இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
வஞ்சிக்காதே வசீகரா -26 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK012 Published on 02-07-2024

Total Views: 424

பாகம்-26

"ம் ! இன்னும் புஷ் பண்ணு. கொஞ்சம் தான். யு கேன் டூ இட்" பிரதீப்பின் குரல் தான் கேட்டுக் கொண்டிருந்தது.
'என்ன ஆச்சு? போகலாமா கூடாதா ?' தயங்கி  தயங்கி மெதுவாக எட்டி பார்த்தாள் ரேணு  . கதவு திறந்து தான் இருந்தது. அங்கே நிரஞ்சனா கையில் பெரிய பளுவை தூக்கிக்  கொண்டிருந்தாள் .
அதைப் பார்த்து பயந்தவள் , விழி விரித்து  பார்த்தாள் . கதவின் அருகே நின்றிருந்தவன் இவள் ஏதாவது பேசி விடாமல் இருக்க அவள் அருகே வந்து பேசக் கூடாது என்று  வாயில் விரல் வைத்து சைகை காட்டினான். இவளும் மெதுவாக தலை அசைத்தாள் .அவன் அவளுக்கு மிக நெருக்கத்தில் நின்றிருந்தான். அவனின் மூச்சுக் காற்று அவளுடன் கலந்தது. ஆனால்  அவனின் கவனம் அதில் இல்லை . அவன் தோழியிடம் தான் இருந்தது. கையில் ஸ்டாப் வாட்ச் ஓடிக் கொண்டிருந்தது.
கையில் இருந்த பளுவை டொமென்று கீழே தூக்கி போட்டாள்  நிரஞ்சனா.
"சூப்பர் நீரு! டைமிங் பரவால்ல. ,நல்லா  வந்துருக்கு,  வெல்டன். கை தட்டினான்"
"தேங்க்ஸ் டா! ஏதோ நீ வரும்போதெல்லாம் பண்ணறேன். அதுவே  ரெகுலரா பண்ணணுன்னா பயமா இருக்கே"
"அதுக்கு நீ எங்கையாவது ப்ராபரா ப்ராக்டிசுக்கு போகணும்"
"அவங்க போட்டிகளுக்கு போகனுன்னு சொல்லுவாங்க. அம்மா தான்  கண்டிப்பா கூடாதுன்னு சொல்லிட்டாங்களே"
"ஆமா! உங்க அம்மாவுக்கு வேற வேலை என்ன?. அதோட நமக்கு இஷ்டமில்லன்னா அப்படி எல்லாம் கம்பல் பண்ண மாட்டாங்க"
அப்போதுதான் திரும்பியவள், 
"ஹே  ரேணு! எப்ப வந்த?"
"இப்ப பேசலாமா?" கண்ணழகி கண்ணாலேயே கேட்டாள்.
"பேசு! பேசு !'
"என்னடா! என்ன ஆச்சு? 
"அது ஒன்னும் இல்ல! நீ வெய்ட் லிபிட்டிங் பண்ணும்போது தான் மேடம் வந்தாங்க. ஏதாவது சவுண்ட் கேட்டா உனக்கு டைவர்ட் ஆகிடுமேன்னு நான்தான் பேசாதன்னு சைகைல  சொன்னேன். அதான் மேடம் இன்னும் பாலோ பண்ணறாங்க "
"அது வந்து., எல்லாருக்கும்  காபி போடவா ?" அதை  கேக்காத தான் வந்தேன் . தொந்தரவுக்கு சாரி"
"ப்ச்! இதுல என்ன தொந்தரவு  ரேணு ?எனக்கு இப்ப வேணாம். ஒனக்குடா ?"
"நாம ரெண்டு பேருமே லெமன் ஜூஸ் குடிச்சுக்கலாமா நீரு ? ."
"ஓகே! ஆனா  நீதான் பண்ணனும். என்னால முடியாது"
"ஓகே! வா போலாம். நடப்பியா இல்ல தூக்கிட்டு போகணுமா?"
"நடந்தே வரேன். இல்ல! என்ன பெத்த  ஆத்தா  கொன்னுடும்"
"நீ போ! நாங்க வரோம் "
தலையை தூக்கி கொண்டை போட்டு கேட்ச் கிளிப் மாட்டி இருந்தாள்  ரேணு. அவளின் உருவத்தை பின் தொடர்ந்து சென்றவன் பனியனை பிடித்து இழுத்தாள் நீரு .
