இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
கவிதை 31 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK026 Published on 03-07-2024

Total Views: 957




     "நீ நினைக்கிறது நீ சொல்லாமலே நான் புரிஞ்சிக்கனும் அதேமாதிரி நான் நினைக்கிறதை நான் சொல்லாமலே உனக்கு புரியனும் அதுக்கு நமக்குள் காதல் வரனும்" என்றான். 

    "இப்ப நமக்குள் இருக்கிறது ஈர்ப்பு மட்டும் தான் அது தானாக காதலாகும் என்று நம்ப அப்படியே இருக்கக்கூடாது.  அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகனும் என்றால்" என்றவன் பேச்சை நிறுத்தி அவளை பார்த்தான். 

    அவளும் அவன் பேச்சை நிறுத்தியதால் அவனை நிமிர்ந்து பார்த்தாள். 

    " இப்படி நான் மட்டும் பேசிட்டு இருந்தாள் காதல் வராது அறுபதாம் கல்யாணம் தான் வரும்" என்றதும் பக்கென சிரித்து விட்டாள் அமிர்தவள்ளி அதனை ரசனையாக பார்த்தவன்.   

     "நான் மட்டும் பேசிட்டு நீ அதை கேட்டுட்டு இருந்தால் எப்படி காதல் வரும் நீயும் பேசனும் வள்ளி.  அப்பத்தான் நமக்குள் புரிதல் வரும் வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு போகும் இல்லை அறுபதாம் கல்யாணம் வரைக்கும்" என்று பேசியவனின் வாயை தன் விரல் கொண்டு மூடினாள் வள்ளி. 

    " போதும் அத்தான் நீங்க இதுக்கு மேல எதுவும் சொல்ல வேண்டாம் நான் உங்க கிட்ட பேசனும் அதுதானே பேசலாம்  கொஞ்சம் வெக்கப்படுற மாதிரி நடிச்சா ஓவரா பாடம் எடுக்கறீங்க."   

    " சின்ன வயதில் பேசாத உங்களையே நான் தான் பேசவைத்தேன் நீங்க என்னை பேசச்சொல்லுறீங்க" என்றாள்.. 

   அவள் பேசியதை கேட்டவன் ஓஓஹே... நீ தான் என்னை பேசவச்சியா இப்ப உன் பேச்சை நிருத்திறேன் பாரு என்று நினைத்தவன் அவன் வாய் மீது வைத்த கையை எடுக்காமல் இருந்தவளின் உள்ளங்கையில் முத்தம் வைத்தான்.   பேசிக்கொண்டு இருந்தவளின் பேச்சு சட்டென நின்றது. 

    தன் கையை எடுக்கப்போனவளின் கையை கெட்டியாக பிடித்துக்கொண்டான் இளவரசன். 

   அவளால் சிறிது கூட கையை அவன் பிடியில் இருந்து விலக்க முடியவில்லை. 

    மீண்டும் அவளின் உள்ளங்கையில் முத்தமிட்டவன்  "இப்ப பேசுடி என்னவோ எனக்கே நீ தான் பேச சொல்லிக்கொடுத்தேன் என்று சொன்னியே இப்ப பேசுடி" என்றான். 

    "அது... அத்தான் கையை விடுங்க" என்றாள் மெல்லிய குரலில் 

    காதில் கை வைத்து  "கேட்கலை" என்றான். 

    அவனின் காதருகில் வந்து சத்தமாக  "கையை விடுங்க அத்தான்" என்றாள். 

    " ஏய் எதுக்குடி இவ்வளவு சத்தம்" என்று தன் காதை தேய்த்து கொண்டான். 

     "நீ தானே காது கேட்கலை என்று சொன்ன அத்தான் அதான் சத்தமாக சொன்னேன்" என்றாள் குறும்பாக 

    சிறு வயதில் இளவரசன் அதிகமாக வள்ளியுடன் தான் பேசுவான் விளையாடுவான்.   வளர்ந்த பிறகும் வீட்டில் உள்ளவர்களில் இவளிடம் தான் நன்றாக பேசுவான்.  அவன் செய்யும் வேலை அடுத்து அவன் செய்யப்போவது என்று அவளிடம் தான் பகிர்ந்து கொள்ளுவான். 

