Total Views: 4714
அனைவரும் வெளியே வந்ததும் மகேஸ்வரியின் தந்தை கார்த்திகேயனை கையெடுத்து கும்பிட்டு நன்றி கூறினார்.
அவரின் கையை கீழிறக்கியவன் " அங்கிள் என்ன இது மகேஸ்வரி எங்க வீட்டுக்கு வரப்போறப்பெண் அவளும் எனக்கு தங்கை போலத்தான்" என்றான்.
"இப்ப நீங்க வீட்டுக்கு கிளம்புங்க அங்கிள் ஒரு நாளைக்கு நாங்க வீட்டுக்கு வரோம்" என்றவன் "சரவணா" என்று அழைக்க
"அண்ணா" என்று அருகில் வந்தான் எல்லாரையும் வீட்டில் விட்டுட்டு காலை டிபன் எல்லாம் வாங்கி கொடுத்துட்டு வா" என்றதும்
"சரி அண்ணா" என்று கூறி அவர்களை அழைத்துச்சென்றான் சரவணன்.
பின் இளவரசனை பார்த்து எல்லாரையும் கூட்டிட்டு கிளம்பு முரளி காரை டிரைவர் எடுத்திட்டு வருவார் என்று கூறிவிட்டு தன் மனைவியை பார்க்க அவள் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு நின்றாள்.
அமிர்தவள்ளியை அழைத்து எதுவோ கூறியவன் காரில் முரளி அன்பழகனை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டான்.
காரில் செல்லும் போது "ஏய் அத்தான் என்ன சொன்னார்" என்றாள் கயல்விழி.
"அது உனக்கு எதுக்கு அண்ணனும் தங்கச்சியும் பேசறது உனக்கு எதுக்கு சொல்லனும்" என்று கூறிய அமிர்தவள்ளியை முறைத்து விட்டு தன் போனில் கார்த்திகேயனுக்கு அழைக்க அது சுவிட்ச் ஆப் என்று வந்தது.
வீட்டுக்கு சென்றதும் காரில் இருந்து இறங்கி நேராக அறைக்கு சென்றவளை தடுத்த லலிதா" போய் தலைக்கு குளிச்சிட்டு வா" என்றதும் மறுக்காமல் குளியல் அறை சென்றாள். அவள் சென்றதும் அமிர்தவள்ளி லலிதா, இளவரசனிடம் கார்த்திகேயன் சொன்னதை கூறியதும் சந்தோஷம் அடைந்து அதற்காக பணிகளை ஆளுக்கொருவராக செய்தனர்.
கயல்விழியிடம் அழகான பட்டு புடவை கொடுத்து கட்டச்சொன்னார் லலிதா. அதை கண்டதும் தன் அத்தான் வேலை தான் என்று புரிந்து போனது கயல்விழிக்கு.
லலிதா வேகமாக உணவு சமைக்க அமிர்தவள்ளியும் இளவரசனும் வீரராகவன் சாந்தியை தேடிச்சென்றனர். அங்கு சென்று வீட்டில் பணிபுரிபவர்களை தன் அத்தைக்கு சென்று உதவி செய்யுங்கள் என்று அனுப்பி விட்டு தாய் தந்தையிடம் வந்தனர்.
வீரராகவன் சாந்தி இருவரும் அமைதியாக அமர்ந்து இருந்தனர். அனைவரிடமும் பேசிய மகன் தங்களிடம் பேசவில்லை என்றும் அவனின் தோற்றம் அவனுடன் வந்த பாதுகாவலர்கள் அவனின் ஆளுமை பற்றிய சிந்தனையில் இருந்தவர்கள் அருகில் அமிர்தவள்ளி அமர்ந்தாள்.
இளவரசன் அங்கு இருந்த டிவியை ஆன் செய்து செய்திகள் சேனலை வைத்தான். அமைதியாக பார்த்துக்கொண்டு இருந்தனர் வீரராகவன் சாந்தி சிறிது நேரத்தில் அதில் வந்த மகனின் புகைப்படத்தை கண்டவர்கள் வியப்புடன் பார்க்க அதில் சொன்ன செய்தியை கேட்டவர்களுக்கு பேச்சே வரவில்லை..
