இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
கவிதை 36 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK026 Published on 05-07-2024

Total Views: 1219

 " மணி ஓன்று என்பதை பார்த்து விட்டு தன் போனை எடுத்து யாருக்கே அழைத்தார்  லலிதா அதை அமைதியாக பார்த்துக்கொண்டு இருந்தான் கார்த்திகேயன்  மறுமுனை எடுத்ததும் 

   " அண்ணா மன்னிச்சுடுங்க என்றார்  எதிர்பக்கத்தில் இருந்து 
   
    "ஏம்மா தங்கச்சி எதாவது பிரச்சனையா?..." என்றார்.

    " குத்தகை பணம் வாங்கி கொடுத்திட்டு ஊருக்கு வந்து விட்டிங்களா அண்ணா?... "என்றார் லலிதா. 

    " பணம் இன்னும் வாங்கவில்லை தங்கச்சி வக்கீல் சார் வர தாமதம் ஆகிடுச்சு இப்ப காஞ்சிபுரத்தில் ஓட்டலில் தங்கி இருக்கோம் நாளைக்கு தான் வாங்கனும்" என்றார். 

    "அப்ப போனை ஸ்பீக்கரில் போடுங்க அண்ணா வக்கீல் சாரும் கேட்கட்டும்" என்றதும் எதிர்புறம் ஸ்பீக்கரில் போட அனைத்தும் கூறினார் லலிதா. 

    அந்த பக்கம் கேட்டவர்கள் சிறிது நேரம் அமைதியாக இருந்தனர் பின் " நாங்க கிளம்பி காரில் வரோம் மேடம் அதுக்குள்ள கார்த்திகேயனுக்கு வேண்டியதை எல்லாம் எடுத்து வையுங்கள்" என்று கூறினார் வக்கீல் குமரன். 

     இவர் தந்தை வக்கீல் பலராம் பார்த்து இருந்த கேஸ்களை அவருக்கு பின் அவர் மகன் குமரன் பொறுப்பு ஏற்று இருந்தார். 

     அதன்படி அவனுக்கு தேவையானவற்றை கார்த்திகேயன் லலிதா இருவரும் எடுத்து வைக்க கூடவே தேடவேண்டாம் என்ற கடிதம் எழுதி வைத்துவிட்டு சிறுவர்கள் இருந்த அறைக்கு சென்று ஒவ்வொருவருக்கும் நெற்றியில் முத்தமிட்டு அவர்கள் உருவங்களை தன் கண்களில் நிரப்பிக்கொண்டு அவர்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு லலிதாவை அணைத்து கண்ணீருடன் காரில் வந்தவர்கள் உடன் சென்றான் கார்த்திகேயன். 

    காரில் ஏறிய பிறகுதான் சண்முகத்தை கண்டதும் அவரை அணைத்துக்கொண்டான்.  கணக்குபிள்ளை சண்முகத்திடம் சொத்துக்கள் பற்றி கூறியிருந்தனர் தாத்தாக்கள்  கணக்கு வழக்குகளை வக்கீலுடன் சேர்ந்து செய்யும் பணியையும் அவரிடம் கொடுத்து இருந்தனர்.  அவரும் இதுவரை யாரிடமும் கூறியது இல்லை. 

    முன்தினம் குத்தகை பணம் வாங்க சொந்தவிசயமாக வெளியூர் சென்று வருவதாக கூறிச்சென்றிருந்தவர் மறுதினம் எதுவும் அறியாதவர் போல் வீடுவந்தார் சண்முகம்.  தன் மகன் முரளியின் கண்ணீரைக்கண்டு கூட அவர் எதுவும் கூறவில்லை. 

    குமரன் வீட்டில் தங்கி இருந்த கார்த்திகேயன் வீட்டை விட்டு வெளியே சொல்லாமல் இருந்தான். அவனை தோற்றியது குமரனும் அவர் மனைவியும் தான் அவர்கள் பிள்ளைகள் உடன் பொழுதை கழித்தபோதும் தன்னை சுற்றி வருபவளையும் தம்பி தங்கை இளவரசன் நண்பர்கள் என்று மனம் ஏங்கியது. பள்ளி படிப்பு ரிசல்ட் வந்ததும் அவனின் சான்றிதழ்கள் சண்முகம் வாங்கிக்கொடுக்க சென்னையை விட மும்பையில் படித்தால் நன்றாக இருக்கும் என்று குமரன் சொல்ல அதற்கு ஒத்துக்கொண்டான் கார்த்திகேயன்.. 