   அதற்கு என்று அவளை தேடி அவன் சொல்ல மாட்டான் அவள் தான் அவனை தேடி வந்து பேச்சு கொடுப்பாள் அவனும் பேசுவான்.   வீட்டில் உள்ள அனைவருக்கும் இது தெரியும்.  அவளிடமாவது பேசுகிறானே என்று நினைத்து கொள்வார்கள் குடும்பத்தினர்.  அவர்களுக்குள் அன்பு இருக்கு ஆனால் அது காதல் என்று சொல்லமுடியுமாது.   புரிதல் இருக்கவேண்டும் என்று சொன்னவனுக்கும் தெரியும் கேட்டவளுக்கும் தெரியும்   சிறு வயதில் இருந்தே அவர்களுக்குள் புரிதல் இருப்பது. 

    கார்த்திகேயனுக்கும் கயல்விழிக்கும் அன்பு ஆர்ப்பாட்டம், உரிமையுணர்வு அதிகம் இருக்கும் ஆனால் இவர்கள் அன்பு விட்டு கொடுத்து போகும் அமைதியான அன்பு. 

    அவளை சீண்டியது போதும் என்று நினைத்தவன்   எப்போதும் பேசுவது போல சிறிது நேரம் பேசிவிட்டு படுத்து உறங்கிப்போயினர் இளவரசன், அமிர்தவள்ளி. 

    மறுநாள் காலையில் கிளம்பி இருவரும் கோயிலுக்கு சென்று வந்ததும் அவளிடம் விடை பெற்று தன் வேலையை கவனிக்க சென்று விட்டான் இளவரசன். 

   விருந்தினர் அனைவரும் சென்றுவிட்டிருந்தனர்.  தன் தாய் தந்தையிடம் சிறிது நேரம் பேசியவள் அடுத்து சென்றது கயல்விழியிடம் தான் அவளிடம் வம்பு செய்து அவளின் முறைப்புகளை பெற்று என்று அந்த நாள் சென்றது.  எப்போதும் போல் இயல்பாக இரண்டு வீட்டிலும் வளையவந்தாள் அமிர்தவள்ளி. 

    மூன்று நாட்கள் வீட்டில் நேரத்தை ஓட்டிய கயல்விழி நான்காம் நாள் வேலைக்கு கிளம்பிவிட்டாள்.  வேலைக்கு வந்தவளை அனைவரும் சூழ்ந்து கொண்டு அவளின் திருமணத்தை பற்றியும் அவளின் உடை பற்றியும் பேசினார்கள். 

    அனைவருக்கும் பதில் அளித்தே கலைத்து போனாள். கேன்டீன் சென்ற  டீ குடித்து வரலாம் என்று சென்றவள் அங்கு முரளி ஐஸ்வர்யா அமர்ந்து இருப்பதை கண்டதும் அவர்கள் அருகில் சென்று  "ஹாய்" என்றாள். 

    ஐஸ்வர்யா இவளை பார்த்ததும் "ஹாய் அண்ணி வாங்க" என்று மரியாதையாக அழைத்தாள்.  

     அண்ணியா என்று மனதில் நினைத்தவளுக்கு பதிலாக ஐஸ்வர்யா பேசினாள் "அண்ணி தான் கார்த்தி அண்ணா மனைவியை அண்ணி என்று தானே கூப்பிடனும்" என்றாள் ஐஸ்வர்யா. 

   முரளி இருப்பதை கண்டவள் "அண்ணா என் மீது கோபம் இன்னும் போகலையா?... "என்றாள் கயல்விழி. 

   "ஏய் கயலு அதெல்லாம் இல்லை நான் வேற யோசித்திட்டு இருந்தேன் அதான் ஆமாம் இன்னும் உனக்கு லீவ் முடியலையே அதுக்குள்ள வந்து இருக்க"  என்றான். 

   " அது... அண்ணா வீட்டில் போர் அடிக்குது இங்க வந்தால் வேலையாவது பார்க்கலாம் என்று தான் லீவ் கேன்சல் பண்ணிட்டு வந்திட்டேன்"  என்றவள் பின் தயக்கத்துடன் " அத்தான் எப்ப வருவார் அண்ணா?... "என்றாள். 

