இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -97 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 30-07-2024

Total Views: 1533

அவர்கள் வந்ததும் எல்லோரும் அடித்துப் பிடித்து அருகில் ஓட.. 

நந்தனை மருத்துவர்களுக்கு முன்பே தெரியும்,என்பதால் அவனிடம் பேசினார்கள். 

"மிஸ்டர் நந்தன்." 

"டாக்டர்... "என்றவனுக்கு,அவர்கள் என்ன சொல்லப் போகிறார்களோ என்று உள்ளுக்குள் உதறல் எடுத்துவிட்டது.. அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல்.. விறைப்பாக நின்றான். 

"எங்களால முடிஞ்ச அளவுக்கு காயத்துக்கு எல்லாம் தையல் போட்டுட்டோம்.நல்லவேளை அவரை ப்ரொடெக்ட் பண்ணறதுக்கு கீழே உக்கார்ந்து கையை குறுக்க வெச்சதால உயிர்நாடி, முகம், கழுத்துன்னு இதுல பெருசா வெட்டு விழுல." 

"ம்ம்ம்" 

"ஆனா ரத்தம் நிறைய போயிருக்கு, தலையில ரெண்டு வெட்டு பலமா பட்டுருக்கு, ஸ்கேன் பண்ணிருக்கோம் இப்போதைக்கு மூளை நரம்புகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனா பின்னாடி ரத்தம் உறையறதுக்கு வாய்ப்பு இருக்கு,பிளட் ஏத்திட்டே இருக்கோம் புல் பாடி ஸ்கேன் பண்ண வேண்டியிருக்கும், பண்ணிட்டு என்னனு சொல்றோம். முடியாது.48 மணி நேரம் அப்சர்வேஷன்ல இருக்கட்டும் பார்த்துட்டு தான் சொல்றோம்". 

"48 மணி நேரம் வரைக்கும் என்னால பொறுமையா இருக்க முடியாது நான் இப்போவே அவனைப் பார்க்கனும்" என நிலா உள்ளேப் போக முயற்சி செய்தேன். 

“என்னம்மா பண்றீங்க..?பேசண்ட் ரூமுக்குள்ள போனா அவங்களுக்கு இன்பெக்ஷன் ஆகிடும்ன்னு தெரியாதா?, அவருக்கு என்ன காய்கறி வெட்டும் போதா காயம் ஆகியிருக்கு . உடம்புல ஒரு இடம் பாக்கி இல்லாம வெட்டிருக்காங்க. ." என்றார் மருத்துவர் உறுதியாக. 

"சார் உள்ளேப் போங்காம பார்த்துக்கறேன்". என நந்தன் நிலாவைப் பிடித்துக் கொண்டவன் "அமைதியா இருடி". என்றான் மெதுவாக. 

"முடியாது நாலுநாள் என்னால அவனைப் பார்க்காம இருக்க முடியாது" என துள்ள.. 

"அடி வாங்கிடாத வியா.. வளவா, இவளை இழுத்து கொண்டு போய் வீட்டுல விட்டுட்டு வா" 

"நான் எங்கயும் போக மாட்டேன் இப்போ விடறீங்களா இல்லையா?" 

"வியா ஆல்ரெடி எல்லோரும் கவலையில இருக்கோம், அவங்க நிலைமை புரிஞ்சிக்காம நீ ரொம்ப பண்ணிட்டு இருக்க..உனக்கு மட்டும் தான் அவன் முக்கியமா, இங்க இருக்கவீங்களுக்கு முக்கியமில்லையா?" என நந்தனின் ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தமாக வந்தது, பார்வை மணியையும் ஷாலினியையும் தொட்டுச் சென்றது. அவர்கள் அழுதவாறு நிலாவை சமாதானம் செய்ய.. 

நந்தனுக்கு இந்த கோவம் அதிகம் வந்துவிட்டது. 

