இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
கவிதை 29 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK026 Published on 02-07-2024

Total Views: 626

     கயல்விழியை விட்டு வேகமாக சென்று ஒரு அறையில் புகுந்து கதவை அடைத்த கார்த்திகேயனுக்கு கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.  அவன் மீதே அவனுக்கு கோபம் வர தன்னைத்தானே அறைந்தவன் கண்களில் கண்ணீர் வழிந்தது. 

    அவள் தானே அவனுக்கு எல்லாம் இன்று உயிரோடு இருப்பதற்கு அவள் மட்டுமே காரணம் அப்படிப்பட்டவள் தன்னை சந்தோகப்பட்டது தாங்கவில்லை அவனுக்கு. தாய் தந்தையே தன்னை நம்பாமல் போன போது கூட அவனுக்கு தன்னை நம்பவில்லையே என்ற ஆதங்கம் மட்டுமே இருந்தது ஆனால் இன்று தன்னை பற்றி அனைத்தும் தெரிந்த தன் உயிரானவளே தன்னை சந்தோகப்பட்டது தாங்க முடியவில்லை.

    அவனின் தலையையே சுவற்றில் வேகமாக முட்டியவனின் நெற்றியில் உதிரம் கசிந்தது.   அங்கிருந்த நீர் நிறைந்த கண்ணாடிக்குடுவையை எடுத்து சுவற்றில் அடித்தான்.  பொருட்களை தள்ளி விட்டு  "ஆஆ.." என்று கத்தியவன் அருகில் இருந்த கண்ணாடி தம்ளரை கையில் இறுக்க அது சில்லு சில்லாக உடைந்து அவன் கையில் குத்தி ரத்தம் கசிந்தது.

     தன் உடலில் ஏற்பட்ட வலியை விட மனதில் ஏற்பட்ட வலி அதிகமாக இருந்தது. இன்னும் இன்னும் தன்னை காயப்படுத்திக்கொள்ள ஏதாவது இருக்கா என்று தேடிக்கொண்டு இருந்த போது தான்  அங்கு பணி செய்யும் ஒருவன் எதையோ எடுத்து செல்ல அந்த அறைக்கு கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தவன் கண்ட காட்சியில் வந்தவனுக்கே மயக்கம் வரும் நிலை தான்.

   நெற்றியில் இருந்து கோடாக முகத்தில் ரத்தம் வழிய கையில் இருந்து அவன் நடக்கும் இடம் எல்லாம் ரத்தம் சொட்ட அவன் முகத்தில் வெறியோடு எதையோ தோடுவது போல் இருக்க அவன் முன் சென்றால் என்ன நடக்குமே என்னும் பயத்தில் வேகமாக அறையில் இருந்து வெளியேறி முரளி அன்பு இருந்த இடத்திற்கு வந்தான்.

   அப்போது தான் கயல்விழி, சரவணன், வள்ளியை அனுப்பி வைத்தவர்கள் தன் நண்பனை காண  நடந்தவர்களின் முன் வேகமாக மூச்சிறைக்க வந்தவன் திக்கித்திணறி  "சார் அவரு அவரு ரத்தம்" என்று சொல்ல முடியாமல் தவித்தவனை பார்த்ததும் ஏதோ விபரீதம் நடந்துள்ளது என்று அறிந்தவர்கள் வேகமாக ஓடினர்.

    அந்த அறைக்கு சென்றவர்கள் நண்பன் இருந்த கோலத்தை கண்டு அதிர்ந்தனர்.  ஐஸ்வர்யா அவனின் அருகில் செல்லப்போக முரளி தடுத்து கீழே இருந்த உடைந்த கண்ணாடியை காட்டியவன்  "டாக்டருக்கு கால் செய் நாங்க பார்க்கிறோம்" என்றான்.

    அன்பு முரளி இருவரும் கார்த்தியின் அருகில் சென்று அவனின் கைபிடித்து அழைத்து அடுத்த அறைக்கு சென்றனர்.   அவன் அவர்களிடம் இருந்து திமிரிய போதும் கெட்டியாக பிடித்து அழைத்து சென்று இருந்தனர்.

    ஐஸ்வர்யா அவர்கள் கம்பெனியில் பணியில் இருந்த டாக்டரை அழைக்க ஐந்து நிமிடங்களில் வந்தவர் கார்த்திகேயனின் காயங்களை சுத்தம் செய்து கட்டு போட்டவர் இரண்டு மாத்திரைகளை ஐஸ்வர்யாவிடம் கொடுத்து  "ஜூஸ் எதாவது குடிக்க வைத்து விட்டு இந்த மாத்திரையை போடுங்க வலி குறையும் கொஞ்ச நேரம் தூங்குவார்" என்று கூறிச்சென்றார். 

