இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
கவிதை 28 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK026 Published on 02-07-2024

Total Views: 678

    அமிர்தவள்ளி இளவரசன் தங்களுக்கு பிடித்த இரு ஜோடி மோதிரம் தேர்ந்து எடுத்தனர். கயல்விழி எதை எடுப்பது என்று குழம்பினாள்.  அவள் தலையில் குட்டியவன் அழகான இதயவடிவில் ஒற்றை கல் வைத்த மோதிரம் எடுத்து கொடுக்க அதை அணிந்து பார்த்தவளுக்கு அவளின் விரலில் மிகவும் பாந்தமாக பொருந்தியது.  அதே டிசைனில் அவனுக்கும் ஜோடி மோதிரம் எடுத்து பில்லுக்கு அனுப்பிவிட்டு அவர்களை செல்லுமாறும் தான் வாங்கிக்கொண்டு வருவதாக கூறி அனுப்பியவன் பின் அவர்கள் உள்ள இடத்திற்கு சொல்லாமல் வேறு வழியில் சென்றுவிட்டதாக லலிதா அத்தைக்கு மெசேஜ் அனுப்பியிருந்தான். 

   பெரியவர்கள் தாலி எடுத்து இருக்க அதற்கு மட்டும் லலிதா பணம் கொடுத்தார்.  வேறு சில நகைகள் எடுத்து கொண்டு வீடு திரும்பினர். 

   கயல்விழிக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது வருகிறேன் என்று கூறியவன் வராமல் போனது. 

   அடுத்த நாள் அவள் வேலைக்கு சென்ற போது அவளின் கண்ணில் படவேயில்லை.  இன்னும் எத்தனை நாளைக்கு ஓடி ஒளிவிங்க என்று நானும் பார்க்கிறேன் என்று கார்த்திகேயனை திட்டிக்கொண்டு இருந்தாள். 

    வேலையில் புதிதாக சேர்ந்து இருந்ததால்  ஒரு வருடம் கட்டிப்பாக வேலை செய்ய வேண்டும் என்று ரூல்ஸ் என்பதால் விடுமுறை எடுத்தனர் கயல்விழி, அமிர்தவள்ளி. பத்து நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைத்தது.   பின் முரளியிடம் பெரியவர்கள் பேசி மேலும் ஒரு வாரம் விடுமுறை கிடைக்கும் படி செய்தனர். 

     ஆளுக்கொரு வேலையாக திருமணம் வேலைகள் நடந்து கொண்டிருந்தது. கார்த்திகேயன் செல்லவில்லை என்றபோதும் லலிதா, இளவரசனிடம் கேட்டுக்கொண்டு தன்னால் ஆன வேலைகளையும் செய்தான்.  

   திருமணத்திற்கு ஒரு வாரம் இருந்த நிலையில் மறுநாளில் இருந்து விடுமுறை என்பதால் இன்றாவது தன் அத்தானை பார்க்க வேண்டும் என்று எண்ணியவள் இவள் சென்றாள் ஓடி ஒளிந்து விடுவான் என்று தன் உடன் வேலை செய்யும் தோழி கேன்டீன் செல்வது தெரிந்து அவளிடம் தன் அத்தான் அங்கு இருந்தாள் தனக்கு மெசேஜ் செய்யுமாறு கூறினாள். 

   அப்பெண்ணும் கேன்டீன் சென்ற போது கார்த்திகேயன், ஐஸ்வர்யா,  முரளி உணவு உண்ண அப்போது தான் வந்து அமர்வதை கண்டவள் உடனே கயல்விழி போனுக்கு மெசேஜ் அனுப்பினாள். 

  மெசேஜ் சத்தம் வந்ததும் பார்த்தவள் கார்த்திகேயன் கேன்டீனில் இருப்பதை அறிந்தவள் அவளின் டீம் லீடர் இடம் பர்மிஷன் கேட்டு விட்டு வேகமாக கேன்டீன் சென்றாள். 

  ஆவலாக உள்ளே நுழைந்தவளின் கண்ணில் பட்ட காட்சியை கண்டு அப்படியே அதிர்ந்து நின்றுவிட்டாள்.  தன் அத்தானை தன்னைத்தவிர அத்தான் என்று அழைக்கக்கூடாது என்று நினைப்பவள், அவனிடம் உரிமையாக யாரும் பேசக்கூடாது என்று நினைப்பவளின் கண்ணெதிரே தன் அத்தான் உண்ணும் உணவை உரிமையுடன் அவன் உண்ணும் தட்டில் இருந்து எடுத்து உண்டால் அதை கண்டவளின்  உள்ளம் கொந்தளித்தது. 