"உனக்கு உன்னோட பீலிங் தான் பெருசா?, பெத்தவீங்களையும் , கூட பொறந்த எங்களையும் விட நீ முக்கியமானவளா..? அவன் இந்த நிலைமையில இருக்கறதுக்கு மொதக் காரணமே நீதான்.கம்முனு பெங்களூருல இருந்தவனை இப்பவே வா வான்னு இழுத்துக் கொண்டு வந்து இப்படி படுக்க வெச்சிட்டு,இதுல பார்க்க வேற செய்யணுமா?" 

"நந்து அவ அவன் மேல இருக்க பாசத்துல தானே அப்படி பண்றா?" என வளவன் நைந்த குரலில் கூற 

"யாருக்கு பாசமில்ல எல்லோருக்கும் தான் பாசமிருக்கு. அவங்களா இப்படியா பண்ணிட்டு இருக்காங்க.இவ பண்றதுல வேற ஹாஸ்பிடல் கொண்டு போங்கன்னு சொல்லிட்டா ஒவ்வொரு ஹாஸ்பிடல ஏறி இறங்கிட்டு இருக்க முடியுமா?". என கர்ஜித்தான்.

அவன் கர்ஜனையில் அழுதுக் கொண்டிருந்தவர்கள் கூட கப்சிப் என்றாகிவிட..

நிலா ஓரமாக போய் ஒரு நாற்காலியில் உக்கார்ந்து விட்டாள்.

நந்தன் சொன்ன வழியில் நிலா யோசிக்கவே இல்லை. அவள் வர சொன்னதால் தான் இந்த விபத்து நடந்துவிட்டது என  இப்போது  யோசிக்க, உள்ளம் மறுக ஆரம்பித்துவிட்டாள்.

"அவன் எனக்கு சந்தோசத்த மட்டும் தான் கொடுத்தான், ஆனா நான் அவனுக்கு வலியை மட்டும் தான் கொடுத்துருக்கேன் கொடுக்கறேன்,  என்ன ஜென்மம் நான்?"  என உள்ளுக்குள் ஒவ்வொரு நொடியும் வெந்து தணிந்தாள்.

அவளின் அமைதி நந்தனை  கலவரமாக்கியது என்னவோ உண்மை.. கத்தி ஆர்ப்பாட்டம் செய்யும் போதுக் கூட இந்த அளவிற்கு பயப்படவில்லை நந்தன் இப்போது பயந்தான்.

அவளை வேறு குற்றம் சொல்லிருக்கிறான் அதையே நினைத்து மறுகுவாளோ என அவள் அருகில் போக போவ,அதற்குள் வளவன் மணி இருவருமே  ஆளுக்கு ஒருப் பக்கம் அமர்ந்து அவளிடம் பேசத் தொடங்கிவிட அவளை நோக்கி நகர்ந்து கால்கள் அப்படியே நின்று விட்டது.

"அம்மு."

"நிலாம்மா".

யார் எப்படி அழைத்தும் நிலாவிடம் இருந்து வார்த்தைகள் வரவில்லை.

"அவன் கோவத்துல சொல்லிடான்டா..அதுக்காக இப்படி இடுஞ்சிப் போய் உக்காருவியா?". என இருவரும் எப்படி எப்படியோ பேசிப் பார்க்க, எந்த அளவிற்கு ஆர்ப்பாட்டம் செய்தாளோ அந்த அளவிற்கு அமைதியாக இருந்தாள்.

இங்கு அனைவரையும் பித்துப் பிடிக்க வைத்து விட்டு யுகிப் பாட்டுக்கு ஆழ்ந்த நித்திரையில் இருந்தான்.

