இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
வஞ்சிக்காதே வசீகரா -30 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK012 Published on 04-07-2024

Total Views: 1032

பாகம்-30


அவனோ, "தள்ளு நிரஞ்சனா. நான் அவசரமா போகணும்"
"கடைக்கா ? இன்னும் சாப்பிடலியே ?"
"கடைக்கு இல்ல.  பஸ் ஸ்டாப்புக்கு. நம்ம மாதவி வர்றா . அதான் அவளை போய்  கூட்டிக்கிட்டு வரணும். இங்க வேற புது ஆளுங்கள உள்ள விட மாட்டாங்களே "
இவளுக்கு அவனின் செயல் ஏமாற்றமாக இருந்தது.
அவளின் செயல்கள் மாமியாரை கவர்ந்த அளவுக்கு ஏனோ கணவனைக்  கவரவில்லை.
அவர்களின் கட்டிலில் மாதிவி உரிமையுடன் அவன் இருக்கும்போது வந்து அமர்ந்து கொண்டாள் . தோளில்  சாய்ந்து கொண்டாள் . இவளை ஒரு பொருட்டாகவே அவள் நினைக்கவில்லை.
"மாதவி  ப்ளீஸ் கொஞ்சம் கதவை தட்டிட்டு வா"
"எங்க மாமாவோட ரூமுக்கு நான் வர்றதுக்கு எதுக்கு நான் கதவை தட்டிட்டு வரணும்?"
"இது என்னோட ரூமும் கூட "
"உங்களுக்கு வேணுன்னா அதான் இத்தனை ரூமுங்க இருக்கே. எங்கையாவது போய்  இருங்க"
இதைக் கேட்டு செந்தில் சிரித்துக் கொண்டிருந்தான்.
"என்ன அவ இப்படி பேசறா  நீங்க  சிரிக்கறீங்க?"
"இல்ல நான் தூக்கி வளர்த்த புள்ள எவ்ளோ பேச்சு பேசுது?"
"இது சரிப்பட்டு வராது. அத்த! அந்த மாதவிய எங்க  ரூம்முக்கு வர்றதுக்கு முன்னாடி கதவை தட்டிட்டு உள்ள வரச் சொல்லுங்க. நீங்க  எல்லாரும் இருக்கீங்களேன்னு தான் பகல்ல நான் கதவை லாக் பண்ணறது இல்ல. ஆனா அதா அவ மிஸ் யூஸ் பண்ணிக்கறா  "
"என்ன அத்தை அவ என்ன சொல்லறா "
"அவ இவன்னு சொன்ன பல்ல ஒடைச்சுடுவேன் ராஸ்கல். யார பார்த்து என்ன பேசற?"
"அவங்க ஒன்னும் என்ன விட ரொம்ப பெரியவங்க எல்லாம் இல்ல"
"இனிமே நீ அங்க போகக் கூடாது"
"அத மாமா சொல்லட்டும். நீ யாரும் சொல்ல வேணாம்"
வேறு ஒரு நாள் ,
செந்தில் அங்க உங்க ட்ரெஸ் அயர்ன் பண்ணி வகுருக்கேன். எடுத்துக்குங்க" சொல்லி விட்டு குளிக்கப் போனாள். அதில் இருந்த டீ ஷர்டை மாதவி போட்டுக் கொண்டிருந்தாள் .
வெளியில் வந்து பார்த்தவளுக்கு அதிர்ச்சி 
"மாதவி ! என்ன இது? அவரோட ட்ரெஸ்ஸ நீ போட்டுக்கிட்டு?"
"அது எப்பவுமே நான் போடறது தானே? "
"இதெல்லாம் இருக்கட்டும். முதல்ல நீ அதை அவிழ்த்து வை.எதுக்கு எங்கிட்ட கேக்காம அவரோட டிரஸ் நீ எடுக்கற? "
 இன்னொரு குளியல் அறையில் வந்தவன் , என்ன மாதவி. என்ன விளையாட்டு இது?? அவிழ்த்து குடு. கடைக்கு லேட்டாகுது'
