இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
வஞ்சிக்காதே வசீகரா -28 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK012 Published on 03-07-2024

Total Views: 1078

பாகம்-28

அன்று காலையே கிளம்பினான் பாஸ்கர்.

"டேய்! இருந்து டிபன் சாப்பிட்டு போ"

"சரிங்க மேடம்" தோழிக்கு பயந்து நடுங்கி விட்டான். என்னை போலவே நீங்களும் அந்த நடிப்பை நம்பத்தான் வேண்டும்.

செந்திலுக்கு நீருவுக்கும் சண்டை வந்த பிறகு மீனாட்சி மிகவும் வருத்தத்தோடு அமர்ந்திருந்தார்.

"நீ இதுல எல்லாம் டைம் வேஸ்ட் பண்ணாத. அம்மாவை நான் பார்த்துக்கறேன். நீ போய்  படிக்கற வழிய பாரு. இந்த வாரத்துலேர்ந்து கிளாஸ் டெஸ்ட் ஆரம்பிச்சுடுவாங்க."

"சரிக்கா"

"தனது புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தவளுக்கு சில விஷயங்கள் புரியவில்லை. 'அண்ணிக்கு  தெரிஞ்சுருக்குமே. ஆனா  இது சரியான நேரம் இல்ல.பாஸ்கர் சாரிடம் கேட்கலாமா?'குளிக்கப்  போய்  இருந்தான்.

'இந்த அண்ணா  கிட்ட கேக்கலாமா? திட்டுவாரா ? ச!  ச!  திட்டலாம் மாட்டாரு. குழந்தைங்கன்னு சொல்லி சாக்லேட் வாங்கி கொடுத்தாரே". அப்போது முதல் அவள் மனதில் அவன் சாக்லேட் அண்ணா  என்று நினைக்க ஆரம்பித்து விட்டாள் .

அவன் அருகில் வந்து அமைதியாக நின்றாள் . அவனும் தான் அன்று நிரஞ்சனா வாங்கி வந்த ராபின் ஷர்மா புத்தகத்தை படித்துக் கொண்டிருந்த பிரதீப் தலை  நிமிரவே இல்லை. 

"சார்!"

ஆழ்ந்து படித்தவனுக்கு  இப்போதும் கேட்கவில்லை.

"சாக்லட் சார்" திடுக்கிட்டு திரும்பினான்.

டைனிங் டேபிளில் வருத்தத்தோடு அமர்ந்திருந்த நீருவும்தான்.

"என்ன சொன்ன?"

"உங்களத்தான். சாக்லேட் வாங்கிட்டு வந்தீங்க இல்ல. அதான் சாக்லேட் சாருன்னு கூப்பிட்டேன்"

"பிஸ்கட் வாங்கிட்டு வந்தா?"

"பிஸ்கட் சார் " அவன் சொன்னது போலவே குழந்தையாக நடந்து கொண்டாள் .

"அது எல்லாம் சரி பவி . எதுக்கு அந்த பூச்சாண்டி மாமாகிட்ட நின்னுகிட்டு இருக்க?"

நமுட்டு சிரிப்புடன் கேட்டாள்  நீரு .

"ஒன்னும் இல்ல. இது கொஞ்சம் சரியா விளங்கல . அதான் இவருக்கு தெரியுமான்னு"

புத்தகத்தை வாங்கிப் பார்த்தவன் சில நிமிடங்களிலேயே விளக்க ஆரம்பித்திருந்தான். ஆனால்  பாவம் குழந்தைக்குத் தான்  அவன் சொன்னது எதுவும் புரியவில்லை.

"டேய் என்னடா இது?உன்னோட பாரின் எம் பீ  ஏ  மூளையை அவகிட்ட காட்டினா என்னடா புரியும்"ஆமாண்டா பாஸ்கர். நானும் பார்த்தேன். பரிதாபமா உக்காந்திருக்கா"

உள்ளிருந்து உள்பாட்டு பாடிய தோழியை நக்கலாக ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும்  தனது புத்தகத்தை எடுத்துக் கொண்டான் பிரதீப்.

"பவி உனக்கு இதுக்கெல்லாம் சரியான ஆளு நம்ம சத்யா தான். சூப்பரா சொல்லி கொடுப்பா . இரு நான் அவளை வரச் சொல்லறேன்"

 "அவள எதுக்குடா தொந்தரவு பண்ணற? நீ இப்ப கிளம்பும்போது இவளையும் கூட்டிட்டுப் போ. உங்க அம்மா வரும்போது இவளையும் சேர்த்து அனுப்பு" 

பூரணி சொல்வது சரியாகவே இருந்தது.

