இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
கவிதை 30 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK026 Published on 03-07-2024

Total Views: 926

    இருவர் கண்களும் ஒருவரையருவர் நேக்க அதில் தெரிந்த காதலில் திளைத்தனர்.    காதலுடன் அவளின் முகம் பார்த்து விரலில் மோதிரத்தை அணிவித்தான் கார்த்திகேயன்.

   கயல்விழியும் அவனின் முகத்தில் பூத்த புன்னகையை விழியசைக்காமல் பார்த்துக்கொண்டே அவனின் கையில் மோதிரம் போட்டுவிட்டாள்.

    இவர்கள் மோதிரம் மாற்றிய பிறகு இளவரசன் அமிர்தவள்ளியிடம் மோதிரம் கொடுக்க அதை புன்னகையுடன் மாற்றிக்கொண்டனர்.  அதன் பிறகு உறவினர்கள் வந்து அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தனர்.

     அடிக்கடி காதலுடன் பார்த்துக்கொண்டாளும் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை.  பின் குடும்பப்புகைப்படம் எடுக்க அனைவரும் மேடை வந்த போது கார்த்திகேயன் அமைதியாக இருந்தான்.

    வீரராகவன், சாந்தி, கோதண்டம் லலிதா சேரில் அமர்ந்து இருக்க அவர்கள் பின் திருமண ஜோடிகள் நின்றன.  வீரராகவன் சாந்தி தம்பதியரின் பின் கார்த்திகேயன் கயல்விழியும் கோதண்டம் லலிதா தம்பதியரின் பின் இளவரசன் அமிர்தவள்ளி நின்றனர். சரவணன் தன் அண்ணன் அருகில் தயக்கத்துடன் நிற்க கார்த்திகேயன் எதுவும் சொல்லாமல் சற்று விலகி நின்றவனை கை பிடித்து அருகில் நிற்கவைத்து கொண்டான்.

    இதுவரை இளவரசன், கயல்விழி அமிர்தவள்ளியிடம் பேசிய அண்ணன் தன்னிடம் ஒரு முறை கூட பேசவில்லை என்று வருத்தத்தில் இருந்தவனை இன்று தன் அருகில் நிற்க வைத்ததும் இல்லாமல் அவனின் தோளிலும் கைகள் போட்டு நின்றான் கார்த்திகேயன்.

    பின்னியிருந்த ஜோடிகள் இடமாற்றி நின்றனர்.  மாற்றி மாற்றி நின்று சில போட்டோக்கள் எடுத்தனர்.  வீரராகவன் சாந்திக்கு சந்தோஷம் தாளவில்லை தங்கள் மகன் தங்களுடன் போட்டோ எடுத்ததிற்கே மிகுந்த சந்தோஷம் அடைந்தனர்.

    பின் உணவு உண்டு விட்டு மாடிக்கு சென்று திருமண ஜோடிகளை விதவிதமாக போட்டோக்கள் எடுத்தனர்.

    அனைத்தும் முடித்து தன் அறைக்கு நுழைந்த கார்த்திகேயன் பின் வெளியே வரவில்லை.  கயல்விழி தன்னிடம் பேசவருவான் என்று காத்திருக்க அவன் அறை கதவு திறக்கவே இல்லை.

      அதிகாலை நாலரை மணிக்கு அவனின் அறைக்கதவை தட்டிய பிறகே வெளியே வந்தான் கார்த்திகேயன்.   அப்போதும் இரு ஜோடிகளுக்கும் எண்ணெய் நலங்கு வைத்து குளிக்க அனுப்பினர்.

    அய்யர் அழைத்த போது வந்து சில பூஜைகள் செய்து முகூர்த்த உடைகளை வாங்கிச்சென்று அணிந்து கொண்டு மீண்டும் அய்யர் சொன்னதை செய்து கொண்டு இருந்தனர் நால்வரும் அனைத்தும் முடித்து தாலியை கொடுத்து அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கி வந்து கொடுத்தும் அய்யர் மந்திரம் சொல்லி தாலியை எடுத்து கொடுத்து  "கெட்டி மேளம் கெட்டி மேளம்" என்று குரல் கொடுத்ததும் மங்கள இசையுடன் அனைவரின் ஆசிர்வாதத்துடனும் தன் உயிரானவளின் முகத்தை பார்க்க அவளும் அவனைத்தான் கண்கலங்க புன்னகையுடன் பார்த்து இருக்க மூன்று முடிச்சு போட்டு தன் சரிபாதி ஆக்கினான் கார்த்திகேயன்.

