இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
கவிதை 33 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK026 Published on 03-07-2024

Total Views: 1056

  "பழனி முருகா நான் பண்ண பாவத்துக்கு எனக்கு என்ன தண்டனை வேண்டும் என்றாலும் கொடுப்பா என் பிள்ளையை தண்டிச்சுடாதே" என்று வாய்விட்டு கூறி கண்ணீர் விட்டார்.. 

   இளவரசன் அவரை அணைத்து ஆறுதல் செய்தவன்  "மாமா கவலைப்படாதீங்க காலையில் சரவணனை விட்டு விடுவாங்க" என்று கூறிக் கொண்டு இருந்த நேரம் ஒரு காவலர் இவ்வளவு பேர் இங்க இருக்காதிங்க கிளம்புங்க என்றார். 

    முரளியும் இளவரசனும் அருகில் இருந்த ஓட்டலில் அறை எடுத்து அவர்களை விட்டு வந்தனர்.  பின் மகேஸ்வரி குடும்பம் ஓரமாக அமர்ந்து கண்ணீர் விட்டு கொண்டு இருந்தவர்கள் அருகில் சென்று 
அவர்களிடமும் பேசி ஓட்டலுக்கு அழைத்து சென்று கயல்விழி அமிர்தவள்ளி இடம் விட்டு விட்டு அனைவருக்கும் பால் வாங்கி கொடுத்து குடிக்கவைத்து வெளியே வந்த போது மணி பதிரெண்டை தாண்டி இருந்தது. 

     அன்பழகன் பொருட்கள் வாங்க சென்னை சென்று இருந்தவன் வீடு வந்ததும் கிளம்பி வந்திருந்தான்.   சரவணனுக்கும் பால் வாங்கி சென்று கொடுக்க அவன் குடிக்க மறுத்து விட்டான். 

   மீண்டும் மூவரும் வெளியே இருந்த மரத்தடியில் வந்து அமர்ந்தனர்.  

    "அத்தான் போன் இன்னும் ஆன் பண்ணவில்லை எப்போ வருவார்" என்றான் இளவரசன். 

    முரளி தன் கைக்கடிகாரத்தை பார்த்து விட்டு இன்னும் அரை மணி நேரத்தில் என்றான். 

    அடுத்து என்ன என்று புரியாமல் அமர்ந்து இருந்த நேரம் முரளியின் போன் ஒலித்தது.  எடுத்து பார்த்தவன்  "சீக்கிரம் வந்துட்டான் போல" என்று கூறி போனை ஆன் செய்து காதில் வைத்து கார்த்தி எனபதற்குள் அந்த பக்கம் இருந்து 

     "என்னாச்சிடா எல்லாரும் மாறி மாறி போன் பண்ணி இருக்கிங்க" என்றான் கார்த்திகேயன். 

   " கார்த்தி இங்க" என்று ஆரம்பித்து அனைத்தும் கூறினான்.   அனைத்தும் கேட்டவன் " உன் லேப்டாப் காரில் இருக்கும் இல்ல அதில் அந்த பக்கம் போன வண்டிகளை பாரு நான் காருக்கு போயிட்டு பேசுறேன்" என்று வைத்து விட்டான். 

    முரளி வேகமாக தன் காரில் இருந்த லேப்டாப் எடுத்து ஆன் செய்து சிசிடிவி வீடியோவை ஓடிவிட்டான். 

     அதில் சரவணனின் கார் கம்பெனியில் இருந்து  சென்ற போது சற்று நேரம் கழித்து அதன் பின் சுமோ ஒன்று இடைவெளி விட்டு சென்றது.   சரவணன் கார் நின்ற போது சற்று தூரத்திலேயே அந்த சுமோ நின்றது திரும்ப மகேஸ்வரி கிளம்பியது போது அந்த சுமோ வேகமாக சென்றது. 

   அடுத்த இரண்டு கோமராவிலும் அவள் பின் சென்ற சுமோ மூன்றாம் கோமராவில் இரண்டு நிமிடம் கழித்து கடந்தது சுமோ,  மகேஸ்வரி கடக்கவில்லை என்று தெரிந்தது அப்படி என்றால் அந்த வண்டியில் கடத்தி இருக்கிறார்கள் என்று அறிந்தனர். 