     முரளியும் தன்னுடன் படிக்க வைக்க வேண்டும் என்று சண்முகத்திடம் சொன்னபோது அவர் தயங்கினார்.  முரளியை அழைத்து வரும்படி கூற அவரும் அழைத்து வந்தார். 

     தன் நண்பனை கண்ட முரளி ஓடி வந்து அணைத்தவன் பின் நண்பனை நன்றாக அடித்து தன் கோபத்தை கொட்ட அனைத்தும் ஏற்றவன் தன் நண்பனை மும்பை படிக்க அழைத்து சென்றான். 

     சென்னையில் கேட்டரிங் படிக்க வந்த அன்பழகனையும் முரளி அழைத்து வந்து கார்த்திகேயனை காட்ட அவனும் கார்த்திகேயனை திட்டி அடித்து இருந்தான். 

    மும்பை சென்று கல்லூரியில் சேர்ந்த போது இவன் பெயரை அழைக்க கஷ்டப்பட்டவர்கள் கே கே என்று அழைத்தனர்.  அங்கு கிடைத்த ஹரிஷான்த் நட்பு அதன் மூலம் கிடைத்த அவர்கள் குடும்பம் அன்பான தங்கை ஐஸ்வர்யா அவளின் அன்புதான் உங்களை பிரிந்த எனக்கு மனதுக்கு  இதம் கொடுத்தது.  படிக்கும்போதே வேலை செய்தது அதற்கு உதவியாக ஹரிஷான்த் தந்தை இருந்தது.  படிப்பை முடித்து அங்கேயே பணிபுரிந்தது.  

   தான் கண்டுபிடித்த புதிய செயலிகளை நிறைய கம்பெனிகள் அதிக விலைக்கு கேட்ட போதும் ஹரிஷான்த் கம்பெனிக்கே கொடுத்தது அதனால் அந்த கம்பெனியில் இவனுக்கு கொடுத்த பங்கு பணம் இப்போது கம்பெனி இருக்கும் இடம் அம்மாவுடைய தாத்தா சொத்து தான் என்று அனைத்தும் கூறிமுடித்தான். 

     அதுவரை அவனின் அறைக்குள் இருந்த இன்னொரு ஓய்வு அறையில் இருந்த சோபாவில் அவன் மீது சாய்ந்து கேட்டுக்கொண்டு இருந்தவள் அவனின் முகம் முழுவதும் தன் முத்தங்களால் ஈரமாக்கியவளின் இதழை அவன் இதழுக்குள் பொறுத்திக்கொண்டான்.  நீண்ட நேரம் முத்தசத்தம் மட்டுமே வந்தது. 

    அவனின் போன் ஒலியில் தான் விலகினர் இருவரும் வேலை நேரம் முடியும் வரை அவனுடனே இருந்தாள். 

    "ஏய் இங்கேயே இருந்தால் உன் வேலையை யார் செய்வாங்க" என்றான் புன்னகையுடன் 

     "ஹலோ சார் நீங்கள் தான் கொஞ்ச நேரத்திற்கு முன் C. E . O மேடம் என்று சொன்னீங்க அப்புறம் நான் எதுக்கு வேலை செய்யனும்" என்றவள் அமர்ந்து இருந்தது என்னவோ  வேலை செய்து கொண்டு இருந்தவனின் மடியில் தான். 

     அவன் புதிதாக கண்டுபிடித்த செயலியை உலகின் சிறந்த கம்பெனி ஒன்று விலை பேச அவன் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை அதனால் அவர்கள் இவனின் கம்பெனியுடன் இணைந்து பணியாற்ற கேட்டு இருக்க அந்த பேச்சு வார்த்தைகள் சென்று கொண்டு இருக்கிறது.   இரண்டு முறை பேச்சு வார்த்தை முடித்து இருக்க இறுதி பேச்சுவார்த்தைக்கு நாளை கார்த்திகேயனும் ஹரிஷான்த் அவனின் தந்தை என்று மூவரும் ஆஸ்திரேலியா  செல்ல வேண்டும் அதற்காகத்தான் வேலைகளை செய்து கொண்டு இருந்தான். 

     வெற்றிகரமாக பேச்சுவார்த்தை முடிந்தால் இவர்கள் கம்பெனி உலகதரத்தை பெற்றுவிடும். 

     வேலையை முடித்தவன் மீண்டும் அவளை தூக்கி கொண்டு சென்று அறையில் இருந்த கட்டிலில் கிடத்தி அவள் மீது படர்ந்தான்.  

