இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
கவிதை 32 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK026 Published on 03-07-2024

Total Views: 1340

      அவளின் வீட்டின் முன் பார்க்க அவள் வந்து இருக்கவில்லை.  வேறு வழியில் வந்து கொண்டு இருப்பாளே என்று சிறிது நேரம் சற்று தொலைவில் காரை நிறுத்தி விட்டு காத்திருந்தான்.  அரை மணி நேரம் ஆகியும் வரவில்லை ஒரு வேளை கோயிலுக்கு சென்று இருப்பாளே என்று கோயிலுக்கு காரை செலுத்தினான் அங்கும் இல்லை.

   அவளின் போனுக்கு கால் செய்ய அது அடித்துக்கொண்டே இருந்தது எடுக்கப்படவில்லை.   தன் மீது கோபத்தில் எடுக்கவில்லை என்று நினைத்தவன் சாரி சாரிடி என்று மெசேஜ்களை அனுப்பினான் அதை அவள் பார்க்கவேயில்லை. 

   மீண்டும் அவள் வீட்டிற்கு சற்று தொலைவில் வந்து பார்க்க அவளின் வண்டி இல்லை.   மகிமா சாரிடி சாரிடி பிளீஸ் ஒரே முறை என் கண்ணெதிரே வந்து போடி என்று மனதில் புலம்பிக்கொண்டு இருந்தான். 

   அவளின் தாய் வந்து வெளியே எட்டிப்பார்த்து விட்டு சென்றார்.   பிறகு இரண்டு தங்கைகள் வந்து பார்த்து சென்றனர்.  அவளின் தந்தையும் பணியில் இருந்து வந்து விட தங்கைகள் அவரிடம் ஓடிவந்து எதையோ சொல்ல அவர் தன் போனை எடுத்து அழைப்பது அனைத்தும் சற்று தொலைவில் இருந்து பார்த்தவனுக்கு பயம் வந்தது. 

   அவர்களின் போனையும் எடுக்கவில்லை என்று தெரிந்தது என்ன ஆகியிருக்கும் அவளுக்கு இப்படி பொறுப்பில்லாமல் எதையும் செய்பவள் இல்லையே என்று நினைத்தவன் இதற்கு மேல் அமைதியாக இருக்க முடியாது என்று காரை மகேஸ்வரி வீட்டின் முன் நிறுத்திவிட்டு இறங்கினான். 

    அதுவரை மகேஸ்வரியின் போனுக்கு மாற்றி மாற்றி போன் செய்தவர்கள்  வீட்டின் முன் கார் நிற்கவும் திரும்பி பார்த்தவர்கள் சரவணனை கண்டதும் இவன் எதுக்கு இந்த நேரத்தில் வரான் என்று மகேஸ்வரியின் தாய் தந்தை நினைத்தனர் என்றால் அவளின் தங்கைகள் மாமா அக்காவை காரில் கூட்டிக் கொண்டு வந்து இருக்கிறாரே என்று காரின் உள்ளே பார்த்தனர். 

   மகேஸ்வரியின் தாய் தந்தைக்கு மகளின் தோழியின் அண்ணன் என்று தெரியும். ஒரே பள்ளியில் தானே படித்தனர் அவனை சிறு வயதில் இருந்தே பார்த்து இருக்கின்றனர்.   சில சமயம் அமிர்தவள்ளியை அழைத்து வந்து இவர்கள் வீட்டில் விட்டு சென்று மாலை அழைத்து சென்று இருக்கிறான். 

   மகேஸ்வரியின் தங்கைகளுக்கு இவர்கள் காதல் விசயம் தெரியும் கோயிலுக்கு வரும்போது தங்கைகளையும் உடன் அழைத்து வருவாள்.   மகேஸ்வரி பேசுவதை விட தங்கைகள் அவனிடம் நன்றாக பேசுவார்கள். 

   "வாங்க தம்பி" என்று மகேஸ்வரியின் தந்தை அழைக்க  அதே நேரம் மகேஸ்வரியின் இரண்டாவது தங்கை "மாமா மகேஸ்வரி எங்க?..." என்றாள். 

    அதை கேட்ட தாய் தந்தை அதிர்ந்தனர் என்றால் சரவணன் என்ன சொல்வது என்று புரியாமல் நின்று இருந்தான். 