செந்திலிடம் கேட்டபோது அதிசயமாக சரி சொல்லிவிட்டான். பாஸ்கர் மீது இருந்த நம்பிக்கையினால் இருக்கலாம்.

"தங்கச்சிய கரெக்ட் பண்ண அண்ணாகிட்டையே  பர்மிசன் கேட்டு  கூட்டிட்டு போறியே நீ செம்ம ஆளுதாண்டா:

"டேய் மச்சான்! இந்த பொண்ணுங்க  ஆர்ம்ஸ கட்டிக்கிட்டு ரோட்டுல நடந்து வந்தா அந்த பீல் எப்ட்றா இருக்கும்? ஒன்றும் தெரியாதவனாய் கேட்டான் பாஸ்கர்.

இருவரையும் சரியாக போட்டு கொடுத்த நிரஞ்சனா ஒன்றுமே தெரியாதது போல அமைதியாக  கன்னத்தில் கைவைத்து இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள் .

"என்னடா செம்ம ரொமான்ஸா?காலையில் அவள் கேட்டபோதே பிரதீப் சமாளித்திருக்க வேண்டும். தோழியிடம் இந்த அளவு உண்மை விளிம்பியாக இருந்திருக்க வேணாடாமோ? 

பவியும் குளித்து விட்டு தயாராகி வந்தாள் .

பாஸ்கர் ,அவன் அன்னையிடம் பேசிக் கொண்டிருந்தான்.

"ஆமாம்மா ! பவிக்கும்  நம்ம வீட்டு லதான் சாப்பாடு. என்ன ஒரு குண்டான்  சேர்த்து வைச்சிரு .அரிசி இருக்கா ?"

அங்கே வந்தவளோ கண்களை விரித்து இடுப்பில் கை  வைத்து அவன் முறைத்துக்  கொண்டிருந்தாள் .

அவள் இருந்த நிலையைப் பார்த்து , "பத்தாதா ?" சீரியஸாக கேட்டான் பாஸ்கர்.

"ச! ச! அவ அவ்ளோ எல்லாம் சாப்பிட மாட்டா . ரெண்டு குண்டாத்  தான் சாப்பிடுவா. கரெக்டா பவி "

நண்பனுடன் சேர்ந்து கொண்ட அண்ணியையும் முறைத்தாள் .

"அப்டியா பவி"  இது பிரதீப் .

"அம்மா பாருங்கம்மா! எல்லாரும் என்ன கலாய்க்கறாங்க" சிறு பிள்ளையாக அன்னையிடம் முறையிட்டாள் .

"என்ன எல்லாரும் சின்ன குழந்தையை இப்படி கிண்டல் பன்னறீங்களே? அம்மாவுக்கு தெரியுமா? உங்களுக்குத் தெரியுமா? பாஸ்கர் தம்பி ! அவ அவ்ளோ எல்லாம் சாப்பிட மாட்டா . ஒரு குண்டா சாதமும் ரெண்டு குண்டா  சாம்பாரும் வைக்க சொல்லுங்க. அது போதும் அவளுக்கு"

"என்னம்மா நீயும் அவங்க கூட சேர்ந்துட்டியே"

இங்கே நடக்கும் அமர்க்களங்களை எல்லாம் , அறையில் தலை சீவிக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தான் செந்தில்.

"நம்ம பவியா  இது?"

வீட்டில் பூனைக் குட்டி போல வலம்  வருவாள் . ஆனால்  சத்தம் வரவே வராது. இப்போது எப்படி புது மனிதர்களுடன் இவளால் இப்படி சகஜமாகப் பேச முடிகிறது?

செந்தில் கிளம்பும் போதே இவர்களும்  கிளம்பி விட்டார்கள். 

இது நாள் வரை அவள் மீது எந்த எண்ணமும் இல்லாத பாஸ்கருக்கு  நேற்றைய சம்பவத்திற்குப் பிறகு அவள் மீது ஏதோஒரு உரிமை வந்திருந்தது. 

உம்மென்று முகத்தை வைத்திருந்தாள் .

"என்னடி மூஞ்சிய உம்முனு வச்சுருக்க? என்ன யோசனை ?"