    இளவரசனும் அமிர்தவள்ளியை புன்னகையுடன் பார்க்க அவளும் அவனை பார்க்க மூன்று முடிச்சு போட்டு தன் மனைவியாக்கினான்.   மேலும் சடங்குகள் அனைத்தும் முடித்து உணவு உண்டு முடித்து மீண்டும் புகைப்படம் எடுத்துக்கொண்டு அனைத்து  சுபமாக சென்று கொண்டு இருக்க அனைவர் முகத்திலும் சந்தோஷம் நிறைந்து இருந்தது.

    அந்நேரம் வீரராகவரின் சித்தப்பா என்ன வீரா எல்லாம் நல்லபடியாக முடிந்தது நல்லநேரம் முடிவதற்குள் பிள்ளைகளை வீட்டிற்கு கூட்டிட்டு போய் வீட்டில் செய்ய வேண்டியதை செய்யலாம் என்றதும் அவரை நன்றி பெருக்கேடு பார்த்த வீரராகவன் சரி சித்தப்பா அப்படியே செய்யலாம் என்று கூறினார்.

   சிலரை முன்னாடி சென்று ஆலம் கரைத்து வைக்கச்சொல்லி அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டு வீட்டுக்கு கிளம்பலாம் என்று வந்து நின்றவரின் கண்கள் மகனைத்தேட அங்கு கயல்விழி மட்டுமே அமர்ந்து உறவுப்பெண்கள் உடன் பேசிக்கொண்டு இருந்தாள்.  அவளிடம் வந்து  "கார்த்திகேயன் எங்க கயலுமா?..." என்றார்.

    அவளும் "ரூமுக்கு போனார் மாமா" என்று சொல்லிவிட்டு ரூமை நோக்கியவள் அதிர்ந்து எழுந்து நின்றாள்.   அவளின் பார்வை சென்ற பக்கம் பார்த்த வீரராகவருக்கும் அதிர்ச்சி தான்.

   திருமண உடைகளை கலைத்துவிட்டு எப்போதும் போடும் ஜீன்ஸ் பேண்ட் சட்டை அணிந்து கொண்டு இரண்டு கைகளிலும் பெட்டிகளை எடுத்து கொண்டு வந்தான் கார்த்திகேயன்.

   வேகமாக மகனிடம் சென்று  "கார்த்திகேயா என்னப்பா கல்யாண டிரஸ்சை மாத்திட்ட" என்று கேட்டார் வீரராகவன்.

   அவருக்கு எந்த பதிலும் சொல்லாமல் லலிதா அருகில் சென்றவன்  ஒரு பெட்டியை அவரிடம் கொடுத்தவன்  "வேலை விஷயமாக வெளியூர் போகிறேன் அத்தை திரும்பி வர எத்தனை நாட்கள் ஆகும் தெரியாது அதனால் நான் திரும்பி வரும் வரை விழியை  உங்க வீட்டில் வச்சுக்கேங்க திரும்பி வந்ததும் என் வீட்டில் கூட்டிட்டு வந்து விடுங்கள் அத்தை" என்றான் கார்த்திகேயன். 

   "கார்த்தி கண்ணா வீட்டுக்கு வந்துட்டு கிளம்பி இருக்கலாம் இல்லையா?... "என்றார். 

   " இருக்கட்டும் அத்தை" என்றவன் திரும்பி கயல்விழியை பார்த்துவிட்டு தாத்தா பாட்டி அருகில் சென்றவன் 

    " ரொம்ப நன்றி தாத்தா, பாட்டி எல்லாம் முன்ன நின்னு செய்து இருக்கிங்க" என்று கை குவித்தவனை 

    " என் அண்ணன் பேரப்பிள்ளைகள் எனக்கு பேரப்பிள்ளைகள் தான்பா.   ஆனால் நீ ஏன் இப்படி திடீரென கிளம்பற கார்த்திகேயா" என்று கேட்டார். 

     "தாத்தா ஒரு முக்கிய வேலை  கிளிம்பியே ஆகவேண்டும் இளவரசனிடமும் பேசிவிட்டேன் நீங்கள் செய்ய வேண்டிய சடங்குகளை அவர்களுக்கு செய்யுங்கள்" என்றவன் தன் தாய் தந்தையை ஒரு கணம் பார்த்து விட்டு தம்பி, தங்கை இளவரசன் என்று அனைவரையும் பார்த்தவன் வேகமாக திருமணமண்டபம் விட்டு வெளியேறினான்.   அவன் உடன் அவனின் நண்பர்களும் செல்ல அங்கிருந்த முரளியின் காரில் ஏறி கிளம்பினர். 