     "உள்ளே வாங்க தெருவில் பேசவேண்டாம்" என்று தாய் சொன்னதும் வீட்டின் உள் சென்றனர்.  சரவணன் என்ன சொல்வது என்ற தயக்கமும் இவள் எங்கே போனாலே என்ற தவிப்புமாக உள்ளே சென்றவன். 

    மகேஸ்வரியின் தந்தை அவனை அமரும்படி கூறியும் அமராமல் 

    "அங்கிள் நானும் மகேஸ்வரியும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம்.  இன்னைக்கு இரண்டு மணி நேரம் பர்மிஷன் போட்டு வந்து பேசிட்டு இருந்த போது சின்ன பிரச்சனை அதில் கோபப்பட்டு ஸ்கூட்டி எடுத்திட்டு வந்திட்டா கோபமாக வந்தாளே வீடு வந்திட்டாளா என்று பார்க்க வந்தா அவள் வண்டி இல்லை அவளுக்கு போன் போட்டாலும் எடுக்கலை.   உங்க போனும் எடுக்கலை என்று நினைக்கிறேன் அதான் வேறு எங்காவது போயிருப்பாளா இல்லை பிரண்ட்ஸ் வீட்டுக்கு போயிருப்பாளா என்று விசாரித்து சொல்லுங்க அங்கிள்" என்றான். 

   அவனின் பேச்சில் அதிர்ந்தவர்களுக்கு அவன் பேசப்பேச பயம் வந்தது கடைசியில் அவரையே விசாரித்து சொல்லுங்கள் என்றதும் வேகமாக எழுந்து வந்து ஓங்கி அறைந்தார் மகேஸ்வரியின் தந்தை.. 

    அமைதியாக தலைகுனிந்து நின்றவன் " நீங்க எந்த தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன் அங்கிள் மகி நல்லா இருக்காளா என்று பார்த்தால் போதும் பிளீஸ் அங்கிள் அவளின் வேற பிரண்ட்ஸ் கிட்ட விசாரிங்க" என்றான் கலங்கிய குரலில் 

    அவன் சொல்வது சரி என்று நினைத்தவர் மகள்களிடம் விசாரித்து மகேஸ்வரியின் மற்ற பிரண்ட்ஸ்சுக்கு போன் செய்தனர்.   எங்கும் வரவில்லை என்ற பதிலே வந்தது.   அனைவருக்கும் நேரம் செல்லச் செல்ல பயம் வந்தது.  

    அந்நேரம் அமிர்தவள்ளி சரவணனுக்கு போன் செய்தாள்.   வேகமாக எடுத்து ஹலோ என்னும் முன்னே  "வள்ளி மகேஸ்வரி உன்னிடம் பேசினாளா இல்லை அங்க வந்து இருக்காளா" என்று கேட்க அமிர்தவள்ளி திகைத்தாள். 


    சரவணன் இன்னும் வீட்டிற்கு வராமல் மகேஸ்வரி உடன் இருக்கிறான் என்றே அமிர்தவள்ளியும் கயல்விழியும் அவர்களை கிண்டல் செய்ய போன் செய்தனர்..  அவர்களிடமே மகேஸ்வரி பற்றி விசாரிக்கவும் திகைத்தனர்.

    " அண்ணா என்னாச்சு உன்னை பார்க்கத்தானே பர்மிஷன் போட்டு வந்தாள்" என்றதும்  நடந்த அனைத்தும் கூறினான்.  அதை கேட்டவர்களுக்கு அதிர்ச்சியே உடனே நாங்கள் வரேம் என்று கூறினர்.  இவன் வேண்டாம் என்று சொல்வதற்குள் போனை அனைத்து இருந்தனர்.  

   அடுத்த அரை மணி நேரத்தில் இளவரசன் கயல்விழி அமிர்தவள்ளி மூவரும் இன்னொரு காரில் வந்து இறங்கினர். 

    யார் வீட்டுக்கும் செல்லவில்லை என்று அறிந்தவர்கள் அடுத்து என்ன என்ற குழப்பத்தில் இருந்த போது மூவரும் வந்தனர். 

