இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -85 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 19-07-2024

Total Views: 1437


“அவன் வர வேண்டுமே.. “ கார் வெளியே போவதைப் பார்த்த மணி, வேகமாக மாடி ஏறி ஓடி வந்தார்.

“நிலாம்மா”

“அத்தை..”

“எங்கம்மா போறான்?”.

“ஏதோ அவசர வேலை போனதும் வரேன்னு போறாங்க அத்தை, அவங்க வந்துடுவாங்க நீங்க போய் தூங்குங்க”

“இந்த பையன் ஏம்மா இப்படி பன்றான், நல்லா அமைஞ்ச வாழ்க்கையை கெடுத்துட்டு நிற்கப் போறான் பாரு”என மணி மனமுடைந்து பேசினார்.

“அதெல்லாம் ஒன்னுமில்ல அத்தை நீங்க கண்டதையும் நினைக்காதீங்க. அப்புறம் இந்த விசியம் யாருக்கும் தெரிய வேண்டாம், முக்கியமா அண்ணாவுக்கும் அண்ணிக்கும்” என்றவள் “போய் தூங்குங்க எனக்கு தூக்கம் வருது” என அவரை அனுப்பி வைத்துவிட்டு அறைக் கதவை மூடிக் கொண்டாள்.

அவருக்கு ஆறுதல் சொன்னவளின் மனம் மிகவும் ரணப்பட்டுக் கிடக்க
உஷா என்ற பெயரை நந்தன் சொல்லும் போதே அடிவயிறு கலங்கிவிட்டது.

முடிந்த அத்தியாயம் என்று எண்ணிருந்தவளுக்கு, இல்லை இது தொடரும் அத்தியாயம் என்றதும் சொல்லவொன்னா வேதனை உடலின் ஒவ்வொரு செல்லிலும் பரவி வெடிக்கும் வலியைக் கொடுத்தது.

கண்டதையும் நினைத்து மனம் வருந்தியவள் அப்படியே உறங்கி விட்டாள்.

இங்கு ஒரு ஜோடி பிரிந்து கலங்கி நிற்க, அங்கு ஒரு ஜோடி ஆனந்தமாயி வாழ்க்கையை தொடங்கி விட்டது.

இருவரும் ஒன்றாகவே அறைக்குள் புகுந்தனர்.

வெளியே இருந்தப் போதுக்கூடாது இந்த அளவிற்கு பயப்படவில்லை ஷாலினி. உள்ளே வந்ததும் அடிவயிற்றில் சுளீரென்று உணர்வு தோன்றி அது நெஞ்சு வரைக்கும் பயணம் செய்ய வளவனை பார்க்க முடியாமல் திரும்பிக் கொண்டாள்.

“ஷாலு”

“ம்ம்”

“என்னைய பாருடி”

“ஒரு மாதிரி இருக்கு வள்ளு..”என்றவளின் தோளைப் பற்றி திருப்பியவன் அவள் யோசிக்கும் முன் அவளது இதழை தீண்டியிருந்தான்.

முதல் இதழ் முத்தம் இல்லை என்றா லும் முதல் கூடலுக்கு வழிவக்கும் முத்தம் என்பதால் இருவருமே வானத்தில் மிதந்தனர்.

வளவனின் கைகள் அத்து மீறி பயணம் செய்ய ஷாலினி கூச்சத்தில் நெளிந்தாள்.

“ஷாலு”.

“ம்ம்..”

“ஷாலு”

“ம்ம்”

இதே பேச்சுகள் அறை முழுவதும் சுவர்களில் பட்டு தெரித்தது.

இருவரும் தங்கள் இல்லற வாழ்க்கையை இனிதாக ஆரம்பித்தனர்.

விடியற்காலையில் வந்த நந்தன் கண்ணீர் தடம் பதித்த கன்னத்தைக் கூட துடைக்காமல் உறங்கிக் கொண்டியிருந்தவளை விழி எடுக்காமல் பார்த்தான்.