   அந்நேரம் கார்த்திகேயன் போன் செய்ய அவனிடம் சொல்ல அவன் காவல் அதிகாரியிடம் காட்டச்சொல்லினான். 

    இவர்களும் காவல் அதிகாரியிடம் எடுத்து சென்று காட்டினர்.   உடனே அவரும் அந்த வண்டியை பற்றிய தகவல் சேகரிக்க ஆரம்பித்தனர். 

    கயல்விழி விடாமல் கார்த்திகேயனுக்கு அழைத்து கொண்டு இருந்தாள்.   அவன் போன் அனைக்கப்பட்டு உள்ளது என்றே தகவல் வந்தது.   கடைசியாக முயன்ற போது அவனின் போன் ஒலித்ததும் அவன் எடுப்பதற்குள் "ஹலோ ஹலோ அத்தான்" என்று குரல் கொடுத்து கொண்டு இருந்தாள். 

   கார்த்திகேயன் போன் எடுத்து "விழி என்பதற்குள் " அத்தான் அத்தான்" என்றாள்.  " விழி முரளிகிட்ட பேசிட்டேன் நான் பார்த்துக்கொள்கிறேன் நீ அங்க இருப்பவர்களை பத்திரமாக பார்த்துக்கொள் நான் பிறகு பேசுகிறேன்" என்று வைத்து விட்டான். 

    அடுத்த ஒரு மணி நேரத்தில் அவனே வீடியோ காலில் வந்தான்.  ஆன் செய்து "அத்தான்" எனும்போதே "மகேஸ்வரி கிடைத்து விட்டாள் பக்கத்தில் அவங்க அப்பா இருந்தா கொடு" என்றான். 

    கயல்விழி சந்தோஷத்துடன் அறைக்குள் சென்றவள் " சார் மகேஸ்வரி கிடைத்து விட்டாள்" என்று தன் போனை அவரின் முன் காட்ட திரையில் தெரிந்த மகேஸ்வரியை கண்டவர் "மகேசு" என்றார் அவரின் பக்கத்தில் இருந்த மனைவி மகள்கள் சந்தோஷ கண்ணீர் விட்டனர். 

    " அப்பா எனக்கு ஒன்றும் இல்லை சார் என்னை காப்பாத்திட்டாங்க ஊருக்கு தான் வந்திட்டு இருக்கேன்.   அந்த ரைஸ்மில் வச்சு இருக்காரே அந்த மாமா பையன் பரசு தான் அப்பா என்னை கடத்திட்டு வந்தான்." 

    மகள் சொன்னதை நம்ப முடியாமல் "என்னமா சொல்லுற அந்த பரசுவா?..." என்றார். 

    " ஆமாம் அப்பா அவன் ஒரு நாள் என்னை காதலிப்பதாக வந்து சொன்னான் நான் மறுத்திட்டேன் அதனால் அவன் பிரண்ட்ஸ் வச்சு என்னை கடத்திட்டு வந்து கல்யாண ஏற்படும் செய்திட்டு இருந்தான் அப்ப தான் சார் வந்து என்னை காப்பாற்றினார்.  அவனையும் அவன் பிரண்ட்ஸ் எல்லோரையும் போலீஸ் பிடித்து கூட்டிட்டு வராங்க அப்பா.   நாங்க வந்திடுறோம் நீங்கள் அம்மா தங்கச்சி எல்லாம் படுத்து தூங்குங்க அப்பா இன்னும் மூன்று மணி நேரத்தில் அங்க இருப்போம்" என்றாள் மகேஸ்வரி. 

     கயல்விழி  போனை எடுத்து கொண்டு வெளியே சென்று சிறிது நேரம் கார்த்திகேயன் இடம் எப்படி கண்டுபித்தான் என்று பேசிவிட்டு வைத்தாள். 

     அமிர்தவள்ளி பக்கத்து அறையில் இருந்த தன் குடும்பத்தினரிடம் சென்று மகேஸ்வரி கிடைத்ததை கூறினாள். அதை கேட்டவர்கள் தங்கள் கவலை நீங்கி சந்தோஷம் அடைந்தனர்.  அதுவும் தன் மகன் கண்டுபித்தான் என்றதும் இன்னும் மகிழ்ந்தனர்.  சிறிது நேரத்தில் உறங்கிப்போயினர். 

