இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
வஞ்சிக்காதே வசீகரா -27 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK012 Published on 02-07-2024

Total Views: 556

 

பாகம்-27

 

அவன் ஆசைப்பட்ட முதல் பகல். அவன் மனைவி தலைகோதி முத்தமிட்டு எழுப்ப ஆசை பட்ட நாள். இந்த. தவறான நேரத்தில். லேசாக கண்ணை கசக்கி விழித்துக் கொண்டான். 

"போய்  பிரஷ்ஷாகிட்டு வாங்க. டீ  குடிக்கலாம்"

முகம் கழுவிக் கொண்டு வந்தான்.அத்தையிடம்  இருந்து அழைப்பு வந்திருந்தது.

"சொல்லுங்க அத்தை "

"போனை எடுத்துக் கொண்டு  மேலே இருந்த பால்கனிக்கு சென்றான். வீட்டின் உள்ளேயே படிகள் இருந்தன. மொட்டை மாடி என்று நினைத்தவன் அங்கே ஒற்றை பால்கனியோடு இன்னும் சில அறைகள் இருப்பது கண்டு பிரமித்தான். அதற்கும் மேலே தான் மொட்டை மாடி இருந்தது. அங்கே பல வண்ண மயமான பூக்கள் ஒரு புறம் என்றால் மறு புறம் மாடி வீடு தோட்டம் போட்டிருந்தார்கள் . அங்கே தக்காளியும் வெண்டைக்காயும் காய்த்து தொங்கி இருந்தன.

வீடெங்கும் கணவனை தேடியவள் அவன் இருக்கும் இடத்திற்கு வந்தாள் . அவன் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான். அங்கே யாரும் இல்லை என்பதால் போனை கையில் வைத்துக் கொண்டு ஸ்பீக்கரில் போட்டு பேசிக் கொண்டிருந்தான்.

"நம்ம மாதவி அங்க உங்க வீட்டுல வந்து கொஞ்ச நாள்  இருக்கப் போறா. மதியம் பஸ்சுக்கு கிளம்பி ராத்திரி வந்துருவா. அவ பிரண்டு யாரோ மெட்றாஸ்  வராளாம் . அதான்  அவ கூடவே  வந்துக்கறேன்னுட்டா . நீ போய்  அவளை அழைச்சுக்கோப்பா "

"இல்லை அத்தை  இப்ப வேணாம். கொஞ்சம் நாளாகட்டும்"

வீடு இடிக்கப் பட்டது சொல்லிக் கொண்டிருந்தான்.

"என்னப்பா  இது!  இப்படி குண்டை தூக்கி போடற? எப்ப அந்த மூதேவியை நீ பார்த்தியோ அப்பத்துலேர்ந்து உனக்குப்புடிச்சது சனி. போயும் போயும் எந்த உலகத்துலையும் இல்லாத அழகிய கட்டிக்கிட்டு வந்தாலும் வந்த, அன்னிக்கு ஒனக்கு பிடிச்சது தரித்திரம்"

தனக்கும்  கணவனுக்கும் தேனீர் கொண்டு வந்தவள் அந்த  சொற்களை கேட்டு ஸ்தம்பித்து நின்று விட்டாள் . அதை விட பெரிய அதிர்ச்சி, கணவன் வாய் மூடி  இருந்தது. எனக்கு சப்போர்ட்டா பேச வேணாம். அட்லீஸ்ட்  திட்டாதீங்கன்னாவது சொல்லி  இருக்கலாமே" மனதிற்கு வேதனையாக இருந்தது. 

திரும்பி வந்தவன் பேசிய  பேச்சு அதை ஆமோதிப்பது போல இருந்தது.

'அப்படின்னா அவரும் அதேயே தான்  நம்பறாரா?'

"அம்மா ! கிளம்பலாம்"

"என்னடா இது திடுதிப்புன்னு வந்து கிளம்பலான்னு  சொல்லற. முதல்ல நீ போய்  நம்ம  வீட்டை பாரு. அப்புறம் சொல்லு. நாங்க வரோம்"

"இல்லம்மா! அதெல்லாம் சரிப்பட்டு வராது. நாம் இன்னொருத்தர் வீட்டுல எத்தனை  நாள் உக்கார முடியும். எதுவா இருந்தாலும் நாம பார்த்துக்கலாம். அங்க போய் டிசைட் பண்ணிக்கலாம். கிளம்புங்க"

"என்னடா பேச்சு இது? இது ஒன்னும் யாரோ வீடு இல்ல. உன்னோட பொண்டாட்டி வீடு . நாம் ஒன்னும் இங்க விருந்துக்கு வரல. சமயம் சரி இல்ல அதனால உதவி கேட்டு வந்துருக்கோம்"

"ஓபணக்கார வசதியான வீட்டை பார்த்ததும் உங்க யாருக்கும் கிளம்ப மனசு வரல இல்ல? எல்லாம் பணம் பண்ணற வேலை"

