இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
வஞ்சிக்காதே வசீகரா -29 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK012 Published on 04-07-2024

Total Views: 1336

பாகம்-29
பாஸ்கர் கிளம்பியதும், பிரதீப்பும்  கிளம்பி விட்டான். ரேணுகா குளித்துக் கொண்டிருக்கும் போது சொல்லாமலேயே கிளம்பிவிட்டான். 
சென்றவன் ரேணுகாவின் மனதையும் அள்ளிக் கொண்டு சென்று விட்டானே. இனி எப்போது அவனைக் காணப் போகிறாள் ?
அவன் ஏன்  தன்னிடம் சொல்லிக் கொள்ளவில்லை? அது சரி தன்னிடம் சொல்லிவிட்டு செல்லும் அளவிற்கு தான் என்ன பெரிய ஆளா ? அல்லது அவனுக்கும் தனக்கும் தான் என்ன சம்பந்தம். ஒரே வீட்டில் இருந்தோம். ஏதோ இரு வார்த்தைகள் பேசிக் கொண்டோம்.
அப்டினா கைய புடிச்சு கூட்டிகிட்டு போனது? அதுதான் கடை வந்துருச்சு. தள்ளி நில்லுன்னு சொல்லிட்டாரே? அவரு சரியாத்தான் இருக்காரு நாமதான் சரி இல்ல. கொஞ்சநாள் பாக்காம  இருந்ததா எல்லாம் சரி ஆகிடும். அதுசரி!  ஆனாலும் அவன் கவர்ந்து சென்ற மனதை யாரிடம் இருந்து வாங்க முடியும்?
==================================================================================
தோழியுடன் வந்து சேருமுன்பே அந்த இடம் பூரணிக்கு சொர்கமாகத் தான் இருந்தது. 
"சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா? ராமராஜனின் முகமும் இளையராஜாவின் குரலும் எப்படி நினைவிற்கு வராமல் இருக்கும்? 
அந்த சீனியர் சிட்டிசன் ஹோமில் இருந்தே கார் வந்திருந்தது. வழி நெடுகிலும் தென்னை மரங்கள்  ஹை! ஹலோ ! சொல்லிக் கொண்டிருந்தன .
சில மரங்கள் உங்களை வரவேற்கிறோம் என்று லேசாக  தலை குனிந்து வரவேற்றன.
"ஏய் ! இந்த மரத்தை பாரேன். பொண்ணுங்களுக்கு மட்டும்தான் உடம்பு நெளிஞ்சு இருக்கும்மான்னு கேக்குது"
"நீ இன்னும் அப்ப இருந்த மாதிரியேதாண்டி இருக்க பூரணி. ஒனக்கு கம்பனி இந்த கிளவி  இல்ல. யாராவது ஒரு பத்து வயசு பொண்ணுதான் சொல்லிவிட்டு தனது டேபில்  எதையோ பார்த்துக் கொண்டிருந்தாள் .
"ஏண்டி அதுல என்ன இருக்கு? எப்ப பார்த்தாலும்?இதெல்லாம் கொஞ்சம் பார்க்கலாம் தானே?"