     கடத்தியவர்கள் இருக்கும் இடம் தெரிந்ததும் போலீஸ் உதவியுடன் அங்கு சென்று மகேஸ்வரி அழைத்து வந்தான் கார்த்திகேயன் அதனால் காவல் நிலையத்திற்கு சென்று சில பார்மாலிட்டி முடித்து ஊர்திரும்பினர். 

   மகேஸ்வரி கிடைத்து விட்டது அறிந்ததும் இளவரசனை அனைத்து ஒவென அழுதான் சரவணன் மாலையில் இருந்து அவளுக்கு என்ன ஆகியதே என்று தவித்தவனுக்கு அவளை தன் அண்ணன் அழைத்து வருவது தெரிந்ததும் நிம்மதி மூச்சை விட்டான். 

     சரவணனை காவலர் அழைத்து செல்லுமாறு கூறியதும் வெளியே வந்து மரத்தடியில் அமர்ந்தனர்.  இளவரசன் சென்று நால்வருக்கும் மசாலா பால் வாங்கி வந்து கொடுக்க நால்வரும் குடித்தனர். 

    அதன் பிறகே தெம்பு வந்தவனாக அண்ணன் எப்படி கண்டு பிடித்தார் என்றதும் முரளி கூறக்கூற வாயடைத்து உட்கார்ந்து இருந்தான். 

    அதே சமயம் ஓட்டலில் தங்கி இருந்தவர்கள் அனைவரும் உறங்கிவிட கயல்விழிக்கு உறக்கம் வரவில்லை தன் போன் திரையில் இருந்த தன் அத்தானின் புகைப்படத்தை மெல்ல தடவிக்கொடுத்தாள்.  அவள் நினைவுகள் ஒரு வாரத்திற்கு முன்பு நடந்தவைகளை நினைவு கூர்ந்தது.

    பத்து நாட்களுக்கு மேல் சென்றும் தன் அத்தான் வரவில்லை என்று அறிந்தவள் மனம் சோகத்தில் இருந்தது.   அன்று மதிய உணவும் உண்ணவில்லை அதனால் தலைவலி வந்து விட காபி குடித்தால் கொஞ்சம் சரியாகும் என்று கேன்டீனுக்கு வந்து இருந்தாள். 

   காபி குடித்துக்கொண்டு இருந்தவள் பின்புற இருக்கையில் மூன்று பெண்கள் வந்து அமர்ந்தனர். 
  "அப்பா... இந்த டீம் லீடர் மீட்டிங் நடந்தாலே தலைவலி தானாக வந்து ஒட்டிக்குது" என்றாள். 

   "என்ன பண்ணுறது மத்த டீம் லீடர் எல்லாம் எங்கா இருக்காங்க நம்ப டீம் லீடர் இப்படி வயதானவரா இருந்தா தலைவலி தானாகத்தான் வரும்" என்றாள் இன்னொரு பெண். 

    "ஏய் சொல்ல மறந்திட்டேன் இன்னைக்கு காலையில் அப்பாக்கு ஸ்கூட்டி வேண்டும் என்று என்னை சீக்கிரம் கூட்டிட்டு வந்து விட்டுட்டு போனார் நான் ஆபிஸ் உள்ள வராமல் மரத்தடியில் உட்கார்ந்து போன் பார்த்திட்டு இருந்தேன் அப்போ ஆடி கார் ஒன்னு வந்து நின்னது அதில் யார் வந்தாங்க என்று சொல்லுங்க பார்க்கலாம்" என்றாள் அந்த பெண். 

   " ஏய் இப்படி சஸ்பென்ஸ் கொடுக்காமல் யாரு வந்தாங்க என்று சொல்லு" என்றாள் இன்னொரு பெண். 

