இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
கவிதை 34 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK026 Published on 05-07-2024

Total Views: 1697

 அவள் திருமணம் முடித்து பணிக்கு வந்தபோது முதலில் கேட்டது உன் பட்டு புடவை விலை என்ன?... என்று தான்.  ஆனால் அதன் விலை என்ன என்று அவளுக்கு எப்படி தெரியும் அவளின் அத்தான் எடுத்து கொடுத்தது மிகவும் அழகாக இருந்தது என்பதை மட்டுமே அறிந்து இருந்தாள். 

   "தெரியலை" என்றதும் அவளின் உடன் வேலை செய்பவர்கள் 

    "ஏய் நாங்க கண்ணு வச்சுடுவோம் என்றுதானே சொல்லலை" என்றனர். 

    "இல்லை எனக்கு தெரியாது அத்தான் தான் எடுத்து கொடுத்தார்" என்றாள் கயல்விழி. 

     "அது எப்படி அவ்வளவு விலை உயர்ந்த புடவை உன் அத்தான் எடுத்து கொடுத்தார் என்று சொல்லுற உன் மாமா எடுத்தார் என்றாலும் நம்பலாம்.  கேன்டீனில் வேலை செய்யும் உன் அத்தான் எப்படி பத்து லட்சம் கொடுத்து எடுத்து இருப்பார்" என்றதும் கயல்விழிக்கு மயக்கம் வராதது தான் மிச்சம் அந்த அளவுக்கு அதிர்ச்சியில் இருந்தாள். 

    " ஏய் என்ன சொல்லுறீங்க?..."  என்றாள் கயல்விழி 

     அவளின் அதிர்ச்சியை கண்டவர்கள் நிஜமாகவே அவளுக்கு தெரியவில்லை என்று அறிந்து அவளின் திருமணத்தில்  தாங்கள் போனில் எடுத்து இருந்த போட்டோவில் இருந்த புடவையை கூகுளில் போட்டு விலை என்ன என்று கேட்க பத்து லட்சம் என்று வந்தது.  

     கயல்விழிக்கு சிறிது நேரம் ஒன்றும் புரியவில்லை அப்படியே அமர்ந்து இருந்தாள்.  அவளின் கையில் இருந்த மோதிரத்தையும் போட்டோ எடுத்து கூகுளில் விலை கேட்க மூன்று லட்சம் என்றும் எந்த வகை டைமண்ட் என்றும் காட்டியது. 

    "உன் அத்தான் உன்கிட்ட எதையோ மறைக்கிறார்" என்று ஒரு பெண் சொல்ல இவள் மனம் இருக்குமோ என்று தேன்றியது அன்றிலிருந்து தான் அவன் வரவிற்க்காக மிகவும் காத்து இருந்தாள். 

    அன்பழகன் கையில் ஒரு தட்டோடு முன்னே செல்ல பின்னே செல்லும் பணியாள் கையில் இன்னொரு தட்டு இருந்தது. 
மெல்ல அவர்கள் அறியாமல் பின் சென்றாள் கயல்விழி. 

    அங்கு ஒரு லிப்ட் இருக்கவும் அதில் இருவரும் சென்றனர்.  அவர்கள் சென்றதும் அருகில் சென்று பார்க்க லிப்ட் நான்காவது மாடி என்று காட்டியது.  சில நிமிடங்கள் கழித்து லிப்ட் ஏறி மேலே சென்றாள். நான்காம் தளத்தில் நின்றதும் மெல்ல வெளியே வந்து இரண்டு பக்கமும் யாரும் இல்லை என்று உறுதி செய்து மெல்ல நடந்தவள் அங்கு கதவு ஒன்று இருக்க  அதை திறந்தவள் அதிர்ந்து நின்று விட்டாள். 

     கதவு திறந்த சத்தத்தில் அனைவரும் திரும்பி பார்க்க அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் எழுது நின்றுவிட்டனர் ஒருவனைத்தவிர கயல்விழியின் பார்வை வேறு யாரையும் பார்க்காமல் அவனை மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்தது.  மிக கம்பீரமாக இராஜ தோரணையில் கால்மேல் கால்போட்டு  கோர்ட் சூட் அணிந்து  கொண்டு இருந்தவன் புன்னகையுடன் இவளைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தான். 