"ஏண்டா இந்தா மாதிரி சொல்லறதை எல்லாம் கேட்கற மாதிரி ஒரு பொண்ணு பாக்கவா ?"
"அய்ய அப்படி எல்லாம்  நினைக்காத. இது எல்லாம் வேஷம். புருஷனா மாட் றவனுக்குத் தான் ஆப்பு "
"ஏண்டா! நானெல்லாம் இல்ல? புருஷன் என்ன சொன்னாலும் கேட்டுகிட்டு! என்ன மாதிரி நல்ல பொண்ணுங்களும் கிடைப்பாங்க"
"எப்படி நீ புருஷன் சொல்லறதை கேட்டுகிட்டு ? திரும்பி நின்று கைகட்டி அவளை பார்த்தான். "அப்ப  ஏன் நீரு , அவரு பிஸ்னஸ் வேண்டாம். விட்டுட்டு வந்துருன்னு சொன்னதை கேக்கல?"
முன்னே சென்றாலும் ரேணுவிற்கு இவர்கள் பேசுவது காதில் விழுந்தது. இந்த விஷயம் அவளுக்கு அதிர்ச்சியாகத் தான் இருந்தது. 
'அண்ணா சொந்த  தொழில் பண்ணற பொண்ணுக்கு ஓகே சொன்னாரா?' அப்போதிலிருந்தே வண்டு  போல மூளையைக்  குடைந்து கொண்டிருக்கும் விஷயம் இதோ விளங்கி விட்டது.
"உனக்கு எப்படி? பாஸ்கர் சொன்னானா? "
"நீதான் எல்லா  விஷயத்தையும் மறைக்க ஆரம்பிச்சுட்டியே? அப்ப அவன் தானே சொல்லி யாகணும் ?"
"சரி விடு! நாம அப்புறம் பேசிக்கலாம்"
"உனக்கு என்ன? நான் எப்பவும் யாருகிட்டயும் எதுவும் பேசிடக் கூடாது. அதான! உன் வாழ்கை எப்படி போனா எனக்கு என்னன்னு  வாய் இருந்தும் பேசாமலேயே இருக்கணும். இதுக்கு நாக்க  புடிங்கிட்டு சாகலாம். கோபத்தோடு சென்று டைனிங் டேபிளில் அமர்ந்தான்.
"அண்ணி! பால் இல்லையே?"
"ஓ ! அம்மா நேத்து  பால் வாங்கல ?"
"அத்தை ஆன்லைன்ல வாங்கினாங்க. ஆனா அது எல்லாம் நேத்தே காலி ஆகிட்டுது அண்ணி "
"ப்ச்! சரி! கொஞ்சம்  வெய்ட் பண்ணு . நான் போய்  வாங்கிட்டு வரேன்"
"இல்ல அண்ணி ! கடை எங்க  இருக்குன்னு சொல்லுங்க. நான் போயிட்டு வரேன்"
தனியாக கிளம்பி விட்டாள் . 
கோபத்தோடு அமர்ந்திருந்தவன் மனம் கேட்காமல் 
 " அவ தனியா போக வேணாம். நானும் போயிட்டு வரேன்" பின்னாலேயே சென்றான் பிரதீப்.
லிப்டிற்க்காக காத்திருந்தவள்,
"ஓ!சார் உங்களுக்கு ஏதாவது வேணுமா? நானே வாங்கிட்டு வரேன்"
"எனக்கு தேவையானது வாங்கற அளவுக்கு நீ பெரிய ஆளா ? எனக்கு ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் வேணும். பால் கடைல கிடைக்குமா?"
அவனுக்கு இன்னும் கோபம் குறையவில்லை. புரிந்து கொண்டு அமைதியாக இருந்தாள் .
"சாரி சார் !"
"இது என்ன எப்ப பார்த்தாலும் சாரு சாருன்னு.. நான் என்ன உனக்கு பாஸா?"
"வேற எப்படி கூப்பிடறது?"
"ப்ரதீப்னு கூப்பிடு"
"இல்ல எனக்கு அப்படி எல்லாம் கூப்பிட வராது"
அதற்கு மேல் அவன் எதுவும் பேசவில்லை. 
"இவரு என்னஅண்ணாவை  விட கோபகாறரா இருப்பாரு போல இருக்கே ' பயத்தோடு அவனுடன் வந்தாள் .
