Total Views: 2782
கார் ஒன்று அவர்கள் அருகில் வந்து நிற்க. இருவரும் ஏறிக்கொண்டனர். கட்டம் போல் இருக்கும் வீதிகளை கடந்து நிலாவின் வீட்டின் முன் கார் நிற்க.முதலில் நந்தன் இறங்கினான்,அவனை விட்டு தள்ளிப் போகக் கூடாது என மணி சொன்னதால் ஓடிச் சென்று அவன் அருகில் நின்றுக் கொண்டாள்.
கார் சத்தம் கேட்டு உள்ளுக்குள் இருந்து அனைவரும் எட்டிப்பார்க்க. “அக்கா புள்ளைங்க வந்துருக்காங்க ஆரத்தி கலக்கி எடுத்துட்டுப் போங்கக்கா” என்றார் ராஜி செல்வராணியிடம்
வளவனும் ஷாலினியும் உள்ளே தான் இருந்தனர். மண்டபத்தில் இருந்து யுகியும் அங்கு வந்திருந்தான், நிலா இருக்கும் வீட்டிற்குச் செல்லப் பிடிக்கவில்லை, பிடிக்கவில்லை என்பதை விட சில விஷயங்களை தவிர்ப்பது மேல் என்று நினைத்தானோ என்னவோ.
“யுகி”
“ம்ம் அவங்க வந்துருக்காங்க”.
“நான் கிளம்பறேன்”
“இருடா போலாம்”.
“பேசுனா ஏதாவது பிரச்சனை ஆகிடும் பின்னாடிப் பார்த்துக்கலாம்.”
“என்னோட ரூம்ல இரேன், ஏன் போகணும்.?அவங்க வந்ததும் கிளம்பிடுவாங்கடா”
“ம்ம்” என்றவன் வளவனின் அறைக்குள் சென்று விட்டான்.
நந்தன் நிலா இருவரையும் ஆரத்தி எடுத்து வரவேற்றார் செல்வராணி.
“பக்கத்துல வீடு இருக்கறது ரொம்ப சவுரியமா போயிடுச்சில.. நினைச்சா அம்மா வீட்டுக்கு வந்துட்டுப் போய்டலாம் இதுக்கெல்லாம் குடுத்துல வெச்சிருக்கணும். ஏதோ பக்கத்துல இல்லனாலும் அடுத்த ஊர்லையாவது கவியை குடுக்கலாம்னு தான் இங்க மாப்பிள்ள கேட்டோம். ஹும் எங்களுக்கு எங்க அந்த குடுப்பினை வாச்சிது” என செல்வராணி ராஜியிடம் புலம்ப,அவருக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை.
“வாங்க மாப்பிள்ளை” என்றார் நந்தனிடம், எப்படியும் வளவன் கூப்பிட போவதில்லை தானும் கூப்பிடவில்லை என்றால் இதைக் காரணம் காட்டி பிரச்சனை உருவாகிடக் கூடாதே கல்யாணம் வீட்டில் சின்ன சின்ன விஷயம் தானே பூதாகரமாக எழுந்து நிற்கும்.
நந்தன் என்று மரியாதைக் குடுத்து பேசிருக்கிறான் இன்று பேச, .ஒரு சின்ன தலையாட்டல் கூடயில்லாமல் உள்ளே சென்று சோபாவில் கால் மேல் கால் போட்டு தோரணையாக அமர்ந்துவிட்டான்.
அவன் செயலில் ராஜியின் முகம் சுருங்கிவிட. அதைப் பார்த்த நிலாவிற்கு பொசு பொசுவென்று கோவம் வந்துவிட்டது,அவன் அருகில் சென்று அமர்ந்தவள்.
“அம்மா வாங்கன்னு கூப்பிட்டாங்கள?” என்றாள்.
அவனிடம் பெருத்த அமைதி..
மற்ற நேரங்களில் பேசினால் வாயில்லையே குத்தலாம் போல் பேசுவான், இப்போது கேக்கும் கேள்விகளுக்கே பதில் சொல்லாமல் கடுப்படித்தான்.
மொத்தத்தில் நந்தன் பேசினாலும் ஆபத்து பேசாமல் போனாலும் ஆபத்து.