"ம்! உங்க வீட்டுல குண்டா  சோறு இருக்குமான்னு யோசிச்சுகிட்டு இருக்கேன்"

ரொம்பலாம் யோசிச்சு இல்லாத மூளையை கொடுமை படுத்தாதடி "

"பேச்சை பாரு ! உதட்டில் பழிப்புக் காட்டினாள் 

வண்டியை ஓரம் கட்டினான்.

ஹெல்மெட்டை அவிழ்த்து விட்டு, கண்ணாடியில் அவள் முகம் பார்த்தான்.

வேறு எங்கோ முகத்தை திருப்பிக் கொண்டவள் அவன் சட்டென  அவள் கைபற்றவும் அதிர்ந்து அவன் முகம் பார்த்தாள் . அவனோ கண்ணாடியில் அவள் முகம் பார்த்து பேசிக்  கொண்டிருந்தான்.

"ஒத்த வார்த்தை என்ன கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லுடி . ஒனக்கு நாலு குண்டா  சோறு போடறேன் தினமும்"

அவளுக்கோ கோபத்தில் புசு புசுவென மூச்சு வெளி வந்தது.

அவனின் இதழ்கள் அவளின் கையில் பட்டதும் கோபம் மறந்து மேனி சிலிர்த்தது. அவன் சொல்வது உண்மைதான் என்றுப்  புரிந்தது.

"இது வரைக்கும் நீருவ  தவிர எந்த பெண்ணையும் பார்த்ததில்லடி. எனக்குன்னு ஆசை  வந்துட்டா சத்யா வாழ்க்கை என்னாகும்ன்னு பயந்துகிட்டே யாரையுமே பார்த்ததில்லை. ரசிச்சதில்லை. ஆனா  நீ! நேத்து அழுதப்போ அது என்ன உணர்வுன்னே எனக்கு தெரிலடி . உன்னாலதான் என்னோட தங்கச்சி வாய் விட்டு சிரிச்சா. உன்னாலதான் அவளை எப்பவுமே சிரிக்க வைக்க முடியும் பவி   எங்க வீட்டுக்கே வந்துரியா ? என்னோட பொண்டாட்டியா. எங்க வீட்டு  மகாராணியா "

அவளிடமிருந்து மௌனம்.

அவளுக்கும் அவன் மீது ஒரு விதமான ஆசை இருக்கத்தான் செய்தது.  அன்று பயத்தில் அவன் தோள்  பிடித்து அமர்ந்தாலும் பின் வந்த நாட்களில் அவனை கட்டிக் கொண்டு பைக்கில் பறக்க ஆசை  வந்து விட்டது. அதனாலேயே ஏதோ சாக்கிட்டு  அவன் வரும் வரை சில நாட்கள் பேருந்து நிலையத்தில் காத்திருந்தாள் . தான் முதலில் சொல்லி இருந்ததால் இதெல்லாம் வயசு கோளாறு என்று சொல்லி விடுவானோ என்று பயந்திருந்தாள் . ஆனால்  இப்போது அவனே  சொல்லி விட்டான். 

அவளின் மௌனம் அவனுக்கு பயமாக இருந்தது. கன்னியின் பதிலில் தனது  கன்னிக் காதல் அழிந்துவிடுமா?

இப்போதும் அவளிடமிருந்து மௌனம் தான்.

மீண்டும் ஹெல்மெட்டை மாட்டிக் கொண்டு வண்டியை கிளப்பியவன் இடுப்பைக் கட்டிக் கொண்டாள்  பவித்ரா.

"நீங்க  ஒன்னும் குண்டா  சோறு போடா வேணாம். எங்க அண்ணாவை சம்மதிக்க வச்சா போதும்"

"என்னடி இது! இப்படி இடுப்புல கை  வச்சு கட்டிக்கிட்டு மனசுல ஆசைய  ஏற்படுத்தி புலி காட்டுல விடலான்னு பாக்கறியா?"

"வேணுன்னா சொல்லுங்க கட்டிக்கறேன். இல்லாட்டி கைய  எடுத்துக்கறேன். ஆனா புலிக்காட்டுல போய்  புலியை  மீட் பண்ண வேண்டியது நீங்க தான் "

"உங்க அண்ணா ஒரு புலி. நீ ஒரு ராட்சசி. ஏற்கனவே உங்க அண்ணி  அந்த புலிக்கிட்ட சிக்கிட்டா . இன்னும் எங்க ரெண்டு பேர் கதை என்ன ஆகுமோ?"