      இவள் மெல்ல அவனருகில் சொல்ல  எழுந்து நின்றவன் வெல்கம் டு யுவர் கம்பெனி மிஸ்ஸஸ் கார்த்திகேயன்  என்றவன் கை பிடித்து அவளை அவன் இருக்கையில் அமரவைத்தான். 

     இப்போது அனைவரும் அவனைத்தான் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.  ஏய் என்ன அப்படியே நிக்கிறீங்க கம்பெனியோட C. E. O மேடம் வந்து இருக்காங்க விஸ் பண்ணாமல் நின்னுட்டு இருக்கிங்க என்றதும் 

   முதலில் வந்தது ஐஸ்வர்யா தான் ஹாய் அண்ணி வெல்கம் என்ற கயல்விழியின் கையை பிடித்து குலுக்கிவிட்டு சொல்ல அவளை தொடர்ந்து முரளி, அன்பழகன் வாழ்த்துக்கள் சொல்ல கடைசியாக ஹரிஷான்த் வந்து சிஸ்டர் நான் ஹரிஷான்த் என்று அவளின் கை பிடித்து குலுக்கிவிட்டு வெல்கம் என்று கூறினான். 

   அனைத்தையும் நம்ப முடியாத ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தாள் கயல்விழி. 

    கார்த்திகேயன் நண்பர்களுக்கு கண்காட்ட அனைவரும் அறையை விட்டு வெளியே சென்றனர். 

    தான் அணிந்திருந்த கோர்ட்டை கழட்டி விட்டு தன் கைகளை விரித்து விழி என்றதும் இரண்டே எட்டில் வந்தவள் அவனை இறுக்கி அணைத்து கொண்டாள் கயல்விழி.   அவனும் அவளை இறுக காற்று புகாத அளவு அணைத்து இருந்தான். 

    சிறிது நேரம் அமைதியாக அணைத்து இருந்தவனின் சட்டை ஈரமாவதை உணர்ந்தவன் அவளை விலக்கி பார்க்க கண்களில் கண்ணீருடன் அவனை பார்த்து "அத்தான்" என்றாள். 

      அவளின் கண்ணீரை துடைத்தவன் விழியில் தன் இதழையை பதித்துவிட்டு  "சந்தோஷப்படுவாய் என்று நினைத்தேன்டி நீ என்னவென்றால் இப்படி அழற உன் அத்தானை இப்படி பார்க்கனும் என்பது தானே உன் ஆசை அதை உன் அத்தான் நிறைவேற்றி இருக்கிறேன்டி" என்றான் புன்னகையுடன். 

     "ஏன் அத்தான் இவ்வளவு நாள் சொல்லலை இதுக்குத்தான் என்னிடம் இருந்து ஓடி ஒளிந்திங்களா அத்தான்" என்றாள் கயல்விழி. 

    " முதலில் உன் கிட்ட தாண்டி சொல்லனும் வந்தேன் ஆனால் இங்க வந்ததும் மறக்க நினைத்தது எல்லாம் நினைவு வந்தது.  சந்தோஷமாக உறவுகளுடன் வாழவேண்டியவனை யாரும் இல்லாத அனாதை போல வாழவைச்சுட்டாங்களே என்ற ஆதங்கத்தில் எதாவது செய்து அவங்க எவ்வளவு பெரிய தவறு செய்து இருக்காங்க என்று உணர்த்தனும் என்று நினைத்தேன்."

     "எதையும் சிந்திக்காமல் உண்மையை விசாரிக்காமல் நாலுபேர் பேசினாங்க என்று என் மேல் பழிபோட்டு துரத்தினிங்க இல்லையா அதனால் என் வாழ்க்கை எப்படி குலைந்து பேச்சி பாருங்க என்று காட்டத்தான்  ஜெயிலில் இருந்தேன் என்று சொன்னேன்." 

   " அன்பழகனும் முரளியும் வேண்டாம் கூலி வேலை செய்துட்டு இருந்தேன் என்று சொல்லு என்றாங்க.  ஆனால் எனக்கு என் வலியை அவங்க உணரனும் என்று தான் திருட்டு கொலைக்காக ஜெயிலுக்கு போனேன் என்றேன்." 