மனம் வலித்தது. யாருக்கு நியாயம் செய்தாலும், இவளுக்கு மட்டும் தன்னால் நியாயம் செய்ய முடியவில்லையே என கவலையாக இருந்தது.

கூடலில் கசங்க வேண்டிய புடவை அப்படியே இருக்க, மலர்ந்து வெட்கத்துடன் இருக்க வேண்டிய நிலாவின் முகம் கசங்கி போயிருந்தது.

அவளை நேராக படுக்க வைத்தவன். “சாரிடி நேத்தும் என்னால உனக்கு எதும் செய்ய முடியல, இன்னைக்கும் என்னால எதும் செய்ய முடியல என் தப்பு தான், ஆசையை தூண்டிவிட்டுட்டு அதை அடக்காம போய்ட்டேன்” என முதன் முறையாக மன்னிப்பு வேண்டினான்.

நந்தனும் அவள் அருகில் படுத்து நிலாவை தூக்கி தன் மேல் போட்டுக் கொண்டவன் மெல்ல கண் மூடினான்.

காலையில் கதவை தட்டினார் மணி.அதில் நிலா முழித்துக் கொண்டவள் எழுந்து அமர்ந்து கண்ணில் இருந்த மிச்சத் தூக்கத்தையும் கையால் முகத்தை துடைத்தவாறு விரட்டியவள், அருகில் பார்க்க நந்தன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான்.

“இவரு எப்போ வந்தாரு? இவர் வந்ததுக் கூட தெரியாமலா தூங்கியிருக்கேன் ச்சை” என அவளை அவளே திட்டுக்கொண்டு ரூம் கதவை திறக்க,

வெளியே மணி நின்றிருந்தார்.

“சொல்லுங்க அத்தை”

“அவன் வந்துட்டான் போல”

“ம்ம்”

“எப்போ வந்தான்.?”

“தெரியல அத்தை, நானே தூக்கம் வராம லேட்டா தான் தூங்குனேன், இவர் அதுக்கு அப்பறம் வந்துருப்பாரு போல” என்றவளுக்கு வந்தவன் தன்னை எழுப்பவில்லையே என முரண்டுபிடித்தது மனது.

“அவன் எழுந்ததும் தலையில்லையே நாலு வைக்கற பொண்டாட்டியா இருந்திருந்தா ஒழுங்கா இருந்திருப்பான் நீ அவனுக்கு பயந்து நடுங்கிட்டு இருக்க அப்புறம் எப்படி ஒழுங்கா இருப்பான்?. என்னமோ சுதானமா பொழச்சிக்கப் பாரு, சீக்கிரம் போய் குளிச்சிட்டு கீழே வந்துடு இல்லனா நேத்து மாதிரி இன்னைக்கும் ஆரம்பிச்சிடும்” என சொல்லிவிட்டு மணி கீழே சென்று விட்டார்.

‘அவர் சொல்வது தான் உண்மையோ, எதுவும் கேக்காத பொண்டாட்டியா இருந்துட்டா, தன் இஷ்டம் போல இருக்கலாம்ன்னு தான் என்னைய கல்யாணம் பண்ணிக்கிட்டாரோ’ என்ற எண்ணம் எழவும், அவனைப் பார்க்க அவனும் அவளை தான் பார்த்திருந்தான்..

“இவர் எப்போ எழுந்தாரு.? பார்க்கறதைப் பாரு கோட்டான் முழிக்கிற மாதிரி வாயைத் தொறக்கட்டும் சிறப்பா செஞ்சிவிட்டறேன்” என நினைத்துக் கொண்டவள். குளிக்க குளியலறைக்குள் நுழையப் போனவளை அப்படியே தூக்கிப் படுக்கையில் போட்டான்.

“விடுங்க.. விடுங்க”

“நைட் ரொம்ப நேரம் வெயிட் பண்ணியோ” என தன் மூக்கால் அவள் மூக்கின் நுனியை உரச..நிலாவின் உடல் நந்தனின் சிறுத் தொடுகைக்கே உருகத் தொடங்கியது.