    எதுவும் பேசாமல்  திமிரிக்கொண்டு இருந்தவன் டாக்டரை கண்டதும் அமைதியாக இருந்தவன் அவர் சென்றதும் மீண்டும் திமிரினான். 

    "டேய் இப்ப அமைதியாக இல்லை என்றால் என்ன பண்ணுவேன் என்று எனக்கு தெரியாது.  என்ன காரியம் பண்ணிட்டு இருக்க மூளை என்று ஒன்னு இருக்கா இல்லையா?."  என்ற அன்பு 

     பின் மீண்டும்  "உனக்கு கயலை பற்றி தெரியாதா?" என்றதும் அதுவரை அமைதியாக இருந்தவன். 

   மிகுந்த கோபத்துடன் " டேய் அவளை பத்தி பேசுன அவ்வளவு தான்" என்று மிரட்டினான். 

   " பேசுனா என்னடா அவள் உன் மேல் சந்தேகப்படலை நீ தான் இப்போ அவள் மேல் சந்தேகப்பட்டு இருக்க" என்றதும் 

   அதுவரை கோபத்துடன் அன்புவை முறைத்து கொண்டு இருந்தவன் அன்புவின் பேச்சில்  "நான் அவளை சந்தோகப்பட்டேனா?... " என்றான். 

  " ஆமாம்டா சின்ன வயதில் இருந்தே அவள் குணம் உனக்கு தெரியும் இல்லையா?... உன்னிடம் அவளைத்தவிர யாரும் உரிமையா இருக்கக்கூடாது என்று நினைப்பவள் அவள்.   இன்னைக்கு உன் தட்டில் இருந்து ஜஸ் எடுத்து சாப்பிட்டதில் பொறாமையினால் வந்த கோபத்தில் அடித்தாளே தவிர உன் மீது சந்தேகப்பட்டு இல்லை.  அப்படி உன் மீது சந்தேகம் இருந்தால் உன்னைத்தான் அடிச்சு இருப்பா" என்று கூறியவன் கயல்விழி கூறியது அனைத்தும் சொன்னான். 

   ஐஸ்வர்யாவும் அவன் அருகில் அமர்ந்து பேச கொஞ்சம் கொஞ்சமாக தான் பேசிய வார்த்தைகளின் வீரியம் அப்போது தான் உணர்ந்தான். 

   " சிட்..."  என்று தன் கையை உதறிக்கொண்டு எழுந்தவன் அறையை விட்டு வெளியேறப்போக அன்பு, முரளி இருவரும் தடுத்து நிறுத்தி  "இந்த கோலத்தில் அவள் உன்னை பார்த்தால் அவ்வளவு தான் அதனால் ஒழுங்கா இப்படி உட்கார்" என்றனர். 

     வேலையாள் ஒருவர் அனைவருக்கும் பழச்சாறு கொண்டு வந்து கொடுக்க அதை அமைதியாக குடித்து முடித்தனர்.  மாத்திரை தண்ணீர் கொடுத்த ஐஸ்வர்யாவின் முகத்தை பார்த்தவனின் கண்ணில் பட்டது கயல்விழியின் விரல்கள் பதிந்த கன்னம் சென்று இருந்த கோபம் மீண்டும் வந்தது. 

   ஐஸ்வர்யாவை அருகில் அமரவைத்து  "சாரிமா ரொம்ப வலிக்குதா?..." என்று கேட்டு அவள் கன்னத்தை தடவினான். 

    "வலி எதுவும் இல்லை அண்ணா நீங்க அமைதியாக படுங்க" என்றாள். 

   மீண்டும் அவளுக்காக நான்  "சாரி கேட்டுக்கறேன் ஐஸ்" என்றவன் படுத்துக்கொண்டான். 

   மூவரும் அவன் உறங்கும் வரை அமைதியாக அமர்ந்து இருந்தனர்.  

   மாலை வேலை விட்டு சென்றவள் அமைதியாக அறைக்கு சென்று படுத்துக்கொண்டாள் கயல்விழி.  அதுவரை அடக்கி வைத்த கண்ணீர் விம்மலுடன் வெளிவந்தது. 

   கயல்விழி பின்னேயே சரவணன் அமிர்தவள்ளி வந்து தன் அத்தை யிடம் அனைத்தும் சொல்லியிருந்தனர்.  இளவரசனும் அங்கு தான் இருந்தான்.   அனைத்தும் கேட்டவன் வேகமாக தங்கை அறைக்கு மருந்துடன் நுழைந்தான். 