"எங்களை மாதிரி தனியா இருக்கற  ஆளுங்களுக்கு இந்த காலத்துல இது தான் துணை. நீ நினைக்கற மாதிரி சகமனிதர்களிடம் எல்லாம் பழக முடியாது. இந்த மாதிரி முக நூல் நண்பர்கள் கிட்ட தான் பேச முடியும். இது எல்லாம் நிரந்தரம் இல்லன்னு மனசுக்குப் புரிஞ்சாலும் யாராவது நம்ம கிட்ட அன்பா ரெண்டு வார்த்தை பேச மாடங்களான்னு இருக்கும். முன்னாடி எல்லாம் முதியோர் இல்லம். இப்ப? சீனியர் சிட்டிசன் ஹோம் .சின்ன வயசுல எல்லாம் வீடு நிறையா மனுஷங்க இருந்தா அத்தனை பேருக்கும் ஆக்கி போடணுமே  வேலைக்காரியான்னு தோணுது. வயசானத்துக்கு அப்புறம் பசங்க எல்லாம் வெளிநாட்டுல செட்டில் ஆகிடறாங்க. யாரவது என்ன பாக்கவாவது வாங்களேன்னு மனசு ஏங்குது "
அவள் சொல்வது எல்லாம் சரிதான். இப்போதெல்லாம் அப்போது போல் இல்லையே? சமை க்க முடியவில்லை என்றால் ஸ்விகி இருக்கிறது. இல்லை என்றால் சோமட்டோ . என்னதான் இல்லை இப்போது. உள்ளங்கையில் உங்கள் உலகம் என்று போனையும் கூகிளையும் சொல்லலாம். நம் பிள்ளைகள் கூட நம் அருகில் இல்லை என்பதே உண்மை. பல வித எண்ணங்களுடன் வந்து சேர்ந்தார்கள். நுழையும்போதே அழகான பிள்ளையார் கோவில். சில வயதானவர்கள் சந்தியாவந்தனம் செய்து கொண்டிருந்தார்கள். பலர் நடைப்  
 பயிற்சியில் இருந்தார்கள். இந்த நேரத்திற்கு சென்னையில் வெயில் பளீரென்று முகத்தில் அடிக்கும். வாகன நெரிசல் இல்லை. சீருடையில் செல்லும் பிள்ளைகள் இல்லை. வண்டி சத்தம் இல்லை.  அந்த இடமே மனதிற்கு இதம் தரும் அமைதியாக இருந்தது.
நுழைவதற்கு முன்பு கோவிலுக்குள் செல்லாமல் வெளியில் இருந்தே பிள்ளையாருக்கு குட்டுப் போட்டுக் கொண்டாள் . மீனாட்சி கொண்டு வந்த குட்டிப் பிள்ளையார் நினைவிற்கு வந்தது.  'நிரஞ்சனாவிடம் சொல்லி புது வஸ்திரம் போட சொல்ல வேண்டும்' மனதில் நினைத்துக் கொண்டாள்  பூரணி .

"வா!வா! உனக்குத் தான் வெய்டிங் . இன்னிக்கு நான் விளையாடப் போற பொம்மை நீதான். ஹேய் ஜாலி. பிள்ளையாரின் மனம் குதூகலித்தது.

குளித்து டிபன் சாப்பிட்டு சிறிது நேரம் முகப்பில் இருந்த புத்தகங்களை எடுத்துக் படிக்க தொடங்கினார் பூரணி. எத்தனை வயதானாலும் ஊஞ்சலில் அமருவது என்பது தனி சுகம் தானே? 
"போ என்ன தொடாத . வந்தினா அடிச்சுடுவேன்" யாரோ ஒரு பெண்மணி கத்துவது போல இருந்தது.
பக்கத்துக்கு பிளாக்கில் தான் சத்தம் வந்தது. 
எந்த ஆயிற்று? அமைதியாக சென்று பார்த்தார். யாரோ ஒரு முதியவர் டயபர் மாட்ட வந்த ஆயாவைத்தான் திட்டிக் கொண்டிருந்தார். மனதில் கோபம் இருந்தாலும் வெளியில் காண்பிக்காமல்  அமைதியாக பல்லைக் கடித்துக் கொண்டு தன்  வேலையை செய்துக் கொண்டிருந்தார். அந்த ஆயாவிற்கு பிறகு ஒரு நர்ஸும் பாட்டியை பார்க்க வந்தார் 
"இருங்க பாட்டி. ஏன்இப்படி பாத்ரூம் போய்ட்டிங்க? என்ன கூப்பிட்டிருக்கல்லமில்லே?" ஏதோ பேசிக் கொண்டிருந்தாள். அந்த நர்ஸும் சின்ன பெண்ணாகவே இருந்தாள் .
பூரணிக்கு அந்த பாட்டியை பார்க்க பாவமாக இருந்ததது. அவர் மகன் வெளிநாட்டில் இருப்பதும், இன்னொரு மகன் காதல் திருமணத்தில் வீட்டை விட்டு துரத்தி விட்டார் என்பதும் தோழியின் மூலம் பிறகு அறிந்து கொண்டார். காதல் திருமணத்தால் மகனை வீட்டை விட்டு துரதியவர் என்பதால் அவரை அருகில் இருந்து பார்க்க ஆவல் வந்தது. அப்படி அவர்  மகன் என்ன தவறு செய்து விட்டார்? வீட்டினர் சம்மதிருந்தால் அவரும் இவர்களுடன் இருந்திருக்கப் போகிறார். பாட்டி விஷயத்தில் ஆரம்பித்து மனம் தன்  விஷயத்தில் வந்து நின்றது.