தங்கள் மகனா இத்தனை உயரத்தில் எப்படி என்று புரியாமல் இளவரசனை பார்த்து "என்ன அரசு இது எனக்கு ஒன்னுமே புரியல நம்ப கார்த்திகேயனா" என்று கேட்டார்..
"ஆமாம் மாமா அத்தானின் புதிய கண்டுபிடிப்பை உலக புகழ் பெற்ற நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நிறுவனம் பணத்தை கொடுத்து வாங்க நினைச்சாங்க ஆனால் அத்தான் விற்க மாட்டேன் என்று சொன்னதால் அவங்க நம்ப அத்தான் கம்பெனி கூட கூட்டு வச்சிகிறதா பேசி ஓத்துக்கிட்டாங்க."
"இதனால் இரண்டு பேருக்கும் லாபம் அத்தானின் கண்டுபிடிப்பை இந்தியாவில் மட்டும் தான் இதற்கு முன் பயன்படுத்த முடியும். வேறு நாடுகளில் பயன்படுத்த அந்தந்த நாட்டின் பர்மிட் வாங்கிதான் பயன்பாட்டுக்கு கொண்டு வரமுடியும். "
" இப்ப இந்த கம்பெனியுடம் இணைந்ததால் ஒவ்வொரு நாட்டிலும் அனுமதி வாங்க வேண்டியது இல்லை ஏன் என்றால் அந்த கம்பெனி உலகத்தரம் வாய்ந்தது எல்லா நாட்டிலும் அதன் கிளைகள் இருக்கு அதனால் ஈசியா எல்லா நாட்டிலும் அத்தானுடைய கண்டுபிடிப்பு பயன்படுத்துவாங்க அதனால் இரண்டு பேருக்கும் லாபம்."
"அந்த வேலையை முடித்து விட்டு தான் அத்தான் இரவு ஆஸ்திரேலியாவில் இருந்து வந்தாங்க அதை தான் டீவியில் அத்தானை பற்றி சொல்லிட்டு இருக்காங்க" என்றான் இளவரசன்.
" அப்படி என்ன வேலை என் மகன் செய்யறான்" என்று கேட்டார் சாந்தி.
" கம்யூட்டர் வேலை அத்தை அதில் புதுசு புதுசா கண்டுபிடிச்சு இருக்கார் இப்பக்கூட பார்வை இல்லாதவர்கள் கூட அத்தானின் செயலியை வைத்து கம்யூட்டரில் வேலை செய்யலாம். யாரின் உதவியும் இல்லாமல் வேலை செய்யலாம் எங்காவது போகனும் என்றால் அந்த இடத்திற்கு அந்த செயலியை பயன்படுத்தினால் அது வழி காட்டும் என்றவன்.
"இன்னைக்கு மகேஸ்வரியை ஈசியாக கண்டுபிடிக்க காரணம் அத்தான் கண்டு பிடிப்பு தான். ஜீபிஎஸ் போல அத்தான் கண்டுபிடிச்சது கம்பெனி ஐடி கார்டில் எல்லாருக்கும் வச்சு இருக்காங்க அதை வச்சுயிருந்தா அவங்க எங்க இருக்காங்க என்று துல்லியமாக கண்டுபிடிச்சுடலாம்."
"மகேஸ்வரி ஐடி கார்டை பேகில் வைக்காமல் உடை பாக்கெட்டில் வச்சு இருந்து இருக்கு அதனால் அத்தான் எங்க இருக்கா என்று கண்டுபிடிக்க முடிந்தது உடனே அங்க போலீஸ்சை கூட்டிட்டு போய் இருக்கார்."
அதை கேட்ட பெற்றவர்களுக்கு திகைப்பு சந்தோஷம் என்ற கலவையான உணர்வில் இருந்தனர்.
" அவன் எப்படி படிச்சு இந்த அளவுக்கு உயர்ந்தான். யார் அவனுக்கு உதவியது" என்று கேள்வியை இளவரசனிடம் கேட்டார் வீரராகவன்.