   தங்கையை எதுவும் கேட்காமல் தன் மடியில் படுக்க வைத்து கன்னத்தில் மருந்து தடவினான்.  லலிதா காபி போட்டு எடுத்து வந்தவள் மகளின் அழுத தோற்றத்தை கண்டு மனம் வருந்தினாலும் இவள் செய்த வேலையால் அங்கு ஒருவன் எவ்வளவு வேதனையில் இருக்கிறானே என்று நினைத்தவருக்கு கோபம் வர 

    "செய்யுறது எல்லாம் செய்துட்டு வந்து இப்ப அழுதா எல்லாம் சரியாகி போயிடுமா உனக்கு எங்கிருந்துடி கோபம் வருது.  அவன் கிட்ட யாரும் பேசக்கூடாது பழகக்கூடாது என்று நினைப்பது சரியில்லை என்று உனக்கு எத்தனை முறை சொல்லியிருக்கேன்" என்று திட்டிக்கொண்டு இருந்தார். 

   கயல்விழி எதுவும் பேசாமல் இளவரசன் புகட்டிய காபியை குடித்து விட்டு மீண்டும் படுத்துக்கொண்டாள். 

   அதை கண்ட லலிதா " திமிர் உடம்பு முழுக்க திமிர்" என்று கூறி காலியான டம்ளரை எடுத்துக்கொண்டு வெளியே சென்றவர் கார்த்திகேயனுக்கு போன் செய்தார். அவன் நல்ல உறக்கத்தில் இருந்ததால் சைலட்டில்  போட்டிருந்தான் முரளி அதனால் முழு ரிங் சென்று நின்றது. 

    பிறகு அவனே செய்வான் என்று நினைத்த லலிதா வேலையை பார்க்க சென்றார். 

   அடுத்தடுத்த நாட்களில் வீடு கல்யாணக்களை கட்டியது உறவினர்கள் வருகை பந்தக்கால்  நடுவது குலதெய்வ வழிபாடு நலங்கு சடங்குகள் எதற்கும் வரவில்லை கார்த்திகேயன். 

    போனில் பெரியவர் அழைத்த போது திருமணத்திற்கு முன் தினம் மண்டபத்திற்கு வருகிறேன் என்று கூறி வைத்து விட்டான். 

   வேறு வழியில்லாமல் அனைத்து சடங்குகளும் அவன் இல்லாமல் நடந்தது.  முகத்தில் கல்யாணக்களை எதுவும் இன்றி அமைதியாக இருந்தாள் கயல்விழி. 

   அவளின் பயம் எல்லாம் கார்த்திகேயன் வீட்டிற்கு வரவில்லை சடங்குகள் செய்ய வரவில்லை என்று இல்லை.  எப்போதும் போல் வரேன் என்று கூறிவிட்டு திருமணம் அன்று தன் மேல் உள்ள கோபத்தில் வராமல் போய்விட்டால் என்ற எண்ணமே அவளை வறுத்திக்கொண்டு இருந்தது. 

   வீரராகவன் சாந்தி தம்பதியரும் வருத்தம் கொள்ள பெரியவர் தான் "திருமணம் வரை அமைதியாக இருந்து வேலை பாருங்கள் மனதை வறுத்திக்கொள்ளவேண்டாம் கண்டிப்பாக கார்த்திகேயன் வருவான்.  இதில் அவன் தங்கை திருமணமும் இருப்பதால் வந்துவிடுவான்" என்று சமாதானம் செய்தார். 

    திருமண நாள் முன் தினம் பெண் மாப்பிள்ளையை கோயிலில் இருந்து அழைத்துக்கொண்டு திருமணமண்டபம் செல்வதற்காக அனைவரும் கோயிலுக்கு வந்து இருந்தனர். 

    கோயிலில் உட்கார வைத்து நலங்கு வைத்து பெண் மாப்பிளையை அழைத்து செல்வர்.  அதற்காக ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்த போது வந்தான் கார்த்திகேயன்.  அவனுடன் முரளி அன்பழகன் ஐஸ்வர்யா மற்றும் அவளின் அண்ணன் ஹரிஷான்த் வந்தான். ஊரில் இருந்து தங்கையை பார்க்க வந்தவனை  ஐஸ்வர்யாவும் முரளியும் வற்புறுத்தி அழைத்து வந்திருந்தனர்.  ஹரிஷான்த் முதலில் மறுத்தவன் தங்கையும் நண்பனும் வற்புறுத்தவும் அதுவுமில்லாமல் தன் நண்பனின் சிறுவயது தோழன் என்றும்  அவனை பற்றி  தங்கை கூறியிருந்தால் வந்திருந்தான் ஹரிஷான்த். 

