இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -71 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 02-07-2024

Total Views: 1248


“என்னடி சைட் அடிக்கிறியா?” வெறித்தப் பார்த்தவளைப் பார்த்து கண் அடித்து மீசை முறுக்கிக் கேக்க அதில் கவர தான் செய்தாள் நிலா.

“ம்ம்ஹும்ஹும் இல்ல”

“அப்பறம் என்னத்துக்கு முழுங்கற மாதிரி பார்த்து வைக்கற”.

“நீங்க ரெடியாகி தான்” என்றவளை அதற்கு மேல் பேச விடாமல் உதட்டை  பிடித்து இருவிரலால் நசுக்கினான். அதை அப்படியே பிய்த்து திங்க வேண்டும் போல் இருக்க,  இன்னும் ஒரு இரவு தானே பார்த்துக் கொள்ளலாம் என  நிலாவை விட்டு தள்ளி நின்றவன்

“ஆமா ரெடியாகி தான் வராம இருந்தேன்.” என்றான் திமிராகவே.

“ஏன்?”  என்பது போல் நிலா பார்த்தாள்.

“வந்துருக்கவே கூடாது. போனா போகுதேன்னு வந்தேன்”.   என்றவன், “கல்யாணம் ஆனதும் நான் வெளியே இருக்கறப்ப, வர நேரமானா போன் பண்ணனும்,  இல்லைன்னு வெச்சிக்கோ உன்னைய ஒன்னும் பண்ண மாட்டேன்”  என  நிறுத்தி சுற்றிப் பார்த்தவன் அவள் பக்கம்  சற்று குனிந்து.

“நம்ப கல்யாணம் நடக்கபோற சந்தோஷத்துல ஒருத்தன் குடிச்சி கும்மாளம் அடிக்கிறான்னு கேள்விப்பட்டேன்..”

யுகி சொல்கிறான் என புரிய தலைகுனிந்து நின்றாள்.

“அவனை போட்டு தள்ளிட்டு போயிட்டே இருப்பேன்.”

“இதை தான் மாசக் கணக்குல சொல்றான் போட்டுத் தள்ளிட்டுப் போக வேண்டியது தானே  எனக்கு மட்டுமா  அவன் பிரண்ட் இவனுக்கும் தம்பி தானே.”   என மனம் வெதும்பினாள்.

“என்னடி உள்ளுக்குள்ள திட்டுற மாதிரி இருக்கு.. ஆமா மறந்துட்டேன் பாரு போன்ல குரல் உசந்த மாதிரி இருந்துச்சி.என்ன குளிர் விட்டுப் போச்சா?”   என புருவம் உயர்த்த அவன் கேட்டப்பிறகு தான் அவளுக்கு நினைவே வந்தது.

முகம் தெரியா தைரியத்திலும்,ஒரு வேகத்திலும் பேசிவிட்டாள். இப்போது அவன் கேக்கும்போது  உடல் நடுங்க ஆரம்பிக்க.

அதைப் பார்த்தவன் நமட்டுப் புன்னகையுடன் “ கல்யாணம் முடிஞ்சதும் பேசிக்கலாம் வா”  என அவள் கையை இறுகப் பிடித்துக் கொண்டு கீழேச் சென்றான்.

கீழே அனைவரும் நின்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தவர்கள் இருவரும் இறங்கி வருவதைப்  அதிர்ச்சியாகப் பார்த்தனர்.. இவர்களை தாண்டி எப்படி மேலே சென்றான் என்றே யாருக்கும் தெரியவில்லை.

“என்ன சத்தம்?”. எனக் கேட்டுக்கொண்டே கீழே இறங்கி வந்தான்.

“நந்து இவ்வளவு நேரம் எங்கப் போன..?”

“இவ ரூமில தான் இருந்தேன். ஆமாதாண்டி.” என கேட்டு அவளது கையில் அழுத்தம் கொடுக்க.

அவளும் ஆமாம் என்று தலையை அசைத்தாள்.