   " நம்ப கம்பெனி ஓனர் ஹரிஷான்த் சார் வந்தார்டி எவ்வளவு சூப்பரா இருந்தார் தெரியுமா அப்புறம் அவர் கூட நம்ப GM முரளி சார் பிரண்ட் இங்க கேன்டீனில் நீ கூட சூப்பரா ரன்வீர் கபூரை விட இவருக்கு தான் அந்த ஹேர்ஸ்டைல் சூப்பராக இருக்கு என்று ஜொள்ளு விடுவியே" என்றவளை இடைமறித்து 

   " விடுவேன் இல்லை விடுவோம் நீயும் தானே சைட் அடிப்ப அவருக்கு கல்யாணம் என்று சொன்னதும் அழுதையே" என்றாள் 
 
   இன்னொருத்தி " அதை அப்புறம் சொல்லு இப்ப சொல்ல வந்ததை சொல்லுடி" என்றாள். 

     பெண்கள் பேசிக்கொண்டு இருப்பதை கேட்டு கொண்டு இருந்த கயல்விழிக்கு இப்போது சொல்லுவது தன் அத்தானைத்தான் என்று புரிந்து கோபம் வந்தது இருந்தும் அவர்கள் சொல்வதை உன்னிப்பாக கவனித்தாள் கயல்விழி. 

  " அவரும் தான்டி அந்த காரில் இருந்து இறங்கினார் என்ன  ஸ்டைல்
 என்ன கலரு அப்படியே அந்த சன்கிளாஸ் கழட்டி சட்டையில் மாட்டின ஸ்டைல் என்ன நடந்துபோன ஸ்டைல் என்ன அவரை கல்யாணம் பண்ண பெண்ணு நிஜமாகவே புண்ணியம் செய்து இருக்கனும் இராஜக்கள் இப்படித்தான் இருந்து இருப்பாங்க என்று நினைக்குற அளவுக்கு இருக்கார் அந்த கார்த்திகேயன் சார் என்றதும் 

     அதுவரை அமைதியாக கேட்டு கொண்டு இருந்த கயல்விழி எழுந்து பின்னால் திரும்பி  "எப்ப அவரை பார்த்த" என்றாள். 

   அப்பெண்கள் புரியாமல் விழிக்க  "கார்த்திகேயன் சார் என்று சொன்னிங்களே அவரை இன்னைக்கு காலையில் பார்த்தியா" என்றாள்.   அப்பெண் தலை தானாக ஆடி ஆமாம் என்றது. 

    "தேங்க்ஸ்" என்று கூறி நடந்தவளை 

    "நீங்க ஏன் அவரை கேட்கிறீங்க" என்று குரல் வந்ததும் திரும்பி  "புண்ணியம் செய்து இருக்கனும் சொன்னிங்களே அது நான் தான் மிஸஸ் கார்த்திகேயன்" என்று கூறிச்சென்றவளை திகைப்புடன் பார்த்தனர் மூன்று பெண்களும். 


    கயல்விழியின் பார்வை அந்த கேன்டீன் முழுவதும் வளம் வந்தது எங்காவது அன்பழகன் இருக்கானா என்று எங்கும் இல்லை.   மெல்ல சமையல் செய்யும் பகுதிக்கு செல்லும் கதவை திறந்தாள்  அதற்குள் சொல்லக்கூடாது என்று கதவில் எழுதியிருந்த போதும் உள்ளே சென்றாள். 

    ஓரிருவர் இவளை பார்த்தனர் அவள் அன்பழகனுக்கு நன்கு பழக்கம் ஆனவள் என்று தெரிந்ததால் அமைதியாக தங்கள் வேலையை பார்த்தனர். 

    மேலும் சென்றபோது அன்பழகனின் குரல் கேட்டது  அப்படியே நின்றுவிட்டாள். 

     "அண்ணே சொன்னது எல்லாம் வச்சிட்டிங்களா?..." என்றான் அன்பழகன். 

    "எல்லாம் எடுத்து வச்சுட்டேன் தம்பி" என்ற மற்றொரு குரல் கேட்டது 

     "சரி சீக்கிரம் வாங்க மீட்டிங் முடிச்சுட்டு இருப்பாங்க" என்று கூறிக்கொண்டே கதவு திறக்கும் ஓசை கேட்டதும் கயல்விழி அங்கு இருந்த தூணின் பின் மறைந்து கொண்டாள். 


   


Leave a comment


Comments


Related Post