   அதை கேட்ட முரளி " அது வந்து கயல்" என்று தடுமாறியவனை கயல்விழி பார்க்க ஐஸ்வர்யா" முரளிக்கு தெரியாது அண்ணி அண்ணன் இன்னும் ஒரு வாரத்தில் வந்து விடுவார்" என்றாள். 

    சரி என்றவள் சிறிது நேரம் ஐஸ்வர்யாவிடம் பேசிவிட்டு சென்றுவிட்டாள்.  

    கார்த்திகேயன் வரவிற்க்காக ஆவலாக காத்திருந்தாள் கயல்விழி.  ஆனால் அவன் வந்த பின் அவளுக்கு கிடைக்கப்போவது என்னவோ????... 

   அடுத்த பதினைந்து நாட்கள் கடந்து இருந்தது ஆடி மாதம் பிறந்ததால் அமிர்தவள்ளி அம்மா வீட்டில் தான் இருக்கவேண்டும் என்று இரவில் மட்டும் சென்று படுத்துவிட்டு காலையில் இங்கு வந்து அத்தைக்கு உதவிகள் செய்துவிட்டு கணவனுடன் பஸ் நிலையம் சென்று விடுவாள்.  கயல்விழியும் சரவணனும் பைக்கில் பஸ் நிலையம் வந்து கம்பெனி பஸ்சில் செல்வார்கள். 

    எப்போதும் போல் நாட்கள் இயல்பாக சென்றன.  கயல்விழி சிறிது நாட்கள் அமைதியாக இருந்தவள் இப்போது பழையபடி தாயிடமும் அமிர்தவள்ளியிடமும் வம்புகள் செய்தாள். 

    லலிதா தன் மகளின் முகத்தில் இருந்த மாற்றத்தை கண்டு சந்தோஷப்பட்டார் என்றாள் அமிர்தவள்ளி குழம்பி போனாள் என்னாச்சு இவளுக்கு அண்ணனை பார்க்காமல் மெண்டல் ஆகிவிட்டாளோ என்று தான் தோன்றியது அவளின் செயல். தனியாக அமர்ந்து முகம் சிவப்பதும் எப்போதும் அவள் முகத்தில் தெரியும் புன்னகையும் போனில் பேசுவதும் என்று இருந்தாள் கயல்விழி. 


    திருமணம் முடிந்து இருபது நாட்கள் முடிந்து இருந்தது அன்று மகேஸ்வரிக்கு பிறந்தநாள். இரவு பதிரெண்டு மணிக்கு அவளுக்கு வாழ்த்துக்கள் சொல்லிய சரவணன் அன்று வேலையில் இரண்டு மணி நேரம் பர்மிஷன் எடுத்துக்கொண்டு வா என்று சொல்லி வைத்து இருந்தான். 

   அதன்படி மாலை நான்கு மணிக்கு மகேஸ்வரி பர்மிஷன் எடுத்து வந்தபோது சரவணனும் பர்மிஷன் போட்டு வந்து அவளுக்காக காத்திருந்தான். 

    அவன் அன்று காரில் வந்து இருந்தான் அவன் கார் முன்சொல்ல அவள் தன் ஸ்கூட்டியில் பின்னால் சென்றாள். 

    அவர்கள் வேலை செய்யும் கம்பெனி மெயின் ரோட்டில் இருந்து ஒன்னரை கிலோ மீட்டர் உள்ளே செல்ல வேண்டும் செல்லும் பாதையில் இரு பக்கமும் மரங்கள் அடர்ந்த தோப்புகள் இருந்தன. 

   காரை ஒரு மரநிழலில் நிறுத்த மகேஸ்வரியும் தன் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு காரின் அருகில் செல்ல அவளை இழுத்து தன் அருகில் அமரவைத்தான்.

   "அய்யோ என்ன இது?..." என்றாள் மகேஸ்வரி. 

    "ஹாப்பி பர்த்டே டு மைடியர் ஸ்விட் ஹார்ட்" என்று தன் கையில் இருந்த கிப்ட்டை அவளிடம் நீட்டினான் சரவணன். 

   இதுவரை தூரமாக இருந்து காதல் செய்தவன் இப்போது நெருங்கி காதல் செய்ய ஆரம்பித்து விட்டான் காரணம் கூடியவிரைவில் தன் தந்தை இடம் பேசி திருமணம் முடிக்கலாம் என்ற எண்ணம் தான்.  