ஏதோ நடந்திருக்கிறது என மார்த்திக்கு புரிந்து விட.

“அதான்  வந்துட்டான்ல அடுத்தது ஆக வேண்டியதைப் பார்க்கலாம்”. என வளவனைப் பார்த்தார்.

வளவன் பார்வைக்கு மட்டும் சக்தி இருந்திருந்தால் நந்தனை எரித்திருப்பான்.. அந்த அளவிற்கு வெறியாக இருக்க..ஷாலினியால் என்ன முயன்றும் வளவனை தன்னிலைப் படுத்த முடியவில்லை

“ப்ளீஸ் வளவா காம் டவுன்.”

“என்னடி காம் டவுன் அவன் பண்ண வேலைக்கு  அப்படியே கன்னம் கன்னமா அப்பனும் போல இருக்கு “ என கை முஷ்டியை மடக்க

கோவத்தில் எதாவது ஆகிவிடுமோ என பயந்து  போய் அவன் கையோடு இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.

ஒருவன் இப்படி இருக்க இன்னொருவனோ அடித்த போதை  இறங்காமல் பூனை பூனை என பின்னாத்திக் கொண்டிருந்தான்.

இப்போது அனைவரின் பார்வையும் யுகிடம் தான் சென்றது,  அவனை இந்த நிலைக்குத் தள்ளிய தன்னை நினைத்து தனக்கே கேவலமாக இருந்தது நிலாவிற்கு.

“அவனை தூக்கி கார்ல போட்டுட்டுப் போலாம் போதை இறங்குனா தானா சரியாகிடும்”  என அனைவரின் பார்வையும் உணர்ந்து சொன்னார் மார்த்தி.

யார் என்னமோ பண்ணிக்கோங்க எனக்கு என் வேலையானால் போதும் என்பது போல் நந்தன் நிலாவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு ஊர்வல வண்டியில் சென்று ஏறிக்கொண்டான்.

“அதான் பொண்ணு மாப்பிள்ளை ஏறிட்டாங்கள.. ஊர்வலத்தை ஆரம்பிங்க” என ஒரு சத்தம் கேக்க  இன்னும் திருமணம் முடிவதற்குள் என்ன என்ன பிரச்சனை வரப் போகிறதோ என பயந்துக் கொண்டே மண்டபத்தை நோக்கிச் சென்றனர்.

யுகியை தங்கள் காரில் படுக்க வைத்துவிட்டு அவன் அருகில் கிருஷ்ணமாளையும் செல்வராணியின் இரண்டாவது மகளையும் அமர வைத்துவிட்டார்  மார்த்தி.

“இவனைப் மண்டபம் போற வரைக்கும் பத்திரமா பார்த்துக்கோங்க, இல்லனா மறுபடியும் பூனை பூனைன்னு  சொல்லிட்டு ஊர்வலத்தை கெடுத்து விட்டுடுவான்”  என  சொல்லிவிட்டு சென்றார் மார்த்தாண்டம்.

அவர் செய்வது தவறு தான் ஒரு மகனின் மனதை குளிர்விக்க இன்னொரு மகனின் மனதை குத்தி கிழிக்கிறோம் என வேதனையாக தான் இருந்தது. வேறு வழியில்லை. நந்தன் சொன்னதை செய்யவில்லை என்றால் யாரை வேண்டுமானாலும் காயப்படுத்துவான்.. கண்டிப்பாக நிலாவை விரும்பி தான் இத்தனையும் செய்கிறான் என புரிகிறது.அதற்காக மட்டும் தான்  அவன் செய்யும் அனைத்தையும் பல்லைக் கடித்துக் கொண்டு   பொருத்துக்கொண்டார்.