அவனது பூனையின் நிலை அறிந்திருந்தால் அவளை காக்கவாது எமனோடு போராடி  மீண்டு வந்திருப்பானோ என்னவோ.
இரு நாட்கள் கடந்து விட்டது நந்தன் பேசிய அன்று அமைதியான நிலா தான்,  அதன் பிறகு அவளிடம் இருந்து ஒற்றை வார்த்தை யாராலும் வாங்க முடியவில்லை.அவளின் அமைதியைப் பார்க்க முடியாமல் வெளியேறிய நந்தன்,  யார் இப்படி செய்தார்கள்? எதற்கு செய்தார்கள், என்று துல்லிமாக தேடிக் கண்டுப் பிடித்து, அவர்களை தாக்கும் வியூகம் அமைத்துவிட்டு  தான் இரண்டு நாட்கள் கழித்து மருத்துவமனைக்கு வந்தான்.

இன்று யுகியின் உடல்நிலையைப் பற்றி மருத்தவர்கள்  சொல்வார்கள்  என மொத்தக் குடும்பமுமே  மருத்துவமனையில் கூடிவிட்டனர்.

மணிக் கூட இந்த இரண்டு நாளில் வீட்டிற்கு சென்று வந்தார். நிலா நகரவே மாட்டேன் என அடமாக ஒரே இடத்தில் அமர்ந்துவிட்டாள், அவளுக்கு துணையாக ஷாலினியும் இருந்துக் கொண்டாள்.

விஷயம் ஊர் முழுக்க காட்டுத் தீப் போல பரவி விட.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி பேசினர்.

'புது மருமகள் வந்த நேரம் தான் என  ஒரு சிலரும், ஜாதி விட்டு ஜாதி மாத்தி கல்யாணம் பண்ணதால சாமிக்கே  பொறுக்காம தான் தண்டிச்சிருச்சி என்றும், இரண்டு கல்யாணம்  ஒரே நேரத்துல பண்ணதுல கண்ணுப்பட்டுப் போச்சி எனவும், பலவிதமாக  பேசிக்கொண்டனர். துக்கத்தில் இருப்பவர்களுக்கு  தோள் கொடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. துன்பப்படுத்தாமல் இருக்க வேண்டும். காற்று உள்ளப் போதே தூற்றிக் கொள்ள வேண்டும்  என்ற பழமொழியை இதற்கு பயன்படுத்திக் கொள்வார்கள் போல,   எப்போ  எப்போ என காத்திருந்து நந்தன் குடும்பம் கிடைத்ததும் இதுதான் வாய்ப்பு என கண்டதையும் பேசிவிட்டார்கள்.

இதெல்லாம் குடும்பத்தில் உள்ளவர்களின் காதில் விழுக தான்  செய்தது. அவர்களைப் பற்றி கவலைப்படும் நிலையிலா குடும்பம் இருக்கிறது.

ஐந்து பேர் மருத்துவர்கள் குழு யுகி இருந்த ஐசியூ வின் உள்ளேப் போக எல்லோருக்குள்ளும் பதட்டம் தொற்றிக் கொண்டது. 

"ஷாலு.." 

"அம்மா" 

"டாக்டர் பார்க்க விட்டுருவாங்கள." 

"இல்லம்மா அவன் எப்படி இருக்கான்னு செக் பண்ணி சொல்லுவாங்க. பார்க்கறதுக்குல நார்மல் வார்டுக்கு மாத்துனா தான் விடுவாங்கன்னு நினைக்கறேன்". 

"அது எத்தனை நாள் ஆகும்" 

"அதை தான் இப்போ டெஸ்ட் பண்ணி சொல்லுவாங்க" 

"ம்ம்ம்" என்றவருக்கு குரல் கம்ம 

"அம்மா மறுபடியும் அழாத,அண்ணா பார்த்தான் சத்தம் போடுவான்" என்றவளுக்கும் இரண்டு நாளாக உணவு உள்ளுக்குள் இறங்கவில்லை. 

ராஜி மகளை கவனித்தாரோ இல்லையோ மொத்தக் குடும்பத்தையும் இந்த இரண்டு நாட்களாக அவர் தூக்கி நிறுத்திக் கொண்டிருக்கிறார். 

மருத்துவர்கள் உள்ளே இருக்கும் நேரத்தில் ஒவ்வொருவருக்கும் இதயம் வேகமாக துடித்தது. 