“வரேன்னு சொன்னா உங்க முத்தா கொட்டிப்போகும்” என தைரியமாக கேட்டுவிட்டாள்.
அவன் திரும்பி ஒரு வெட்டுப் பார்வைப் பார்க்க , நிலாவின் திறந்த வாய் கப்பென்று மூடிக்கொண்டது.
வளவனும் ஷாலினியும் நந்தன் வீட்டிற்கு சென்றுவிட..
நிலா வீட்டில் செய்ய வேண்டிய சடங்குகளை அரைமணி நேரத்தில் செய்துவிட்டு இருவரும் வீடு வந்து சேர்ந்தார்கள்.
முதலிரவு மாப்பிள்ளை வீட்டில் தான் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சொன்னதால், வளவனுக்காக யுகி அறையை அலங்கரிக்க வளவன் வீட்டிலையே தங்கிக் கொண்டான்.
தங்கள் வீட்டிற்கு வந்ததும் நந்தன் யாரிடமும் எதுவும் சொல்லாமல் எங்கோ கிளம்பி சென்று விட்டான்.
எப்போது வருவான்?, வருவானா? இல்லை கேஸ் விஷயமாக வெளியவே இருந்துவிடுவானா? என்று தெரியாமல் சடங்குக்கு தேவையானதை செய்ய முடியாமல் குழம்பி போனார்கள்.
“வளவா இங்க என்ன பண்ற.. பழம் வாங்கிட்டு வரணும் வரியா வெளியே போலாம்?”. என யுகி வளவனை அழைக்க..
“உன் அண்ணன் மறுபடியும் எங்கையோ கிளம்பி போய்ட்டானாம்”
“அவனைப் பத்தி என்கிட்ட எதுக்கு சொல்ற?”
“நைட் சடங்கு வைக்கணும்லடா, எங்க போறேன்? எப்போ வருவேன்னு கூட சொல்லிட்டு போக மாட்டானா?”..
“உன் தங்கச்சி தானே விரும்பி இந்த குழியில போய் விழுந்தா, நம்ப என்ன பண்ண முடியும்?” என்றவனின் குரலில் அவ்வளவு வேதனை.
“எல்லோரும் சேர்ந்து அவளை ரொம்ப கஷ்டப்படுத்துறோம்ன்னு தோணுதுடா.”
“நேத்துக் கூட அவ்வளவு கெஞ்சுனேன்டா..நம்ப என்ன அவ கெட்டுப் போகணும்னா சொல்லுவோம் அதை ஏண்டா யோசிக்காம விட்டா.?”.
“இனி பேசி என்னடா பண்றது.?”
“அவன் வேலைன்னு வந்துடுச்சின்னா பக்கத்துல யார் இருந்தாலும் கண்டுக்காம விட்டுட்டுப் போயிடுவான், எங்கயும் வெளியேப் போக முடியாது. அவளுக்கு எந்த சந்தோசமும் அவன்கிட்ட இருந்து கிடைக்காதுடா” என்று கண் கலங்க சொன்னான்.
“அப்போ உன்னைய கேட்டேன்ல கல்யாணம் பண்ணிக்கோன்னு நீ சம்மதம் சொல்லிருந்தா அவனை கல்யாணம் பண்ணிருக்க மாட்டாள்ல, அவ முடிவுக்கு நீயும் ஒரு காரணம் தான் யுகி.”
“என்னோட விருப்பம் மட்டும் போதுமா வளவா..? அவளோட விருப்பம் வேண்டாமா? அவளுக்கே தெரியாம அவ மனசுல அவன் தான் இருக்கான், எனக்கு அவ தான் உசுரு, அவளைத் தாண்டி தான் மத்தவீங்களையே எனக்கு பிடிக்கும்.அவளுக்கு அப்படி இல்லையே, என்னைய பிடிக்கும் என்னய்ய தாண்டி தான் மத்தவீங்கள புடிக்கும்மான்னு கேட்டா இல்ல, அவளுக்கு நீ எப்படியோ அப்படி தான் நானும். அது தெரிஞ்சதுல இருந்து அவளை காதலிங்கற எண்ணத்துல பார்க்கறதுக் கூட தப்புன்னு தான் அவகிட்ட என்னோட காதலை சொல்லாம இருந்தேன்.”