“சீமையில நடக்காத கல்யாணத்தைப் பன்றான் பாரு.. இந்த அளவுக்கு அலப்பறை  பண்ணிட்டு இருக்கான், பொண்ணு வீட்டுல ஒன்னும் போடலைன்னாலும் கெத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை” என செல்வராணி திருமணத்திற்கு வந்த உறவுகளிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

அவருக்கு அவர் கவலை. தன் மகளின் ஜாதகம் சரியில்லை என்று சொன்னார்களே  இப்போது நிலாவின் ஜாதகத்தை மட்டும் பார்த்தா திருமண ஏற்பாட்டை செய்தார்கள் என கேள்வி மனதை குடைந்துக் கொண்டே இருந்தது.அதன் தாக்கம் தான் வார்த்தைகளாக வந்தது.

“ஏம்மா நீ பேசறது மாமா காதுக்கு கேட்டுச்சு  செய்யற கொஞ்ச நஞ்ச சீரையும் நிறுத்துடுவாரு அமைதியா இரும்மா” என்றாள் பெரிய மகள்.

“ஆமா  பேசலைன்னா மட்டும் உன் மாமன் வண்டி வண்டியா கொண்டு வந்து இறக்கிடுவான் பாரு. உன்னைய தான்  அந்நியத்துல குடுத்துட்டோம் சின்னவளையாவது சொந்தத்துல குடுக்கலாம்ன்னு பார்த்தா  அதுக்கும் அதுக் குறை இதுக் குறைன்னு கழட்டி விடப் பார்க்கறாங்க.உன் தங்கச்சியைக் காட்டிலும் அந்த நிலா என்னடி பெருசாப் போய்ட்டா,  அவ தான் வேணும்ன்னு அடம்பிடிச்சி கல்யாணம் பண்ணிக்கறான்”.

“எனக்கும் அதுதான்ம்மா சந்தேகமா இருக்கு. நந்தனைப் பத்தி வெளியே கேட்டுப்பாரு.. ஆஹா ஓஹோன்னு சொல்றாங்க  இந்த நிலா விசயத்துல இந்த அளவுக்கு இறங்கிப்  போவான்னு யாருமே எதிர்பார்க்கல..எப்போ பாரு  ஜாதி மதம் தகுதி தராதரம்ன்னு  பேசறவன் எப்படி நம்பள விட கீழ ஜாதில பொண்ணுப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கிறான்.” 

“அதான் எனக்கும் புரிய மாட்டிங்குது அப்படி என்ன அவ அழகா இருக்கா? இந்த அளவுக்கு மயங்கி இருக்க..”

“சரி விடுங்கம்மா இதுக்கு மேல இதைப் பேசி என்ன பண்ணப் போறோம், விடிஞ்சா கல்யாணம் நடக்கப்போகுது.”

“அந்த யுகிக்காவது சின்னவளை கட்டி வைக்கலாம்ன்னு பார்த்தா அவனும் பூனை பூனைன்னு பின்னாதிட்டு திரியுறான்.. ச்சை அண்ணனையும் தம்பியையும் அப்படி என்ன சொக்குப் பொடி போட்டு மயக்கி வெச்சாளோ தெரியல..” என முனைவிக் கொண்டே காரில் இருந்த நிலாவை அனலாக முறைத்தார் செல்வராணி.

நிலா, சுற்றி இருக்கும் யாரைப் பற்றியும் யோசிக்கவில்லை.ஏன் அருகில் இருக்கும் நந்தனின் பக்கம் கூட அவளது பார்வைப் போகவில்லை அவள் எண்ணம் முழுவதும் யுகியைப் பற்றி மட்டுமாக தான் இருந்தது.

அவளுக்காக,  பிடிக்காத ஒன்றை  வலுக்கட்டாயமாக  செய்து விட்டு இப்போது சுயநினைவு இல்லாமல் படுத்திருக்கிறான், நினைத்தாலே நெஞ்சுக் குழியில்  சுருக்கென்று   வலி வந்துப் போனது.

நிலாவின் கவனம் இங்கு இல்லை என்றதும் 

“என்னடி நாளைக்கு நைட்டைப் பத்தி யோசிச்சிட்டு இருக்கியா..?” என நிலாவின் கவனத்தை அவன் பக்கம் திருப்பப் பார்த்தான்.