வெளியில் வந்ததும்  அவனின் பெரிய பெரிய காலடிக்கு இவளால் பின் தொடர முடியவில்லை. அவனோ கேட்டின் அருகில் நின்று திரும்பிப் பார்த்தால்  இவள் பின்னாடி எங்கோ வந்து கொண்டிருந்தாள் வேக நடையோடு"
தன்னையே நொந்து கொண்டு அவளுக்காக காத்திருந்தான். மீண்டும் அதேப்  போலத்தான். அவன் எங்கோ முன்னே சென்றிருக்க இவளை ஆளையே காணவில்லை.
கவலையோடு திரும்பி வந்து பார்த்தால்  இவள் அங்கே படுத்திருந்த நாய்களுக்கு பயந்து நகராமல் நின்றிருந்தாள் .
"என்ன ஆச்சு?"
"இல்ல நாய்!"
"சோ ?'
"அதான் பயமா இருக்கு"
அவள் கை பிடித்துக் கொண்டான்.  இருந்தும் அவளுக்கு பயமாகவே இருந்தது.
"அதுங்க ஒன்னும் பண்ணாதும்மா" பிரதீப்புக்கு  இத்தனை பொறுமையா? எனக்கே ஆச்சர்யம்தான்.
"இல்ல படுத்திருக்கறது திடீர்னு பாய்ஞ்சு என்ன கடிச்சுருச்சுன்னா? "
இப்போது அவனின் பொறுமை டாடா சொல்ல தயாரானது.
"நான் சின்ன வயசா இருக்கும்போது நாலஞ்சு நாய்ங்க என்ன கடிக்க வந்து ரொம்ப பயந்துருக்கேன். இப்பவும் நாய்ங்க கடிக்கறமாதிரி எனக்கு அடிக்கடி கனவு வரும். அம்மாவை கட்டிபுடிச்சுக்கிட்டுதான்  தூங்குவேன். கனவுல அழுகிற  மாதிரி நினைச்சுகிட்டு நினைவுலையும் அழுவேன். அம்மாதான் சமாதானப் படுத்துவங்க "
"கல்யாணத்துக்கு அப்புறம் இந்த வேல வேற இருக்கா? " பெரு மூச்சு விட்டுக் கொண்டான்.
"சரி! இந்த பக்கம்  வா " கைகளை அழுத்திப் பிடித்துக் கொண்டான். பயத்தில் நடந்தவள் அவளையும் அறியாமலேயே அவன் புஜங்களை பிடித்துக் கொண்டிருந்தாள் . அவள் தான் பயத்தில் இருந்தாள் . ஆனால் அவன் தெளிவாகவே இருந்தான்.
நாய்களை தாண்டி வந்ததும், சில நொடிகள் நின்றான்.
"நாய்ங்க போய்டுச்சு" சொல்லி விட்டு அவள் கட்டிக் கொண்டிருந்த அவன் கைகளை பார்த்தான். வெடுக்கென நகர்ந்து கொண்டாள் . 
"சாரி ஏதோ பயத்துல" கீழ்  உதட்டைக் கடித்துக் கொண்டாள் . அவள் முகம் சிவந்திருந்தது. அவனுக்கு அதில் ஒரு தனி கர்வம் வந்து விட்டது. இந்தப் பெண்ணின் முகச் சிவப்புக்கு தான் காரணமா? புதிதாக பூத்த ரோஜா போல இருந்தது அவள் முகம். பால் வெளுப்பு என்று சொல்ல முடியாது. அளவான நிறம். அவனுக்கு ஏற்ற உயரம் இல்லை. தோள்  வரை இருந்தாள் . ஊளை சதை இல்லாத அழகான இடுப்பு. அதற்கு மேலே! சென்சார்" 
"பயத்துனாலதானா?" அவன்  கேள்வி அவளுக்குப் புரியவில்லை.
"அப்டின்னா?"
"ஒன்னும் இல்ல" தோள்களைக் குலுக்கி விட்டு கடைக்குள் நுழைந்து ஆவின் பாலை எடுக்கப் போனான்.
"சார்! ஆரோக்யா  வாங்கிக்கலாம். நிறைய பேரு  இருக்கோம். தண்ணி கலந்துக்கலாம் "
"தண்ணியா?" அவனுக்கு அது எல்லாம் தெரியாது. 
"ஓகே! என்ன வேணுமோ நீயே வாங்கு"
அவன் அங்கே மாட்டி இருந்த சில ஜெம்ஸ்  மிட்டாயை எடுத்துக் கொண்டான். சில லாலி பாப்  பாக்கெட்டுகளை எடுத்துக் கொண்டான். சில வகை சிப்ஸ், இன்னும் சாக்லேட்டுகள் வாங்கி கொண்டான்.
