Total Views: 1356
முன்பாவது நந்தன் மட்டும் தான் பேசாமல் இருந்தான் இப்போது யுகியும் பேசுவதில்லை. ஒரு மகனுக்கு நல்லது செய்கிறேன் என இன்னொரு மகனின் பாவத்தையும் தாங்கி நின்றார் மணிமேகலை.
“இப்போ என்ன அத்தை? அவருக்கு உங்கமேல பாசம் இல்லைன்னு சொல்றிங்களா?!
“பாசம் இருந்தா இவ்வளவு வருஷம் பேசாம இருப்பானா..?” என்றவர், “அந்தக் கதையை விடு நிலா வந்தவீங்களுக்கு ஜூஸ் கொண்டுபோய் குடுப் போ.”
அவர் கொடுத்த பழச்சாறை வாங்கிக் கொண்டவள்.யோசனையுடனே சென்றாள்.
ஒரு கஷ்டம் என்றதும் யுகியை எப்படி தாங்கினான். பாசம் இல்லாமல் அதை செய்ய முடியுமா.? அதோடு தாயின் மீதும் பாசமாக தான் இருப்பார், அதை எப்படியாவது வெளியே தெரியாமல் விட வேண்டும் என நினைத்தாள் நிலா.
இரவு வரை சொந்தங்கள் வந்துக் கொண்டே இருந்தன.அதனால் நிலாவால் அவளது வீட்டிற்குப் போக முடியவில்லை.
ஷாலினி இங்கையும் அங்கையும் மாறி மாறி இருவருக்குமே உதவியாக இருந்தாள். வளவன் யுகிக்கு தேவையானதை செய்துவிட்டு மார்த்தி வரும் வரை இருந்தவன் அவன் வந்ததும்.
“நான் நைட் வந்து படுத்துக்கறேன் அதுவரைக்கும் அவனோட இருங்க மாமா கம்பெனி விசயமா வெளிய போக வேண்டிருக்கு, போனதும் வரேன்”
“போய்ட்டு வா மாப்பிள்ளை.”
“நீங்க வளவானே கூப்பிடுங்க இது ஒரு மாதிரி அண்ணிசியா இருக்கு”.என்றவன் கிளம்பிவிட்டான்.
நந்தன் வரும் வரையிலுமே சொந்தங்கள் இருக்க..வந்தவன் தன்வளின் வாசனைக் கண்டு அவளைத் தேடிய கண்கள்.
“யாரை நந்து தேடற? உன்ற பொண்டாட்டியையா?” என்று செல்வராணி அவன் அருகில் வந்து அமர.
அவன் பதில் சொல்லவில்லை.
“நிலா கிச்சன்ல இருந்த மாதிரி தானே இருந்துச்சி , என்னையும் கவியையும் வீட்டுல கொண்டு வந்து விடு நந்தா.”.
“டிரைவர் கிட்ட சொல்றேன் கிளம்புங்க.”
“அவர் அப்போவே போய்ட்டாரு.”
“அப்போ இருந்துட்டு காலையில போங்க.”
“மாமாவுக்கு சுகர் இருக்குல்ல அதனால வெளியே சாப்பிடறதில்ல நான் போய் தான் சமைக்கணும்” என்க வேறு வழியில்லாமல் கார் சாவியை எடுத்தவன்.
“ம்ம்ம் சீக்கிரம்” என்றான்.
அவன் கண் இப்போதும் தன்னவளை தான் தேடியது. அதை யாரும் அறியாமல் மறைத்துக் கொண்டு வெளியே போக..
ஓடி வந்து அவன் முன் நின்றாள் நிலா.
"விஜய்."
“உன்னையதான் இங்க வரக்கூடாதுன்னு சொன்னேன்லடி,யாரைக் கேட்டு வந்த?” யாருக்கும் கேக்காமல் மெதுவாக சண்டைப் போட்டான்.
“நானா ஒன்னும் வரல,அத்தை தான் ஓரம்பரை வந்துட்டே இருக்கும் நீ அங்க இருந்தா அது இதுன்னு ஆயிரத்து எட்டு கேள்வி கேப்பாங்க இங்கையே இருன்னு சொன்னாங்க”. என அவனை ஒட்டி நின்ற பதில் சொல்ல.
அவளின் மயக்கத்தில் விழுந்துவிடுவது போல் கண் சொருகி நின்றவன், தன்னை சமன் செய்து கொள்ள படாதபாடு பட்டு அவளை விலக்கி நிறுத்தினான்.
“நான் வரதுக்குள்ள இடத்தைக் காலி பண்ற. இல்லனா வந்து சாவடிச்சிடுவேன்”.
ம்ம்ம் என்றவளின் முகம் வாடவும், இல்லடா செல்லம் மாமா சும்மா தான் சொன்னேன் நீ பீல் பண்ணாத என கொஞ்ச வேண்டும் போல் பரப்பரத்த மனதை அடக்கிக் கொண்டு காருக்குச் சென்றான்.
மனம் முழுவதும் அவனது தாரகை தான். இப்போதெல்லாம் அவளின் லேசான முகச் சுருக்கத்தைக் கூட அவனால் தாங்க முடியவில்லை, தான் எப்படி அவளை அடித்து கஷ்டப்படுத்தினோம் என நினைக்கும் போது யோசனையாக இருந்தது, முன்பு இருந்ததை விட இந்த பிரிவு அவள் மீது கொண்ட காதலின் அளவை அதிகரிக்கவில்லை.
நந்து நந்து......... என செல்வராணி காதில் கை வைத்து கத்த, அந்த சத்தத்தில் சாலையில் பார்த்தவன் சட்டென்று வண்டியை ஒடித்து ஓரமாக நிறுத்தினான். கொஞ்சம் தவறி இருந்தாலும் காரின் மீது டேங்கர் லாரி மோதி இருக்கும்.
