Total Views: 1584
“அப்போ நான் கிளம்புட்டுங்களா.?”
“வந்து குண்டைப் போட்டுட்டு கிளம்புறானா.. ஏன் இங்கையே தங்க வேண்டியது தானே?” என எரிச்சலில் வாய் விட்டு சொல்லிவிட, நந்தன் யாரும் அறியாதவாறு ஹாலில் இருந்து சமையலறைக்கு வந்து அவள் பேசியதை மார்புக்கு குறுக்கேக் கையைக் கட்டியப்படி கேட்டான்.
ஜிங்கில் டம்ளாரைக் கழுவிக் கொண்டிருந்த நிலா, நந்தன் வந்ததைப் பார்க்கவில்லை.அவள் பாட்டுக்குப் புலம்பிக் கொண்டிருந்தாள்.
“மேடமுக்கு பர்ஸ்ட் நைட் வேண்டாம் போலையே” என இறுகிய குரலில் கம்பிரமாக கேக்க,நிலாவிற்கு தூக்கிவாரிப் போட்டது.
எல்லோரும் ஹாலில் இருக்கிறார்கள் என இவள் பாட்டுக்கு புலம்பிக் கொண்டிருக்க,திடீரென்று கேட்ட நந்தனின் குரலில் அதிர்ந்து பின் நகர... பாத்திரம் கழுவியதில் சிந்திய தண்ணீர் நிலாவின் காலை வாரி விட்டது.
அவ்வளவு தான் கீழே விழப் போகிறோம் என்று நிலா “ஆஆஆஆ” என கத்திக் கொண்டே கண்ணை இறுக மூடிக் கொண்டாள்.
கீழே விழப் போனவளை நந்தன் பிடித்து தூக்கியிருக்க.
“என்ன அடிப்பட்ட மாதிரி தெரியல ஏதோ அந்தரத்துல தொங்கற மாதிரி இருக்கு,அதுக்குள்ளவா செத்து சொர்க்கம் போய்ட்டேன்”. என சொல்லிக்கொண்டே கண்ணைத் திறந்துப் பார்த்தாள்.
“நான் இருக்கும் போது அவ்வளவு சீக்கிரம் சாக விட்டுருவனா என்ன?” என்பது போல் நந்தன் அவளது பூ முகத்தை ஆழ்ந்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
நந்தனை பார்த்ததை விட அவனது விழிகளில் தெரிந்த ஏதோ ஒன்று நிலாவால் அவன் கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை, முகத்தைக் கைக் கொண்டு மூடிக் கொண்டாள்.
அவளைப் பார்த்தவாறே நந்தன் மோனநிலையில் நின்றிருந்தான்.
“என்ன சத்தம்?” என கேட்டுக்கொண்டே மொத்தக் குடும்பமும் அங்கு கூடிவிட.. நந்தனின் கையில் இருந்த நிலாவைப் பார்த்ததும்..
“போங்க போங்க போய் வேலையைப் பாருங்க” என மார்த்தி அனைவரையும் அனுப்பிவிட்டார்.
அவர்கள் சத்தம் கேட்டதும் நிலா நந்தன் கையில் இருந்து துள்ளிக் குதிக்க.அவளை இறக்கி விட்டவன் தன் தலைமுடியை இருக் கைகளாலும் கோதிக் கொண்டான்.
இருவர் முகத்திலும் வெட்கத்தின் சாயலால் சிவந்திருந்தது.
“என்னம்மா இது பட்டப் பகல்ல இப்படி எல்லோரும் இருக்கும் போது உன் பேரன் அராஜகம் பன்றான் இதெல்லாம் நல்லாவா இருக்கு”.
“அவ தான் அவனை மயக்கி முந்தானையில முடிஞ்சி வெச்சிருக்காள்ள, அப்புறம் எப்படி சும்மா இருப்பான்?”.
“இவங்களுக்கு போய் நல்ல நேரம் பார்த்துட்டு இருக்கோம். அதெல்லாம் இன்னும் முடியாமலா இருக்கும்.. அவ வீடே கதின்னு கிடந்தான்ல அப்போவே எல்லாம் முடிஞ்சிருக்கும்”,
“சத்தமா சொல்லிடாதடி அப்புறம் உன்ற அண்ணன் உன்னைய இந்தப் பக்கமே விட மாட்டான்.” என இருவரும் பேசிக் கொண்டிருக்க. அது வளவன் காதில் நன்றாகவே விழுந்தது. விழ வேண்டும் என்று தானே பேசினார்கள்.
