இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
கவிதை 35 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK026 Published on 05-07-2024

Total Views: 1523

     பழைய கட்டில் என்பதால் சிறிய சத்தம் வர சற்று நின்று லலிதாவை பார்த்தவன் அவரிடம் அசைவும் இல்லை என்றதும் மெல்ல அடிமேல் அடி வைத்து நடந்தவன் சத்தம் இல்லாமல் கதவை திறந்து வெளியே சென்று மீண்டும் கதவை மூடியபோது சத்தம் வந்தது. 

  லலிதாவும் நல்ல உறக்கத்தில் இல்லை அவரும் பல்வேறு நினைவுகளில் தான் இருந்தார்.  சில வருடங்களுக்கு முன் குடும்பத்துடன் வீதியில் நின்றது அவரின் மனதில் ஓடியது.  அந்த சமயத்தில் அவரின் மனம் எவ்வளவு வேதனைபட்டது .  இப்படி நிற்பதை விட விஷம் குடித்து குடும்பத்துடன் இறந்து இருக்கலாம் என்று தேன்றியதே தனக்கே அப்படி இருக்கும் போது குழந்தை பிள்ளைக்கு மனம் எப்படி இருக்கும் என்றவருக்கு சட்டென மனதில் என்னவோ போல் இருந்தது. 

    அந்த நேரத்தில் கதவு மூடும் சிறு ஒலி கேட்டதும் கண் திறந்தவருக்கு காலியான கட்டில் தான் தெரிந்தது.  கண்ணா என்று அதிர்வுடன் எழுந்தவர் வேகமாக கதவை திறந்து வெளியே சென்றார்.  முன் பக்க கதவு தாழ் போட்டு இருக்க பின் பக்கம் ஓடினார் பின் கதவு திறந்து கிடந்தது. 

    வெளியேறியவரின் கண்ணில் பட்ட காட்சி அவரை நிலைகுலைய செய்தது.   வேகமாக ஓடியவர் கிணற்றின் மீது ஏறி நின்று இருந்தவனை கை பிடித்து இழுத்த கிழே விட்டு இருந்தார். 

     தன் அத்தையை கண்டவன் அதிர்ந்தான் என்றாலும் தன் முடிவை மாற்றிக்கொள்ளக்கூடாது என்று மீண்டும் வேகமாக எழுந்து கிணற்று பக்கம் சென்றவனின் கைகளை அழுத்தமாக பிடித்தார் லலிதா. 

     "அத்தை என்னை விடுங்க எனக்கு உயிரோடு இருக்க பிடிக்கவில்லை.  நீங்க எனக்கு சப்போர்ட் பண்ணாலும் யாரும் நம்ப மாட்டாங்க.   ஊரே என்னை தப்பானவன் சொல்லுறதை என்னால் கேட்க முடியாது.  அப்பாவே நம்பாத போது மத்தவங்க எப்படி என்னை நம்புவாங்க."

     "அப்படி ஒரு தப்பான பேரோட நான் வாழறதை விட  நான் இல்லாமல் போறது தான் நல்லது. நான் அனாதை தானே அதனால் யாருக்கும் கஷ்டம் இல்லை" என்று பேசிக்கொண்டு இருந்தான். 

     அவன் மனதில் உள்ளது எல்லாம் வெளியே வரட்டும் என்று அதுவரை அமைதியாக கேட்டு கொண்டு இருந்தவர் தான் அனாதை தனக்கு யாரும் இல்லை என்றவனின் பேச்சு அவரை பேசவைத்தது. 

    " உனக்கு யாரும் இல்லையா?... அப்ப கயல்விழி உனக்கு யாரு?..." என்றதும் அவனின் பேச்சு நின்றது.   "சொல்லு கயல்விழி உனக்கு யாரு?... நாளைக்கு காலையில் எழுந்ததும் உன்னை அப்படி ஒரு கோலத்தில் பார்த்தால் சந்தோஷப்படுவாளா இல்லை என் அத்தான் இல்லாத இடத்தில் நானும் இருக்க மாட்டேன் என்று நீ எடுத்த இந்த முடிவை அவளும் எடுப்பாளா?... என்றதும் அந்த நினைவே அவனை அதிரச்செய்ய 

    "அத்தை" என்றான். 