அந்த நேரத்தில் சண்முகம் வரவும் "இவருக்கு எல்லாம் தெரியும் மாமா என்றவன் அத்தான் பற்றி எல்லாம் சொல்லுங்க" என்றான்.
அவரும் ஒன்றையும் விடாமல் அனைத்து சொல்லினார். வீரராகவன் எழுந்து வந்து அணைத்து கொண்டு உனக்கு எப்படி நன்றியை சொல்லுறது என்று தெரியவில்லை என்றவர் கையெடுத்து கும்பிட்டனர் வீரராகவன், சாந்தி.
" ஐயா என்ன இது" என்று கையை இறக்கி விட்டார் சண்முகம்.
பின் வீரராகவன் சாந்தி சென்று லலிதாவிடம் நன்றி சொல்ல அவரும் "நாங்க நடுத்தெருவில் நின்ற போது நீங்க தான் என் தங்கச்சி குடும்பம் என்று வந்து உதவினீங்க. அப்ப நீங்க என் அண்ணன் தானே அண்ணன் குடும்பம் கஷ்டப்பட்டு இருக்கும் போது நான் எப்படி சும்மா இருப்பேன் என்று கேட்டார் லலிதா.
என் அப்பாவுக்கும் மாமாவுக்கு என்னை பத்தி தெரிந்து இருக்கு அதான் இப்படி ஒரு காரியத்தை செய்து இருக்காங்க. அப்படி செய்யாமல் இருந்து இருந்தா இன்னைக்கு என் மகன் என்னாகியிருப்பான் என்றவரை சமாதானம் செய்தார் லலிதா.
பின் "மகன் வரும் போது இப்படி தான் அழுது வடிந்த முகத்தோடு நிற்பிங்களா?..." என்று லலிதா சொல்லவும்.
"என்னம்மா சொல்லுற கார்த்திகேயன் வரானா?.." என்று கேட்டார் வீரராகவன்.
"ஆமாம் அண்ணா ஆபிஸ் வேலை முடித்து விட்டு மதிய சாப்பாட்டுக்கு வரேன் என்று சொல்லியிருக்கான் அதனால் போய் குளிச்சிட்டு ரெடியாகுங்க மகனை வரவேற்க" என்று அவர்களை அனுப்பி வைத்தார் லலிதா.
அடுத்த ஒரு மணி நேரத்தில் கார்த்திகேயன் கார் வந்து நின்றது அதில் இருந்து கம்பீரமாக வேட்டி சட்டையில் வந்து இறங்கினான். வீரராகவன் சாந்தி வேகமாக மகனை அணைத்து கொண்டு கண்ணீர் விட்டனர்.
" அப்பா அம்மா என்ன இது?..." என்றான் கார்த்திகேயன்.
தங்களை மகன் மன்னித்து அப்பா அம்மா என்று அழைத்து விட்டான் என்று பூரித்து போயினர்.
"எந்த இடத்தில் உன்னை அவமானம் படவச்சமோ அந்த இடத்திலே நின்னு மன்னிப்பு கேட்கிறோம் கார்த்திகேயா" என்று கைகூப்பி நின்றனர் வீரராகவன், சாந்தி, கோதண்டம்.
"அம்மா அப்பா மாமா என்ன இது" என்று கூறி அவர்களை அணைத்துக்கொண்டான் கார்த்திகேயன்.
பின் கயல்விழியை அவன் அருகில் நிற்க வைத்து ஐந்து பெண்கள் வந்து ஆலம் சுற்றி வரவேற்றனர்.
மிகுந்த சந்தோஷத்துடன் அந்த வீட்டில் அடியெடுத்து வைத்து உள்ளே சென்றான் கார்த்திகேயன்.
எந்த இடத்தில் அவமானப்பட்டானோ அதே இடத்தில் ஊராரின் முன் ஆலம் சுற்றி அழைக்கும் போது அதுவரை மனதில் இருந்த அழுத்தம் விலகியது. அனைவருடனும் சிரித்து பேசி மதிய உணவை உண்டு விட்டு தன் மனைவியுடன் தன் அறைக்கு சென்றான்.