“இவங்களை திருத்தவே முடியாது. இன்னும் எத்தனை நாளைக்கு இப்டியே பேசிட்டு திரிவாங்களோ” என்று சலிப்பு தான் உண்டானது அவனுக்கு. இதென்ன புதிதா?. ராஜியை பேசிய வாய் இப்போது நிலாவைப் பேசிக்கிறது. ஆள் தான் மாறி இருக்கிறார்களே தவிர பேசும் ஆளும் வார்த்தையும் ஒன்றே தான்.அவர்கள் பேசுவதைக் கேட்டு கோவம் வருவதற்கு பதில் “ச்சி” என்ற சலிப்பு தான் உருவாகிறது.
ஐயர் கிளம்பிவிட, அனைவருக்கும் முன் வருவதற்கு கூச்சப்பட்டுகொண்டு நிலா அறைக்கு ஓடிவிட்டாள்.
நந்தனுக்கு ஏது கூச்சமெல்லாம், அவன் நடுக் கூடத்தில் அமர்ந்து மார்த்தியிடம் பேசிக் கொண்டிருந்தான்.
“நந்து அவங்க மறுவீட்டுக்கு அழைச்சிப் போகாம இருக்கக் கூடாதுப்பா, நம்ப பொண்ணை அங்க குடுத்துருக்கோம், அவ வாழ்க்கையும் பாதிக்கப்படும்னு எதா இருந்தாலும் யோசிச்சி பண்ணுப்பா”
“எனக்கு டைமில்லப்பா நாளைக்குப் பொங்கல் வைக்கவே வர முடியுமான்னு தெரியல. அந்த ரோகனை கஸ்டடில எடுத்துருக்கேன் விசாரிச்சி உண்மையை வாங்கணும், கோர்ட்க்கு கூட்டிட்டுப் போகணும் நிறைய ஒர்க் இருக்குப்பா.”
“அப்புறம் எதுக்கு தம்பி கல்யாணம் பண்ணிகிட்ட.. அந்தப் பொண்ணுக்கு இதெல்லாம் நடக்கணும்னு ஆசை இருக்காதா.?”
“அவங்க அம்மா வீடு என்ன பாரின்லையா இருக்கு, தடுக்கி விழுந்தா அம்மா வீடு.”
“இப்படிலாம் சொல்லக்கூடாது நந்து. கல்யாணம் ஆன பொண்ணுகளுக்கு மட்டும் தான் பொறுப்பு இருக்குன்னு இல்லை. ஆம்பளைங்களுக்கு இருக்கு. மாமியார் வீடுங்கறது இன்னொரு தாய் வீடு. உன் வீட்டுல எந்த அளவுக்கு கடமை இருக்கோ அதே அளவு உன் மாமியார் வீட்டுலையும் இன்னொரு மகனா கடமை இருக்கு. அதையும் நீ தான் செய்யணும்.”
“சூப்பரா சொல்றிங்கப்பா” என்றவன் “இதை உங்களுக்கு நீங்களே சொல்லிக்கோங்க. கல்யாணம் ஆகி முப்பது வருஷம் ஆகுது எத்தனை தடவை மாமியார் வீட்டுக்குப் போய் விருந்து சாப்புட்டுருக்கிங்க. பொண்டாட்டியையே கவனிச்சதில்ல இதுல மாமியார் வீட்டைப் பத்தி எங்க யோசிக்கறதுன்னு சொல்றிங்களா?. உங்களைப் பார்த்து வளர்ந்த பையன் என்கிட்ட மட்டும் கடமை கண்ணியம் கட்டுப்பாடுன்னு சொன்னா எப்படி?”என்றான் நிதானமாக.
நந்தனின் ஒவ்வொரு சொல்லும் மார்த்தியின் இதயத்தை கூறுப்போட்டது.
அவன் சொன்னதில் எந்த தவறும் இல்லையே. நந்தனுக்கு சொல்ல மார்த்தி என்ற மனிதன் இருக்கிறார்,மார்த்திக்கு எடுத்துச் சொல்ல யாரும் இல்லை சொல்ல வேண்டியவர்களும் கவுருவம், ஆணவம்,தகுதி என அதையே பிடித்து தொங்கிக் கொண்டிருக்க. என்ன செய்ய வேண்டும் என்பதையே மறந்து விட்டார் உரிமையைக் கேட்டு வாங்க வேண்டுமா? என மணிமேகலையும் அவரிடம் சண்டையிடாமல் ஒதுங்கி இருந்ததால் மணியின் பக்கமும் யோசிக்க வேண்டும் என நினைக்கவில்லை மார்த்தி.