   இளவரசன் அனைத்தும் கேட்டவன் சார் இதுக்கு மேலயும் இப்படியே இருந்தா என்ன சார் வாங்க போலீஸ் கிட்ட கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் என்றான். 

    பெரியவர்கள் தயங்குவதை கண்டவன் சார் நமக்கு நம்ப பெண்ணு தான் முக்கியம் மற்றவர்கள் என்ன சொல்லுவாங்க என்று யோசிக்காதிங்க.  போலீஸ்கிட்ட போனால் அவள் போன் லெகேஷன் வைத்து சீக்கிரம் கண்டு பிடித்து விடலாம்.    போன் ஆனில் தான் இருக்கு என்று பேசி சம்மதிக்க வைத்து போலீஸ் நிலையம் கிளம்பினர். 

    பெண்களை வீட்டில் விட்டு ஆண்கள் மூவரும் ஒரு காரில் கிளம்பினர். 

   மகேஸ்வரியின் தந்தை மின்சார வாரியத்தில் அதிகாரி என்பதால் போலீஸ் நிலையத்தில் உடனே கம்ப்ளைன்ட் எடுத்துக்கொண்டு விசாரித்தனர். 

   சரவணன் நடந்த அனைத்தும் கூறினான் அதனால் உடனே அவர்கள் நின்று பேசிய இடத்திற்கு விரைந்து வந்தனர்.  அங்கு பார்த்ததில் சில இடங்களில் சிசிடிவி கோமராக்களை கண்டவர் விசாரித்ததில் அந்த கோமரா வைத்தவர்கள் AHKK சாப்ட்வேர் சொல்யூஷன் கம்பெனி என்று தெரிந்ததும் அங்கு விரைந்தனர். 

   அங்கு செல்லும் போதே முரளிக்கு அழைத்து சொல்லியிருந்தான் இளவரசன். 

   அங்கு சென்று அனைத்து பார்த்தனர்.  காரில் ஏறியது சிறிது நேரத்தில் கண்களை துடைத்துக்கொண்டே வெளியே வருவதையும் பின் வேகமாக அவள் சொல்வது சரவணன் சிறிது நேரம் கழித்து சென்றதும் அனைத்து பதிந்து இருந்தது.  அடுத்தடுத்த கோமிராக்களில் பார்த்தவர்கள் இரண்டு கோமிராக்களில் அவள் சொல்வது பதிந்து இருந்தது மூன்றாவது கோமராவில் அவள் வரவில்லை. 

   அதை கண்டவர்கள் அங்கு தான் என்னவே நடந்து இருக்கிறது என்று விரைந்து சென்று பார்த்தனர். 

   கொஞ்சம் இடைவெளி விட்டு கோமராக்கள் வைத்து இருந்தாலும் இரண்டிற்கும் உள்ள இடம் தெரியும்படி தான் கோமராக்கள் அமைத்து இருந்தனர் ஆனால் அந்த ஒரு கோமரா எப்படியோ  லூசாகி கொஞ்சம் திரும்பி இருந்ததால் அந்த சாலை முழுவதும் தெரியாமல் போயிருந்தது. 

   அந்த இடத்திற்கு சென்று சோதனை செய்ததில் சற்று உட்பக்கமாக மரங்களுக்கு இடையே அவளின் ஸ்கூட்டி பூட்டப்படாமல் நிறுத்தி இருந்தது. 

    கையில் போன் டார்ச் வைத்து சிறிது தூரம் தேடினர்.   "மகி மகேஸ்வரி" என்று குரல் கொடுத்து தேடினர் எங்கும் இல்லை மேலும் சில காவலர்களை பெரிய டார்ச் லைட் எடுத்து வரச்சொல்லி தேடியும் கிடைக்கவில்லை. 

    வீட்டில் இருந்து மனைவி மகள்கள் மாற்றி மாற்றி போன் செய்து கொண்டு இருந்தனர்.  மகள் எங்கு போனால் என்ன ஆகியதே என்ற பயம் ஒரு பக்கமும், வீட்டில் உள்ளவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தவிப்புமாக அங்கேயே அமர்ந்து கண்ணீர் விட்டார் மகேஸ்வரியின் தந்தை. 