"அவ போட்டதை இவரு போட்டுப்பாறா?"  
அவளால் அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. 
"செந்தில் உங்க போன் பாடேர்ன் என்ன?"
"எதுக்கு?"
"இல்ல வாங்கினதுலேர்ந்து இதுல என்னென்ன பீச்சர்ஸ் இருக்குன்னு பாக்கவே இல்லை.
"அதெல்லாம் வேணாம் நீரூ . அப்புறமா பார்த்துக்கோ" போனை நாசுக்காக கையில் இருந்து 
பிடுங்கி கொண்டான் .
அதுவே வேறு ஒரு சமயம் மாதவி  அவன் போனில் கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்தாள் .
"என்ன செந்தில் இது? நான் கேட்டப்போ எனக்கு பாக்க கூடஅனுமதிக்கல. இப்ப அவ கேம்ஸ் விளையாடிகிட்டு இருக்கா? அவளுக்கு மட்டும் ஏன் ?"
"பட்டேர்ன் நான் சொல்லல. அவளே போட்டிருப்பா"
"அது உங்களுக்காக நான் வாங்கி கொடுத்தது செந்தில் அத வேற யாரோ யூஸ் பண்ணறது எனக்கு பிடிக்கல"
"ஓ! நீ வாங்கி கொடுத்ததை சொல்லிக் காட்றியா?"
என்ன பேசினாலும் குதர்க்கமாக எடுத்துக் கோபப்படுபவனிடம் எப்படி பேசுவது. அமைதியாக  நின்றுக் கொண்டாள் 
இரவில் வந்தவன். "இந்தா  நீரு ! போனுக்கான காசு. எம் ஆர் பி ரேட்டு இதுல இருக்கு."
எதுக்கு இந்த ரூபா செந்தில்? எங்காகவே? இல்ல போனுக்காகவா ?
அறையின் வாயிலில் நின்றிருந்தவன்,
"இல்ல இது மாதவிக்காக" என்றான். அதன் அர்த்தம் என்ன என்பது தான்  புரியவில்லை.
அவன் எத்தனை நோகடிதலும் அவள் அவனுக்கு  காதலை  அள்ளிக் கொடுத்தாள் . காமத்தையும் அள்ளிக் கொடுக்க தயாராகத் தான் இருக்கிறாள். 
அவனுக்குத் தான் அது புரியவில்லை.
ஒரு நாள்  காலையிலேயே குளித்து விட்டு ரவிக்கை உள்பாவாடையுடன் வெளியில் வந்தாள் . அவளின் அங்க அழகில் படுத்திருந்தவனுக்கு ஜொள்ளு வழிய ஆரம்பித்தது.  
"என்ன நீரு இப்படி வந்து நிக்கற ? எச்சில் கூட்டி விழுங்கி கொண்டான். 
"ஏன்  செந்தில் கஷ்டமா இருக்கா?"
"என் ஒனக்கு வெக்கமா இல்லையா ?"
"என்னிக்கு இருந்தாலும் நான் உங்களுக்குத் தானே செந்தில் இதுல வெக்கப்பட என்ன இருக்கு?" 
பிலீட்ஸை எடுத்து  இடையில் அழகாய் சொருகியவள் முந்தானையை  எடுத்து இடுப்பில் சொருகிக்  கொண்டாள் . இப்போதெல்லாம் புடவை தான் கட்டிக் கொள்கிறாள் 
அவனுக்காக. 
ஒரே நிமிஷம் வெயிட் பானு. அவசரமாக வாய் கொப்பளித்து முகம் கழுவிக் கொண்டவன். 
கீழே அமர்ந்து ப்ளீட்சை சரிப் படுத்தினான் .
"நீங்களே சொருகி விடறீங்களா?" அவன் பதில் கூறுமுன் மாதவி கதவை தட்டினாள் .
"மாமா எழுந்துருங்க. வேலைக்குப் போகணும்."