    " ஆனால் அதை சொல்லியதும் அப்பா நெஞ்சை பிடித்து உட்கார்ந்ததும் அன்புவும் முரளியும் ஏன் அப்படி சொல்ல வேண்டாம் என்று சொன்னாங்க என்று புரிந்தது."

    " அன்பு என்கிட்ட அவ்வளவு சண்டை போட்டான் ஏற்கனவே குற்றவுணர்வில் இருப்பவருக்கு இன்னும் தண்டனை எதுக்கு என்று சொல்லி சண்டை போட்டான். "

   " ஆனால் என் மனதில் இருந்த சாத்தான் அப்படி பேச வைத்துவிட்டது.  உடனே இல்லையப்பா நான் ஜெயிலுக்கு பேகலை என்று சொல்லனும் தான் மனம் துடித்தது அப்படி சொன்னால் வேற சில உண்மைகளையும் சொல்ல வேண்டியது வரும். "

    " அதை சொன்னால் அப்பா அம்மா ரெண்டு பேருக்கும் இன்னும் மனசு கஷ்டப்பட்டு அதனால் அப்பாக்கு எதாவது ஆகிட்டால் என்ற பயம் வந்திடுச்சு.  அதனால் கொஞ்சநாள் போகட்டும் என்று அமைதியாகிட்டேன்."

    " வீட்டுக்கு கூப்பிட்ட போது மறுத்ததற்கு காரணம் அவங்க என்னை பார்க்கும் போது எல்லாம் குற்றயுணர்ச்சி வரும் அதுவேண்டாம் என்று தான் கொஞ்ச நாள் விலகி இருக்க நினைத்து ராமசாமி தாத்தா வீட்டில் இருக்கேன் என்று சொன்னேன்."

    " கொஞ்ச நாள் போனபிறகு வீட்டுக்கு வரனும் அதுவரை என்னை பற்றி யாருக்கும் தெரியக்கூடாது என்று தான் என் பின்னாடி வந்த உன்னை விலக்க நினைத்து உன்னை திட்டினேன் ஆனால் நீ நெருங்கி நெருங்கி வந்த அதான் உன்னை விட்டு நான் ஓடினேன்.  ஆனால் இந்த ராட்சசி என்னை ரொம்பபடுத்தி எடுத்திட்டா எவ்வளவு கண்ட்ரோலா இருந்தாலும் என்னை இந்த விழியாலே  ஆட்டிபடைச்சா ராட்சசி" என்றவன் அவளின் விழிகளில் அழுந்த தன் உதட்டை பதித்தான். 

    அவனிடம் இருந்து விலகி இடுப்பில் கை வைத்து முறைத்தவளை" என்னடி" என்றான் கார்த்திகேயன். 

    " நான் ராட்சசியா?... " என்று கண்கள் உருட்டி கேட்டவளின் அருகில் சென்றவன் தன் கைகளில் அவளின் கன்னங்களை தாங்கி உன் வாய் பேசறதை விட உன் விழி பேசியது தான் அதிகம் அதை நான் பத்து வருஷம் பார்க்க முடியாமல் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா கண்ணம்மா."

    " இந்த விழியில் தெரியும் கள்ளமில்லாத அன்பு தான் நான் இன்னைக்கு உயிரோடு இருக்க காரணம் என்று சொன்னால் நம்புவியாடி?... " என்று கலங்கிய குரலில் கேட்டான் 

    " அத்தான்" என்று அவனை இறுக்கி அணைத்தவள் " ஏன் அத்தான் இப்படி எல்லாம் பேசறீங்க " என்றாள் கண்ணீருடன் 

    " அது தான்டி உண்மை உன்னால் தான் நான் இன்றைக்கு இப்படி உன் முன் நிற்கிறேன் என் ஒவ்வொரு மூச்சுக்காற்றிலும் நீதான் நீ மட்டும் தான் இருக்க உடைந்து போய் எனக்கு யாரும் இல்லை என்று என்னையே அழிச்சுக்க போன அப்ப உன் பேரைச்சொல்லி தான் என்னை காப்பாற்றினாங்க.  உன் பேரை சொல்லி தான் என்னை இந்த அளவுக்கு உயர வச்சாங்க" என்றான். 

   " யாரு அத்தான்?... " என்று கேட்டாள். 

     " அத்தை" என்று அவன் சொன்னதும் அதிர்ந்து அவனிடம் இருந்து விலகி அவன் முகம் பார்த்து " அம்மாவா?... "என்றாள். 