     தன் கதையை சொல்லிக்கொண்டு இருந்தவனை கட்டிக்கொண்டு இருந்தவளின் உடலும் அதிர்ந்தது அவனை இன்னும் இறுக்கினாள் கயல்விழி. 

     "ஏய் கண்ணம்மா அதான் அத்தான் உன் கூட இருக்கேன் இல்ல" என்ற அவளின் முதுகை வருடியவன் அவளின் உச்சியில் முத்தம் பதித்து மீண்டும் தொடர்ந்தான். 

     "நடக்கப்போவதை தான் சொன்னேன் கண்ணா நீ இல்லாமல் அவள் இருக்க மாட்டா.  நீ சொன்னியே எனக்கு யாரும் இல்லை அனாதை என்று உன் விழி இருக்கும் போது நீ எப்படி அனாதை ஆவாய்."

    "உன் விழிக்காக நீ வாழனும் அவள் ஆசை என்ன நீ ஆசைப்பட்ட மாதிரி படிச்சு பெரிய வேலைக்கு போகனும் என்று சொல்வாள் இல்லையா அதை நீ அவளுக்கு நிறைவேற்றினால் தானே உன் விழி சந்தோஷப்படுவாள்." 

   " அதே போல தப்பு பண்ணாத உன் மேல் பழிபோட்டவங்க முன்னாடி நீ வாழ வேண்டாமா?... அதை விட்டு நீ இப்படி ஒரு காரியம் செய்தால் என்ன சொல்வார்கள் தெரியுமா?... தப்பு பண்ணிட்டு அது வெளியே தெரிந்ததும் அசிங்கப்பட்டுட்டு இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கான் என்று தான் சொல்லும் இந்த ஊர்."

   " அத்தை" என்றான் அதிர்வாக 

    " ஆமாம் கண்ணா உண்மையை விட பொய் தான் நோய் மாதிரி சீக்கிரம் பரவும் பொய்யை திரும்பத்திரும்ப சொல்லும் போது அதை உண்மை என்று நம்புபவர்கள் தான் அதிகம்."  

     "அடுத்தவர்களை வீழ்த்த வேண்டும் என்றால் சொல்லாலே வீழ்த்துபவர்கள் தான் அதிகம் பேர் நம்மை சுற்றியே  இருப்பார்கள்.   அவர்கள் பேச்சை காதில் வாங்கினால் அவர்களின் எண்ணம் எளிதில் வெற்றி அடைந்துவிடும்."

    " அதை காதில் வாங்காமல் நம்ப பாதையில் முன்னேறி போகனும்.  நம்பலை வீழ்த்த நினைச்சவங்கள் முன்னாடி அவங்க அன்னாந்து பார்க்குற உயரத்தில் நின்னு காட்டனும்"  என்று பேசியவரின் வார்த்தைகள் கார்த்திகேயனின் மனதில் பதிந்து மாற்றத்தை உருவாக்க தன் அத்தையை அணைத்தவன்

     " சாரி அத்தை சாரி இனி இப்படி ஒரு தவறான முடிவை நான் எப்பவும் எடுக்கமாட்டேன். இந்த ஊரே அன்னாந்து பார்க்கிற உயரத்துக்கு நான் பேகனும் அத்தை அதுக்கு நான் படிக்கனும்" என்றான் கார்த்திகேயன். 

     "கண்டிப்பாக கார்த்தி கண்ணா நீ நல்லா படிச்சு பெரிய ஆளா வருவாய்" என்றார் லலிதா. 

    " அதுக்கு நான் இந்த ஊரை விட்டு போகனும் அத்தை" என்றான். 

   " கண்ணா" என்று அதிர்ந்தார் லலிதா. 

    " ஆமாம் அத்தை தப்பு பண்ணாத என்னை  ஊரார் முன்னாடி தண்டிச்சவங்களை நான் பார்க்க விரும்பவில்லை அத்தை" என்றான்.

   " கண்ணா அவர் உன் அப்பா" என்றார் லலிதா. 