    அந்த கொந்தளிப்புடன் வேகமாக சென்றவள் ஐஸ்வர்யாவை ஓங்கி அறைந்தாள் கயல்விழி.   எதிர்பாராமல்விழுந்த அடியில் ஐஸ்வர்யா  கன்னத்தை பிடித்துக்கொள்ள அவளின் கண்களில் இருந்து கண்ணீர் வெளிவந்தது. 

   நடந்ததை உணரவே சில வினாடிகள் ஆனது கார்த்திகேயன், முரளிக்கும்.  ஐஸ்வர்யாவின் கண்களில் கண்ணீரை கண்டவன் கயல்விழியின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான். 

   அது தந்த வலியில் சில வினாடிகள் அவளின் காதில் கொய் என்ற சத்தம் மட்டுமே கேட்டது. 

    கார்த்திகேயன் அவளின் மறுகன்னத்திலும் அடிக்க போக அன்பழகன் வந்து கயல்விழியை பிடித்து தன் பின் நிறுத்திக்கொண்டான். 

    தன் அத்தான் அடித்த அடியை விட அவன் முகத்தில் இருந்த கோபத்தை கண்டவளுக்கு உடல் உதறியது. 

    "டேய் அவளை விடுடா இன்னைக்கு அவளை கொன்று போட்டு விடுகிறேன்" என்றான் ரௌத்திரத்துடன் 

     "டேய் கொஞ்சம் பொருடா ஏன் இவ்வளவு கோபம் என்ன என்று விசாரிக்கிறேன்" என்று கார்த்திகேயனை கயல்விழியின் அருகில் வரவிடாமல் தடுத்துக்கொண்டு இருந்தான். 

    ஐஸ்வர்யாவே எதற்கு தன்னை கயல்விழி அடித்தாள் என்று புரியாமல் முரளியின் மார்பில் சாய்ந்து கொண்டு கண்ணீர் விட்டுக்கொண்டு இருந்தாள். 



     முரளிக்கும்  கயல்விழி மீது கோபம் வந்தது.  எதுவாக இருந்தாலும் பேசாமல் இப்படி அடிக்கலாமா அதுவும் காரணமே இல்லாமல் தன்னவளை அடித்ததற்கு மிகுந்த கோபம் வந்தது.   ஐஸ்வர்யாவின் கன்னத்தில் கை தடம் பதிந்து இருந்தது. 

    இதுவரை தன்னவளின் கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட பார்த்தது இல்லை அந்த அளவுக்கு அவளின் குடும்பத்தினர் அவளை ஒரு இளவரசியாக தாங்கி இருந்தனர். 

    அப்படிப்பட்டவளை இன்று கை நீட்டி அடித்து இருக்கிறாள் கயல்விழி.   ஐஸ்வர்யாவின் முதுகை ஆதரவாக தட்டிக்கொடுத்தான்.

     அன்பழகன் எவ்வளவு தடுத்தும் கயல்விழியை கையை பிடித்து இழுத்து தன் முன் நிற்க வைத்தான் கார்த்திகேயன். 

    "ஏய் சொல்லுடி எதுக்கு அவளை அடிச்ச?..." என்று கேட்டு அவளின் முகவாயை இறுக்கி பிடித்து கேட்க  ஏற்கனவே அவன் அடித்த அடியில் கன்னம் வீங்கி வலிக்க  தாடையை இறுக்கி பிடிக்கவும் வலியில் அவள் 

   அத்தான் வலிக்குது பிளீஸ் என்றாள் கயல்விழி. 

   அவளின் வார்த்தையை கேட்டும் கைகளை  எடுக்காமல் "கேட்கிறேன் இல்ல எதுக்கு அவளை அடிச்ச?..." என்றான் கோபக்குரலில்

    பதில் சொல்லாமல் விடமாட்டான் என்று உணர்ந்த கயல்விழி  திக்கித்திணறி  "அவள்... உங்க... தட்டில்.. இருந்து.. சாப்பாடு.. எடுத்து... சாப்பிட்டாள்..." என்றதும் 

     அவளின் மீது இருந்த கையை வேகமாக எடுத்தவன் அவளை ச்சீ நீ இவ்வளவு தானா என்னும் விதமாக அவன் பார்வை இருக்க அதிலே அதிர்ந்தவள் அடுத்து அவன் கூறிய வார்த்தைகள் அவளை கொன்றது. 