“சொல்லு குட்டி”

“குட்டியா?” அவள் குரல் மெலிதாக வந்தது, வெறும் உதட்டு அசைவை வைத்தே இனம் கண்டுக் கொள்பவனுக்கு மெதுவாக பேசினால் கேக்காமல் இருக்குமா என்ன?.

“என்னோட குட்டி, எனக்கு மட்டுமான குட்டிடி நீ “ உள்ளுக்குள் சொல்லிக் கொண்டான் வெளியே சொல்லிருந்தால் பின்னால் வர இருக்கும் பிரச்சனைகளை தவிர்த்திருக்கலாம்.

“நேத்து தரேன்னு சொன்னதை இப்போ வேணும் தாடி” என்றவன் அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்து நாக்கால் நிமிண்ட

கூச்சத்தால் உடலை பாம்பாக வளைத்தவள்.

“நேத்து பேச்சி நேத்தோட போச்சி போங்க”. என அவனை பலம் கொண்ட மட்டும் தள்ளினாள், அவன் இன்ச் கூட நகராமல் இருக்க.

“கொஞ்சமாவது எனக்காக நகர்ந்து இருக்கலாம்ல” என்று சிணுங்கியவளுக்கு கோவம் எல்லாம் எங்குப் போனது என்றே தெரியவில்லை.

இது மஞ்சள் கயிறு செய்யும் மாயமா இல்லை மஞ்சத்தில் இருப்பவன் செய்யும் மாயமா? என்று புரியவில்லை.

“நேத்து நீ சொன்னதை செஞ்சேன் தானே”

“நானும் நேத்து நீங்க கேட்டதை தர ரெடியா இருந்தேன் தானே.”

“பார்டா பயந்தாக் கொல்லிப் பேசுது”.

“நான் ஒன்னும் பயந்தாக் கொல்லிக் கிடையாது”.

“ஆமா ஆமா கொலைப் பண்ணவனை அடிச்சவ தானே.”

“ஹா... உங்களுக்கு எப்படி தெரியும்?”.

“காத்துவாக்குல காதுக்கு வந்துச்சு. அதைவிடு இப்போ நான் கேட்டதுக்கு என்ன பதில்?”

“கீழே எல்லோரும் கோவிலுக்கு கிளம்பிட்டு இருக்காங்க”

“இருக்கட்டும்”

“நம்மளும் போகனும்”.

“அது கஷ்டம் எனக்கு ஒர்க் இருக்கு”.

“ப்ளீஸ் என்னகாக வாங்களேன்” என்று மெதுவாக அவன் காதில் சொல்ல

இதற்கு மேல் மாட்டேன் என்று சொல்லுவானா..?

அமைதியாக அவன் இருக்க “போலாம் தானே” என்றாள்.

“ம்ம் கிளம்பு” என்றவன் நேற்று இரவு வராததுக்கு ஒரு சாரி கேக்கறானா பாரு என்று முனவிய நிலாவின் இதழைக் கவ்வி கடித்து வைத்தான்.

“ஸ்ஸ் ஆஆஆ, என்ன பண்றீங்க?”

“எனக்கு இப்படி தான் சாரி கேக்க தெரியும், எப்படி சாரி வேணுமா?”

“இதுக்கு மேல எந்த லூசாவது சாரி வேணும்னு கேப்பாளா?” என வேகமாக ஓடிச் சென்று குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.

அவளின் வேகத்தைக் கண்டு தலை முடியை அழுந்தக் கோதி சிரித்துக் கொண்டான்.

அதன்பிறகு இருவரும் தயாராகி கீழேச் செல்ல,மொத்தக் குடும்பமும் அவர்களுக்காக காத்திருக்க அவர்களுடன் குலத்தெய்வக் கோவிலுக்குப் போனார்கள்.

பொங்கல் நல்லப்படியாக பொங்கியது. நிலாவின் மனம் யுகியைத் தேடியது அவன் அருகாமைக்கு மிகவும் ஏங்கினாள். காதலனை மட்டுமா மனம் தேடும் நண்பனையும் மனம் தேடும். அவனுடனான பழைய நாட்கள் மீண்டும் கிடைக்கும் வாய்ப்பு கிடைத்தால் எதைப் பற்றியும் யோசிக்காமல் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வாள்.