  யாரோ என்று நினைத்த பெண் தன்  சொந்த மாமியார்தான் என்பதை அறிந்து கொண்டார். 
 அந்த பாட்டியின் அறையில் அவர்களின் குடும்ப போட்டோ இருந்தது. எடுத்துக் பார்த்தவர் கண்கள் தன்  கணவனின் இளமையான அழகிய தோற்றத்தில் வந்து நின்றது. இதோ இந்த முதியவரின் தோற்றத்திலும்தான். முற்றிலும் அடையாளம் தெரியாமல் போய் இருந்தார் இப்போது, மாலையுடன் வந்த மகனுக்கு மண்ணை வாரி சாபமிட்டவர்.
"ஒரு வேளை  நீங்க  ஆசிர்வாதம் பண்ணி இருந்தா உங்க பையன் இப்படி அல்பாயுசுல போய்  இருக்க மாட்டாரோ? அம்பது ஏழு வயசு ஒரு வயசா?
இவருக்கு என்பது ஐந்து வயதாம். இத்தனை அவஸ்தைகளுடன் கடவுள் இவரை இன்னும் உயிருடன் வைத்திருக்க என்ன காரணம்? கல்லீரலில் ஆரம்பித்த கான்சர் வயிறு முழுவதும் பரவி விட்டது. சிறிய வயிற்று வலிதான் என்று பார்க்காமல் விட்டு விட்டார்.  "ராஜா வயத்தை வலிக்குதுடா சொல்லி இருந்திருக்கலாம். அன்று எங்களை துரத்தாமல்  இருந்திருந்தால். என் மூஞ்சிலயே முழிக்காத. நான் செத்தாலும் என்னோட மூஞ்சிய கூட நீ பாக்க வரக்  கூடாது. நீ நல்லாவே இருக்க மாட்ட. பணக்கார வீட்டுப் பையனா  பார்த்து வளைச்சு போட்டா  நல்ல வாழ்ந்துடுவியா நீ? என்னடா வயிற்று எரிச்சல் உன்ன சும்மாவே விடாது. பேசி பேச்சுக்களும் கொடுத்த சாம்பங்களும் அப்பப்பா மனம் தாங்கவில்லை. எத்தனையோ வருடங்களாக அடக்கி வைத்த கண்ணீர் கரையை உடைத்துக் கொண்டு வெளி வந்தது . பூரணியை பார்க்க வந்த தோழி அவரைப் பார்த்து பயந்து விட்டார்.
தோளில்  சாய்த்து ஆறுதல் சொல்வதை தவிர நம் போன்ற மனிதர்களால்  என்ன செய்ய முடியும்? 
"நீ உங்க வீட்டுக்கு கிளம்பு இனிமே இங்க இருக்க வேணாம்"
" நீ சொல்லறது தான் சரி. என்னால இனிமே இங்க இருக்க முடியாது. நான் கிளம்பறேன். எனக்கு  டிக்கட் புக்  பண்ணு "
மதிய உணவு அறைக்கே வந்து விட்டது. 
கொண்டு வந்த பெண்ணிடம், 
"அந்த கான்சர் பாட்டி  சாப்பிட்டாங்களா ?" வாய் தானாகவே கேட்டுவிட்டது.
"இல்லம்மா! அவங்களுக்கு கஞ்சி தான். அதுவும் குடிக்க மாட்டேன்னு தூக்கி அடிச்சுட்டாங்களாம்.. அந்த நர்ஸு பொண்ணு அழுதுகிட்டு இருந்துச்சு"
தோழியின் கட்டாயத்தினால் இரண்டு வாய் அள்ளிப் போட்டுக் கொண்டு சென்று அந்த நர்சைப் பார்த்தாள் . கன்னத்தில் சூடுபட்டு சிவந்திருந்ததது. அதில் லேசாக தேங்காய் எண்ணெய்  தடவி இருந்தாள் . பாவமாக இருந்தது. வேறு  ஒரு கஞ்சியை எடுத்துக் கொண்டு அந்த பாட்டிக்கு கொடுக்கப் போனாள் .