நந்தன் எட்டாவது படிக்கும் போது மணியின் பிறந்த வீட்டோடு நடந்த சண்டையில் அதன் பிறகு யாருமே அங்கு சொல்லவில்லை அவர்கள் மட்டும் மார்த்திக் குடும்பத்திற்கு தெரியுமால் கோவில் குளங்களில் வைத்து பெற்ற பிள்ளையையும் பேத்தி பேரன்களையும் பார்த்து செல்வர்.மணிக்கு சங்கர் என்ற ஒரு தம்பி இருந்தான், மணிக்கு திருமணம் செய்துகொடுக்கும் போதும் மச்சான் உறவு முறைக்காக இரண்டு மூன்று முறை மார்த்தி பார்த்திருப்பார் , அவ்வளவு தான் அதற்குமேல் மணியின் குடும்பத்துடன் எந்த ஒட்டுதலும் இருந்ததே இல்லை அவருக்கு.
“தம்பி.” என சோர்வாக அவரின் குரல் வர.
“சொல்லுங்கப்பா”
“அது.”
“அன்னிக்கு சொன்னது தான் இன்னைக்கும், நான் உங்களை மாதிரி இருக்க மாட்டேன்” என்று எழுந்து சென்றுவிட்டான்.
இவ்வளவு நாள் ஒரு மணிநேரமாவது மணியுடன் அமர்ந்து பேச வேண்டும் என்று தோன்றவில்லை இன்று தோன்றியது. காலம் போனதுக்கு பின் பேசினால் என்ன? பேசவில்லை என்றால் என்ன?.
மதிய உணவை வளவன் குடும்பத்திற்கும் சேர்த்து மார்த்தியின் வீட்டிலையே செய்துவிட்டனர்.
வளவன் மறுவீடுக்கு அழைத்ததுப் போல் மார்த்தியும் மணியும் சென்று வளவனையும் ஷாலினையும் மறுவீட்டிற்கு அழைத்துவிட்டு வந்தனர்.
அறைக்கு வந்த நந்தன், நிலா அலைபேசியில் யாருக்கோ அழைப்பதும் காதில் வைப்பதும், அவர்கள் எடுக்கவில்லை என்றதும் மீண்டும் மீண்டும் அழைப்பதுமாக இருப்பதைப் பார்த்தவன்.
“இங்க என்னடி பண்ணிட்டு இருக்க?கீழே எல்லோரும் சாப்பிட வந்தாச்சு நீயும் போய் கூட மாட ஹெல்ப் பண்ண வேண்டியது தானே” என்றான் கடுமையாக.
அவள் யாருக்கு இத்தனை முறை அழைக்கிறாள் என தெரிந்ததால் வந்த கடுமை அது
“போறேங்க.”
“வேலை செய்யற இடத்துல போன் எதுக்கு இங்கையே வெச்சிட்டுப் போ.”
யுகி ஒருவேளை அழைத்தால் எப்படி பேசுவது என தயங்கியவள்.
“போன் வெச்சிட்டே வேலை செஞ்சிடுவேன்” என எடுத்துக் கொண்டு ஓடப் பார்த்தவளை. இழுத்து இடுப்பைப் பிடித்தவன்.
“ஒழுங்கா வெச்சிட்டுப் போடி” என கிள்ளியே இடுப்பில் இருந்து அரைக் கிலோ சதையை எடுத்திருப்பான்.
“ஸ்ஆஆஆ எதுக்கு கிள்ளறீங்க வலிக்குது?” என கத்த.
“நான் சொன்னா உடனே செய்யனும் இல்லனா இப்படி தான் அடி வாங்குவ”
என்றவனின் கை ரசனையாக இடையை தடவியது.
“விடுங்க விஜய் கீழேப் போறேன்”
“நான் சொல்லும்போதேப் போயிருக்கணும், இன்னைக்கு நைட்டுக்கு இப்போவே ட்ரையல் பார்ப்போமாடி”
“என்னது!!!” என்றவளின் கண்கள் அதிர்ச்சியில் விரிய..அவன் கை உடலில் ஊர்வலம் நடத்த, அதை தடுக்க முடியாமல் தடுமாறியவளுக்கு எதிர்காலத்தை நினைத்து கண்களில் கண்ணீர் வர,அது நந்தனின் கையில் பட்டு தெறித்தது.