     கண்கள் ரத்தமென சிவக்க அவள் அருகில் நெருங்கி வந்தவன் அவளை தொடாமல் " சந்தோகப்படுறியாடி?..." என்று கூறியவன் "உன் உடம்பிலும் அவங்க ரத்தம் தானே ஓடுது அப்புறம் நீ மட்டும் எப்படி நல்லதாக சிந்திப்பாய்" 

      "ச்சீ.... உன்னை போய் எப்படி நினைச்சுட்டு இருந்தேன்.  நீ ஒருத்தி தான் எல்லாம் என்று இருந்தவனை  இப்படி உயிரோடு புதைத்திவிட்டையேடி"  என்று கூறியவன் அவளை அருவருப்பான பார்வை பார்த்து விட்டு அங்கிருந்து வேகமாக சென்று விட்டான். 

    அவனின் பார்வையிலே வாயடைத்து போனவள் அவனின் அடுத்தடுத்த பேச்சில் உயிரற்ற ஜடம் போல் ஆனாள். 

   தன் அத்தானா தன்னை அப்படி பேசியது என்று நம்பமுடியாமல் இருந்தவளை அவனின் அருவருப்பான பார்வையில் அங்கேயே தொய்ந்து அமர்ந்து விட்டாள் பார்வை அவன் சென்று மறைந்த கதவையே நிலைக்குத்தி பார்த்து கொண்டு இருந்தது.

    அப்படி எவ்வளவு நேரம் அமர்ந்து இருந்தாளே அவளை உலுக்கியதும் சுயயுணர்வு வந்தவள் அங்கு சரவணனும் அமிர்தவள்ளியும் இருப்பதை கண்டதும் வேகமாக எழுந்தவள்  

    "மாமா... அத்தான்... அத்தான்..." என்று பேசமுடியாமல் திணறியவளை தோளேடு அணைத்தவன் 

    "ஒன்னும் இல்லை கயலுமா ஒன்னும் இல்லை நான் அண்ணன் கிட்ட பேசுறேன் நீ அமைதியா இரு" என்று அவளின் முதுகை தட்டிக்கொடுத்தான். 

    அன்பு தான் சீக்கிரம் கிளம்பி வரும் படி சரவணன் அமிர்தவள்ளிக்கு போன் செய்து இருந்தான் அவர்களும் பர்மிஷன் பெற்று வந்ததும் நடந்ததை அன்பு சொல்லினான் அதன் பிறகே நிலைக்குத்திய பார்வையுடன் அமர்ந்து இருந்தவளின் அருகில் சென்று உலுக்கியிருந்தனர். 

   மணி மூன்றை கடந்து இருந்ததால் கேன்டீனில் ஓரிருவர் தவிர யாரும் இல்லை.  கயல்விழியை அழைத்த தோழியும் வேறு இரு பெண்கள் மட்டுமே வேலையின் காரணமாக லேட்டாக உணவு உண்ண வந்து இருந்தனர். 

    அமிர்தவள்ளி தண்ணீரை கயல்விழிக்கு புகட்ட அதில் சற்று தெளிந்தவள் அப்போது தான் ஐஸ்வர்யா முரளியின் தோளில் சாய்ந்து அமர்ந்து இருப்பதை அறிந்தவள் வேகமாக அவர்களிடம் சென்றாள். 

     ஐஸ்வர்யாவின் முன் கைகூப்பி கண்ணீருடன்  "சாரி நான் உங்களை சந்தேகப்பட்டு அடிக்கவில்லை."

     "சின்ன வயதில் இருந்தே என் அத்தானிடம் உரிமையாக பெண்ணுங்க பழகினால் எனக்கு பிடிக்காது.  அது வள்ளியாக இருந்தாலும் கூட என் அத்தான் எனக்கு மட்டும் தான் என்னும் உரிமையில் தான்."

     "ஆரம்பத்தில் இருந்தே நீ அத்தான் கூட உரிமையாக பழகுறதை பார்த்து எனக்கு கோபமாக இருக்கும்.  அதுவும் அத்தான் உன்னை பாசமாக பார்க்கும் போது என் அத்தான் என்கிட்ட மட்டும் தான் அன்பு பாசம் காதல் எல்லாத்தையும் காட்டனும் என்ற வெறியே வரும்." 