"வாயை மூடுடா. என்னடா பணம் பண்ணற வேலை? குடிசையா இருந்தாலும் அது நான் கஷ்டப்பட்டு கட்டின வீடு. நான் ரோட்டுல கால் கடுக்க நின்னு சம்பாதிச்சு கட்டின வீடு. உங்களையும் படிக்க வச்சு அந்த வீட்டையும் கட்டி இருக்கேன். யாரை என்ன சொன்ன? உங்க அப்பாவுக்கு சரியான வேலை கிடையாது.அது தவிர கெட்ட  கேட்டுக்கு  குடி வேற. எத்தனை கஷ்டப்பட்டு அந்த வீட்டை கட்டினோன்னு ஒனக்கு தெரியாது? சாப்பிட இடம் இல்லன்னா ரோட்டுல ஆகிக்கலாம். அப்படி ஆக்கி  சம்பாதிச்ச வீடுதான் அது. எனக்கு அது கஷ்டம் இல்ல. இதோ இதுங்க ரெண்டும் எங்க பாத்ரூம் போகும்? ஆம்பளைங்களா என்ன? இதோ இவளுக்கு இந்த மாசத்துக்கு இதோ அதோன்னு நிக்குது.

"ஏன்  நீ இல்ல? மாசத்துக்கு விலக்கு  இருந்தப்ப  நீ பொருத்துக்கல?. ஏதோ இப்ப சந்தர்ப்பம் சரி இல்ல. இந்த மாதிரி ஆகி போச்சு. வேணுன்னா பெரியத்த வீட்டுக்கு போங்க. இல்ல மாமா வீட்டுக்கு போங்க. எதுக்கு இங்க இருக்கனும்?"

நீருவுக்கு பிரதீப்புடன் சிரித்து  பேசிக் கொண்டு வந்த சந்தோஷமான மனநிலை இப்போது மறைந்து விட்டது. 

"அம்மா! அண்ணன் சொல்லறது சரிதான். நாம எதுக்கு வந்து இங்க யாரோ வீட்டுல உக்காரனும்?"  ரேணுகா வாய் வார்த்தையாக சொன்னாலும் அதன் உள்  அர்த்தம் வேறாக இருந்தது.

"எது யாரோ? நேத்து கூப்பிட்ட குரலுக்கு வந்து நின்னாளே  அவளா? அவளும் அந்த தம்பியும் மட்டும் இல்லன்னா நம்ம நிலைமை என்ன? பாதி ராத்திரி வரைக்கும் நின்னு,"எனக்கு அவ வேண்டான்னு  கையெழுத்து வாங்கிட்டு வந்து நின்னானே இவன் , அதை  நேத்து நினைச்சாளா அவ? "

"எதுக்கு தேவை இல்லாம  பேசற? ஒனக்கு இங்க இருக்கணுமா இரு. ஆனா எனக்கு இங்க இருக்க விருப்பம் இல்ல"

"டேய்  நீ யாரு பேச்சை  கேட்டு இந்த மாதிரி ஆடறன்னு  எனக்கு தெரியும். இதெல்லாம் இங்க நடக்காது"

"இப்ப ஒனக்கு என்னதான் வேணும் ?"

"முதல்ல ஒரு பாத்ரூம் கட்டு . அப்புறமா நானும் என்னோட பொண்ணுங்களும் வரோம் "

"என்ன நினைச்ச மாத்துறதுல  செய்யற விஷயமா இது? நான் காசுக்கு ரெடி பண்ண வேணாமா? இதோ இந்த மாசம் பொறக்க போகுது. வண்டிக்கு டியூ கட்டணும். கடைக்கு வாங்கின கடன் கட்டணும். வீட்டு செலவு. எல்லாத்துக்கும் நான் எங்க போக? எத்தனை நாள் இங்கையே இருக்க முடியும்?"

"சரிடா! அதுக்கு என்னடா பண்ண முடியும்? இது எல்லாமே மாசா மாசம் இருக்கறது தானே?" "ஓ நான் எவ்ளோ கஷ்டப்பட்டாலும் நீங்க யாரும்  வர மாட்டீங்க. இங்க தான் இருப்பீங்க. அப்படித்தானே? எல்லாம் அவளால் வந்தது. என்னிக்கு அவளை பார்த்தேனோ அன்னிக்கே என்னோடநிம்மதி போச்சு" 

நெற்றியில் ஓங்கி அடித்துக் கொண்டான்.

"நம்ம வீட்டு மகாலஷ்மிடா  அவ.  அவ வந்ததுக்கு அப்புறம்தான் உன்னால கடை வேலைய முடிச்சு கடை திறக்க முடிஞ்சது. அவளை போய் "

"விடுங்க அத்தை  அவரு சொல்லறதும் சரி தான். என்னிக்கு நாங்க ரெண்டு பேரும்  மீட் பன்னோமோ அன்னிலேர்ந்தே பிரச்சனை தான். இப்ப என்ன உங்களுக்கு காசு  தானே  பிரச்சனை. நானே உங்களுக்கு அந்த வீட்டை சரி பண்ணி தரேன். போதுமா?