"எனக்கு படபடன்னு வருது,என்னால முடியல" என கிருஷ்ணம்மாள் அப்படியே அமர்ந்துவிட்டார். 

"காபி வாங்கிட்டு வரவா ஐயா,?" என்றான் நந்தன். 

"ராசா.. டாக்டர் வந்து என்ன சொல்லுவாங்களோன்னு ஒவ்வொரு நிமிஷமும் திக்குதிக்குன்னு இருக்கு". 

"ரெண்டு நாள் ஆகியும் மூச்சு இருக்குல்ல இதுக்குமேல என்ன ஆகிடும், அவன் சரியாக தான் மாசம் ஆகுமே தவிர நம்பள விட்டு எங்கயும் போக மாட்டான்! என்றான் வளவன் 

நிலா யாரிடமும் பேசாமல் ஒரு ஓரமாக நின்றிருந்தாள். 

இரண்டு மணி நேர பரிசோதனைக்குப் பிறகு மருத்துவர்கள் வெளியே வந்தனர்... 

"டாக்டர்.." 

"யுகி பூனைக்குன்னா. ரொம்ப புடிக்குமோ, அந்த பூனையைக் கொண்டு வாங்க.. அப்போதான் அவரோட மனநிலை எப்படி இருக்குன்னு கண்டுபிடிக்க முடியும்.?" 

எல்லோருடைய பார்வையும் நிலாவை வருடியது. 

"என்ன அவங்களைப் பார்க்கறீங்க? யாரையாவது அனுப்பி அந்த பூனையை புடுச்சிட்டு வாங்க, அதுகிட்ட அவர் ரியாக்ட் பண்றதை வெச்சி தான், நாங்க முடிவு பண்ண முடியும்." 

"டாக்டர் இவ தான் பூனை அவன் இவ்வளவு தான் அப்படி கூப்பிடுவான். அம்மு போ" என வளவன் நிலாவை தள்ள..யுகிக்காக உள்ளேப் போனாள். 

யுகியின் உதடுகள் "பூனை பூனை" என உச்சரித்துக் கொண்டே இருந்தது. 

யுகியைப் பார்த்ததும் மூன்று நாட்களாக அடக்கி வைத்த கண்ணீர் உடைபெடுக்க, அவன் நிலையைப் பார்க்க முடியாமல் சுவரில் சாய்ந்து வாயை இருக் கைகளாலும் மூடிக்கொண்டு கதறி அழுதாள். 

"எமோஸ்னலை கண்ட்ரோல் பண்ணுங்க. மேம்.அவர் முன்னாடி அழுதீங்கன்னா அதுக் கூட அவரைப் பாதிக்க வாய்ப்பிருக்கு" 

"ம்ம்ம்" என்றவள் கண்களைத் துடைத்துக் கொண்டு யுகியின் அருகில் தயங்கி தயங்கிப் போனாள். 

"பூ... னை"என மிக மெலிதாக குரல் வர, நிலாவால் அழுகையை அடக்க முடியவில்லை. 

இந்த  அன்பிற்கு இணை உண்டா.. 

?சிறந்த தந்தை இதையெல்லாம் கொடுக்கவில்லை என்றாலும், சிறந்த அன்பாளனை கொடுத்திருக்கிறார். அந்த ஒன்றிர்காவே நிலா கடவுளுக்கு ஆயிரம் முறை நன்றி சொல்ல வேண்டும்.

"யுகி" என்றாள் மெதுவாக.அன்று அவ்வளவு சத்தம் போட்டவளால், இன்று ஒரு வார்த்தை பேசுவதற்குள் மூச்சி திணறியது. 

"யுகி.." 

"கூப்பிடுங்க மேம் இல்லனா வேற ஏதாவது பேசுங்க.. நீங்க கூப்பிட கூப்பிட அவங்க ரியாக்ட் பன்றாங்க பாருங்க" 

"ம்ம்ம் யுகிம்மா உன் பூனை வந்துருக்கேன்டா.. கண்ணைத் தொறந்து பாரேன்", இதுக்குமேல அழுகையை அடக்க முடியாது என புரியல சுடிதார் சாலை வாயில் பொத்திக் கொண்டு அழுதாள். 