    " அவருதான் என்னை பிள்ளை இல்லை என்று சொன்னாரே அத்தை." 

    "அவருக்கு கண்டிப்பா ஒரு நாள் உண்மை தெரியும் கண்ணா." 

    " மற்றவங்க சொல்லி தான் தன் பிள்ளை நல்லவன் என்று தெரியுனுமா அத்தை அவருடைய மகன் எப்படிப்பட்டவன் என்று அவருக்கு தெரியாதா அத்தை" என்றவனுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்தார் லலிதா. 

   அவரின் மௌனத்தை கண்டவன் பேச்சை மாற்றினான். " என் ஸ்கூல் சார் ஒருத்தர் இந்த வருடம் சென்னைக்கு வேலை மாற்றிட்டு போனார் அவர் என்னிடம் அவர் முகவரி போன் நம்பர் எல்லாம் கொடுத்திட்டு எந்த ஹெல்ப் என்றாலும் கேளு நான் செய்யறேன் என்றார்." 

     "அவர் கண்டிப்பா என் படிப்புக்கு உதவி செய்வார் அத்தை நான் அவருகிட்ட போரேன்"  என்றான். 

   " கண்ணா உன்கிட்ட இருக்கும் வசதிக்கு நீயே பலபேர் படிப்புக்கு உதவி பண்ணமுடியும் நீ ஏன் இன்னொருவர் கிட்ட உதவி கேட்கனும்" என்றார். 

    " இல்லை அத்தை எனக்கு அவங்க பணம் தேவை இல்லை" என்றான். 

    " அவங்க பணம் இல்லை உன் அம்மா பணம் கண்ணா" என்றார் லலிதா. 

    "அத்தை என்ன சொல்லுறீங்க அம்மா... அம்மா... கலாவதி அம்மா பணமா" என்றான் நெகிழ்ந்த குரலில். 

   ஆமாம் என்று தலையாட்டிவிட்டு வா என்று வீட்டினுள் அழைத்து சென்று சமையல் அறை சென்றவர் அடுப்பில் பாலை வைத்து விட்டு பேச ஆரம்பித்தார் கார்த்திகேயன் சமையல் மேடை மீது அமர்ந்து கேட்க ஆரம்பித்தான். 

   " உன் அம்மாவோட தாத்தா ரொம்ப வசதியானவரு அவருக்கு ஒரே பொண்ணு அவருடைய தம்பிக்கு மூன்று பையன்கள்.  சொத்து இரண்டா பிரிக்கும் போது ஒரே பெண்ணான உன் பாட்டிக்கு மொத்தமாக வந்தது. அவங்க சித்தப்பா பசங்களுக்கு மூன்று பங்கு போட்டதால் குறைவாக இருந்தது அதனால் உன் பாட்டி மேல் அவங்களுக்கு பொறாமை வந்தது. 

    எப்படியாவது உன் பாட்டி சொத்தை பிடுங்கிவிடனும் என்று உறவாடி ஒரு குடிகாரனை நல்லவன் என்று சொல்லி மாப்பிள்ளையா கொண்டு வந்து இருக்காங்க அது எப்படியோ உன் பாட்டியுடைய அப்பாக்கு தெரிந்து அதை வேண்டாம் என்று சொல்லிட்டு அவரே நேரடியாக தேடி   உன் இராமசாமி தாத்தாவை  வீட்டோட மாப்பிள்ளையா கூட்டிட்டு வந்து வச்சுக்கிட்டார். 

   மூன்று வருஷம் நல்லா வாழ்ந்து உன் அம்மா பிறந்த கொஞ்ச நாளில் விஷப்பூச்சி கடிச்சு உன் பாட்டி இறந்ததும் மீண்டும் சித்தப்பா பிள்ளைகள் உன் ராமசாமி தாத்தாவை துரத்திட்டா குழந்தையை பார்த்துக்கொள்ளும் சாக்கில்  சொத்தை பிடுங்க வந்து இருக்காங்க.  அதை தெரிந்த உன் அம்மாவின் தாத்தா சென்னைக்கு போய் பெரிய வக்கீல் ஒருவரை பார்த்து எல்லாம் சொல்லி இருக்கார்.  அவரும் எல்லாம் கேட்டுட்டு மகளுக்கும் அவளின் மூலம் வழி வழியாக வரும் வாரிசுகளுக்கு மட்டுமே அந்த சொத்து என்றும் அப்படி அவர்கள் இல்லாது போனால் செத்து அனைத்தும் அனாதை ஆசிரமத்திற்கு என்று எழுதிவிடும்படி கூறவும் அதே போல எழுதி பதிவு செய்து விட்டு பத்திரத்தை அவரிடமே பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும்படி கொடுத்து விட்டு வந்துவிட்டார்.  இதை தன் மருமகனிடம் கூறாமல் 
விட்டுவிட்டார்." 

