இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -104 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 10-08-2024

Total Views: 1547



நந்தன் மேல் சிறிது ஒட்டி இருந்த பயம் கூட ஓடி தெறித்து ஓடிவிட்டது,அவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க இருக்க இவளுக்குள் அவனை சீண்டிப் பார்க்கும் ஆவல் பேராவலாக பிரவாகம் எடுத்து விட்டது.

இதற்கு மேலும் அமைதியாக இருந்தால் அவள் எப்படி நிலா ஆவாள்.அவன் எதுவும் சொல்லாத வரை சீண்டிக் கொண்டே இருப்பாள்.

“நந்தன்”.

“சொல்லுங்க டாக்டர்”.

“இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம், ஒரு மாசம் வீக்லி ஒன்ஸ் கூட்டிட்டு வந்து காட்டிட்டுப் போங்க, அப்புறம் மாசம் ஒருதடவை வந்தா போதும்.”

“ஓகே.”

“ம்ம் டிஸ்சார்ஜ் சம்மரிலா கிளியர் பண்ணிட்டீங்களா?”

“ம்ம் பண்ணிட்டோம் டாக்டர் கிளம்பட்டுமா?” என்றான் யுகி ஆர்வமாக.

அவன் தலையை கலைத்து விட்ட மருத்துவர். “அவ்வளவு அவசரம். ம்ம் சரி கிளம்புங்க. ஹெல்த்தி புட்டா எடுத்துக்கோங்க”.என்று சொல்லிவிட்டு சென்று விட.

யுகி நந்தனை அழைத்தான்.

“நந்து”

“ம்ம்”

“எனக்கு வீல் சேர் ஒன்னு அரேன்ஜ் பண்ணே.”

“அது எதுக்கு?”

“கால் சரியாகற வரைக்கும் நடக்க ஒவ்வொருவரையும் எதிர்பார்க்க வேண்டியதிற்காதுல” என யுகி சொல்லவும் நிலாவிற்கு கண்கள் கலங்கி விட்டது.

அதைப் பார்த்த நந்தன் முகம் இறுக “ம்ம் பார்க்கறேன்”  என்று விட்டான்.

“ம்ம்”

யுகி கேட்டதும் சரிதானே அவன் நடக்கும் வரைக்கும் யாரையும் எதிர்பார்க்க வேண்டும் என்ற அவசியமில்லையே அவன் சொன்னதை யோசித்த நந்தன் பட்டன் வைத்த வீல்சேரை வாங்கிக் கொண்டான்.

மூவரும் கிளம்பி வீடு வந்து சேர்ந்தனர்.

யுகிக்கு ஷாலினி ஆரத்தி சுற்றி உள்ளே அழைக்க,அவனுடன் உள்ளே வந்த நிலாவை

“நீ எங்க வர?” என்றான் நந்தன்.

ஒரு மாதம் கழித்து பேசிக்கிறானே என்று மகிழ்வதா?, இல்லை குதர்க்கமாக பேசுகிறானே என கவலைப்படுவதா? என்று தெரியாமல் நிலா கவலையாக அவனைப் பார்க்க.

“என்ன ராசா பேசற?, வீட்டு மருமக உள்ளார வராம வேற எங்கப் போவா.?” என்றார் கிருஷ்ணம்மாள்.

“அவளை மிரட்டி தானே கல்யாணம் பண்ணுனேன். அப்படி கட்டாயப்படுத்தி என்னோட வாழனும்ன்னு அவசியமில்ல, இதுக்கு மேல அவ வாழ்க்கை அவளே முடிவு பண்ணிக்கலாம். சீக்கிரம் டிவோர்ஸ் பண்ணிடறேன். டிவோர்ஸ் கிடைக்கற வரைக்கும் அவ வீட்டுலயே இருக்கட்டும்” என்றான்.

“என்ன நந்து பேசற?. கல்யாணம் ஆகி ஒரு நாள் கூட உருப்படியா வாழல, அதுக்குள்ள டிவோர்ஸ் அது இதுன்னு பேசிட்டு இருக்க.?” என மார்த்தி அதட்டவும் 

“நான் முடிவு எடுத்துட்டேன்”, என்றவன் உள்ளப் போக.

“நீ முடிவு பண்ணிட்டா போதுமா? நானும் முடிவு பண்ணனும். உன் இஷ்டத்துக்கு மிரட்டி கல்யாணம் பண்ணிப்ப, அப்புறம் வேண்டாம்னு சொல்லுவ, நீ என்ன சொன்னாலும் நான் செய்யணுமா?,நான் டிவோர்ஸ் குடுத்தா தானே, குடுக்க முடியாது”. என மரியாதை எல்லாம் காற்றில் பறக்க கத்த, நந்தனை எதிர்த்து பேசும் நிலாவை எல்லோரும் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் பார்த்தனர், அதுவும் மரியாதை இல்லாமல் பேசிக்கிறாள் என்றால் ஆச்சரியம் எழாமல் இருக்குமா.?