அதில் சட்டென்று கையை எடுத்துவிட்டான் நந்தன்.
அவளது கண்ணீரில் அவனது உடல் இறுகியது.அவள் சம்மதமே கொடுத்தாலும் இப்போதைக்கு அவளை எடுத்துக் கொள்ளும் எண்ணம் அவனுக்கில்லை. இருந்தாலும் அதை அவள் எதிர்க்கும் போது மனதில் சொல்லவொன்னா வேதனை உண்டானது.
“போ” என குரலும் உடலும் இறுக நந்தன் சொல்ல.
அவனது குரலின் மாற்றத்தில் தயங்கி தயங்கி நின்றாள்.
“போன்னு சொன்னேன்..... “அதட்டினான்.
அவனிடம் பேச தைரியமில்லாமல் அங்கிருந்து கீழேச் சென்றாள்.
ராஜி,வளவன் ஷாலினி, செல்வராணி கிருஷ்ணம்மாள், மார்த்தி,கவிநிலா என அனைவரும் சாப்பிட அமர்ந்திருக்க, மணியும் ஒரு உறவுகாரப் பெண்ணும் பரிமாறிக் கொண்டிருந்தனர்.
அலுங்காமல் மணியின் அருகில் சென்று நின்றவள்
“அத்தை நானும் வைக்கவா?”
“அவனை வரச் சொல்லி ரெண்டுப் பேரும் உக்கார்ந்து சாப்பிடுங்க”.
“பசிக்கல அத்தை குடுங்க நான் போடறேன்” என குழம்பு வாலியைத் தூக்கிக் கொண்டுப் போனாள்.
அவள் சிரித்து பேசினாலும் கண்கள் காட்டிக் கொடுத்து விட்டது அவளுடைய வலிகளை. மூன்று பிள்ளைகளைப் பார்த்து பார்த்து வளர்த்திய மணிக்கு தெரியாதா? இன்னொரு பிள்ளையின் வலி. ‘சரியாகிடும் மருந்து சாப்பிடும் போது வலிக்க தான் செய்யும் ஆனா அது நல்லதுக்கு தானே’என்று எண்ணிக் கொண்டார்.
நிலாக் கீழேப் போனதும் யுகியிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது.
கீழே வரும்போது அலைபேசியை அங்கே வைத்துவிட்டு வந்துவிட நந்தன் யுகியின் செய்தியைத் திறந்துப் பார்த்தான்.
“ப்ளீஸ் நிலா எனக்கு போன் பண்றதை நிறுத்திக்கோ,திரும்ப போன் பண்ண பிளாக் பண்ணிடுவேன். கொஞ்சநாள் நிம்மதியா இருக்க விடு” என்று இருக்க.
“இவனுக்கு என்ன பிரச்சனை?” என்று தெரியாமல் போலீசாக இருக்க முடியுமா? நிலாவை அவசர அவசரமா திருமணம் செய்ததே அதுவும் ஒரு காரணம் தானே.
“நீ என்னடா பிளாக் பண்றது? நான் பண்றேன்டா பிளாக்” என்றவன் நிலாவிற்கு தெரியாமல் யுகியின் எண்ணை தடை செய்துவிட்டான்.
“நிலா”
“சொல்லுங்க மாமா”
“நந்து எங்கம்மா?”
“அவங்க ரூம்ல இருக்காங்க”
“அப்பா”
“சொல்லு ஷாலு”
“நாளைக்கு கோவிலுக்கு போகணும்ன்னு சொன்னிங்கல”
“ஆமாம்மா”
“அவருக்கு வேலை இருக்கா நம்ப மட்டும் போய்ட்டு வரலாமா?”
“அதெப்படிம்மா. கல்யாணம் ஆகி முதல் தடவை நம்ப கோவிலுக்குப் போறோம் மாப்பிள்ளை இல்லாமலா போக முடியும், . கல்யாணம் ஆனா இது மாதிரி சடங்கு இருக்கும்ன்னு தெரியும் தானே.”
“அப்போ நாளைக்கு அண்ணனும் கோவிலுக்கு வரானா.?”
