இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -91 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 24-07-2024

Total Views: 1496

அவனை தவறாக நினைக்க முடியவில்லை நினைக்காமலும் இருக்க முடியவில்லை. பாலாய் போன மனம் அங்கும் இங்கும் ஊஞ்சலாடியது.

வேலை அழுத்தத்தில் இருந்தவன் நிலாவின் முக மாற்றத்தைக் கவனிக்கவில்லை, அவளை வீட்டில் விட்டுவிட்டு காரை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான். 

“என்ன நிலா நீ மட்டும் வந்துருக்க அவன் எங்க?”  கார் வந்ததைப் பார்த்து மணி கேட்டார்.

“அவருக்கு ஏதோ வேலை இருக்குனு போயிருக்காரு” என கோவமாக உள்ளே நுழைய, தொலைக்காட்சியில் ரோகனின்  தண்டனைக் காலங்களைப் பற்றி தான்  பேசிக்கொண்டிருந்தனர்.

சூர்யராஜை கட்சியில் இருந்து நீக்கி விட்டதாகவும் செய்தி வந்துக்கொண்டே இருந்தது.

“அம்மு அங்க ஏன் நிக்கற.. இங்க வா?” என அழைத்தான் வளவன்.

“வரேன்ண்ணா” என அவன் அருகில் சென்று நின்றவளின் விழிகள் டிவியை விட்டு அகலவில்லை.

“எங்க  கோர்ட்டுக்கா?”

“உனக்கு எப்படி தெரியும்?”

“காலையில இருந்து அந்த நியூஸ் தானே ஓடுது”

“ஓ என்னய தவிர எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கு”  என நினைத்தவள் “ஆமா”  என்று தலை அசைக்க

“இப்போ எங்க போய்ட்டான்?”

“வேலை இருக்குன்னு”என்றவள் ‘அது என்ன வேலை என்று நினைக்கும்  போது மனம் பாராங்கல்லாய் கனத்தது

“நிலா போய் சேலையைக் கட்டிட்டு வாம்மா சொந்தக்காரங்க வர ஆரம்பிச்சிடுவாங்க”

“மறுபடியும் சேலையா?” என்று விழிக்க

!நீ ஏன் இப்படி பார்க்கறேன்னு தெரியுது,  ஷாலு இவளுக்கு சேலைக் கட்ட கத்துக் குடு”

“என்னடி சேலைக் கட்ட தெரியாதா?”, 

“ஹும்ஹும்”

“கட்டறதுக்கு நானு, அவுக்கறதுக்கு அண்ணன்,  நீ  என்னதான் பண்ணுவ?”

“ஷாலு ப்ளீஸ்” என்றவளுக்கு கவலைகளையும் மீறி முகம் சிவந்து விட்டது.

“என்னடி இப்படி சிவக்கற? போற ஸ்பீடைப் பார்த்தா என்னைய விட முந்திக்குவ போலையே”

“எதுக்கு?”

“ம்ம் கொழந்தை பெத்துக்கறதுல தான்”

“அண்ணி... “என்று நிலா சிணுங்க..

அவளை நிமிர்ந்து பார்த்த ஷாலினி.. “உன்னைய பார்த்தா எனக்கே கிக்கா இருக்குடி, அதான் அண்ணா உன் பின்னாடியே சுத்துறான் போல” என்றதும் நிலாவின் முகம் வாடி விட்டது.

அவன் உஷா உஷா என்று தானே ஓடுகிறான். அவன் எங்கு தன்னை கவனிக்கப் போகிறான் என நினைக்கும் போதே இந்த அலங்காரமெல்லாம்  யார் பார்க்க? என கவலை உண்டானது.

புடவையைக் கட்டிவிட்ட ஷாலினி  வெளியே தெரிந்த இடையில் நறுக்கென்று கிள்ளி வைத்துவிட்டு ஓடிவிட்டாள்.

“ஸ்ஆஆஆஆ.. வலிக்குது நாயே..”

“இந்த சத்தமெல்லாம் என்ற அண்ணங்கிட்ட  வெச்சிக்கோ, அவர் கிள்ளாததையா நான் கிள்ளிட்டேன்”

“ச்சி எப்படி இப்படி பேசுற..?”