பத்து ஆண்டுகள் கழித்து அவன் அறைக்கு சென்றவன் அவனின் அறை சுத்தமாகவும் அவன் எப்படி வைத்து இருந்தானோ அதே மாதிரி ஆனால் புதுமையாக இருந்தது அறை. கைவளைவில் இருந்தவளிடன் "நீயடி செய்த?..." என்று சந்தேகமாக கேட்க
"க்கும்... அதான் நான் செய்யலை என்று சந்தேகம் இருக்கு இல்ல" என்றாள்.
"அப்ப வள்ளி தான் செய்தது" என்றவன் அவளை தூக்கி சென்று கட்டிலில் போட்டு அவள் மீது படர்ந்தான்.
"அத்தான் என்ன இது பட்டப்பகலில்" என்றாள் சினுங்களாக
"நான் என்னடி பண்ணேன் சும்மா தானே இருக்கிறேன்" என்றவனின் கை அவளின் இடையை ஆராய்ந்து கொண்டு இருந்தது.
" உங்களை" என்று எப்போதும் போல் தலையின் பின் பகுதி முடியை பிடிக்க அது அவளின் கையில் பிடிக்க முடியவில்லை.
" ஹாஹா ஹாஹாஹா" என்று வாய்விட்டு சிரித்தவன் " என்ன பிடிக்க முடியவில்லையா" என்றவன் " இதுக்காக தான் இரண்டு வருடம் வளர்த்ததை எடுத்தேன்" என்று புன்னகை செய்தான்.
ஆம் நீண்ட முடியை ஒட்ட வெட்டி தாடி மீசையையும் எடுத்து இருந்தான். பார்ப்பதற்கு ஹாலிவுட் நடிகர் போல் இருந்தான் அதனால் தான் அவன் வந்த போது அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
ஆடி மாதம் என்பதால் இரவு தனியாக படுக்க வைப்பார்கள் என்று நினைத்தவர்களுக்கு யாரும் அதை பற்றி பேசவில்லை. ஒரே அறையில் படுத்த போதும் கூடலில்லா காதல் புரிந்தனர்.
அடுத்த ஒரு வாரத்தில் குடும்பத்துடன் காவடி எடுத்து கொண்டு சென்று பழனி முருகனுக்கு நன்றி சொல்லி வந்தார் வீரராகவன்.
அடுத்த பதினைந்து நாட்களுக்கு பிறகு கார்த்திகேயன் கயல்விழியை அழைத்துக்கொண்டு ஆஸ்திரேலியா சென்றான்.
கயல்விழி அமிர்தவள்ளிக்கு அவர்கள் பணியில் சேரும்போது அவர்கள் அறியாமல் பாஸ்போர்ட் பேப்பரிலும் கையெழுத்து வாங்கி பாஸ்போர்ட் வாங்கி இருந்தான்.
ஆஸ்திரேலியா சென்று பணிகளை முடித்து அங்கேயே தேனிலவு இரண்டு மாதங்களுக்கு கொண்டாடினர். இளவரசனனுக்கு பாஸ்போர்ட் வாங்கிய பிறகு அமிர்தவள்ளி இளவரசன் இருவரும் ஆஸ்திரேலியா வந்து இவர்களுடன் இணைந்து கொண்டனர்.
இந்திய திரும்பி அடுத்தடுத்த மாதங்களில் கயல்விழி அமிர்தவள்ளி கர்ப்பமாக வீடே சந்தோஷம் அடைந்தது.
கயல்விழிக்கு ஐந்து மாதங்களும் அமிர்தவள்ளிக்கு நான்கு மாதமும் ஆன போது சரவணனுக்கும் மகேஸ்வரிக்கும் விமர்சியாக திருமணம் நடந்தினான் கார்த்திகேயன்.