    "ஐயோ ஆபிஸ் அத்தான் யாராவது வருவாங்க" என்றதற்கு 
  
    "என் அனுமதி இல்லாமல் யாரும் வரமாட்டாங்கடி உன் அத்தான் நாளைக்கு கிளம்புனா வர ஒரு வாரம் ஆகும் அதுவரை தாங்கனும் இல்லையா" என்றவன் அதற்கு பிறகு அவளை பேசவிடவில்லை. 

     "சிறிது நேரத்தில் அவனே விலகியவன் இப்ப ஆரம்பித்தால் அப்புறம் நிறுத்த முடியாது அதனால் ஊருக்கு போயிட்டு வந்து மொத்தமாக எடுத்துக்கிறேன்" என்று கூறி வெளியே அழைத்து வந்து விட்டான். 

     அவளின் போனை எடுத்து தன் நம்பரை பதித்து கொடுக்க அதற்கு அவனை முறைத்தாள். 

    " ஏய் முறைக்காதடி உனக்கு நம்பர் கொடுத்தா என்னை வேலை செய்ய விடமாட்டாய் என்று தான் கொடுக்கவில்லை" என்றான். 

    " இப்ப மட்டும் எதற்கு கொடுக்கிறீங்க" என்று கோபமாக தன் போனில் இருந்த நம்பரை டெலிட் பண்ணப்போக 

    அவளை இழுத்து அணைத்தவன்  "சாரி சாரி" என்று கூறிக் கொண்டே முத்தங்களை வழங்கியதும் அவளின் கோபம் குறைந்தது.   மறுநாளும் தன் பணியிடத்திற்கு போகாமல் அவன் கிளம்பும் வரை அவனுடன் இருந்து விட்டு அவன் கிளம்பியதும் தன் பணியிடத்திற்கு சென்றவளை டீம் லீடர் எதுவும் சொல்லவில்லை.  அவருக்கு தான் முதலில் இருந்தே அவள் யார் என்று தெரியுமே அவரும் மும்பையில் இருந்து வந்தவர் தான். 

     சிறிது இடைவெளி கிடைத்தாலும் கயல்விழிக்கு போன் செய்து பேசிக்கொண்டு இருந்தான் இந்த ஒரு வாரமாக 

    சிந்தனையில் இருந்தவளை கலைத்தாள் அமிர்தவள்ளி. 

     "ஏய் போதும் எவ்வளவு நேரம் தான் பிளாஸ் பேக்கில் இருப்ப நிகழ்காலத்துக்கு வா" என்றாள். 

    "உனக்கு எப்படி தெரியும்* என்றாள் கயல்விழி. 

   " அதான் வானத்தையே பார்த்து சிரிச்சுட்டு இருக்க இல்ல அதை பார்த்து தான் ஏற்கனவே அண்ணன் லாங் டிராவல் பண்ணிட்டு வருகிறார் உன்னை இப்படி பார்த்தா திரும்ப ஆஸ்திரேலியாவுக்கே போயிடுவார்" என்றாள் அமிர்தவள்ளி. 

    " வள்ளி உனக்கு எப்படி தெரியும்?..." என்றாள் கயல்விழி வியப்பாக 

   " திரும்ப ஒரு பிளாஸ் பேக் வேண்டாம் அதனால் சுருக்கமாக சொல்லிடுறேன்.  உன்னை அடிச்சாரு இல்ல அண்ணன் அன்னைக்கு மறுநாள் இளவரசன் அத்தானை கூப்பிட்டு எல்லாம் சொல்லிட்டார்.  நீ ஒரு வாரமா கிறுக்குமாறி இருந்தியா" என்றதும் கயல்விழி முறைத்தாள்.  "ஏய் நிஜமாகவே அப்படி தான் இருந்த அதான் அத்தான் கிட்ட புலம்பினேனா அத்தான் எல்லாம் நேற்று காலையில் தான் சொன்னார்" என்று கூறி வேகமாக அங்கிருந்து ஓடினாள் அமிர்தவள்ளி. 

  
      அனைவரும் அதிகாலை ஐந்து மணி அளவில் காவல் நிலையம் வந்து இருந்தனர்.  சிறிது நேரத்திலேயே இரண்டு கார்கள் வந்து நிற்க ஆவலாக அளைவரும் காரை பார்த்து இருக்க மகேஸ்வரியின் குடும்பத்தினர் மட்டும் காரின் அருகில் வர அவர்களை காரில் இருந்து இறங்கிய இரு பாதுகாவலர்கள் தடுத்தனர். 

    காரின் முன்புறம் இறங்கிய கார்த்திகேயனை கண்டு அனைவரும் வியந்தனர்.  கயல்விழியை கேட்கவே வேண்டாம் அவளின் விழிகள் அவனையே ரசனையாக பார்த்துக்கொண்டு இருந்தன.