'அச்சச்சோ உளறிட்டோமே .இந்த லூசுக்கு புரிஞ்சிருக்குமா?' அவளுக்குத் தெரியாமல் நுனி நாக்கை கடித்துக் கொண்டான்.

அவன் சொன்னதன் அர்த்தம் அவளுக்கு புரிந்ததோ இல்லையோ கடவுளுக்கும் அவளுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். அவன் சொன்னதை பற்றி எல்லாம் கவலைப் படாமல் ,

"ரொம்ப மனசுல ஆசைய வளர்த்துக்காதீங்க. இன்னும் உங்க வீட்டுல சத்யாக்கு கல்யாணம் பண்ணனும். எங்க வீட்டுல எனக்கு ஒரு அக்கா இருக்கு. அது ரூட்டை க்ளியர் பண்ணாதான்  எனக்குப் பேச முடியும்"

"அதுக்கு பதில் முதல்ல ஒனக்கு உங்க வீட்டுல பேசிட்டா  உனக்காகவாவது  அவளுக்கு சீக்கிரமே முடிச்சு  அனுப்ப மாட்டாங்க?"

"இதெல்லாம் இருக்கட்டும் சாரே. எல்லாத்துக்கும் மேல எங்க அண்ணாவோட ரூட் கிளியர் ஆகணும் அது நினைவிருக்கா?"

அப்படியே காலையில்  நடந்த பிரச்சனை பற்றியும் சொல்லி விட்டாள் .

அதுவரை குஷியாகஇருந்தவன்  முகம் சுருங்கிவிட்டது. 

"சாரி! என்னால  உங்க கிட்ட மறைக்க முடியல. அதே சமயம் என்னால அண்ணண்  சொன்னதையும் ஏத்துக்க முடியல. நேத்து மட்டும் நீங்களும் அண்ணியும் இல்லன்னா  எங்க நிலைமை என்னன்னே தெரியல. அண்ணன்  சொல்லற மாதிரி அத்தை வீட்டுக்கோ மாமா வீட்டுக்கோ போக முடியாது. அத்த வீட்டுக்கு  போனா கொஞ்ச நேரம் கூட சந்தோஷமா இருக்க முடியாது. மூச்சு முட்டறது போல இருக்கும். எப்ப பார்த்தாலும் என்னையும் அக்காவையும் ஏதாவது சொல்லிகிட்டே இருப்பாங்க. சின்ன அத்தை வேற மாதிரி. அவங்க ரெண்டு பேருக்குமே அண்ணா  மாதவியை கட்டிக்கிட மாட்டேன்னு சொன்னது வேற பயங்கர ஆத்திரம். அங்க பொண்ண எங்க அம்மாவை உயிரோட நெருப்பு வச்சு கொளுத்த வேணாம். சொல்லற சொல்லுலையே அம்மா நெருப்பு வச்சுக்குவாங்க "

"மாமா வீடு?"

"அங்க அத்தைக்கு எங்களை பார்த்தாலே பிடிக்காது. அம்மா ரோட்டுல கடை வச்சுருந்ததால அவங்களோட மரியாதை போச்சுன்னு நினைக்கிறவங்க. எங்களை பிச்சைகாரங்க மாதிரி ட்ரீட் பண்ணுவாங்க. ஏதோ அண்ணா  இத்தனை பெரிய கடை வச்சதுனால அம்மாவை பார்த்தா என்ன அண்ணின்னு ரெண்டு வார்த்தை பேசுவாங்க. அண்ணாகிட்டையும் ரெண்டு வார்த்தை பேசுவாங்க. அதுவும் எங்க அவங்க வீட்டு பொண்ண அண்ணனுக்கு அம்மா கேட்டுடுவாங்களோன்னு மனசுக்குள்ள ஒரு பயம்"

"ஓ ! அவங்க பொண்ணு என்ன பண்ணறா?"