“நீயும் பேசு “

“நான் பேசற மாதிரியா நீ இருக்க..கொஞ்சம் கூட வெட்கம் இல்லை, தலை குனிஞ்சு நடக்கல ஹாயா சுத்திட்டு இருக்கியே  என் அண்ணன் பாவம் தான்.என்னால அப்படி பண்ண முடியலையே அவரைக் கண்டாலே உடம்பு உதறது”

உன் அண்ணன் பார்க்க தான் பாப்பா  மாதிரி இருக்கான் இங்கப் பாரு எப்படி கடிச்சி வெச்சிருக்கான்” என  வளவன் கடித்த இடத்தைக் காட்டப் போக.

“சீ கருமம் புடிச்சவளே எதை காட்டறதுன்னு விவஸ்தை இல்லை.”

“அடியே நான் கழுத்தை தான் காட்டுனேன் உனக்கு எதுக்கு இம்புட்டு  வேகுது”’.என்றவளுக்கும் வளவன் செய்த காரியத்தில் வெட்கம் உண்டாக.நங்கையும் நாத்தியும்  ஒருவரை ஒருவர்  பார்த்துக்கொண்டனர்.

“நிலா”

“ம்ம்”

“சந்தோசமா தானே இருக்க?”விளையாட்டை விட்டுவிட்டு  தீவிரமாக கேட்டாள்.

“என்ன அண்ணா கேக்க சொன்னானா.?”

“இல்ல நான்தான் கேக்கறேன்”

“நம்பிட்டேன்” என்றவள் எனக்கு என்ன குறை நல்லா தான் இருக்கேன்

“எல்லாம் நல்லப்படியா முடிஞ்சுதா” என்றதும் இரவு நடந்தது கண் முன் வர..வெட்கத்துடன் அடக்க முடியாத புன்னகையும் வந்தது அதை வைத்தே கண்டுக்கொண்டாள் ஷாலினி.

“என்னடி பண்றீங்க ரெண்டுபேரும் இன்னுமா சேலைக் கட்டி முடிக்கல சீக்கிரம் வெளிய வாங்கடி.”

“அத்தை கூப்பிடறாங்க,நான் போறேன் “என நிலா ஓடப் போக அவளை இழுத்து நெற்றி முறித்தவள், “எங்க அண்ணங்களுக்கு மட்டுமில்ல எனக்கும் உன்னைய ரொம்ப புடிக்கும்டி இடையில நடந்ததை”

“மறந்துட்டேன் ஷாலு இதை நீ சொல்லி தான் நான் புரிஞ்சுக்கணும்னா இத்தனை வருஷ நட்பு பொய்ன்னு ஆகிடாதா வா” என  அவளையும் ஒருக் கை இழுத்துக் கொண்டு வெளியேப் போனாள்.

மகளும் மருமகளும் ஒரே மாதிரியான புடவை, இருவருமே அழகில் மிளிர.

“உன் புருஷன் இன்னும் வரலையே  எங்க போனான்னு போன்   பண்ணி கேட்டு வர சொல்லு” 

“ம்ம் “ என்றவளுக்கு அவன் போயிருக்கும் இடம் தெரிந்தாலும் அழைக்க மனமில்லை.

“ம்ம் ம்ம் ன்னு தலையை ஆட்டாம  என் கண்ணு எதிர்க்காவே போனைப் போடு தாயி.”

“இவங்க விட மாட்டாங்க போலையே “என்று நினைத்தவள் நந்தனின் எண்ணிற்கு அழைத்தாள்.

“ஹெலோ”

“வீட்டுல சொந்தக்காரங்க எல்லோரும் வர ஆரம்பிச்சிட்டாங்கங்க”

“ம்ம் வரேன்”  என்றவன்  “ஏய் தள்ளு உஷா.. வலிக்குதா சரியா போய்டும்”
என்று நந்தன்  உஷாவிடம் சொல்லிக் கொண்டிருக்க..நிலாவின் மூளை என்ன என்னவோ யோசித்தது.

இரவு அவளிடமும் அதை தானே சொன்னேன்.