வயிற்று வலி. சுருண்டு படுத்திருந்தார். கண்களில் வழிந்து கொண்டிருந்த கண்ணீரை துடைத்து மெதுவாக கஞ்சியை ஊட்டினார். பாட்டியின் தேவை இதுதான் என்பது யாருக்கும் தெரியவில்லை.. கண்ணீரை  துடைக்க ஒரு சொந்தம். கஞ்சியை குடித்ததும் மாத்திரைகளை   கொடுத்து தலையணையில் படுக்க வைத்தார். அவரோ உரிமையாக பூரணியின் மடியில் தலை வைத்துக் கொண்டார்.
இளமையின் வேகத்தில் பாவங்களை செய்து விட்டு இப்போது பாவமாக நடந்து கொண்டால் அத்தனை எளிதில் மன்னித்து விட முடியுமா? எத்தனை முறை பெற்றோரை பார்க்க முடியாமல் கணவர் தவித்திருப்பார்? என் மகள் தாத்தா  பாட்டி பெரியம்மா பெரியாப்பா  மாமா சித்தி என்று எல்லா உறவுகளும் இருந்தும் யாருமில்லாமல் தானே வளர்ந்தாள்  இவர் இப்படி என்றால் தன்  தந்தை, 
"நீங்க எங்க இருந்தாலும் நல்லா  இருங்க. ஆனா இனிமே எங்களுக்கு நீ வேணாம் கதவடை த்து விட்டார். மனம் பெரிய சூழலில் சிக்கித் தவித்தது.
மாலையில் கோவிலுக்குச் சென்று விநாயகரை பார்த்தவருக்கு ஆயிரம் கேள்விகள் வரத்  தான் செய்தது. எதுக்கு இப்படி என்ன இந்த மாதிரி ஒரு நிலமைல கொண்டு வந்து நிறுத்தி இருக்க? நான் நல்லவளா இல்லையானு செக் பண்ணறியா? நான் இங்க இருக்கணுமா? போகணுமா? என்னால எப்படி முழு மனசோட அவங்க கூட இருக்க முடியும்? இல்ல இந்த நிலைமில அவங்கள எப்படி அப்படியே விட்டு போக முடியும்? மனசு முழுக்க விஷத்த  வச்சுக்கிட்டு எப்படி என்னால அவங்க கூடவே இருக்க முடியும்? என்ன ஏன் இப்படி பாவம் செய்யவைக்கற? கண்ணீர்  மாலை மாலையாக கொட்டியது. இந்த நொடி தான் இறந்து விட மாட்டோமா என்று அழுதது மனம்.
பூரணியை சமாதானம் செய்து அழைத்துச் சென்றார் தோழி. 
உனக்கு இப்ப இருக்கற எல்லா கேள்விகளுக்கும் பதில் இதுல இருக்கு. பொறுமையா உக்காந்து படி. மனசுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.
"மேடம்"
"என்ன ட்ரைவர்?"
"யாரோ ரவுடியை வெட்டிட்டாங்களாம் அதான் அங்க மெயின் பஸ்டாண்டுல வண்டி எதுவும் நிக்காதாம். பெரிய பிரச்சனையா இருக்கறதுனால கார்  எடுக்க வேணாடான்னு மேடம் சொல்லிட்டாங்க. அதான் சொல்லிட்டு போகலான்னு வந்தேன்"
"இது என்ன ?" இருவருக்குமே ஆச்சர்யமாக இருந்தது. தோழி கொடுத்த பகவத் கீதையை படித்த முடித்து விட்டார் பூரணி. மனதில் தெளிவு வந்தது. தன கடமையை மட்டுமே தான்  செய்ய வேண்டும். புரிந்தது.
நீருவுக்கும் அழைத்து தனது  முடிவைச் சொல்லி விட்டார். 
"இங்க உன்னோட பாட்டி  ரொம்ப முடியாம இருக்காங்க. உங்கப்பா இருந்திருந்திரா அவங்க அம்மாவை இந்த நிலமைல விட்டிருக்க மாட்டார். அவரோட நிலைல இருந்து இப்ப நாந்தான் பாக்கணும் . அவங்க பையன அவங்ககிட்டே இருந்து பிரிச்சதுக்கு இது ஒரு சின்ன ப்ராயச்சித்தமா இருக்கட்டும். ஒரு வேளை அன்னிக்கு  நான் பண்ண பாவம்தான் இன்னிக்கு உன்னையும் மாப்பிள்ளையையும் சேர விடாம தடுக்குதோ?