“அது”
“அவனும் வரணும் இல்லனா பாருங்கப்பா, நீங்க எப்போமே அண்ணனுக்குன்னா ஒருமாதிரி சட்டம் போடறீங்க,மத்தவீங்களுக்குன்னா ஒரு சட்டம் போடறீங்க” என்றாள் நிலா இருக்கும் போதே.
நிலாவிற்கே அது நன்கு தெரியுமே, ஷாலினியின் இலையில் சாம்பரை ஊற்றியவள், “அவரும் நாளைக்கு வருவாரு அண்ணி, அண்ணாவையும் வர சொல்லுங்க முதல் தடவைப் போறப்ப எல்லோரும் சேர்ந்து போவோம்.” என்றாள்.
‘நீ யாரு அதை சொல்ல?’ என்பது போல் வளவனும் ஷாலினியும் பார்த்து வைக்க, தன் வாயை இறுக மூடிக் கொண்டாள்.
அவளிடம் மணி மார்த்தியை தவிர யாரும் பேசவில்லை என்றாலு,ம் நிலாவே அவர்களிடம் வழிய சென்று பேசி மூக்குடைப்பட்டு நிற்பதே வழக்கம் ஆகிப்போனது.
“நிலா நான் சாப்பாடு போட்டுக்கறேன் நீ போய் அவனை வரச் சொல்லு.”
“நானா?”
“நீதானே அவனோட பொண்டாட்டி”
“ஆ ஆமா”
“அப்போ போ”
“இல்ல அத்தை வேற யாரையாவது..”
“நீதான் போகணும் போ”
“ம்ம்” என்றவள் திரும்பி பாதி படியைக் கூட ஏறி இருக்க மாட்டாள். நந்தனே கீழே இறங்கி வந்தான்.
அவள் படியில் நின்று நந்தன் வருவதைப் பார்த்துகொண்டிருக்க,அவன் அப்படி ஒருத்தி நிற்பதே தெரியாததுப் போல் அவளைக் கடந்துவிட்டான்.
“நந்து”
“ம்ம்”
“வந்து சாப்புடுப்பா நீ சாப்புட்டா தானே நிலாவும் சாப்புடும்” என்றார் மார்த்திக்கு இப்பதெல்லாம் நந்தனை எப்படி மடக்குவது என தெரிந்து விட்டது நிலாவின் பெயர் பயன்படுத்தினாலே போதும் அவன் மடங்கி விடுவான் என புரிந்துக் கொண்டார்.
நந்தன் வந்து பந்தியில் அமர அவன் அருகில் நிலாவை அமர வைத்துவிட்டார் மணி.
அவன் துரத்தி துரத்திப் பார்க்கும் போது கண்டுக்கொள்ளாமல் போனவள்,அவன் அவள் பக்கம் திரும்பாமல் இருந்த ஐந்து நிமிடத்தில் ஓரக்கண்ணால் நான்கு முறைப் பார்த்துவிட்டாள்.
போலீசுக்கே உரிய கம்பீரம், அவனை எந்த முனையில் இருந்து பார்த்தாலும் அழகாக தெரிந்தான். மீசையை இடதுக் கையால் முறுக்கிவிடும் அழகிற்கு அவன் எதைக் கேட்டாலும் கொடுத்து விட தயாராக இருந்தாள். வீட்டில் இருந்ததால் ஸ்போர்ட்ஸ் பேண்ட் டி ஷர்ட்ஸ் அணிந்திருந்தான்,அந்த உடையே அவளைக் கொள்ளைக் கொண்டது.
இவன் என்னவன் என்று நினைக்கும் போதே நிலாவின் அடிவயிற்றில் மின்னல் ஒன்று தோன்றி மறைய. அந்த உணர்வை தாங்க முடியாமல் நந்தனின் தொடையை அழுத்திவிட்டாள்.
என்ன என்பது போல் அவன் பார்த்திருந்தால் கையை எடுத்திரிப்பாளோ என்னவோ அவன் பார்க்கவில்லை என்றதும் உரிமையாக அவன் மீது இருந்த கையை எடுக்காமல் வைத்துக் கொண்டு உணவை உண்டாள்.
மாலைப் போய் இரவு வந்தது. நிலாமகள் மேகக்கூட்டங்களுடன் கூடி கழித்து நாணி மறைய..இங்கோ பயத்தில் ஒரு நிலா நடுங்கிக் கொண்டிருந்தது.
“என்ன நிலா பூ வைக்க விடு. இப்படி ஆடிட்டே இருந்தா எப்படி பூ வைக்கறது.?”