"அவன் அருகில் வந்து தயங்கி நின்றவள், 
"சார் எனக்கு அந்த சாக்லேட்டு வேணும். வாங்கி தரீங்களா? வீட்டுக்குப் போய்  காசு கொடுக்கறேன்."
"அது எதுக்குன்னு தெரியுமா?"
"அதெல்லாம் தெரியாது. ஆனா பெரிசா இருக்கு."
தலையில் அடித்துக் கொண்டவன்  
"அது லவ்வர்ஸ் டே ஸ்பெஷல்"
"அப்படின்னா கண்டிப்பா வேணும்"
"ரேணுகா நீ எங்கிட்ட ? "
"நீங்க வாங்குங்க நான்  போகற  வழில காரணம் சொல்லறேன்"
"நான் உங்கள் காதலிக்கறேன். பட்டென  சொல்லி விடப்  போகிறாளா? 
சொல்லி விட்டால் என்ன செய்வது? எத்தனையோ பெண்கள் மேலே வந்து விழுந்து ஐ லவ் யூ  சொல்ல , சாரி எனக்கு விருப்பமில்லை என்று சொல்லிநகர்ந்தவன் தான். அதில் பல சினிமா அழகிகளும் தான் டேட்டிங் போக  கேட்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் எந்த படபடப்பும் இருந்தததில்ல. அது என்ன இவள் வந்து உரிமையாக சாக்லேட் கேட்கும்போது மனம் இப்படி அடித்துக் கொள்கிறது? 
கையில் கட்டி  இருந்த ஸ்மார்ட் வாட்ச் பார்த்துக் கொண்டான். இதயத் துடிப்பு வேகமாக அதிகரித்தது .மனதை அமைதியாக்க முயன்றான் . 
"இது எங்க அண்ணனுக்கு, அண்ணியை  கொடுக்கச் சொல்லுவேன். அண்ணன் இதுவரைக்கும் எனக்கு நினைவு தெரிஞ்சு சாக்லேட்டு சாப்பிட்டதே இல்ல. சின்ன பிள்ளையா இருக்கும்போது கூட நீங்க  சாப்பிடுங்கன்னு எங்களுக்கு கொடுத்துடும். அண்ணா மட்டும் இல்ல. அம்மா அப்பாவும்தான். இருந்தாலும அவங்க பரவால்ல. பெரியவங்க. ஆனா அண்ணனுக்கும் அப்ப சின்ன வயசு தான்.ஸ்கூல்ல  யாராவது பிறந்த நாளுக்கு கொடுத்தாலும் அதை  கொண்டு வந்து எங்ககிட்டையே கொடுத்துடும். ஒன்னு கூட அது பிரிச்சு சாப்பிட்டதே இல்ல. தனக்குன்னு எந்த ஆசை இருந்தாலும் எல்லாத்தையும் எங்களுக்காக விட்டு கொடுத்துடும். இப்பவும் நான் போய்  குடுத்தா கூட   அத எனக்கே ஊட்டி  விட்டுடும். அதான் அண்ணி  கொடுத்தா நல்லா  இருக்கும்"
அவள் பேசப் பேச அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. செந்தில் மீது இருந்த கெட்ட  எண்ணம் மாற ஆரம்பித்தது. 'தன்  பொக்கிஷத்தை எத்தனை அழகாக வளர்த்திருக்கிறான். ஆனால்  அதேப்  போல  நீருவும்தான் இவனின் பொக்கிஷம்.அதை அவன் பாதுகாக்க வேண்டாமா ?'
ரேணுவின் முகத்தை பார்த்தான். உதட்டில் லேசான வெட்கப் புன்னகை.
"என்ன மேடத்துக்கு என்ன கற்பனை?'
"இல்ல! அது ஒன்னுமில்ல"
"நான் சொல்லட்டா ?"
"இல்ல! எதுவும் சொல்ல வேணாம்"
அவன் முகத்தை பார்க்க முடியாதவள், அவனை கடந்து லேசாக ஓட்டம் எடுத்தாள் .
"என்னை இப்படி கொல்லறியேடி" அவனை அடக்கி கொள்ள அவனுக்கே மிகவும் கஷ்டமாக இருந்தது .