திருமண கலாட்டாக்கள் அனைத்தும் முடிந்து அன்று இரவு மனைவியின் காலை மெதுவாக பிடித்து விட்டுக்கொண்டு இருந்தான் கார்த்திகேயன்.
என்ன தான் உலகமே வியக்கும் வகையில் உயர்ந்து கோடி கோடியாக சம்பாதித்த போதும் அவனின் உயிர் அவள் தானே இரண்டு நாளாக அதிக்கப்படியான வேலை செய்தவளுக்கு உடல் வலி போக வெந்நீரில் குளிக்க வைத்து அவளின் காலை மென்மையாக பிடித்து விட்டுக்கொண்டு இருந்தவன் மெல்லிய ஓசையில் ஒலித்துக் கொண்டு இருந்த பாரதியார் பாடலில் லயித்துக்கொண்டு தன்னவளைத்தான் விழியால் பருகிக்கொண்டு இருந்தான்.
"சுட்டும்விழிச் சுடர் தான்
கண்ணம்மா!"
"சூரிய சந்திரரோ?"
" வட்டக் கரியவிழி கண்ணம்மா!"
"வானக் கருமைகொல்லோ?"
" பட்டு கருநீலப் - புடவை
பதித்த நல்வயிரம்"
"நட்ட நடுநிசியில் - தெரியும்
நஷத்தி ரங்களடீ !"
" சோலைமல ரொளியோ
உனது
சுந்தரப்புன்னகைதான்? "
" நீலக் கடலலையே - உனது
நெஞ்சி வலைகளடீ!"
"சோலக் குயிலோசை -
உனது
குரலி னிமையடி!"
" வாலைக் குமரியடீ -
கண்ணம்மா!
மருவக் காதல் கொண்டேன். "
கதைக்கு " என் காதல் கவிதை நீ தானே ". என்று பேர் வச்சிட்டு ஒரு கவிதை கூட இல்லையென்றால் எப்படி
அதான் பாரதியார் கவிதை போட்டேன் பிரண்ட்ஸ்.
இந்த கதை பற்றி
" தவறான புரிதலால் பிள்ளைகளை தண்டிக்கும் போது அந்த பிள்ளை மனம் முதலில் யோசிப்பது உயிரை விடுவது இல்லை என்றால் வீட்டை விட்டு வெளியேறுவது என்பதுதான்."
"அப்படி வீட்டை விட்டு போகும் பிள்ளைகள் தவறான வழிக்கு போவதற்கு வாய்ப்புகள் அதிகம். பெற்றவர்கள் உறவினர்கள் பிள்ளையை பிரிந்து கவலைபடுவதும் பிள்ளைகள் தங்கள் எதிர்கால வாழ்க்கையே இழந்து வாழ்வதும் எவ்வளவு கொடுமை. "
" அப்படி இல்லாமல் பிள்ளைகளிடம் அன்பாக பேசி உண்மை அறிந்து அவர்கள் தப்பே செய்து இருந்தாலும் திரும்ப அந்த தப்பை செய்யாமல் அவர்களை நல்வழி படுத்துவது பெற்றவர்கள், சுற்றியுள்ள உறவுகள் கடமை. அப்படி செய்தால் எவ்வளவோ பிள்ளைகளின் வாழ்வு சிறக்கும் அந்த குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்து இருக்கும். "
முற்றும்.
" அப்புறம் கதை எப்படி இருந்தது பிடிச்சுதா இல்லை எதாவது குறை இருந்தா சொல்லுங்கள் பிரண்ட்ஸ் அப்பதான் அடுத்த கதைகள் எழுதும் போது சரியாக எழுத முயற்சி செய்யமுடியும்."
" எனக்கு சாப்ட்வேர் நிறுவனம் பற்றிய நாலேஜ் அவ்வளவாக கிடையாது எதாவது தப்பா எழுதி இருந்தா மன்னிச்சிடுங்க."
நன்றி பிரண்ட்ஸ் 🙏❤️
கதை பற்றிய நிறை குறைகளை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்கள் மூலம் சொல்லுங்கள் பிரண்ட்ஸ்
நன்றி நட்புகளே 🙏❤️