“அத்தை இதெல்லாம் இப்போ வேண்டாமே”
“என்னது பூவா?”
“பூ இல்ல சடங்கு” என்றதும் அவளை ஒரு மாதிரி பார்த்து வைத்தார் மணி.
“ஏன் அத்தை அப்படி பார்க்கறீங்க?”
“வேண்டா வேண்டான்னு சொல்றவதாண்டி அடுத்த பத்து மாசத்துல ரெட்டக் குழந்தையைப் பெத்துக் குடுப்பா. ஒழுங்கா விளையாடாம பூவை வைக்கற வேலையப் பாரு” என்றவர் சமையலறைக்குச் சென்று விட்டார்.
இங்கு ஷாலினியோ தங்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நடக்கப்போகிறதே என சந்தோச மனநிலையில் தயாராகிக் கொண்டிருக்க,அவள் மனநிலைக்கு எதிரான மனநிலையில் இருந்தான் வளவன்.
தங்கச்சி வாழ்க்கை ஒருபுறம் என்றால், நண்பனின் வாழ்க்கை ஒருபுறம். என்ன செய்து சரி செய்வது?,எப்படி யுகியின் வாழ்க்கையை சீர் செய்வது? என தெரியாமல் கலங்கிப் போய் நிற்பவனால் முதலிரவை எப்படிக் கொண்டாட முடியும்.
“வளவா..”
“அம்மா”
“நீங்க அண்ணா அண்ணிக்கிட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டு வந்துடுங்க, நானும் மணி அண்ணியும் செல்வா அக்கா வீட்டுக்குப் போய்ட்டு வரோம்” .
“அம்மா நைட் யாராவது போவாங்களா? அதும் அந்த செல்வராணி வீட்டுக்கு என்ன வேலை?”.
“அது ஒன்னுமில்லடா. மணி அக்கா போறேன் வா வான்னு இழுத்தாங்க அதான் கூடப் போய்ட்டு வந்துடலாம்ன்னு நீங்க கதவை சாத்திக்கோங்க நான் வந்தா மேலே போய் படுத்துக்கறேன் சரியா?”
“ம்ம்.” என்றான் அரைமனதாக.அவனுக்கு தெரியாதா எதற்காக போகிறார்கள் என்று.
வளவனும் ஷாலினியும் மார்த்தி, மணியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டனர்.
“ஷாலும்மா”
“சொல்லும்மா”
“பார்த்து நடந்துக்கோம்மா”
“ம்ம்” என்றாள் வெட்கத்துடன் மகளின் வெட்கத்தில் பெற்றவளின் மனம் நிறைந்துப் போனது.
அவர்கள் ஆசீர்வாதம் வாங்குவதைப் பார்த்த நிலாவிற்கு தாங்களும் ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது, நந்தனிடம் சொன்னால் “அதான் மண்டபத்துலையே வாங்கியாச்சுல சும்மா சும்மா என்னால கால்ல விழ முடியாது” என்று விடுவான்.தனியாக சென்று வாங்கவும் ஒரு மாதிரி இருக்க தயங்கி நின்றாள்.
“என்ன நிலாம்மா நீ ரூமுக்கு போகலையா.?”
“ம்ம் போறேன் அத்தை” என்றவள் வளவன் ஷாலினி இருவர் அருகிலும் வந்து. “ஆல் தி பெஸ்ட் லவ் பேட்ஸ்.. அண்ணா இது மாதிரி இனிமையான நிகழ்வுலா வாழ்க்கையில் ஒரு தடவை தான் வரும், அப்போவும் அடுத்தவீங்களையே நினைச்சி அதை ஸ்பாயில் பண்ணிக்கக் கூடாது. என்னைய நினைச்சி நேத்து தள்ளி இருந்திங்க சரி, இன்னைக்கு அதையே பண்ணி உலகத்துலையே நான்தான் பெஸ்ட் அண்ணனு காட்ட வேண்டாம்,. சொன்னாலும் சொல்லலைனாலும் நீ யாருக்கும் கிடைக்காத பொக்கிஷம். பெஸ்ட் அண்ணான்னு காட்டறதை விட பெஸ்ட் புருஷன் காட்டனும் அது தான் முக்கியம், என்றவள் “என்னோட அண்ணா யார் மனசையும் காயப்படுத்த மாட்டான்னு தெரியும்” என ஷாலினியின் நெற்றியில் இதழ் பதித்து புன்னகைத்தாள்.