      அவன் ஆம் என்று தலையாட்டவும் " அப்ப இவ்வளவு வருஷம் நீங்க எங்க இருந்திங்க என்று அம்மாவுக்கு தெரியுமா?... " என்று நம்பமுடியாத பார்வையுடன் கேட்டாள் கயல்விழி. 

     "எல்லாமே தெரியும்" என்றான் கார்த்திகேயன். 

     அத்தானை காணவில்லை என்று அழுது அழுது மருத்துவனையில் சிகிச்சை பெற்ற போதும் சரி குடும்பமே கண்ணீர் விட்ட போதும் சரி ஒருமுறை கூட தன் தாய் சொல்லாததை நினைத்துப்பார்க்க அதை அறிந்தவன் போல 

     "அத்தை சொல்லாதற்கு காரணம் நான் தான் நான் வாங்கிய சத்தியம் தான் அவங்களை சொல்லமுடியாமல் செய்தது" என்றவனின் நினைவுகள் பின்னோக்கி சென்றன. 

     தந்தை வீட்டை விட்டு துரத்தியது சாந்தி தன் தாய் இல்லை என்று அறிந்ததும் குழந்தையும் இல்லாமல் இளைஞனும் இல்லாமல் இடைப்பட்ட வயதில் இருந்த அந்த பிள்ளையின் மனம் துடித்தது.  ஊரே சுற்றி வேடிக்கை பார்க்க தனக்கு யாருமே இல்லை என்ற எண்ணமும் ஊரார் பார்க்கும் அந்த பார்வையும் கண்டு கூனிக்குருகி வீதியில் அமர்ந்து இருந்தவனை நான் இருக்கேன் என்று கரம் நீட்டினார் லலிதா.   அந்த கரத்தை கொட்டியாக பிடித்துக்கொண்டு சென்றவன் அவர் சொல்வதை செய்து அவர் ஊட்டிய உணவை உண்டு படுத்தவன் உறங்கிப்போனான். 

    அவன் உறங்கியதை கண்டு விட்டு அங்கேயே படுத்து உறங்கிப்போனார் லலிதா. 

      உறங்கியவனுக்கு சிறிது நேரத்திலேயே தந்தை அடிப்பது தாய் நீ என் பிள்ளை இல்லை என்பது ஊரார் அவனை எள்ளி நகைப்பது அனைவரும் அனாதை  அனாதை என்று சொல்வது போல கலவையான எண்ணங்கள் வர அதில் அவனின் தூக்கம் கலைந்தது. 

      மெல்ல கண்விழித்து பார்த்தவன் இரவு விளக்கு வெளிச்சத்தில் லலிதா கட்டிலுக்கு அருகில் நன்றாக உறங்குவது தெரிந்தது. 

     அத்தை மட்டும் நம்பவில்லை என்றால்  இன்னேரம் ரோட்டில் தானே இருந்து இருப்பேன் என்று நினைத்தவனின் கண்களில் நீர் வழிந்தது.

     நாளை அத்தை எனக்காக பேசினால் யார் நம்புவார்கள் ஊரே நான் தவறானவன் என்று சொல்லும் போது அத்தை  மட்டும் எனக்காக பேசினால் எப்படி ஒத்துக்கொள்வார்கள் அதனால் அத்தைக்கும் கெட்ட பெயர் வரும் அப்புறம் என்னை வீட்டை விட்டு துரத்தியது போல் அத்தையை வீட்டை விட்டு போகச்சொன்னால் அத்தை இளவரசனையும் விழியையும் எப்படி வளர்ப்பார்கள். 

     வேண்டாம் என்னால் அவங்களும் கஷ்டப்படவேண்டாம்.  எனக்கு தான் யாரும் இல்லையே நான் இல்லாமல் போனால் யாருக்கும் பிரச்சனை இல்லை.  இந்த ஊரார் முன் கூனிக்குருகி வாழறதை விட நானே இல்லாமல் போனால் எல்லா பிரச்சினைகளும் சரியாகி விடும் என்று அந்த குழந்தை மனம் எதை எதையே சிந்தித்து மெல்ல கட்டிலில் இருந்த இறங்கினான். 
   


Leave a comment


Comments


Related Post