“குட்டி வலிக்குதா கொஞ்சம் பொறுத்துக்கோ  அவ்வளவு தான் சரியாகிடும்  குட்டி.... “ என நொடிக்கு ஒரு முறை அவள் நெற்றில் இதழ் பதித்துக் கொண்டே இருந்தானே அதெல்லாம் இப்போது இன்னொருத்திக்கும் சொந்தமா?  என்று நினைக்கும் போதே, உயிரோடு இதயத்தை யாரோ வெளியே பிடுங்கிப் போடுவது போல் வலித்தது. அவர்களின் கொஞ்சலைக் கேக்க மனமில்லாமல் சட்டென்று அழைப்பைத் துண்டித்து விட்டாள்.

நிலாவின் முகமாற்றத்தை கவனித்துக் கொண்டிருந்த இருந்த மணி எதுவும் கேக்கவில்லை.

நிலா நீ  போய் ரூமில ரெஸ்ட் எடு..  அவன் வந்ததும் சேர்ந்தே இரண்டு பேரும் வந்துக்கலாம், இல்லனா உன்னைய தான் போட்டு தொல்லைப் பண்ணுவாங்க”

“வந்தவீங்க தப்பா நினைச்சிக்கப் போறாங்க அத்தை”.

“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் “என பேசி அனுப்பி வைத்து விட்டார்

அறைக்கு வந்த நிலா கதவை அடைத்து விட்டு ஒஒஒஒஒ வென்று கதறி அழுதாள்.

இப்படி ஏதாவது நடக்கும் என முன்பே தெரியும் தான்.அதனால் தான் தங்களுக்கு இடையே உறவை ஏற்படுத்தாமல் இருக்க நினைத்தாள். இப்போது எல்லாமே கை மீறி போய்விட்டது  நந்தனுடன்  மனதாலும் உடலாலும் இணைந்த பிறகு அவனை விட்டுக் கொடுக்கும் அளவிற்கு நல்லவளும் இல்லை தியாகியும் இல்லை.

கதறி அழுது முடித்தவள் கண்களை அழுந்த துடைத்துக் கொண்டாள்.

நிலா,  நந்தன் என்றால்  வந்துவிட்டால் மட்டுமே கோழையாக இருந்தாள் மற்றபடி தைரியசாலி தான் இனி நந்தன் இடத்திலும் தைரியமாக தன் கருத்துக்களை முன் வைக்க வேண்டும் என்று எண்ணி மனதை திடப்படுத்திக் கொண்டாள்.

மதியம் இரண்டு மணிக்கு மேல் நந்தன் வந்து கதவை தட்டினான்.

மன அழுத்தம் தாங்காமல் உறங்கி விட்டாள் நிலா.  மன அழுத்தம் காரணமாக ஒரு சிலருக்கு தூக்கமே வராது, ஒரு சிலருக்கு தூக்கமாக வந்து கொல்லும்.. நிலா இதில் இரண்டாம் ரகம்.

கதவைத் தட்டி பார்த்தவன், அது திறக்கவில்லை என்றதும் தன்னிடம் இருந்த சாவியைக் கொண்டு கதவை திறந்துக் கொண்டு உள்ளேப் போனான்.

கலைந்த மோனாலிசா ஓவியம் போல் படுக்கையில்  உறங்கிக் கொண்டிருந்தாள் நிலா. ஆடை விலகி அங்கங்களை வெளிச்சம் போட்டு காட்ட, அதில் பளிரென்று தெரிந்த இடைக்குத் தான் நந்தனின் பார்வைச் சென்றது....

நேற்று இரவு நடந்த கூடல் வேறு நியாபகம் வர, இப்போதும் நிலா வேண்டும் என்று அவன் தேகம் தீயாக எரிய தூங்கிக் கொண்டிருப்பவளிடம் தன் மோகத்தை காட்டும் அளவிற்கு மிருகமில்லை என்பதால், அவளை அணைத்துக் கொண்டு அருகில் படுத்துவிட்டான்.

நந்தனின் பரிசமும் வாசனையும் நிலாவின் தூக்கத்தைக் கலைத்தது...மெதுவாக கண் விழித்தவள் அருகில் நந்தனைப் பார்த்ததும் பட்டென்று எழுந்து அமர்ந்துவிட்டாள்.