அவள் அழுகை அவன் காதில் எட்டியதோ என்னவோ உடலில் உதறல் தோன்ற.. 

"ப்ளீஸ் காம் டவுன் மேம்.. கொஞ்சம் பொறுமையா இருங்க.. நீங்க அழுதா அது அவரை பாதிக்குது பாருங்க.." என்றார் மருத்துவர். 

மருத்துவருக்கே ஒன்றும் புரியவில்லை. எப்படி இது சாத்தியம்? யுகி நிலாவின் கணவனும் அல்ல, அதே நிலாவும் யுகியின் மனைவியும் அல்ல.. இருவருக்கும் இடையே இருக்கும் உறவை, நந்தன் அவன் என் தம்பி, இவ என் மனைவி 
என முடித்துக் கொண்டான்.  

அப்படி இருக்கும் போது கணவனின் தம்பி மீது எப்படி இந்த அளவிற்கு பாசம். அண்ணனின் மனைவியின் பெயரை மந்திரமாக உச்சரிக்க என்ன காரணம்? என தெரியாமல் விழி பிதுங்க.. 

"மேம்" 

"ம்ம்ம்" 

"இவரு உங்க பிரதர் இன் லா தானே." 

"ஹா.." என்றவளுக்கு அந்த உறவைப் பற்றியெல்லாம் யோசித்ததுக் கூட இல்லை. 

தோழன், கொழுந்தன் என்று தள்ளி வைக்க தெரியவில்லை நிலாவிற்கு. 

“இவன் என்னோட அப்பா.. நடக்க கத்துக் குடுக்கிறது அப்பான்னா இவன் எனக்கு அப்பா தான், பேசக் கத்துக் குடுக்கிறது அம்மான்னா இவன் எனக்கு அம்மா,அழுகும் போது கண்ணைத் தொடச்சி தோள் கொடுத்து தட்டி குடுக்கறது பிரண்ட்டுன்னா இவன் எனக்கு பிரண்ட். இருந்தா இது தான்னு பிரிச்சி சொல்ல முடியும், இவன் எனக்கு எல்லாமா இருந்துருக்கான், நான் எந்த உறவுன்னு சொல்றது டாக்டர்.."என்றவள் அவ்வளவு நேரம் அடக்கி வைத்த அழுகை அதற்கு மேலும் அடக்க முடியாமல் கதறி விட்டாள். 

நிலா பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் யுகியின் காதுகள் கேட்டுக் கொண்டே இருந்தது. 

அவன் எண்ணியது போல தான் நிலா அவனை தாயுமானவனாக பார்த்திருக்கிறாள். அப்படி ஒரு உயர்ந்த இடத்தில் வைத்திருக்கும் போது காதல் என்ற உணர்வு அவர்களிடம் தோன்றாது. அதனால் தான் யுகியை நிலா காதலிக்கவில்லை. அந்த அன்பை எப்போதும் போல் தக்க வைத்துக்கொள்ள, பாதுகாக்க யுகி எது வேண்டும் என்றாலும் செய்வான். 

யுகியின் கருவிழிகள் அங்கும் இங்கும் ஆட, நிலாவின் பேச்சு தான் அதற்கு காரணம் என புரிந்தது. 

இந்த அளவிற்கு ஒரு உறவை பார்த்திராததால் வாயைப் பிளந்து கொண்டு நின்றிருந்தார் மருத்துவர். 

"யுகிம்மா ப்ளீஸ்.. எழுந்திருடா" என நிலா கெஞ்சினாள்.கதறினாள், கொஞ்சக் கூட செய்தாள், ஏதாவது செய்தால் அவன் கண் முழித்து விட மாட்டானா என ஒரு கோமாளியாக மாறி நின்றாள்.



Leave a comment


Comments


Related Post