    இளவரசனும் கூறியிருந்தான் ஆடி மாதம் முடிந்ததும் உன் கல்யாணம் பற்றி வீட்டில் பேசுகிறேன் என்று கூறியிருந்தான் அதனால் இனி எந்த தடையும் இல்லை என்று அவளை நெருங்கிவிட்டான். 

    அவனின் கையில் இருந்த பரிசை  "தேங்க்ஸ்" என்று வாங்கி பிரித்தாள் அதில் அழகான பிரேசிலேட் இரு இதயங்கள் பிணைந்து இருக்க அதன் மேல் எஸ் எம் என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு இருந்தன. 

     ஆசையாக பார்த்தவளை கண்டவன்  "பிடிச்சு இருக்கா?..." என்றான் காதலாக 

   "ஊம்" என்று சொன்னவளிடம் 
 
    "எது பிடித்து இருக்கு இந்த பரிசா இல்லை என்னையா" என்றான் சரவணன். 

    அதுவரை தலைகுனிந்து பரிசை பார்த்துக்கொண்டு இருந்தவள் நிமிர்ந்து அவனை பார்த்து முகத்தில் தோன்றிய வெட்கச்சிவப்புடன்  "ரெண்டும்" என்றாள். 

   அவளின் முகச்சிவப்பையும் ரெண்டும் என்ற வார்த்தையும் அவனை மயக்க மெல்ல நெருங்கியவன் அவளின் சிவந்த கன்னத்தில் முத்தம் பதித்தான். 

   அதை சற்றும் எதிர்பாராதவள் மேலும் செங்கொழுந்தாகினாள்.  அவளை மேலும் நெருங்கி அவளின் தாடையை பிடித்து அடுத்த கன்னத்திலும் அழுந்த இதழ் பதித்தவன் பின் அவள் முகம் முழுவதும் தன் முத்தத்தை பதித்தவன் அவளின் துடிக்கும் உதடுகளை சிறை செய்தான்.   நீண்ட நேரம் கழித்து மூச்சுக்காற்றுக்காக சிறிது இடைவெளி விட்டு மீண்டும் முத்தம் கொடுத்தான். 

   நீண்ட நேரம் தொடர்ந்த இதழ் முத்தத்தில் பித்தாகியவன் தன்னை மறந்து அடுத்த கட்டத்திற்கு சென்றன அவன் கைகள். அவளின் மென்பகுதியை அவன் கை தொட அதுவரை காதலில் திளைத்து இருந்த மகேஸ்வரி சட்டென அவன் கையை தட்டிவிட்டு ஓங்கி அறைந்திருந்தாள்.

   அவன் முகத்தை பார்க்காமல் கார் கதவை திறந்து கொண்டு வெளியேறியவளின் கண்களில் நீர் வழிந்தது அதை துடைத்துக்கொண்டே ஸ்கூட்டியில் அமர்ந்து சென்றுவிட்டாள்.  

    அவள் அறைந்த பிறகே தான் செய்தது சரவணனுக்கு புரிந்தது.   தன் கையை ஓங்கி காரில் குத்தியவன் அவளிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வேகமாக காரில் இருந்து இறங்குவதற்குள் அவள் சென்று இருந்தாள் மகேஸ்வரி. 

    காலால் உதைத்தவன்  "சிட்... சிட்..."  என்றவன்   தன் கைகளை கோபத்தில் அங்கிருந்த மரத்தில் ஓங்கி குத்தினான்.   சிறிது நேரம் அமைதியாக கண்மூடி நின்றவனுக்கு அப்போது தான் அவள் அழுது கொண்டு வண்டியை ஓட்டியது நியாபகம் வர வேகமாக காரில் ஏறி சென்றான். 


   அந்த சாலையில் அதிகமாக வண்டிகள் வாரது என்பதால் காரை சற்று வேகமாக ஓட்டிக்கொண்டே அவள் கண்ணில் படுகிறாளா என்று பார்த்துக்கொண்டே காரை செலுத்தினான். 

   எங்கும் அவன் கண்ணில் படவில்லை அவள் வீடு சென்றது உறுதி செய்தால் தான் மனம் அமைதி அடையும் என்று அவன் காரை அவளின் வீடு இருக்கும் டவுனுக்கு சென்றான்.



Leave a comment


Comments


Related Post