"அவளை ஏதாவது பன்ணறதுக்குள்ள முதல்ல இங்கேர்ந்து கிளம்பனும்"
அவனின் மனம் கவர்ந்த கண்ணழகிக்கு மனம் நிறைக்க  காதலையும் , உடலுக்கு காமத்தையும் கொடுக்க அவன் தயாராகி விட்டான். 
லிப்டில் இருவரும் ஒன்றாக நின்றார்கள்.
"ஆமா! எதுக்கு இவ்ளோ ஸ்னாக்ஸ்?
"வீட்டுல குழந்தைங்க இருக்காங்கல்ல?"
'எந்த குழந்தைங்க?"
"அதான் நீருவும்  பவியும் ?'
"அப்ப  நான் குழந்தை இல்லையா?"
அடிப் பாவி நான் வேற எதுக்கோ பிளான் பண்ணா  இவ என்ன? லாலி பாப்புக்கு சண்டைக்கு நிக்கறா! .
"நீ எல்லாம் குழந்தை இல்ல. நீ வேற"
சொல்லிக் கொண்டே வீட்டின் வாயிலில் செக்யூரிட்டி பட்டனில் எங்களை அழுத்தினான்.
"நம்பர் தெரிஞ்சா போதுமா? பெல் அழுத்த வேணாமா?"
"சில பேருக்கு தான் நம்பர். புது ஆளுங்களுக்கு அது இல்ல"
"நீங்க நம்பர் போடும்போது வேற யாரவது நோட் பண்ணிகிட்டா ?"
"யாரும் பண்ண மாட்டாங்க. பக்கத்துல யாரும் இருக்காங்களான்னு செக் பண்ணிக்கணும்.
"அதான் இப்ப நான்  இருந்தேனே"
"அதெல்லாம் பரவால்ல. நான் நினைச்சா உன்னையே  லாக் பண்ணிடுவேன் "
அதன் அர்த்தம் நிச்சயம் அவளுக்கு புரிந்திருக்காது. மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.
அதையே அவளும் நிரூபித்தாள் . இருவரும் உள்ளே வரவும் , 
"ஹை! என்னடா இது இவ்ளோ அங்கிட்டு வந்துருக்க"
"தேங்க் யூ  மச்சி" நீரு  அவனை கட்டிக் கொண்டாள் . 
"ஏய் சும்மா ஆடாத. கவி ,பவிக்கு ஒனக்கு எல்லாம் சேர்த்து வாங்கி இருக்கேன். இவ வேற உனக்குன்னு தனியா ஏதோ வாங்கி இருக்கா "
ரேணு உள்ளே காபி போடப் போனாள் . 
"டேய் சூப்பர் டா ! லாலி பாப், ஜெம்ஸ் வாவ் எவ்ளோ நல்ல பையாண்டா நீ" கன்னம் கிள்ளி  கொஞ்சினாள் .
வேலை பார்த்தாலும் நடுநடுவே இவர்களையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள் ரேணு.
"அதெல்லாம் கிடையாது. ஒனக்கு நோ சாக்லேட்ஸ்" மிரட்டிக் கொண்டிருந்தான் பிரதீப்.
"டேய் ப்ளீஸ்  டா ஒண்ணே ஒன்னு டா! போடா நீ என்ன சொல்லறது. நானே எடுத்துப்பேன் 'சண்டை சமாதானம் எல்லாம் செய்து கொண்டிருந்தாள் . 
"அங்க பாரு உன்ன விட சின்ன பொண்ணு. எவ்ளோ  பொறுப்பா  வேலை பாக்குது. நீ லாலி பாபுக்கு அடிச்சுக்கற?" திட்டிக் கொண்டே பூரணி உள்ளே சென்றாள் .
"போ போய் மாப்பிள்ளையை பல் விளக்கிட்டு வரச் சொல்லு "
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனை எழுப்ப மனம் வரவில்லை. மெதுவாக தலை  கோதி நெற்றியில் முத்தமிட்டாள் . 
லேசாக அசைந்தான் .
"குட் மார்னிங் செந்தில்"
அவன் ஆசைப்பட்ட முதல் பகல். அவன் மனைவி தலைகோதி முத்தமிட்டு எழுப்ப ஆசை பட்ட நாள். லேசாக கண்ணை கசக்கி விழித்துக் கொண்டவன் அழகியை மனைவி அருகில் இருக்க . ,
என்ன செய்திருப்பான்?
தொடரும்.......





Leave a comment


Comments


Related Post