  
   கயல்விழி வேகமாக அறைக்குள் சென்று கண்ணீர் விட்டாள்.   தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் செல்லும் கணவனை நினைத்து.  அவனின் பின் வந்த அமிர்தவள்ளி வள்ளி அவளை அணைத்துக்கொண்டாள். 

   லலிதா மகளின் அறைக்கு வந்தவள்  "எதுக்குடி அழுகுற பிள்ளை வேலை விஷயமாக போயிட்டு வரேன் என்று சொல்லிட்டு தானே போகிறான் வேலை முடிந்தால் சீக்கிரம் வந்து உன்னை கூட்டிட்டு போவான் இப்ப கண்ணை துடைச்சிட்டு கிளம்பு" என்றார். 

     அம்மாவை பார்த்து  "உன் கிட்ட சொன்னார் இல்லையா அதுமாதிரி பொண்டாட்டிகிட்ட சொன்னா குறைந்து போயிடுவாரா  உன் மாப்பிள்ளை" என்றாள் கோபமாக 

   " எப்படி சொல்வார் நீ செய்த காரியத்திற்கு அவர் வந்து உன் கழுத்தில் தாலி கட்டியதே பெரிய விஷயம்" என்றதும் கயல்விழியின் முகம் மாறியது. 

     "சொந்தங்கள் எல்லாம் இருக்கிறாங்க அதனால் எதுவும் பேசாமல் வீட்டுக்கு கிளம்பும் வழியைப்பார்" என்று மகளை திசை திருப்பிவிட்டு அறை விட்டு வெளியேறியவரின் கண்கள் கலங்கி இருந்தனர். 

    மனமே முருகா சீக்கிரம் என் பெண் வாழ்க்கையில் சந்தோஷத்தையும் நிம்மதி கொடு தாலிகட்டிய உடனே புருஷனை பிரிய வச்சு இருக்கியே முருகா என் மகள் மனசு எவ்வளவு வேதனைப்படும்   சீக்கிரம் அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சுடுப்பா முருகா என்று முருகனிடம் வேண்டுதல் வைத்தார். 

     வீரராகவன் சாந்தி இருவருக்கும் ஆறுதல் கூறி அனைவரையும் வீட்டுக்கு அழைத்து செல்லும் பொறுப்பை செய்து முடித்தார் லலிதா. 

    இளவரசன் அமிர்தவள்ளிக்கு செய்ய வேண்டிய சடங்குகள் செய்ய கயல்விழி நேராக சென்று தன் அறையில் புகுந்து கதவை அடைத்தாள். 

    இளவரசன் அமிர்தவள்ளியை வீட்டில் செய்யவேண்டிய சடங்குகளை முடித்து அமிர்தவள்ளி வீட்டில் விட்டு விட்டு உறவினர்கள் அனைவரும்  சென்றதும் கயல்விழியின் அறை கதவை தட்டினார் லலிதா. 

   கதவை திறந்தவள் குளித்து வேறு உடை மாற்றியிருந்தாள்  தாய் தன்னை ஆராய்ச்சியாக பார்ப்பதை பார்த்து   

     "நான் ஒன்னும் அழலை" என்றாள். 

    "அதான் உன் மாப்பிள்ளை ஊருக்கு போய் வந்ததும் என்னை கூட்டிட்டு வந்து விடுங்க என்று சொல்லிட்டு தானே போயிருக்கார்" என்றவள் தாயின் கையில் இருந்த உணவுத்தட்டை வாங்கிச்சென்று அறையில் இருந்த சேரில் அமர்ந்து சாப்பிட்டாள். 

    அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதியாக இருந்தவர்  தட்டை வாங்கிக்கொண்டு அவளின் அறையிலிருந்து வெளியே சென்றார். 

  தன் மகளை பற்றி அறியாதவரா அவர், இன்னும் கொஞ்ச நாள் அதற்கு பிறகு இந்த போலிப்புன்னகை உன் வாழ்க்கையில் இருக்காது கண்ணம்மா என்று மனதில் சொல்லிக்கொண்டார். 

     அன்று இரவு அமிர்தவள்ளியின் வீட்டில் முதலிரவுக்கு அறையை ரெடி செய்த போது எதுவும் வேண்டாம் என்று மறுத்தான் இளவரசன். 