   சரவணனும் மகிமா எங்கடி இருக்க வந்துடுடி நான் பண்ணது தப்புதான் வந்திடு மகிமா என்றும் மனதில் புலம்பியவனின் கண்களிலிருந்தும் கண்ணீர் கொட்டியது. 

    இரவு பத்து மணிக்கு மேல் ஆகியிருக்க இதற்கு மேல் இங்கு தேடுவது வேஸ்ட் என்றார் காவல் அதிகாரி ஏனெனில் அந்த பகுதி முழுதும் பத்து பேர் சுற்றி வளைத்து தேடிவிட்டனர். 

   முரளியும் தங்கள் கம்பெனியின் வேலை செய்யும் ஆட்களையும் வைத்து இரண்டு மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை தேடியும் கிடைக்கவில்லை. 

    பிள்ளைகள் நால்வரும் மணி பத்துக்கு மேல் ஆகியும் வரவில்லை என்று போன் செய்தனர் வீட்டில் இருந்த பெரியவர்கள்.  இளவரசன் லலிதாவிடம் அனைத்தும் கூற அவர்களும் கிளம்பி வந்த போது சந்தேகத்தின் பெயரில் சரவணனை அரஸ்ட் செய்து இருந்தனர். 

     அதை அறிந்த கயல்விழி, அமிர்தவள்ளி மகேஸ்வரி குடும்பத்தினர் அனைவரும் போலீஸ் நிலையம் வந்து விட்டனர். 

   இளவரசனும் முரளியும் காவல் அதிகாரியிடம் பேசினர். 

     "சார் அவர் எதுவே தப்பாக பேசியிருக்கார் அதில் அந்த பெண் எதாவது செய்து கொண்டு இருந்தாள் அதற்கு காரணம் இவர் தான் அதனால் இப்போதைக்கு காவலில் வச்சு இருக்கோம்.  நாளை காலையில் அந்த பெண் பற்றி எதாவது தெரிந்தால் அதற்கு ஏற்றாற்போல்  அடுத்த  நடவடிக்கை எடுப்போம் இப்போது போய் விட்டு காலையில் வாங்க என்றார் காவல் அதிகாரி. 

    சரவணன் ஓரமாக அமர்ந்து கொண்டு மகி மகி என்று கண்ணீர் விட்டுக்கொண்டு இருந்தான். 

    வெளியே வீரராகவன், சாந்தி, கோதண்டம், லலிதா, சண்முகம் இன்னும் சில உறவினர்கள் வந்து கவலையுடன் இருந்தனர்.  கயல்விழி தன் போனில்  தன் அத்தானிற்கு அழைத்தாள் அது மறுமுனையில் சுவிட்ச் ஆப் என்று வந்து கொண்டு இருந்தது. 


     வெளியே வந்த இளவரசன் முரளியை சூழ்ந்து கொண்டனர் அனைவரும் 

    "இளவரசனா என்ன ஆச்சு என் மகனை எதுக்கு கைது பண்ணியிருக்காங்க" என்று கலங்கிய குரலில் கேட்டார்.  இளவரசன் சொன்னதை கேட்ட ஆண்கள் கலக்கமடைய பெண்கள் கண்ணீர் விட்டனர். 

   சாந்தி வாய்விட்டு அழுதார்  "தப்பே பண்ணாத என் பெரிய மகனை தண்டிச்சேன் அந்த பாவம் தான் என் சின்ன மகன் தப்பே பண்ணாமல் இப்படி போலீஸ் நிலையத்தில் உட்கார்ந்து இருக்கான்."

    "நான் பாவி பாவி" என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதார் என்றால் வீரராகவன் வாயில் துணியை வைத்து கண்ணீர் விட்டுக்கொண்டு இருந்தவர் " நானும் தான் பாவி என் புள்ளையை வீட்டை விட்டு துரத்தினேன் அவன் எவ்வளவு வேதனை பட்டு இருப்பான்.   தப்பே பண்ணாதவன் வீட்டை விட்டு வெளியே போயி எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பான் அந்த பாவம் தான் இன்னைக்கு தப்பு பண்ணாமல் என் இன்னொரு புள்ளை  இப்படி ஒரு நிலைமையில் இருக்கான்." என்று கூறி கண்ணீர் விட்டார். 




Leave a comment


Comments


Related Post