பார்த்து "ஏன் அஞ்சனா இந்த ஸ்வீட் பிடிக்கலையா ... பிடிக்கலன்னா கூட பரவால்லை வாங்கிக்கோ அங்கிள் ஆசிர்வாதத்தோட தரார் இல்லை" என்று கூற அஞ்சனாவும் வேறு வழி இல்லாமல் வாங்கிக் கொண்டாள். "உனக்கு இதெல்லாம் கூட தெரியுமாம்மா" என்று பொன்னுரங்கம் ஆச்சரியத்துடன் கேட்க "அம்மா இருந்த வரைக்கும் அவங்க கால்ல நானும் அண்ணனும் விழும் போதெல்லாம் அம்மா இப்படி தான் ஸ்வீட் கொடுப்பாங்க" என்று யாழிசையும் கூறினாள். அங்கு அஞ்சனா என்ற ஒருவளும் வாசு என்கிற ஒருவனும் இருப்பதையே மறந்து பொன்னுரங்கம் இனிப்புடன் யாழிசையுடன் பேசியவாறே நகர்ந்தார். 

"அப்பா" என்று வாசு தயக்கத்துடன் அஞ்சனாவை பார்த்தவாறே அழைத்தவன் பின் தன் தாயை பார்த்தான். "உட்காரும்மா காபி கொண்டு வரன்" என்று மல்லிகா புன்னகையுடன் கூறி விட்டு உள்ளேச் சென்றார். "ஐய்யய்யோ வேணா ஆன்ட்டி பரவால்ல நா வீட்ட சுத்தி பாக்கறன்" என்று அஞ்சனா கூற மல்லிகா "சரிம்மா வாசு வீட்ட சுத்தி காட்டு டா" என்று கூறினார். வாசுவும் அஞ்சனாவை மேல் தளத்திற்கு அழைத்துச் சென்றான். வாசு தனதறைக்கு அஞ்சனாவை அழைத்துச் சென்று "அவ எதுக்காக என்ன ப்ளானோட இங்க வந்திருக்கான்னு எனக்கு நிஜமாவே தெரியாது அஞ்சு ... நானும் உன்னை மாதிரி தான் அவ மேல செம கடுப்புல இருக்கன்" என்று கோபமாக கூறினான். "அவளை விடு உங்க வீட்ல இருக்கவங்க ஒருத்தர் கூட என்னை ஒரு விருந்தாளியா ஏன் ஒரு மனுஷியா கூட பாக்கல ... அவங்க என்னை அவாய்ட் பன்றாங்க வாசு ... எனக்கென்னவோ அவங்க நம்ம கல்யாணத்துக்கு ஒத்துப்பாங்கன்னு சுத்தமா நம்பிக்கையே இல்லை" என்று கூறினாள். "அதெல்லாம் என் விருப்பத்த மீறி என் வீட்ல எதுமே செய்ய மாட்டாங்க அஞ்சு கவலைய விடு" என்று வாசு ஆறுதல் கூறினான். 

அஞ்சனாவின் கைப்பேசி சினுங்க அழைப்பை ஏற்ற அஞ்சனா பால்கனிக்கு சென்று நின்று பேசினாள். வாசு பால்கனி வாயிலில் நின்றிருந்தான். அப்பொழுது அறை கதவை திறந்துக் கொண்டு யாழிசை உள் நுழைந்தான். கதவு திறக்கும் சத்தத்தில் திரும்பிய வாசு துப்பட்டாவை உதறியவாறே உள்ளே நுழைந்த யாழிசையை கண்டதும் அஞ்சனாவை திரும்பி பார்த்தான். அஞ்சனா மும்மரமாக கைப்பேசியில் பேசிக் கொண்டிருக்கவும் வாசு வேகமாக உள்ளே சென்று யாழிசை உள்ளே நுழையும் முன் தடுத்து நிறுத்தினான். "நீ இங்க என்ன பன்ற" என்று ழாசு கேட்கும் முன்பே யாழிசை கேட்கவும் வாசு அவளை கொடூரமாய் முறைத்தான். "நா கேக்க வேண்டிய கேள்விய நீ கேக்கற" என்று வாசு கூற யாழிசை "அப்போ இது பரத் ரூம் இல்லையா ... சாரி" என்று கூறியவள் வெளியில் செல்லாமல் மீண்டும் உள்ளே நகரவும் வாசு அதிர்ந்து அவளின் வழியை மறைத்தான். "என்ன" என்று யாழிசை கேட்க "நா கேக்க வேண்டிய எல்லாம் நீ கேட்கறதால நீ ரொம்ப ஸ்மார்ட்ன்னு நினைக்காத ... உன்னோட ப்ளான் என்னன்னு எனக்கு புரிஞ்சி போச்சி ... உனக்கும் எனக்கும் தொர்ப்பு இருக்குன்னு அஞ்சனாவுக்கு தப்பா போட்ரே பன்னி என்னையும் அவளையும் பிரிக்க பாக்கற அப்படி தான" என்று வாசு கேட்க யாழிசை மார்பின் குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு வாசுவை நேருக்கு நேர் பார்த்தவாறு "ஆமா" என்று கூறினாள். வாசு யாழிசையை கொலைவெறியுடன் அவள் கழுத்தை நெறிக்க கையை கொண்டுச் செல்ல யாழிசை அசையாமல் நின்றாள். 