“உன்கிட்ட இருந்து எப்படி டிவோர்ஸ் வாங்கணும் எனக்கு தெரியும் போடி”.

“அதை நானும் பார்க்கறேன்டா” என்றவள்.. அழுது ஆர்ப்பாட்டமெல்லாம் பண்ணவே இல்லை. அவளை மட்டும் நேசிக்கும் இதயம் அவனுடையது என தெரிந்ததால் வந்த தைரியம் அது.

“அம்மா பாயசம் வைம்மா,இன்னைக்கு நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்” என நிலா அவளுடைய பையைத் தூக்கிக் கொண்டிருக்க

அவளை எல்லோரும் ஒரு மாதிரி பார்த்தனர்

நந்தனுக்கு அவர்களின் பார்வையும் இவளது நடவடிக்கையும் சேர்த்து சிரிப்பு வந்து விட்டது.

“இந்த குட்டி சாத்தான் இன்னும் என்ன என்ன பண்ணப் போறாளோ?” என நினைக்கும் போதே இழந்த காலங்களைத் திரும்ப பெறப் போகிறோம் என உள்ளம் மகிழ்ந்துப் போனது. எதுவும் சொல்லாமல் அறைக்குப் போய்விட்டான்.

“என்னடா இது?. அவ வாடா போடான்னு மரியாதை இல்லாம பேசற, இவன் பாட்டுக்குப் போறான்?”. வளவன் யுகியின் காதை கடிக்க.

வீட்டுக்கு வந்ததும் நிலா கேக்கறேன் என்ற கேள்வியைத் தவிர வேற எதைப் பற்றியும் சிந்தனை இல்லாமல் இருந்த யுகி 

“அவங்க புருஷன் பொண்டாட்டி என்னமோ பேசிட்டுப் போறாங்க உனக்கு என்னடா பிரச்சனை?” என வளவனிடம்  சுள்ளேன்று விழுந்தான்.

“நீயா பேசியது என் அன்பே,  நீயா பேசியது?” என வளவன் நெஞ்சைப் பிடிக்க.

“நாயே இப்படி நடிச்சி நடிச்சி தான் அவகிட்ட ஏதாவது உளறி வெச்சிருப்படா, அவ வேற வூட்டுக்கு வந்ததும் கேக்கறேன் உண்மையை சொல்லணும்ன்னு உயிரை எடுக்கறா? சொல்லு என்னத்தை சொன்ன?”என யுகி வளவனை அடிக்க.

“டேய் நான் எதும் சொல்லலடா, நீதான் பூனை பூனைன்னு தூக்கத்துல உளறி வெச்சிருப்ப.. அதெப்படிடா கோமாக்கு போனாலும் பூனைன்னு சொல்ற, அந்த டாக்டர் வேற வெளிய வந்து பூனைப் புடிச்சிட்டு வாங்க எலிய புடிச்சிட்டு வாங்கன்னு சொல்றாரு. எல்லோரும் உனக்கு இப்படி ஆகிடுச்சேன்னு அழுதுட்டு இருக்கும் போது அவர் அப்படி சொன்னதும் என்னாலைலா சிரிப்பை கண்ட்ரோல் பண்ணவே முடியலப்பா” என வளவன் மீண்டும் சிரிக்க.

“சிரிடா சிரி அவளுக்கு மட்டும் ஏதாவது தெரிஞ்சிருக்கட்டும் மவனே உன்னைய கொல்றனா இல்லையான்னு பாரு.”

“நான்லா எதுவும் சொல்லலப்பா என்னைய ஆள விடு.”

“அப்படிலாம் விட முடியாது. நான் அங்க ஹாஸ்பிடல்ல கிடக்கும் போது நீ இங்க உன் பொண்டாட்டியோட ரொமான்ஸ் பண்ணிட்டு இருந்தில, இனி நீதான் என்னோட ரூமை ஷேர் பண்ற. எழுந்து நடக்கற வரைக்கும் பட்டினி கிட நாயே.”

“பாவி பாவி பொய்யா சொல்லாதடா உனக்கு இப்படி ஆகிடுச்சேன்னு நானே ரூம் பக்கமே போகாம ஹால்ல படுத்து விரதம் இருக்கேன், இதுல ரொமான்ஸ் ஒரு கேடு”.

“நம்பிட்டேன்டா, இந்த பூனையும் பால் குடிக்குமாங்கற மாதிரி மூஞ்சை வெச்சிட்டு இருந்தா நம்பிடுவேன்னு நினைக்கிறியா? ஒழுங்கா வந்து ரூமை ஷேர் பண்ற இல்ல சாவடி தான் விழும்.”