அவசரமாக அவன் கதவை திறந்தான். 
'யாரோ டீலரைப் பாக்க போகனுன்னு சொன்னீங்களே?"
"ஏ! ஆமா!  போரூர் வரைக்கும் போகணும் இப்ப கிளம்பினாதான் சரியா இருக்கும். வந்தவள் கையேடு அவனுக்கு டீயும் தயாரித்து கொண்டு வந்திருந்தாள் .
நிரஞ்சனாவுக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வநதது.
அவசரமாக குளித்து விட்டுச் சென்றவன் உடைகளை அப்படியே கழற்றி போட்டிருந்தான்.  
நிரஞ்சனா  ஆபிஸ் கால் பேசிக் கொண்டிருக்க, மாதவி வந்து அது அனைத்தையுமெடுத்தாள்  
"ஏய் ! இரு. அவரு துணிய எதுக்கு என் எடுக்கற. எல்லாம் நான் பார்த்துக்கறேன்"
"என்ன நானும்தான் பார்த்துகிட்டே இருக்கேன். என்னமோ ரொம்ப ஓவராத் தான்  பண்ணறீங்க? மாமாவுக்கு காலைல எழுந்து ஒரு டி கூட உங்களால போடா முடியல. எப்ப பார்த்தாலும் ஆபிஸ் ஆபிசுன்னு .ஒரு தடவையாவது அவருக்கு என்ன வேணுன்னு கேட்டு கவனிச்சுருக்கீங்களா? 
மாமா மேல எனக்கு இல்லாத  உரிமை உங்களுக்கு என்ன ? நீங்க பஸ்சுல பக்கத்துல உக்காந்து வர்றவங்க மாதிரி. முன்னாடி ஸ்டாப்பிங்கை ஏறினவங்க. உங்க ஸ்டாப்பிங் வந்ததும் இறங்கி போய்டணும். நான் அப்படி இல்ல. மாமா மனசுல என்னிக்குமே நான்தான் . நீங்க மாட்டும் இல்ல வேற எந்த பொன்னும் அவரு மனசுல வரவே முடியாது. ஏதோ அப்ப அந்த நேரத்துல கிறுக்கு புடிச்சு போய்  உங்க கழுத்துல தாலிய கட்டிட்டாரு. நீங்க என்னதான் வெள்ளை  தோலை கட்டி மயக்கினாலும் அவரை மயக்க முடியாது. ஏதோ அந்த வீடு ரெடியாகர வரைக்கும் தான் இதெல்லாம். அப்புறம் மாமா வீடும் எனக்குத் தன. மாமாவும் எனக்குத் தான்"
அதிர்ச்சியில் உறைந்து போய்  நின்றாள் .
"மாதவி சென்ற பின் பின்னோடே வந்த பவித்ரா அவ ஏதோ உளர்றா  அண்ணி . நீங்க அதெல்லாம் பெரிசா எடுத்துக்காதீங்க. அண்ணா உங்களை ரொம்ப பிடிச்சுப்போய் தான்  கல்யாணம் பண்ணாரு. அவரு உங்களுக்கு எவ்ளோ ஆசையா மோதிரமும் மெட்டியும் வாங்கினாருன்னு எங்களுக்கு தெரியும் . அவளுக்கு உங்க மேல பொறாமை" 
"யாரு என்ன சொன்னாலும்  சரி. இதுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியது உங்க அண்ணா தான்"
வேகமாக அலுவலகத்திற்கு கிளம்பினாள் .
சில நேரங்களில் அவள் வெளி ஊர்களுக்கும் செல்ல வேண்டி இருந்தது.
ஒரு நாள் மாலை  அலுவலகத்தில் இருந்து வரும்போதே இயர் பட்ஸ்   வைத்துக் கொண்டு யாரிடமோ பேசிக் கொண்டே வந்தாள் . அவளை பார்த்த மாதவி வாயை கோணி தோளில்  இடித்துக் கொண்டு சென்றாள் 