"என்னம்மா இப்படி எல்லாம் பேசற?"
"இல்ல நீரு . எல்லத்துக்கும்  ஏதோ ஒரு காரணம் இருக்கு. நமக்குத் தான் எதுவும் புரிய மாட்டங்குது"
"ம்மா நீங்க இங்க வாங்க. நாம அவங்களுக்கு இங்கே இருந்து ட்ரீட்மெண்ட் பண்ணலாம்"
"இல்லாம்மா !அவங்களால அவ்ளோ தூரம் ட்ராவல் பண்ண முடியாது. முடிஞ்சா நீங்க ஒரு தடவை வந்து பார்த்துட்டு போங்க"
"அம்மாவ நான் பார்த்துக்கறேன் நிரஞ்சனா. நீ எதை பத்தியும் கவலை படாத"
"ஓகே ஆன்டி! நன் முழுக்க முழுக்க உங்களை நம்பித்தான் அம்மாவை விடறேன்"

===========================================================
பிறகு வந்த நாட்களில் பாட்டி அப்படியேத் தான் இருந்தார். எந்த முன்னேற்றமும் இல்லை.  பூரணி தான் மருமகள் என்பது தெரிந்தது. மன்னிப்புக் கேட்டார். தன் பங்கு குடும்ப நகைகள் சிலவற்றை பூரணியிடம் கொடுத்தார்.
"இது எல்லாம் என்னோட பேத்திக்கு வச்சுக்கோ. அவ நல்லா இருப்பா . ஆசிர்வாதம் செய்து கொடுத்ததால் மறுக்காமல் வாங்கி கொண்டார். இள வயதில் மாற்ற முடியாத பல விஷயங்களை இப்போது சரி செய்ய முயன்றார். வாழ்கையில் பட்ட கஷ்டங்கள் காரணமாக இருக்கலாம். நாட்கள் மாதங்களாக மாற ஆரம்பித்தது.
இங்கே வீடு கட்டும் வேலை மளமளவென நடந்து கொண்டிருந்தது.  நடுவே சில நாட்கள் நல்ல மழை என்பதால் சீக்கிரமாக முடிக்க முடியவில்லை. வேலை தள்ளிப் போய் கொண்டே இருந்தது.
பூரணிக்கு பதில் இப்போது குடும்ப பொறுப்புகளை மீனாட்சி தான் பார்த்துக் கொள்கிறார்.
"நிரஞ்சனா! இட்லி அரிசியும் உளுந்தும் வேணும்மா . தீர்ந்து போச்சு"
'அத்தை சாரி அத்தை . எனக்கு ஒரு இம்பார்டண்டான கான்பிரன்ஸ் இருக்கு. என்னால் இப்ப இதெல்லாம் பாக்க முடியாது. நீங்க  ஆன்லைனில்  ஆடர் பண்ணிக்கோங்களேன்"
"அதெல்லாம் எனக்கு தெரியதேம்மா"
"சரி அத்தை. வேற ஏதாவது வேணுமா?"அடுத்த சில நிமிடங்களில் பிளிங்கிட்டில் வந்து சேர்ந்தது .
அந்த தம்பி எவ்ளோ பந்தமா பேசறான்? சிலாகித்துக் கொண்டார் மீனாட்சி.
அவரைப் பார்த்து  சிரித்துக் கொண்டாள் நிரஞ்சனா. 
"நிரஞ்சனா! வீட்டுக்கு சாமான் லிஸ்ட் எழுதணும்"
'அத்தை எனக்கு அதெல்லாம் தெரியாது. எல்லாம் அம்மா தான்  பார்த்துக்குவாங்க.
அடுத்த நாள் மாலை ரேணுவையும், பவியையும்  அழைத்துக்  கொண்டு புது செல்போன்களை வாங்கி கொடுத்தாள் .  மீனாட்சிக்கு என்று ஒரு டேப்  வாங்கி கொடுத்தாள் . பெண்கள் இருவருமே சாதா  போன்கள் தான் வைத்திருந்தனர். காலத்திற்கு ஏற்ற வகையில் அவர்களும் மாற வேண்டும் என்பதற்காகத் தான் அவள் புதியது வாங்கி கொடுத்தாள் .