"நா உனக்கு ஒரு ஓப்பன் சேலன்ஜ் விட்றன் மிஸ்ரட். வாசுதேவன் ... உன் அருமை காதலி மேலையும் உன் ஒன்னுமில்லாத காதல் மேலயும் உனக்கு நம்பிக்கை இருந்தா என் கிட்ட சிரிச்சி பேசி உன் ஆள் அதை பார்த்து அவ கோவப்படாம இருக்கறளா பாப்போமா ...அப்படி மட்டும் அவ கோவப்படாம இருந்துட்டா நானே அங்கிள் ஆன்ட்டிய சமாதானம் பன்னி உனக்கு கல்யாணம் பன்னி உன்னை ஹனிமூன்க்கே அனுப்பி வைக்கிறன்" என்று யாழிசை கூற வாசு "நீ சொல்ரத நா ஏன் செய்யனும் முடியாது முதல்ல ரூம்ம விட்டு வெளில போ" என்று கூறினான். "ஓ .. ரூம்ல இருந்தாவே சண்டை தானா அப்போ நா கிளம்ப மாட்டன்" என்று யாழிசை அங்கேயே நின்றாள். "சொல்லிட்டே இருக்கன்" என்று வாசு யாழிசையின் தோளை பிடித்து இழுத்து கதவை திறந்து தள்ள முயன்றான். அப்பொழுது சரியாக அஞ்சனா அறைக்குள் நுழையவும் இருவரும் செல்லமாய் சண்டையிட்டுக் கொண்டிருப்பது போல் அவளுக்கு தெரிந்தது. வாசு போ என்பதும் யாழிசை முடியாது என்று வீம்பாய் நிற்பதும் பார்க்க பார்க்க அஞ்சனாவிற்கு பற்றிக் கொண்டு வந்தது. 

"என்னை பாத்தா இரண்டு பேர்க்கும் ஏமாளி மாதிரி இருக்கா" என்று அஞ்சனா கத்த வாசு யாழிசையை தள்ளுவதை விட்டு விலகினான். யாழிசை அவன் திடீரென தன் மேல் இருந்த கையை எடுப்பான் என்று எதிர்பார்க்காமல் அவன் கைகளிலே வாகுவாக சாய்ந்திருந்தவள் பிடிமானம் இன்றி அவன் கை எடுத்ததும் அவன் மேலே விழுந்தாள். வாசு யாழிசையை கையில் தாங்கியவாறு நிற்க அஞ்சனா கோபமாக அறையை விட்டு வெளியேறினாள். "உன்னை" என்று வாசு யாழிசையை திட்டி விட்டு அஞ்சனா பின்னால் ஓடினான். யாழிசை கூலாக தான் வந்த வேலையான காபி கொட்டிய ஷாலை சுத்தம் செய்ய குளியலறைக்குள் புகுந்தாள். "அஞ்சு அஞ்சு ... நில்லு அஞ்சு" என்று கெஞ்சியவாறு படிக்கட்டில் அஞ்சனாவை பிடித்து வைத்தான் வாசு. "இதுக்கு மேல என்ன சொல்லனும் ... எனக்கு உன்னை பிடிக்கல யாழிசைய தான் பிடிச்சிருக்குன்னு சொல்ல போறியா" என்று அஞ்சனா கேட்க வாசுவிற்கு ஐய்யோ என்றிருந்தது. 

"அப்படி இல்லை அஞ்சு" என்று வாசு இழுக்க "வேற எப்படி" என்று அஞ்சனா கேட்டாள். "அஞ்சு ப்லீஸ் நமக்குள்ள அன்டர்ஸ்டான்டிங் இல்லைன்னு இங்க இருக்கவங்களுக்கு முக்கியமா என் அம்மாக்கு தெரியவேக் கூடாது ... அப்படி தெரிஞ்சா நம்ம கல்யாணம் நடக்காது ... கொஞ்சம் பொறுமையா இரு .. நம்ம சண்டைய அப்பறம் வச்சிக்கலாம்" என்று வாசு கூறினான். "அப்போ உண்மையாவே நமக்குள்ள அன்டர்ஸ்டான்டிங் இல்லைன்னு சொல்ர அப்படி தான" என்று அஞ்சனா மற்றொரு பிரச்சனையை தொடங்கினாள். "அஞ்சு ... நீ எதுமே செய்ய வேணா கிளம்பு ... முதல்ல வீட்ல இருந்து கிளம்பு ... தனி ஆளா நானே எல்லாத்தையும் பாத்துக்றன்" என்று வாசு கூற அஞ்சனா கோபமாக அங்கிருந்து வேகத்துடன் வெளியேற நடந்தாள். 


Leave a comment


Comments


Related Post