   அதுவரை பயத்தில் இருந்தவள் நண்பர்களுடன் வந்த கார்த்திகேயனை கண்டதும் தான் முகத்தில் புன்னகை வந்தது.  வெள்ளை வேட்டியும் டார்க் மெரூன் கலர் முழுக்கை சட்டை அணிந்து கம்பீரமாக நடந்து வந்தவனை கண்டவளின் ஒற்றை கண்ணில் இருந்து நீர் கன்னத்தில் உருண்டது. 

    தலைமுடி நன்றாக வாரி சிறு ரப்பர் போண்டில் அடக்கியிருந்தான்.   நீண்ட தாடியை கொஞ்சமாக ட்ரிம் செய்து இருந்தான்.  சினிமா ஹீரோக்களை விட அழகாகவும் கம்பீரமாகவும் இருந்த தன் அத்தானை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தாள். 

   அவளின் அருகில் அமரவைத்து இருவருக்கும் நலங்கு வைத்தனர்.  இவர்களுக்கு செய்வதுப்போல் இளவரசன் அமிர்தவள்ளிக்கும் நலங்கு வைத்தனர்.  பின்னர் இரண்டு காரில் இரண்டு ஜோடிகளையும் உட்கார வைத்து மேளதாளத்துடன் ஊர்வலமாக திருமண மண்டபம் அழைத்து சென்று அங்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச்சென்றனர். 

    கிராமம் என்பதால் அங்கே பேச்சு கிண்டலுக்கு குறைவில்லை.  பின் மேடையில் பெரியவர்கள் அமர்ந்து நிச்சயதார்த்திற்கு ஏற்பாடு செய்ய அதுவரை  கயல்விழி, அமிர்தவள்ளி மணமகள் அறையிலும் கார்த்திகேயன், இளவரசன் மணமகன் அறையிலும் இருந்தனர். 

   நிச்சய வேலைகள் ஆரம்பமாக ஒவ்வொருவராக அழைத்து அவர்கள் அணியவேண்டிய உடைகளை பெரியவர்கள் வாழ்த்தி கொடுக்க அதை எடுத்துக்கொண்டு தங்கள் அறைக்கு சென்றனர். 

   பெண்கள் இருவருக்கும் பியூட்டி பார்லர் பெண்கள் அலங்காரமும் புடவையையும் அணிவித்தனர்.  இருபெண்களும் தேவதையாக ஜொலித்தனர்.   யார் அழகு என்று கண்டறிய முடியாதபடி இருவருக்கும் புடவை நகைகள் அனைத்தும் பொருத்தமாக இருந்தன. 

   லலிதாவும் சாந்தியும் தங்கள் பெண்களை கண்டு மலைத்து போயினர் இருவருக்கும் திருஷ்டி பொட்டு வைத்து அழைத்து சென்றனர். 

     கார்த்திகேயனும் இளவரசனும் நிஜமான இராஜக்கள் போல் தான் இருந்தனர்.  ஷர்வாணி அணிந்து கம்பீரமாக வந்து அமர்ந்தனர்.  பார்ப்பவர்களுக்கு ராஜாக்கள் போல தான் இருந்தனர். 

    ஷர்வாணி கோல்டன் கலரிலும் பேண்ட் கார்த்திகேயன்  கயல்விழியின் புடவையின் கலரான வெங்காயக்கலரிலும்,  இளவரசன் அமிர்தவள்ளியின் புடவையின் கலரான ஸ்கைபுளு நிறத்திலும் அணிந்து இருந்தனர். 

   பெண்களை அழைத்து வந்து அவரவர் ஜோடிகளின் அருகில் அமரவைத்தனர். 

   பார்த்தவர்கள் கண்கள் வியப்பில் விரிந்தன.  இரண்டு ஜோடிகளும் அவ்வளவு பாந்தமாக இருந்தனர்.   திருமணத்திற்கு வந்தவர்களின் கண்கள் அவர்கள் மீதும் அவர்களின் உடைகளின் மீதும் தான் இருந்தது. 

   பெரியவர்கள் நிச்சயத்தட்டை மாற்றியதும் மணமக்களிடம் மோதிரம் கொடுத்து மாற்றிக்கொள்ள சொல்ல அதுவரை பார்த்துக்கொள்ளாத கார்த்திகேயன் கயல்விழி ஒருவரையருவர் பார்த்துக்கொண்டனர். 




Leave a comment


Comments


Related Post