"சிங்கப்பூர்ல என்  யூ  எஸ் ல பைனல்  இயர் படிக்கறா. அவளுக்கும் இப்ப லீவு .அதுக்குத்தான் அவ அங்க இருக்கும்போதே கொஞ்ச நாள் அங்க அவகூட டைம்ஸ்பென்ட் பண்ணறதுக்காக போய்  இருக்காங்க"

"யாரா இருந்தாலும் பணம் தான்  பேசுது"

"இல்ல சார்!  நானும் அப்படித்தான் நினைச்சேன். அண்ணியை  பார்த்ததுக்கு அப்புறம்தான் மனுஷங்களை பாக்கறவங்களும் இருக்காங்கன்னு புரிஞ்சுது. நீங்க, பிரதீப் சார் பூரணி அத்தை, எல்லாருமே எங்களை நல்ல விதமா தானே பார்த்துக்கறீங்க? "

"அதுவும் சரிதான்.அன்புங்கறது எப்பவுமே பணத்தை பார்த்து வராது. பிரதீப் எங்க ரெண்டு பேர  விடவும் பெரிய பணக்காரன். ஆனா  சின்ன வயசுலேர்ந்தே அவன் எங்ககிட்ட பாகுபாடு பார்த்ததில்லை. இன்னிக்கு கூட பார்த்தல்ல. சத்யாவுக்கு ஒனக்கு எல்லாருக்கும் சேர்த்து தான் வாங்கிட்டு வந்தான். நாங்க ஸ்கூல் படிக்கும்போதும் அப்படித்தான்"

"எங்க அம்ம்மா கடை வச்சுருந்தப்போ தினம் ரெண்டு நாய் சாப்பிட வரும். தனக்கு இல்லன்னா கூட அதுங்க ரெண்டுத்துக்கும்  இருக்கறதை எடுத்து வச்சுடுவாங்க. கடையை  மூடினத்துக்கு அப்புறமும் அதுங்க எங்களை தேடுமேன்னு எங்க வீட்டுக்கே கூட்டிட்டு வந்துட்டாங்க"

 "நேத்து நான் எந்த நாயையும் பாக்கலியே ?"

"அது கொஞ்ச நாள்  முன்னாடி தான் செத்து போச்சு. ஒன்னு செத்ததும் இன்னொன்னும் சாப்பிடாமலே இருந்து செத்து  போச்சு . அம்மாவால அத தாங்கவே முடியல. எங்கேர்ந்தோ வந்து எதுக்கு என் மடில உயிரை விட்டீங்கன்னு ரொம்ப நாள் அழுதுகிட்டே இருந்தாங்க "

"கண்ணை துடைச்சுக்கோ. வீடு வந்துருச்சு. முதன் முதல்ல சின்னம்மா வீட்டுக்கு வரப்  போற. சிரிச்சுகிட்டே காலடி எடுத்து வை"

"வலது கால் தானே" இப்போது புன்னகை அவள் உதட்டில் வந்து விட்டது.

இவளுக்காக காத்திருந்த சத்யா வாயில் வரை ஓடி வந்தாள் .

"வா !வா! பட்டுவும் அவள் கணவரும் கூட வாயில் வரை வந்து வரவேற்றனர்.

அவர்களின் வரவேற்பு பாஸ்கருக்கு சந்தேகமாகவே இருந்தது.

========================================================================================

மகள் அடுத்த வாரங்கள் அல்லது மாதங்களுக்காவது புகுந்த வீட்டினருடன் தான் இருக்கப் போகிறாள். தான் சில தினங்கள் தோழியுடன் சென்று தங்குவதற்கு என்ன? அதையே தான் மகளும் சொன்னாள்  "போயிட்டு வாங்கம்மா. உங்களுக்கும் ஒரு சேஞ்சா  இருக்கும்"

மீனாட்சியோ 

"அதுக்கு என்ன சம்மந்தி ? நாங்க தான் இங்க இருக்கோமே  நாங்க பார்த்துக்க மாட்டோமா. அவளை நாங்க  பார்த்துக்கணுங்கறத விட அவ எங்க எல்லாரையும் நல்லாவே பார்த்தப்பா . சும்மா ரெண்டு நாள் தானே "

மாப்பிளையும் சரி சொன்னதில் தைரியமாக கிளம்பிட்டார். தோழிகள் இருவரும் பேருந்தில் நிம்மதியாக உண்டு உறங்கி கதைகள் பேசிக் கொண்டு சென்றார்கள். பூரணிக்கு பழைய காலத்து நினைவுகள் வந்தன . இருந்தாலும் அந்த காலம் வேறு இது வேறு தானே. என்னதான் வெளியில் சிரித்திருந்தாலும், மனம் முழுதும் மகள் தானே இருக்கிறாள் .

ஒரு சின்ன கோட்டுக்கு பக்கத்துல பெரிய கோடு  போட்டா?

பெரிய கோடு  என்ன என்பது இதோ புரிந்து விடும்....

தொடரும்......


Leave a comment


Comments


Related Post