“அப்போ அவ நந்தனை கல்யாணம் பண்ணா என்ன பிரச்சனை உனக்கு?”.
“எனக்கு என்ன பிரச்சனை?”என்றவனின் குரல் கம்ம
வளவன் அவன் தோளை அழுத்தினான்.
“ஏண்டா அவளுக்கு என்னைய புடிக்காம போச்சி.”
“யுகி”
“உனக்கு தெரியும் தானேடா அவளை எனக்கு எந்த அளவுக்கு புடிக்கும்ன்னு,”
“எனக்கும் மட்டுமில்லடா எல்லோருக்குமே தெரியும்”
“அப்புறம் ஏண்டா அவளுக்கு தெரியாம போச்சி” என கேட்டவனின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
“நீ சொல்லிருக்கலாம்லடா”
“அவ மனசுல நந்தன் இருக்கான்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் சொன்னா அது தப்புடா என்னோட ஆசைக்காக அவ ஆசையைக் கெடுக்கக் கூடாதுன்னு தோணுச்சி
அவ ஆசை, சந்தோசம், தான் எனக்கு முக்கியம், இது அவன்கிட்ட கிடைக்குமான்னு கேட்டா கண்டிப்பா கிடைக்காது. எல்லோரும் குடும்பத்தோட சந்தோசமா இருக்கும் போது அவ மட்டும் புருஷனுக்காக வாசலைப் பார்த்துட்டு நின்னா எப்படி இருக்கும்?, அவளுக்கு எப்படி இருக்குமோ எனக்கு தெரியாது, அவ அப்படி இருக்கறதைப் பார்த்தா என் நெஞ்சு வெடிச்சிடும்டா .”என்று கதறி அழுதான் இவ்வளவு நாள் அடக்கி வைத்த அழுகை எல்லாம் வெள்ளமாக அணை உடைத்தது.
“டேய் யுகி”
“அது மட்டுமில்லடா அவனை சுத்தி நிறைய ஆபத்து இருக்கு.. அவனுக்கு எந்த நேரம் என்ன ஆகுமோன்னு ஒவ்வொரு நாளும் உயிரைக் கையில பிடிச்சிட்டு அவ வாழுவா. அது தெரியாம . நம்ப மட்டும் சந்தோசமா இருப்போம்.அதையெல்லாம் யோசிக்கும் போது இப்போகூட பயமா இருக்குடா அவ எதிர்காலம் எப்படி இருக்குமோன்னு.”
“நந்தன் பார்த்துப்பான் யுகி, நம்மளும் அவக் கூட தானே இருக்கப் போறோம், நம்பளை மீறி என்ன நடந்துடும்?”.
“தெரியல வளவா, ஏன் அவளுக்கு என்னைய புடிக்காம போயிடுச்சின்னு?. புடிச்சிருந்தா உள்ளங்கையில தாங்கி இருப்பேன்டா” என்று கண்கள் கலங்க கூற
“இதை நீ சொல்லிதான் எங்களுக்கு தெரியனுமாடா.. நம்ப ஒன்னு நினைச்சி செஞ்சா கடவுள் வேற ஒன்னு நினைக்கிறாரு.”
“ரெண்டு கல்யாணம் ஒன்னா நடந்துருக்கு உங்களுக்கு மட்டும் சடங்கு நடந்தா அவளுக்கு எவ்வளவு வேதனையா இருக்கும்டா.. அவனுக்கு அந்த அறிவுக் கூட இருக்காதா?”.
“கல்யாணத்தன்னைக்கு கூட வராதவன்கிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும்? எங்க சடங்கையும் இன்னொரு நாள் வெச்சிக்க வேண்டியது தான்”.
!நீ சொல்லுவ.. பெரியவீங்களும் ஷாலினியும் ஒத்துக்கனும்ல, .உனக்காக வருசக் கணக்கா காத்திருந்தவ மனசுலையும் ஆசை இருக்கும்லடா, இவனுக்கு யாரைப் பத்தியும் கவலையில்லை தான் நல்லா இருந்தா போதுன்னா எப்படிடா”
“இன்னைக்கு ஒருநாள் தான் இருக்கா என்ன..? வாழ்க்கை முழுக்க இருக்கு பார்த்துக்கலாம்” என்றவன் யுகியை சமாதானம் செய்து அழைத்துச் சென்றான்.