'என்ன நான் உன்கிட்ட வந்து  பிச்சைகேட்டேனா?"

"வேணாம். உங்களுக்கு ப்ரீயா இல்ல. பேங்க்  வட்டிக்கு தரேன்.. உங்களுக்கு எப்ப முடியுமோ கொஞ்சம் கொஞ்சமா  கொடுங்க. வேணுன்னா அக்ரீமெண்ட் போட்டுக்கலாம்."

"சரி"  அதுவும் அவள் முகத்தை நேராகப் பார்த்து கூறவில்லை. பிடிக்காமல் முகம் திருப்பிக் கொண்டான்.

"நீங்க  குளிச்சுட்டு கிளம்புங்க. நான் ஒரு என்ஜினீயரை அங்க வந்து பாக்க  சொல்லறேன்.

கண்களில் தளும்பிய நீரை துடைத்துக் கொண்டு வெளியேறினாள்  நிரஞ்சனா. 

 "ஒரே ஒரு கிறீன் தாடா . ப்ளீஸ் டா பரப்பிலே  எனக்கு வரலடா கொடுடா ப்ளீஸ். பிங்க் பார் கேர்ள்ஸ 

'சற்று நேரம் முன்பு  வரை  எத்தனை சந்தோஷமாக இருந்தாள் . என் கண்ணுதான் பட்டுடுச்சு போல' வருத்தப்பட்டுக் கொண்டார் மீனாட்சி. 

செந்திலுக்கும் வருத்தமாகத் தான் இருந்தது. இருப்பினும் அவள் கண்ணீருக்கு தான், தான்  காரணம் என்பது தான் புரியவில்லை. 

அன்று விடுமுறை தினம் என்பதால் அனைவருமே வீட்டில் தான் இருந்தார்கள். செந்தில் மட்டும் கிளம்பி விட்டான். யாரும் தன்னுடன் வர வேண்டாம் என்று சொல்லி விட்டான்.

வந்து பார்த்த இன்ஜினியர்,

"எல்லாமே ஒத்த கல் சுவர் மேடம். ரொம்ப வருஷமெல்லாம் தாங்காது. பேசாம மொத்தமா இடிச்சுட்டு கட்டிக்கறது தான் பெஸ்ட். அது மாட்டும் இல்லாம எந்த பிளானும்  இல்லாம கட்டி இருக்காங்க. மொத்தமா இடிச்சுட்டு கட்டினா  இருக்கற எடத்துல இன்னும் கொஞ்சகம் இடம் கிடைக்கும்."

"ஓகே! நான் அவங்க கிட்ட கன்சல்ட் பண்ணிட்டு  சொல்லறேன்"

"எப்படியும் உங்களால  அங்க ரொம்ப வருஷம் இருக்க முடியாது அத்தை . இவர்களுக்கும் கல்யாண வயசு வந்துடுச்சு. அடுத்து மாப்பிளைங்க வந்தா தங்கவும் இடம் வேணும். செலவோட செலவா நானே  எல்லாம் முடிச்சு கொடுத்தறேன் அத்தை "

நீ சொல்லறது சரிதான் இருந்தாலும்..."

"நீங்க ஒன்னும் சொல்ல வேணாம். நான் பார்த்துக்கறேன். நீங்க உங்க பையனை  மட்டும் கன்வின்ஸ் பண்ணு=ங்க போதும்" 

அதன் படியே அவர்களின் வீடு கட்டும் பணி  தொடங்கியது. இதற்கு நடுவில் பூரணி தனது நெருங்கிய தோழியை ஒரு கடையில் சந்தித்திருந்தார். அவரின் தோழியோ பொள்ளாச்சிக்கு அருகில் இருக்கும் ஒரு சீனியர் சிட்டிசன் ஹோமில் தங்கி இருந்தார்.

"நான்தான் நாளைக்கு கிளம்பறேன். நீயும் வந்து ரெண்டு நாள் என் கூட இரு ப்ளீஸ்"

கணவனையும் இழந்து  பிள்ளைகளும் வெளி நாடுகளில் இருந்ததால் தன்னுடைய பழைய தோழியை கண்டதும் விட மனம் வரவில்லை போலும். சரி என்று ஒப்புக் கொண்டு தோழியுடன் செல்ல தயாரானார் பூரணி. 

அங்கே அவருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி...

தொடரும்.... 


Leave a comment


Comments 1

  • L Lakshmipriya
  • 1 day ago

    Hi please correct the font size for 28th episode ud...can't able to read....kindly check ma


    Related Post