அவள் முகம் மாற்றத்தைப் பார்த்த நந்தன் “என்னடி?” என்றான்.

இந்த முறை அவனிடம் மறைக்க நினைக்கவில்லை நிலா.

“யுகியும் இருந்துருக்கலாம்லங்க எனக்கு அவன் பக்கத்துலயே இருக்கனும் போல இருக்குங்க”.

“ம்ம் சீக்கிரம் வந்துடுவான்” என அவளுக்காக சொன்னாலும்,குரலில் கடுமை ஏறி இருக்க.

அவனை நிமிர்ந்துப் பார்த்தவள். “நீங்க வேற அவன் வேற. நீங்க ஏன் எப்போமே உங்க இடத்துக்கு அவனை வெச்சிப் பார்க்க நினைக்கறீங்க. அவனுக்கு நான் குழந்தை எனக்கு அவன் குழந்தை. உங்ககிட்ட அப்படி இருக்க முடியுமா?” என பயமாக இருந்தாலும் மனதில் மறைத்துக் கொண்டு தைரியமாக பேசிவிட்டாள்.

“அந்தக் குழந்தையாக் கூட நான்தான் இருக்கனும்” என்றானே பார்க்கலாம்.நிலா அதிர்ந்து அவனைப் பார்த்தாள்.

“என்னடி?”

“இதெல்லாம் எப்போல இருந்து, உங்களுக்கு தான் என்னய பிடிக்காதே”

“அப்படின்னு யார் சொன்னா?”

“அப்போ புடிக்குமா?”

“தெரியல”

“என்ன பதில் இது?”என்பது போல் அவள் பார்க்க.

“சீக்கிரம் நீயே எல்லாத்துக்கும் பதில் தெரிஞ்சிப்ப” என்றவன் கோவிலுக்கு வெளியே இருந்த பூக்கடையில் மல்லிகை பூவை வாங்கி அவளது தலையில் அவனே வைத்துவிட்டான்.

வீட்டில் இருப்பவர்கள் யாராவது பார்த்திருந்தால் மயக்கம் போட்டிருப்பார்கள்.

வளவன் ஷாலினியுடன் சேர்ந்து பொங்கல் பானையைக் கிண்டிக் கொண்டிருந்தவன்.

“ஷாலு”

“சொல்லுங்க”

“யுகியை தேடலையா நீ?”

“ஏன் தேடணும் அவன் என்ன புதுசாவா பெங்களூரு போயிருக்கான், ஏற்கனவே போனவன் தானே இப்போவும் வேலைக்கு போயிருக்கான் அவ்வளவு தான்”.

ஆனால் வளவனின் மனமும் யுகியைத் தேடியது.

கூடப் பிறந்தவர்களை தவிர வளவனும் நிலாவும் தான் அதிகம் யுகித் தேடினார்கள்.

“என்ன தங்கச்சியோ” என்றவன் “இந்தப் பொங்கலை கிண்டு நான் விறகு எடுத்துட்டு வரேன். அடிப்பிடிக்க வெச்சிடாத தாயி உன் ஆயா வாயில விழ முடியாது.”

“நந்தன் அண்ணாவுக்கு அம்மா தானே வைக்கறாங்க எனக்கும் அவங்களே வெச்சிருப்பாங்க, எதுக்கு நாங்களே வெச்சிக்கறோம்ன்னு வீராப்பா பேசுனீங்க.”

“அப்போவாது உனக்கு பொங்கல் வைக்க வருதான்னு பார்க்க தான், செய் வரேன்” என அங்கிருந்து நகர்ந்தவன்.சிறிது தூரம் சென்றான்

“காடுப் போல் இருந்தப் பகுதியில் பெயருக்கு இரண்டு குச்சிகளை கையில் எடுத்துக் கொண்டவன்.யுகியின் எண்ணிற்கு அழைத்தான்.

வளவனின் எண்ணைப் பார்த்ததும் அழைப்பை ஏற்று விட்டான் யுகி.