“குட்டி தூங்கலையா?”

அவன் குட்டி என்ற விழிப்பில்லையே அவனின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டவள்,  நந்தனை விட்டு விலகி, அறையை விட்டு வெளியேப் போக, அவனிடம் பேசாமல் போகிறாள் என்றதும் நந்தனுக்கு கோவம் வந்து விட்டது.

அவள் கையைப் பிடித்து இழுத்து படுக்கையில் போட்டவன்,  “கேள்வி கேட்டா பதில் வரணும்”. என்றான் அழுத்தமாக.

அவனுக்கு பதில் சொல்லாமல் முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டவள்.

“எதுக்கு பதில் சொல்லணும்?” முதல் முறையாக நந்தனை எதிர்த்துப் பேசினாள்.

“என்னடி பேச்செல்லாம் ஒரு மாதிரி இருக்கு”

“உங்க நடவடிக்கையும் கூட தான் ஒரு மாதிரி இருக்கு”. என்றாள் தைரியமாக. உள்ளுக்குள் அவ்வளவு பயம், அவன் அடிப்பது புதிதில்லை என்றாலும்  மன சோர்வு உடலையும் சோர்வாக்கி இருக்க உடல் தாங்க வேண்டுமே. போலீஸ் அடியை தாங்கும் அளவிற்கு உடலில்  வலு இல்லை.

நிலாவின் பேச்சில் கண்கள் இடுங்கப் பார்த்தவன். அவளை விட்டு விலகி

“ம்ம் பேசு.. இன்னிக்கு ஒரு முடிவுக்கு வந்துடலாம்”. என்றான்,  ரோகன் விஷயம் ஓரளவிற்கு  முடிவுக்கு வந்ததால் தங்கள் வாழ்க்கையில் இருக்கும் குழப்பங்களை பேசி சரி செய்து விட வேண்டும் என முன்னுக்கு வந்துவிட்டான்.

“பேச என்கிட்ட என்ன இருக்கு?” என்றவளின் குரலில் தடுமாற்றம். அவள் கேட்டு அவன் “ஆமா, நான் இப்படி தான்  வேணுனா இரு இல்லனா கிளம்பு”  என்று விட்டால் என்ன செய்வது?.

“என்னோட நடவடிக்கை சரியில்லைங்கற மாதிரி சொன்ன” என்றவாறே கையில் இருந்த கடிகாரத்தை கழட்டி  மேஜையின் மீது வைத்தான்.

அவன் ஆளுமையில் மானக்கட்ட மனம் அவன் பக்கம் தானே சாய்கிறது. இதுநாள் வரையிலும் அவனின்  வன்மையை மட்டும் பார்த்திருந்தவள் நேற்று இரவு அவனின் மென்மையான பக்கத்தையும் பார்த்துவிட்டாளே. ஒரே இரவில் இத்தனை வருடங்கள் பட்ட கஷ்டத்தை அனைத்தும் மறக்கும் அளவிற்கு அவளை கொண்டாடி தீர்த்துவிட்டான்.

இந்த அளவிற்கு நந்தன்  அவளைக் கொண்டாடுவான் என துளியும் எதிர்பார்க்கவில்லை. இந்த அன்பிற்கு தானே பாலைவனம் போன மனம் ஏங்கி தவித்தது.

அதை இன்னொருத்திக்கு விட்டுக் கொடுத்துவிட்டு போகும்  அளவிற்கு பொதுநலம் மனம் படைத்தவள் அல்ல,. தன்னவன் தனக்கு மட்டும் தான் என்ற பெரும் சுயநலம் கொண்டவள்,’பேசினால் பிரச்சனையாகிவிடும்’  என  அவன் சட்டையைக் கழற்றும் நேரம் பார்த்து  வெளியே ஓடிவிட்டாள்.

“ஏய் வியா?”

‘நின்றால் பாருடா’ என்பது போல் திரும்பியும் பார்க்காமல் சென்று விட்டாள்.

ஏதோ ஒன்று அவள் மனதில் கிடந்து அழுத்துக்கிறது என புரிந்துக் கொண்டவன் இரவு பேசிக் கொள்ளலாம் என விட்டுவிட்டான்.




Leave a comment


Comments


Related Post