      " உன் அம்மாவுக்கு பத்து வயது இருக்கும் போது அவரும் இறந்து விட சித்தப்பா பிள்ளைகள் மிரட்டியதால் மகளை ஏதாவது செய்து விடுவார்களோ என்று ராமசாமி தாத்தா தன் ஊருக்கே வந்து விட்டார்." 

    " உன் அம்மா திருமணம் முடிந்த சமயத்தில் தான் அந்த வக்கீல்  எப்படியோ கண்டு பிடித்து வந்து சொல்லி இருக்கார் ஆனால் அந்த சொத்து வேண்டாம் என் மகளுக்கு என்று ராமசாமி தாத்தா கூறவும் உன் சுப்பிரமணியன் தாத்தாவும் வக்கீலும் பேசி கோர்ட்டில் அவர்கள் மீது கேஸ் போட்டார். 

    "அவர்கள் போலி பத்திரம் வைத்துக்கொண்டு எங்கள் பெரியப்பா எங்களுக்கு கொடுத்து விட்டார் என்று ஊர் முழுவதும் சொல்லி அனுபவித்து வந்தாங்க.  கேஸ்சை இழுத்து அடித்து மூன்று வருடங்கள் கழித்து தான் சொத்து உங்களுக்கு வந்தது.  ஆனால் அதற்குள் உங்க அம்மா இல்லை."

     "அடுத்து சொத்து உன் பேருக்கு மாறியது.  அப்போது உன் அப்பாவுக்கு இரண்டாம் திருமணம் முடிந்து இருந்தது."

   " சாந்தி நல்ல பெண் என்றாலும் உன் பெயரில் மட்டும் அவ்வளவு செத்தா என்ற சிறு எண்ணம் வந்தாலும் அது உன் வாழ்க்கையை பாதிக்கும் என்று உன் இரண்டு தாத்தாக்களும் யாருக்கும் சொல்லவில்லை.  உன் அப்பாக்கு கூட தெரியாது உன் பெயரில் செத்து இருப்பது."

     "அந்த வக்கீல் இடமே சொத்தை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை இரண்டு தாத்தாக்களும் கொடுத்து விட்டனர்.   உனக்கு இருபத்தி ஐந்து வயது வந்த பிறகு தெரிந்தால் போதும் என்று கூறிவிட்டனர்."

    " அந்த இடங்களை சும்மா விட்டால் பிரச்சனை என்று வக்கீல் தெரிந்தவருக்கே குத்தகைக்கு விட்டு இருக்கார்.  அந்த பணம் நிறைய உன் பெயரில் இருக்கு" என்றார் லலிதா. 

   " அத்தை இது எல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்" என்றான் கார்த்திகேயன். 

    " உன் இராமசாமி தாத்தா தான் என்கிட்ட சொல்லி என் பேரனை உன் பிள்ளையா வளர்த்து அவனுக்கு உரிய வயது வந்ததும் சொல்லுமா அவன் தம்பி தங்கைக்கு செய்யவேண்டியதை அவன் செய்வான் அப்ப எந்த பிரச்சினையும் வராது என்று கூறியிருக்கார்" என்று கண்கள் கலங்க சொன்னார் லலிதா.  அவரிடம் கொடுத்த பொறுப்பை சரியாக செய்தால் தானே ராமசாமி அப்பா ஆத்மா நிம்மதி அடையும் என்று நினைத்தார் லலிதா. 




Leave a comment


Comments


Related Post