    " என் முகத்தில் சின்ன வருத்தம் வந்தால் கூட தாங்காத அத்தான் பத்து வருஷம் கழிச்சு வந்து என்னை அழவச்சுட்டு இருக்கிற அத்தான் உங்ககிட்ட சிரிச்சு பேசும் போது எனக்கு எப்படி இருக்கும் தெரியுமா?..."

    " ஆனால் அத்தான் முகத்தில் இருக்கிற சந்தோஷத்தை பார்த்திட்டு அமைதியாக இருப்பேன்." 

    " எல்லாம் இருந்தும் இன்னைக்கு என் அத்தான் இப்படி இருக்கிறதுக்கு என் அப்பா தானே காரணம் என்ற குற்றயுணர்ச்சி வேற என் அத்தானுக்கு இப்படி ஒரு நல்ல நட்பு கிடைத்து இருக்கே என்ற சந்தோஷத்தில் நான் கண்டுக்கொள்ளாமல் இருப்பது மாதிரி இருந்தேன். ஆனால் இன்னைக்கு நீ அவர் தட்டில் இருந்து உரிமையாக எடுத்து சாப்பிட்டதை பார்த்ததும் என்  பொறாமை குணம் வெளியே வந்த உன்னை அடிச்சிட்டேன்." 

    " கண்டிப்பாக அத்தான் சொன்னது போல் நான் சந்தோகப்படலை என் அத்தானை சந்தோகப்படுறது என்னை நானே சந்தோகப்படுறது போலத்தான்.  என் அத்தான் வேற நான் வேறயில்லை" என்று பேசிக்கொண்டே இருந்தவளை ஐஸ்வர்யா வேகமாக வந்து அணைத்துக்கொண்டாள். 

    " நான் தான் சாரி சொல்லனும் இங்க வந்த புதுசிலே உன்னை பத்தி முரளி சொல்லியிருக்கார் நீ ரொம்ப பொசசிவ் என்று அது தெரிந்தும் உன்னை வெறுப்பேற்ற  கார்த்தி அண்ணா கூட  சிரிச்சு பேசிட்டு இருப்பேன்."

     "அன்பு அண்ணா சொல்லிட்டே இருந்தார் ஒரு நாளைக்கு உன்னை அடிக்க போறா என்று அது இன்னைக்கு நடந்திடுச்சு" என்று புன்னகை செய்தாள் ஐஸ்வர்யா. 

     கயல்விழி குற்றயுணர்ச்சியுடன்  "சாரி" என்று அவள் கன்னத்தை தடவினாள். ஐஸ்வர்யாவும் ஐந்து விரலும் பதிந்து வீக்கமாக இருந்த கயல்விழியின் கன்னத்தை தொட    "ஸ்ஸ்ஸ்ஆஆ..."   என்றாள் கயல்விழி. 

  " ஓஓ...  சாரி சாரி" என்றாள் ஐஸ்வர்யா. 

    கயல்விழி முரளியை பார்த்து "சாரி அண்ணா" என்றாள். 

    கயல்விழியின் மீது கோபமாக இருந்தவன் அவளின் பேச்சில் கோபம் குறைந்து இருக்க தலையாட்டினான். 


      அன்புவிடம்  "அண்ணா அத்தான் இருக்கும் இடம் கூட்டிட்டு போங்க  நான் அத்தான் கிட்ட பேசணும்" என்றாள். 

      "இல்லை கயல் அவன் ரொம்ப கோபத்தில் இருக்கான் இப்ப உன்னை பார்த்த இன்னும் தான் கோபம் அதிகமாகும் அதனால் இப்ப நீங்க கிளம்புங்க நான் பேசி சரி பண்ணுறேன்" என்றான். 

   வேலையில் இருந்து பர்மிஷனில் வந்து இருந்ததால் சரவணனும் அமிர்தவள்ளியும் அதையே சொல்லி அவளை அழைத்து சென்றனர். 

    அவளின் கன்னத்தில் மருந்து போடவைத்து அவளை பணியிடத்தில் விட்டு தங்கள் இடத்திற்கு சென்றனர் சரவணனும் அமிர்தவள்ளியும். 


    


Leave a comment


Comments


Related Post