      தாத்தா தான்  "இது சம்பிரதாயம் இளவரசா அதை நாங்கள் ஏற்பாடு செய்யுறோம் உங்களுக்கு எப்ப வாழ்க்கை தொடங்கனும் என்று நினைக்கிறீங்களே அதை நீங்க முடிவு செய்துக்கங்க என்று கூறினார்.  


    அதன் பிறகு இளவரசன் அமைதியாகிவிட்டான். 

     அமிர்தவள்ளி அறையில் முதலிரவுக்கு ஏற்படும் செய்து இருந்தனர்.  

    அமிர்தவள்ளியின் அறையில் அமர்ந்து இருந்தான் இளவரசன்.  பக்கத்து வீட்டில் இருந்தாலும் இளவரசன் இங்கு வருவது குறைவு அதுவும் எதாவது மாமாவிடம் பேசவேண்டும் என்றால் மட்டும் வருபவன் ஹாலில் அமர்ந்து பேசவிட்டு சென்று விடுவான்.  சிறுவயதில் அமிர்தவள்ளி அறைக்கு வந்து இருக்கிறான் கொஞ்சம் வளர்ந்த பின் வந்தது இல்லை.

    அறையை மிகவும் அழகாக வைத்து இருந்தாள்.  தன் தங்கை அறை இவ்வளவு நேர்த்தியாக இருக்காது பெரும்பாலும் தாய் தான் அவள் அறையை சுத்தம் செய்து அடிக்கி வைப்பார்.   ஆனால் அமிர்தவள்ளி அவளின் கைவண்ணத்தில் மிகவும் அழகுபடுத்தி வைத்து இருந்தாள்.

    ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டு இருந்த போது அறைக்கதவு திறக்கப்பட்டது.   அமிர்தவள்ளி மெல்ல அடியெடுத்து உள்ளே வர வெளியே இருந்தவர்கள் கதவை மூடிச்சென்றனர்.

     அமிர்தவள்ளி சற்று படபடப்புடன் இருப்பது இளவரசனுக்கு தெரிந்தது.  அவளின் பார்வை கட்டிலில் படிய அங்கு இளவரசன் இல்லாததை கண்டுவிட்டு அறை சுற்றி நோட்டமிட்டவளின் கண்களில் கை கட்டி அவளையே பார்த்துக் கொண்டு இருந்த இளவரசனை கண்டாள். 

    கையில் சிறிது நடுக்கம் ஏற்பட்டது அதைக்கண்டவன் அவளின் அருகில் வர கையில் இருக்கும் பால்செம்பை நழுவியதை கண்டவன் வேகமாக அவளின் கையில் இருந்த பால்செம்பை வாங்கி அங்கிருந்த டேபிளில் வைத்தான். 

   அறைக்கதவை தாள் போட்டவன் கட்டிலில் சென்று அமர்ந்தவன் "வள்ளி இங்க வா" என்று அழைத்தான்.    அருகில் வந்தவளை "உட்கார் வள்ளி அறையை ரொம்ப அழகா வச்சு இருக்க" என்றான். 

   "தேங்க்ஸ்" என்றாள் அமிர்தவள்ளி. 

    "வள்ளி ஏன் உன் குரலில் இவ்வளவு தடுமாற்றம் இருக்கு என்னை பார்த்தா பயமா இருக்கா?..." என்றான். 

    "இல்லை அத்தான்" என்றாள் அமிர்தவள்ளி. 

     "அப்போ ரிலாக்ஸ்சா உட்கார் கொஞ்சம் நேரம் பேசலாம்" என்றான். 

    "சரி அத்தான்" என்றாள். 

     "நான் பேசறது அத்தான் கயல்விழி வாழ்க்கையை நினைச்சி பேசலை அவங்க தொடங்கிய பிறகு தான் நம்ப தொடங்கனும் என்பதற்காக நான் சொல்லலை வள்ளி.  எடுத்த உடனே வாழ்க்கை தொடங்குறதில் எனக்கு விருப்பம் இல்லை.   மேலோட்டமாக தான் இதுவரை நம்ப பழகி இருக்கோம் நமக்குள்ள இதுவரை காதல் வந்தது இல்லை."

    "நமக்குள் ஆத்மார்த்தமான புரிதல் வரனும்" என்றதும் அவன் சொல்லியது புரியாமல் அவனை நோக்கினாள். 


Leave a comment


Comments


Related Post