“நாளைக்கு நைட்டுக்கு என்ன?..”நந்தன் சட்டென்று கேட்டதும் நிலாவிற்கு புரியவில்லை.

“நைட் என்ன..?”

“ம்ம் பர்ஸ்ட் நைட் தான்”  என்றவன் அவளின் விரல்களோடு  தன் விரலை படற விட்டு அழுத்தம் கொடுத்தான்.

அவள் இருக்கும் மனநிலையில் நந்தன் செய்வதையோ, பேசுவதையோ எதையுமே  கவனிக்கும் நிலையிலும் இல்லை கவனித்தாலும் அது கருத்தில் பதியவில்லை. நிலாவின் முகம்  சுருங்கியே இருக்க, எரிச்சல் உண்டானது நந்தனுக்கு.

“இப்போ என்னடி பிரச்சனை உனக்கு.”

“எனக்கு எதும் பிரச்சனை இல்லையே”.

“மூஞ்சை டெல்லி வரைக்கும் தூக்கி வெச்சிருக்க, அவன் குடிச்சி கும்மாளம் அடிச்சா நான் என்னடி பண்ண முடியும்?”.

‘எல்லாத்தையும் செஞ்சிட்டு நான் என்னடி பண்ணட்டும்ன்னு ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி பேசறான் பாரு,  இவனை என்ன பண்ணா தகும்?’ என உள்ளுக்குள் வெதும்பி தள்ள,

“நீ என்ன பண்ணாலும் எனக்கு ஓகே தான், அம்மிணிக்கு எப்படி வசதி?” என அவளைப் பார்த்து கண் அடிக்க.

அந்த செயலில் குப்பென்று முகம் சிவந்து விட்டது நிலாவிற்கு

அது தானே நந்தனுக்கும் வேண்டும். அவள் அவனை மட்டுமே நிந்திக்க வேண்டும்,  அவனைப் பற்றி மட்டுமே நித்தமும் சிந்திக்க வேண்டும், நிலாவின் காதலனாக பயங்கர சுயநலவாதியாக இருந்தான்.

இல்லையென்றால் மட்டும்   அவன் பொதுநலவாதி தான்.

நிலாவின் கவனத்தை சிறிது சிறிதாக அவன் பக்கம் இழுத்துக் கொண்டிருக்க.  இங்கு யுகியோ.. “பூனை அவன் உனக்கு வேண்டா பூனை.. பூனை  சொன்னா கேளுடி” என போதையில் உளறிக்கொண்டே வந்தான். அருகில் அமர்ந்திருந்த கிருஷ்ணமாளுக்கும், செல்வராணியின் இரண்டாவது மகளுக்கு  ஏகக் கடுப்பாக இருந்தது..

“அம்மாயி மாமாவை வாயை மூடச் சொல்லு இல்லனா கார்ல இருந்து வெளியே தள்ளிடுவேன், எப்போ பாரு பூனை பூனைன்னு” 

“நான் என்னமோ அவனை பேசச் சொன்ன மாதிரி சொல்ற.. அவன் பூனை பைத்தியம் பிடிச்சி சுத்துறான். நம்ப என்ன அடக்கப் பார்த்தாலும் அடங்காது.”

“என்ன பேரனை வளர்த்து வெச்சிருக்கியோ அண்ணன் பொண்டாட்டி நியாபகமாகவே இருக்கான், சொந்த பொண்டாட்டி வந்தாக் கூட இதைதான் பண்ணுவான் போல... இவனைக் கட்டிக்கிற பொண்ணுதான் பாவம்”

“எல்லாம் கால்கட்டுப் போட்டா தானா பொண்டாட்டி பின்னாடி சுத்தப் போறான்.இவளை எதுக்கு சீண்டறான் நீ வாயை மூடுடி, வயசுக்கு மீறி பேசறது” என அவர்களுக்குள் சண்டைப் போட்டுக் கொள்ள.. என்ன  நடக்கிறது அருகில் இருப்பவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று  புரிந்துக் கொள்ளும் அளவிற்கு நிதானத்தில் இல்லை யுகி. போதையிலும் கூட  அவன் பூனை தான்.