செந்திலின் போனும் வண்டியில் செல்லும்போது கீழே விழுந்து உடைந்து போய் இருந்தது. நாம வாங்கி கொடுத்தா வாங்கிப்பாரா?
திட்டினா பார்த்துக்கலாம். திட்டு விழும் என்று தெரிந்தும் புதியது வாங்கினாள்.
"அன்ணி எங்களுக்கு வேணாம். அம்மாவுக்கும் அண்ணாவுக்கும் மட்டும் போதும். எங்களுக்கு எதுக்கு?"
"அதெல்லாம் என்னால டிசைட் பண்ண முடியாதும்மா ", சொல்லிக் கொண்டிருக்கும்போதே  பாஸ்கரும் பிரதீப்பும் ஸ்டைலாக வந்திறங்கினார்கள் .
பாஸ்கரை பார்த்ததும் பவி அவன் கையைப் பிடித்துக் கொண்டு தனக்கு தேவையாதைப் பார்க்க போய்  விட்டாள் .  நீரு  கணவனுக்கு போன் பார்க்கப் போவது போல ஒதுங்கி கொண்டாள் .
"நீ எதுவும் பாக்கல?"
"இல்ல அண்ணியா பார்த்து எது வாங்கி கொடுத்தாலும் ஓகே தான்"
"அவ எப்ப பாக்கறது? நாம் எப்ப வீட்டுக்குப் போகறது?"
அவளை ஒட்டி அருகில் அமர்ந்து "இதுல இது இருக்கு. அந்த மாடல் இப்படி.  தெளிவாக விளக் கினான். ஆனால் அவனின் சென்ட் வாசனையும், அருகாமையும் அவளை ஏதோ செய்தது.
"இதுல எவ்ளோ ஜிபி  ராம் ?" அவன் வேலையிலேயே  கண்ணாக இருந்தான்.
'நீரு ! இது ஓகே வா பாரு"
'டால்பி அட்மாஸ் தானே டா ?"
"யா யா !" அவர்கள் தான்  பேசிக் கொண்டிருந்தார்கள். இவள் ஒன்றும் தெரியாமல் அமைதியாக இருந்தாள் . அங்கே இருந்த மற்றொரு காதல் புறாக்கள் தங்களுக்குளேயே கொஞ்சிக் கொண்டிருந்தன.
"ஆப்பிள் ஐ  போன் வாங்கி கொடுக்காம இவ்ளோ சீப்பா  வாங்கறியேடி "
"நான் மட்டும்  அவளுக்கு ஆப்பிள் போன் வாங்கி கொடுத்தேனா எனக்கு தாலி கட்டினவரு அந்த கடிச்ச ஆப்பிள் மாதிரி எனக்கு ஒரு கன்னத்தை பேத்து  எடுத்துருவார்"
செந்தில் போனுக்கு மட்டுமே நிரஞ்சனா பிள்ளை போட்டாள் . மற்ற அனைத்திற்கும் பிரதீப் தான் செலவழித்தான் .
பவி உற்சாகமாக இருந்தாள் .
வேண்டுமென்றே பைகளை தனது  காரின் பின் சீட்டில் வைத்தவள் 
"பாஸ்கர் நீ நம்ம கார்ல வா.  ரேணு நீ பிரதீப்போட கார்ல ஏறு "
அடுத்து அவர்கள் சென்றது ஒரு ஐஸ்க்ரீம் பார்லர்.
"இங்க வந்ததுக்கு பேசாம ஏதாவது ஒரு நல்ல ஓட்டல்ல டின்னருக்கு பொய் இருக்கலாம்"
"இல்லடா அங்க அத்தை பாவம் தனியா இருப்பாங்க. அவங்க இல்லாம நாங்க  மட்டும் எப்படி டா ?
"பொண்ணுங்களா பார்த்துக்கங்க. நீங்களும் உங்க வருங்கால புகுந்த வீட்டு மனுஷங்க கிட்ட இப்படித்தான் அன்பா பாசமா இருக்கணும்"
"நீ கிண்டலா சொன்னாலும், நம்ம நீருவுக்கும்  அவங்க மாமியாருக்கும் நடுவுல ஏதோ ஒரு கெமிஸ்ட்ரி ஓடுதுடா"
"ஆமாண்டா! புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் இருக்கற மேத்ஸ்  கால்குலேஷன் தான் சொதப்புது. அட்லீஸ்ட் இதுவாவது காப்பாத்தட்டுமே"
"\பிசிக்ஸ்  ரொம்ப முக்கியம் நீரு ?"