    அவனை பற்றி தெரிந்தவர்களுக்கு ஒரு வகை ஆச்சரியம் என்றால் தாய் தந்தை கோதண்டம் அவர்கள் உறவினர் அனைவருக்கும் அவனின் தோற்றம் ஆச்சரியமே.. 

    தங்கள் மகனா இது  விலையுயர்ந்த காரில் ராஜ தோரணையில் இறங்கியதும் இல்லாமல் அவன் கண்ணசைவில் பாதுகாவலர்கள் விலகி சொல்வதும் நம்ப முடியாமல் பார்த்து கொண்டு இருந்தனர் வீரராகவன், சாந்தி. 

    மகேஸ்வரியின் குடும்பத்தினரை காரின் அருகில் வாராமல் தடுத்த பாதுகாவலர்களை தன் விழியசைவில் விலகச்செய்தவன் பின் கதவை திறந்தவன்  மகேஸ்வரியின் தந்தையிடம்  "தூங்கிட்டு இருக்கா அங்கிள்" என்றான். 

     இவ்வளவு ஆளுமையுடன் இருப்பவன் தன்னை அங்கிள் என்று அழைத்ததும் திகைத்தவர் காரில் தன் மகளை கண்டதும் "மகேசு" என்று தழுதழுத்த குரலில் அழைத்தார். 

   அந்த குரலில் துயில் கலைந்த மகேஸ்வரி தாவி வந்து தந்தையை அணைத்துக்கொண்டாள்.  அருகில் நின்ற தாய் தங்கை அனைவரும் ஒருவரையருவர் அனைத்து கண்ணீர் விட்டனர்.   அந்த காட்சி அனைவரின் கண்களையும் கலங்கச்செய்தது. 

    கார்த்திகேயன் பார்வை தன் தம்பியின் மீது படிய சரவணன் கண்ணீல் தவிப்புடன் அவள் தன்னிடம் வந்து பேசுவாளா?... தன்னை மன்னிப்பாளா?... தவிப்பு, எதிர்பார்ப்பு, பயம் என்று பலவித முகபாவத்துடன் அவளைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தான். 

    கார்த்திகேயன் "மகேஸ்வரி" என்ற குரலில்  அதுவரை குடும்பத்தினருடன் கண்ணீரும் சிரிப்புமாக இருந்தவள் வேகமாக கண்களை துடைத்துக்கொண்டு  அவன் அருகில் வந்தாள். 

     உள்ள போய் பார்மாலிட்டி முடித்து விட்டு வீட்டுக்கு போகலாம் என்றதும் அவனுடன் நடந்தவள் கண்ணில் சரவணன் பட ஓடிச்சென்று அவனை அணைத்துக்கொண்டு கண்ணீருடன் "சாரி சாரி" என்றாள். 

     மகேஸ்வரி தன்னை அணைத்ததும் அதுவரை இருந்த தவிப்பு அனைத்து விலகி நிம்மதி அடைந்தவன் "நான் தான் மகிமா சாரி சொல்லனும்" என்றவன் கார்த்திகேயனின் கனைப்பு  குரலில் சட்டென விலகினர்.  அங்கிருந்த அனைவரும் அவர்கள் இருவரையும் தான் பார்த்துக்கொண்டு இருந்தனர். 

    "உள்ளே போகலாம்" என்றதும் மகேஸ்வரி சரவணன் இருவரும் காவல் நிலையத்தினுள் செல்ல பின்னால் மகேஸ்வரியின் தந்தை முரளி இளவரசன் உள்ளே சென்றனர். கார்த்திகேயனை கண்டதும் எழுந்து   "வாங்க சார் கமிஷனர் பேசினார் சார் எல்லாம் ரெடியாக இருக்கு" சில பேப்பர்கள் அவனிடம் கொடுக்க அதை படித்து பார்த்து விட்டு மகேஸ்வரியை கையெழுத்து போடச்சொன்னான் அவளும் போட்டுக் கொடுத்தும்

      "சார் அவன் வந்ததும் கவனிக்கிற விதத்தில் கவனித்தால் இனி உங்க வீட்டு பெண் பின்னாடி வரமாட்டான்" என்றார் காவல் அதிகாரி. 

   " அப்ப கிளம்புறோம்" என்று எழுந்து வெளியேறினான் கார்த்திகேயன். மகேஸ்வரி தந்தையிடமும் கையெழுத்து வாங்கிக்கொண்டார் காவல் அதிகாரி.



Leave a comment


Comments


Related Post