“வள்ளு..”



“உன்னைய தான் கூப்பிடறேன் வள்ளு பேசு.” என்றாள் ஷாலினி.

“இப்போ என்ன வேணும் உனக்கு.”

“எதுக்கு நாய் மாதிரி வல்லுன்னு விழற..”

“உன் குடும்பம் பண்றதைப் பார்த்தா  வல்லுன்னு விழாம தூக்கி வெச்சி கொஞ்சுவாங்களா.?”

!நந்து மட்டும் தான் இவ்வளவும் பண்ணுனான்,  நீ  எதுக்கு ஒட்டு மொத்த குடும்பத்தையும் பேசற?”.

“தண்ணிய போட்டுட்டு வந்து உன் ரெண்டாவது அண்ணன் மானத்தை வாங்கல.”

“என் குடும்ப மானம் தானே போகுது அதுல உனக்கு என்ன கவலை.”

“போறது உன் குடும்பமானம் மட்டும் இல்ல, என் தங்கச்சி பேரும் தான்.  என்ன சொக்கு பொடி போட்டு மயக்கி வெச்சாளோ அண்ணனும் தம்பியும் மாறி மாறி அவ பின்னாடியே சுத்துறாங்கன்னு என்னோட காதுப் படவே பேசறாங்க, என்ன பண்ண சொல்ற சொல்லு.?”

“அது..”

“இப்போ இவன் குடிக்கலைன்னு யாரு அழுதா..?இந்த நேரத்துல போய் குடிச்சுட்டு வந்து பூனை பூனைன்னு அவளை ஏலம் போடுறான்.பார்க்கறவீங்க எவ்வளவு கேவலமா பேசறாங்க பார்த்தில”

“அவனுக்கு அவன் கவலை.  என் வாழ்க்கையை விட நிலா வாழ்க்கை மேல ரெண்டு அண்ணனுக்கும் பாசம் பொங்கி வழியுது,  இதுங்க பண்றதுக்கு நான்தான் பொறாமைப்பட்டு மூஞ்சை தூக்கி வெச்சிருக்கணும்,  நீ என்னமோ ஓவரா பண்ணிட்டு இருக்க, சொல்லப்போனா மூனுபேரும்  அவளைத் தாங்கறீங்க.. இனியும் ஏதாவது பேசுனா  அப்புறம் நடக்கறதே வேறப் பார்த்துக்கோ.” என்றவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

மூவரில் யாரவது ஒருவராவது ஷாலினியைப் பற்றி கவலைப்பட்டிருக்கலாம். மூவருமே நிலா என்றால் அவளும் தான் என்ன செய்வாள்.

“லூசு மாதிரி பேசாதடி என் தங்கச்சி அவமானப்பட்டு நிற்கறது உனக்கு  நாங்க தாங்கற மாதிரி இருக்கா?. தாங்கறவீங்க நம்ப செய்யற செயல்லால அவளுக்கு அவமானம் வருமேன்னு யோசிச்சி செஞ்சிருப்பாங்க” என்றவனும் அவளுக்கு சமமான கோபத்துடன்  இருந்தான்.

மொத்தத்தில் யாருமே திருமண நிகழ்வை  ரசிக்கவில்லை.ரசிக்கும் மனநிலையிலும் இல்லை.

ஒவ்வொரு மணமக்களும் இந்த நாளுக்காக தவமாக தவமிருந்து தங்களின் ஒவ்வொரு நிகழ்வையும் ஆராதிப்பார்கள்.. ஆனால் இங்கோ இரு மணமக்களுமே எப்போதுடா நாளை முடியும் பிரச்சனையில் இருந்து சற்று ஓய்வு எடுக்கலாம்  என்ற மனநிலைக்கே வந்துவிட்டனர்..



Leave a comment


Comments


Related Post