"எருமை எருமை! எங்க வந்து என்ன பேசுது பாரு"
பிரதீப்பின் தோளில்  லேசாக நாலு அடி போட்டாள் .
"ஐயோ அம்மா! இந்த ஜும் பாடி என்ன போட்டு தள்ள பாக்குது. லேசாக சாய்ந்து சிரித்தான். அவன் தலை அருகில்  இருந்தவள்  மீது லேசாக இருந்தது.  அங்கு யாரும் ஏதும் கண்டு கொள்வதாக இருந்தது.
"சரி வா பவி!  இதுங்க சண்டை போடட்டும் நாம வந்த வேலைய பாக்கலாம்."
"பவி வேணுங்கறத வாங்கிக்கோ. பாஸ்கர் தான்  நமக்கு இன்னிக்கி பண்டிங் "
"பாஸ்கர் சார் இல்ல அண்ணி . சாக்லேட் அண்ணா தான்'
"உஷாரா செலவை எனக்கு இழுத்து விடுது  பாரு லேசாக பவியின்  பின் மண்டையில் தட்டினான் பிரதீப். 
"அண்ணி நீங்களே பார்த்து எனக்கு ஏதாவது வாங்கிட்டு வாங்குங்க"
"நீ இங்கையே உக்காந்துக்கோடியம்மா. எனக்கு இத்தனை வெக்கம் கூச்சம் எல்லாம் செட்டே ஆகுது"
பிரதீப் தான் அவளுக்காக வாங்கி கொடுத்தான்.அவனுக்கும்  அதையே  வாங்கி கொண்டான். 
இரவில் தனிமையில் ஒரு வித பயத்துடனே கணவனிடம் புது போனை நீட்டினாள்.
அதிசயமாக  வாங்கிக் கொண்டான்.
"தேங்க்ஸ் நிரஞ்சனா! என்னோட போன்ல சரியா கேக்க மாட்டேங்குதுன்னு சில பேர் சொன்னாங்க . நானே மாத்தனுன்னு  நினச்சேன்"
கணவன் மனைவிக்கு இடையில் இணக்கமும்  இல்லை. இறுக்கமும் இல்லை. ஒரே வீட்டில் இருக்கும் நண்பர்கள் போலத்  தான் இருந்தனர்.  வீட்டில் எல்லா வேலைகளும் செய்தாள் . தான் பெரிய பணக்காரி என்ற அகந்தை  இருந்ததே இல்லை.
"அண்ணி! நான் இந்த பொம்மையை பார்க்கட்டுமா ?"
"ஏன்மா அவதான் கேக்கறான்னா நீயும். அவளுக்கு கவனம் பத்தாது. 
ஒடைச்சுடுவா "
"அதுனால என்ன அத்தை . வீட்டுல ஒரு குழந்தை இருந்தா ஒடைக்காதா? "
"இல்லம்மா நீயே  எங்கையோ வெளி நாட்டுலேர்ந்து வாங்கி வச்சுருக்க. ரொம்ப விலையா  வேற இருக்கும்போல இருக்கு"
"பயப்படாதீங்க அத்தை . அவ எதையும் உடைக்க மாட்டா "
அண்ணி  தன்  மீது வாய்த்த நம்பிக்கையை காப்பாற்றினாள்  பவி .
தான்  தன்  தங்கைகளை குழந்தைகளாகப் பார்க்கலாம். இவளால் எப்படி அப்படி நினைக்க முடிகிறது?இது செந்திலின்  எண்ணம்.
குழந்தை... எனக்கும் அவருக்கும் ஒரு குழந்தை பொறந்தா? இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா நெருங்க ஆரம்பிச்சுருக்கோம். எப்படி அவருகிட்ட போய்  இந்த விஷயத்தை கேட்க முடியும். ஹாலில் அமர்ந்திருந்தவள் தன்  அறைக்குப் போனாள் . இந்த நொடி அவன் வேணும் உடலும் மனமும் அவளுக்கு ஆர்டர் போட்டன.
ஓடிச்  சென்று அவனைக் கட்டிக் கொண்டாள் . 

அதை அவன் ஏற்பானா....
தொடரும் 



Leave a comment


Comments


Related Post