“வந்து தொலையறேன் பத்து. பதண்ணச்சு” என ஆரம்பித்தவனை கை நீட்டி தடுத்தவன்.

“என்ன டைலாக் பேசப் போறியா..?இதெல்லாம் சந்தானம் எப்போவோ பேசிட்டாரு, மூடிட்டு போடா” என நண்பர்கள் இருவரும் சண்டைப் போட்டுக்கொண்டிருக்க.

“டேய் அங்க என்னடா பண்ணிட்டு இருக்கீங்க..? என்னையும் அவனையும் சேர்த்து வைக்கற வரைக்கும் எவனும் சந்தோசமா இருக்கக்கூடாது.வந்து பஞ்சாயத்து பண்ணுங்கடா” என்றாள் நிலா யுகியிடமும் வளவனிடமும்.

“அவன் உன்னைய முழுங்கற மாதிரி பார்ப்பான், அவனா உன்னைய டிவோர்ஸ் பண்ணுவான் ரெண்டுபேரும் காமெடி பண்ணாம ஓரமா போய்டுங்க,ஆல்ரெடி ரொம்ப கடுப்புல இருக்கேன் ஏதாவது சொல்லிடுவேன்”  என யுகி அவனுடைய வீல் சேரை ஓட்டிக்கொண்டு கீழே மாற்றப் பட்ட அவனது அறைக்குப் போய்விட்டான்.

வளவனும் அவன் பின்னாலையேப் போக.ஷாலினியோ  மணியுடன் சமையலறைக்குச் சென்று விட்டாள்.

“இப்போ நான் எங்கப் போறது. குடும்பமா இது?. ச்சை” என்றவள் பையுடன் அவளது வீட்டிற்கு சென்று விட்டாள்.

அறைக்கு வந்த நந்தனுக்கு வானில் மிதப்பதுப் போல் இருந்தது.

அவன் இழந்த சந்தோசம், காதல், அன்பு, அனைத்தும் ஒவ்வொன்றாக திரும்ப கிடைக்கப் போகிறது. அதை நினைக்கும்  போது சொல்லில் வடிக்க முடியாத ஒரு மாதிரியான உணர்வு எழுந்தது. அனைத்தையும் உள்ளுக்குள்ளயே வைத்துக்கொண்டானே தவிர முகத்தில் கூட எதையும் காட்டவில்லை நந்தன்.

வீட்டிற்கு வந்த நிலா பையைத் தூக்கி படுக்கையில் எறிந்து விட்டு வேகமாக வெளியே வந்து நின்றாள்.

அங்கிருந்து பார்த்தால் நந்தனின் அறை தெரியும். அவனது பால்கனி நன்றாகவே தெரியும். நந்தனின் நடமாற்றம் தெரிகிறதா? எனப் பார்க்க வந்து நின்றாள்.

அவனோ அவன் ராணியின் நினைப்பில் படுக்கையில் குப்புற படுத்து கனாக் கண்டுக் கொண்டிருந்தான்.

வெகுநேரம் அவன் அறையையேப் பார்த்துக் கொண்டிருந்தவள், வெயில் என்றும் பாராமல் வெறுங்காலில் நின்றாள்.

படுத்திருந்த நந்தன் என்ன நினைத்தானோ சட்டென்று எழுந்து போய் அறையின் பால்கனியில் வந்து நின்றான்.

வெயிலைக் கூடப் பொறுட்படுத்தாமல் தன்னவள் நிற்பதைப் பார்த்ததும் இவனின் உள்ளம் பதறியது.

“என்ன இங்க நின்னு சிம்பதியை கிரியேட் பண்ணலாம்னு பார்க்கறியா?”.

அவள் எதுவும் பேசாமல் நிற்கவும்., அருகில் இருந்த பூ ஜாடியை எடுத்தவன்

“போறியா அடிக்கவா?”

“என்னையவே வேண்டாம்னு சொன்னில நான் எங்க இருந்தா உனக்கு என்ன? போடா”.

“வாயை உடைச்சிடுவேன்.”

“அதுக்கும் நீ என்னைய தொடணும்ல”.

“உன்ன..” என்றவன் அவள் மீது படாதவாறு வெறும் ஜாடியை தூக்கி வீச, அது அவளது காலடியில் சென்று விழுந்தது.

“ஜஸ்ட் மிஸ், பார்க்கறேன்னு அடிக்கிறானா?, இல்ல இங்க நிற்கறேன்னு அடிக்கிறானான்னு தெரியலையே?, சரி எதுக்கும் ஒரு பிட்டைப் போட்டு வைப்போம்” என்று நினைத்தவள்.