மீனாட்சி அறைக் கதவை தட்டிவிட்டு காத்திருந்தார். கதவை திறந்தவள், அவரின் இரு கையும் பிடித்து இழுத்து அருகில் இருந்த சேரில் அமர வைத்து  விட்டு  மீண்டும் தொடர்ந்தாள் . ஏதோ ஆங்கிலத்தில் தான் பேசிக் கொண்டிருந்தாள் . நடு நடுவே ஹிந்தியும் கலந்து வந்தது .சில நிமிடங்கள் பேசி விட்டு  நிறுத்தியவன் ,
"என்ன அத்தை? நீங்களே வந்துருக்கீங்க ?ரொம்ப முக்கியமான விஷயமா?"
"ஆமா நிரஞ்சனா. அடுத்த வாரம் மாமாவோட திதி வருது. இந்த வருஷம் அவன் கூடவே நீயும் இருக்கனும்"
"அவருக்கு ஓகேன்னா எனக்கு ஓகே தான் அத்தை"
"இருந்தாலும் கல்யாணம் பண்ணி இன்னும் வீட்டுல  எந்த நல்லதும் நடக்கல . அதுனால் வீட்டுல சின்னதா ஒரு சுமங்கலி  பூஜை பண்ணிடலாம் "
அதன்படியே வீட்டில் சுமங்கலி பூஜை  ஏற்பாடு செய்தார்கள். பாஸ்கர் அம்மா, பிரதீப்  அம்மா, அதே பிளாட்டில் வசிக்கும் வேறு இருவரும், இன்னொரு வயதான பாட்டியும் வந்திருந்தார்கள். 
அந்த பாட்டியின் பேரன் ஸ்பீச் தெரபி கொடுப்பவனாம் . சத்யாவை பார்த்தவர் பேரனிடம் சிபாரிசு செய்தார். 
அதன்படியே அவளும் அவனிடம் பேசும் பயிற்சிக்கு போக ஆரம்பித்தாள் . பேசும்போது திக்கும் என்ற அவளின் மன பயம் மெல்ல மெல்ல மறைய  ஆரம்பித்தது. அதன் விளைவாக திக்கி திக்கி பேசுவாள் தான். ஆனா ல் முதல் வார்த்தை  ஆரம்பிக்கவே தயங்காமல் இயல்பாக பேச முயற்சி செய்தாள் . அவளின் முயற்சிக்கு  பவித்ராவும் முக்கிய காரணம். சத்யாவுக்கு பிறப்பிலேயே இந்த பிரச்சனை எல்லாம் இல்லை. நன்றாக பேசிக் கொண்டிருந்த குழந்தை அம்மாவை அப்பா அடிப்பது பார்த்துப்பார்த்து பயத்தினால் தான் பேச்சு திக்க ஆரம்பித்தது. முதல் நிலையில் யாராலும் அறிந்து கொள்ள முடியவில்லை.  அறிந்த போது சரியாக அவளை உந்தும் அளவிற்கு எந்த மருத்துவரும்  கிடைக்கவில்லை. 
எல்லாத்துக்கும் ஒரு நல்ல நேரம் வரணும் என்பார்களே. அதுதான் சத்யாவுக்கு வந்தது. அவளை தைரியமாக பேச வைத்தவன், தைரியமாக அவளிடம் ஐ லவ் யூ  வும் சொல்லி விட்டான்.
பெண்ணின் மனம் கவர அழகும் அறிவும் மட்டும் இருந்தால் போதுமா என்ன? உனக்கான தைரியமாக நான் இருப்பேன் என்று காண்பித்தவனை எந்தப் பெண்  தான்  வேண்டாம் என்பாள் ?
அவளும் அவனிடம் ஐ லவ் யூ  சொன்னாள் திக்காமலேயே. பிறகு... வேறென்ன டும்  டும்  டும்  தான் ...............விரைவில் 

  




Leave a comment


Comments


Related Post