“சொல்லுடா”

“எப்போடா வர?”

“நேத்துதான்டா வந்தேன்”

“எனக்கும் நீ பக்கத்துல இல்லாம இருக்க முடியலடா”

“உனக்கு மட்டும் தான், வேற யாருக்கு அப்படி இருக்கு”

“ஏன் உனக்கு தெரியாதா? அம்மு உன்னைய ரொம்ப தேடுறா அவ முகமே சொல்லுது.”

“சீக்கிரம் வரேன்”

“வரும் போது என்னோட பிஸ்னஸ் பார்ட்னாரா ரெடியாகி வா”

“அதுக்கு வாய்ப்பு கம்மி”

“எவ்வளவு கம்மியா இருந்தாலும் அதிகப்படுத்திட்டு வா. நம்ப பழையப்படி சிரிச்சிப் பேசி சந்தோசமா இருப்போம்”.

“ஐ வில் ட்ரை அவளைப் பார்த்துக்கோடா”

“என்னைய நெருங்க விட்டுருவானா அவன்.”

“நான் என் தங்கச்சியை சொன்னேன்.”
“நானும் நம்பிட்டேன் , உன் அருமை தங்கச்சி தேடுவா வை” என அழைப்பு துண்டித்தவனுக்கு, இப்போது தான் மனம் லேசானது போல் இருந்தது.

தனக்கே இப்படி இருக்கிறதே நிலாவிற்கு எப்படி இருக்கும் என புரிய கடவுளிடம் அனைத்தும் விரைவில் சரியாகிவிட வேண்டும் என வேண்டிக் கொண்டான்.

அனைவரும் பூஜை முடித்துவிட்டு சாமிக்கு படைத்தப் பொங்கலை பகிர்ந்துக் கொண்டு உண்டு முடித்தனர்.

“வியா”

“ம்ம்”

“நீ இப்படியே வீட்டுக்கு கிளம்பு நான் கமிஷ்னர் ஆபிஸ் போய்ட்டு வரேன்”.

“கோவிலுக்கு போய்ட்டு நேரா வீட்டுக்கு தான் போகணும்.”

“யாரு இப்படிலாம் சொன்னது?”.

நிலா சட்டென்று மணியின் பக்கம் கையைக் காட்டி விட்டாள்.

“அத்தை தான் சொன்னாங்க.”

அவ்வளவு தான் நந்தன் நேராக சென்று காரில் ஏறியவன்.”வா” என்று அதட்டினான் நிலாவை. வரும்போது இவர்களுடன் செல்வராணி குடும்பமும் வந்திருக்க.

“அவங்களை தனியா வெத்தலை பாக்கு வெச்சிக் கூப்பிடணுமா.. வர சொல்லு”

“ம்ம் பெரிம்மா வாங்க போலாம் அவருக்கு வேலை இருக்கா வீட்டுக்குப் போய்ட்டு போகணும்” என இவளாகவே சொல்ல

“நான் வீட்டுக்கு வரேன்னு சொன்னனா?”

“என்னய கூப்பிடிங்க அப்போ வீட்டுக்கு தானே” என்றாள் அவன் முகத்தை ஆசையாகப் பார்த்தவாறு.

இதை தானே அவன் எதிர்ப் பார்த்தான்.அவள் அவன் முகத்தை ஆசையாகப் பார்க்க வேண்டும் அதில் அளவு கடந்த காதல் இருக்க வேண்டும்.

இப்போது காதல் இருக்கிறது என்று சொல்ல முடியாது ஆனால் விரைவில் வந்து விடும் என நம்பியவன், மெல்லிய புன்னகையுடன் விசிலடித்தான்

நந்தன் இவ்வளவு சந்தோசமாக இருந்து பெரிதாகப் பார்த்ததில்லை நிலா.ஆச்சரியமாக அவனைப் பார்க்க அதற்குள் செல்வராணியின் குடும்பம் காரில் ஏறிவிட முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டு ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டாள்.



Leave a comment


Comments


Related Post