“நான் வெயில நிற்கறது உங்களால தாங்க முடியலையா விஜய்.?அவ்வளவு பாசம் இருக்கறவர் இந்நேரம் ஓடி வந்து தூக்கி, வெயில் பட்டு வெந்த என் காலுல முத்தம் கொடுத்துருக்க வேண்டாமா..? இப்படி என்னைய ஏமாத்திட்டிங்களே கோபால்....” என அவள் ராகம் இழுக்க.

அவன் சுற்றும் முற்றும் பார்த்தான்.

“என்ன தேடறீங்க?”

“இதை விட பெருசா ஏதாவது இருக்கான்னு பார்க்கறேன்”

“எதுக்கு?”

“உன் மண்டையை உடைக்க..”

“இருந்தாலும், என்னோட பாதம் உங்க உதட்டை கேட்டு ஏங்கி நிற்குது கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க கோபால்” என்றவள் விட்டால் அடித்துவிடுவானோ என அங்கிருந்து ஓடிவிட்டாள்.

அவள் பார்க்காமல் திரும்பி நின்றவனுக்கு முகமெல்லாம் புன்னகை.

இப்படி மனமுவந்து அவன் சிரித்து எவ்வளவு நாள் ஆகிறது.. அவனை இறுக வைத்தவளிடமே இலகவும் செய்கிறான்.

“என்னோட உதடுக்கு உன்னோட பாதம் ஏங்குதா..?எப்படி பேசறா..?இங்கையே இருந்தா இவ பைத்தியம் புடிச்சி சுத்த வெச்சிடுவா,” என தலை முடியை கோதிக் கொண்டவன் மதியத்திற்கு பிறகு ஸ்டேஷன் கிளம்பிச் செல்ல கீழே வர தொலைக்காட்சியில் செய்தி ஓடிக் கொண்டிருந்தது.

முன்னாள் மந்திரி சூர்யராஜின் இறப்பில் சந்தேகம் இருக்கிறது, அந்த கேஸை ஆராய்ச்சி செய்த நந்தன் மீதும் சந்தேகப் புள்ளி விழுந்திருக்கிறது. என செய்திகள் பரவிக்கொண்டே இருக்க.அதைப் பார்த்த மார்த்தாண்டம்.

“நந்து என்ன பிரச்சனை இது.? உன்மேலே கேஸை திருப்பி விட்டிருவாங்க போல.. இதனால உன்னோட ப்ரோமோஷனுக்கு பிரச்சனை வந்துடப் போகுது”

“சஸ்பென்ஸன் பண்ணுவாங்க பண்ணட்டும்.”

“எப்ப?”

“அதும் நானா பார்த்து வேணுங்கறப்ப வாங்கிப்பேன்”

“புரியல தம்பி, அதெப்படி நீ கேக்கும் போது கிடைக்கும்.”

“அது நடக்கும் போது புரியும்” என்றவன் யுகியை சென்றுப் பார்த்துவிட்டு சென்று விட்டான்.

யுகி வீட்டிற்கு வந்துவிட்டான் என்றதும் சொந்தங்கள் வந்து பார்த்த வண்ணமாக இருந்தனர்.

அவர்கள் வரும்போது நிலா இங்கு இல்லை என்றால் அதற்கு தனியா கதை கட்டிப் பேச ஆரம்பித்து விடுவார்கள் என நிலாவை அழைத்து தன்னுடன் வைத்துக் கொண்டார். மணி.

“அத்தை.”

“சொல்லு நிலாம்மா”

“உங்க பெரிய பையனை பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?” அவன் யுகியிடம் பேசுவதை ஏக்கமாக மணிப் பார்த்ததை நிலா பார்த்துவிட்டாள்.

அவனுடன் பேசியதுப் போல் தன்னுடனும் பேச மாட்டானா என தாயின் உள்ளம் ஏங்கி தவித்தது.

அதைப் புரிந்துக் கொண்டு நிலா கேக்க.

“என்ன நினைக்கறேனா புரியலையே?”என்றார்..

“அது அவர் யுகியைப் பார்த்துகிட்டதைப் பார்த்தா, உங்க மேலைலா எவ்வளவு பாசம் வெச்சிருக்காருன்னு தெரியுதுல”.

“நீ தான் மெச்சிக்கணும். அவனுக்கு யார் மேல பாசம் இருக்கோ இல்லையோ, என் மேல சுத்தமா பாசமில்ல, அம்மான்னு கொஞ்சமாவது யோசிச்சிருந்தா நானே பேசினாலும் அவன்  பேசாம இருப்பானா?”. என்றவர் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே.

“நான் நல்ல அம்மாவான்னு தெரியல, யுகிக்கும் சரியானா அம்மாவா இருக்க முடியல, நந்துக்கும் சரியான அம்மாவா இருக்கல, என்னையிலா எதுல சேர்த்துறதுன்னே தெரியல” எனக் கண்ணீர் வழிந்தக் கன்னத்தை துடைத்தார்.



Leave a comment


Comments


Related Post