“என்னாச்சி நந்து?. நீ இப்படி கவனமில்லாம இருக்க மாட்டியே..” என செல்வராணி நடுக்கத்துடன் கேட்டார்.
அவன் கவனமெல்லாம் நிலாவின் மீது இருக்கும் போது சாலையை எங்கு கவனிக்க வேண்டும்.?
“கேசைப் பத்தி யோசிச்சிட்டு வந்தேன் அதான்” என்றவன் இருக் கைகளாலும் தலை முடியை அழுந்தக் கோதிக் கொண்டான்.
நிலா அவன் முன் கேலி செய்து சிரிப்பது போல் பிம்பம் தோன்ற.
“இங்க இருந்து வீடு பக்கம் தானே ஆட்டோ புடிச்சிப் போங்க, எனக்கு வேலை இருக்கு” என அவர்களை நடுத்தெருவில் இறக்கி விட்டு அங்கிருந்து நந்தன் கிளம்பிவிட்டான்.
“என்னடி இவன் தெருவுல விட்டுட்டுப் போறான்.?”
“எனக்கு என்ன தெரியும்? உன் அண்ணன் மகன்ங்க வேற எப்படி இருப்பாங்க?” என கவி கத்த
“என்ன கேட்டுட்டேன்னு இப்போ இவ கத்துறா இன்னைக்கு எல்லோரும் ஒரு மார்க்கமா தான் சுத்துறாங்க” என எண்ணிக் கொண்டவர்.
“இங்க இருந்து நடந்தே போலாம் வா” என அழைத்துச் சென்றார்.ஜி
போகும் வழி எங்கும் செல்வராணி பேசிக்கொண்டே வர.. கவி அதற்கு ம்ம்ம் கொட்டிக் கொண்டே வந்தாள்.
அவளே யுகி தன்னிடம் சரியாக பேசவில்லை என கவலையில் இருக்க, தாய் வேறு வாய் ஓயாது பேசவும் வெறுத்துவிட்டது.
வீட்டிற்கு வந்த நந்தனின் கண்கள் தன்னவளை தான் அவசர அவசரமாக தேடியது.
“போன்னு சொன்னதும் போய்ட்டாளா?, நான் தின்னானா இல்லையானுலாம் கேக்கறது இல்ல?” என முகம் இறுகியவன், மேலே அறைக்குப் போக. அவளின் குயில் யுகியின் அறையில் கூவிக்கொண்டிருந்தது
“இந்த மாத்திரை மட்டும் தான் இருக்கு போடறீயா? இல்லையா?”
“வேண்டா பூனை”.
“வேணுமா வேண்டாமான்னு கேக்கல போடுன்னு சொன்னேன்.”
“இவதாண்டா உனக்கு சரியா இருப்பா, எங்ககிட்ட வாலு ஆட்டுற மாதிரி இவகிட்ட ஆட்டுப் பார்க்கலாம்”.என வளவன் வேறு நிலாவிற்கு ஸ்க்ரூ ஏற்றிக் கொண்டிருந்தான்.
"நீ மூடு."
“இங்க பாரு அம்மு திட்டுறான்.”
“இப்போ ரெண்டுபேரும் அமைதியா இருக்கீங்களா? இல்லையா? ஷாலு அவன் கழுத்தைப் பிடி”
“நான் ரெடி..” என ஷாலினி யுகியின் கழுத்தைப் பிடிக்க அதற்குள் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் நந்தன்.
மூவரும் அவனைப் பார்க்க. “யுகி டேய் அண்ணா என்னைய காப்பாத்துடா எல்லோரும் சேர்ந்து கொல்லப் பார்க்கறாங்க” என அழுவது போல் சொன்னான்.
“என்ன பண்றீங்க?” கண் நிலாவை பாரு பாரு என அவள் பக்கமே போக.. அதை கட்டி இழுத்து வந்து வளவனைப் பார்த்துக் கேட்டான்.
“டேப்லெட் சாப்பிட மாட்டிங்கிறான் அதான் நாங்க அவனை அமுக்கி பிடிச்சி கொடுக்கறோம்.”
“குடுங்க இங்க” என வளவனிடம் கையை நீட்ட.
நிலாவிடம் இருந்த மாத்திரையை வாங்க, வளவன் கையை நீட்ட.
“ஏன் அதை சார் என்கிட்ட கேக்க மாட்டாரோ?. என்கிட்ட கேக்க சொல்லு தரேன்” என கையைக் கட்டிக் கொண்டு நிலா நந்தனுக்கு குறையாத திமிரோடு கேட்டாள்.
இருவரும் ஒருவருக்கு ஒருவர் சலித்தவர்கள் இல்லை என்பது போல் தான் இருந்தது பார்ப்பவர்களுக்கு.
நந்தனின் கை இப்போது நிலாவை நோக்கி நீண்டது.எந்த வீம்பும் பண்ணாமல் அவனிடம் கொடுத்து விட்டாள்.
மாத்திரையை தூக்கிப் பார்த்தவன் யுகியின் அருகில் சென்று அவன் கண்ணைப் பார்த்துக்கொண்டே மாத்திரையைக் கொடுக்க எதுவும் பேசாமல் வாங்கிப் போட்டுக் கொண்டான் யுகி.
அதை மற்ற மூவரும் வாயைப் பிளந்து பார்த்தனர்.
“என்னடா நடக்குது இங்க?,ஆனந்தம், வானத்தைபோல படத்தை எல்லாம் மிஞ்சுடுவீங்க போலையே” என்ற நிலா வெளியே போய்விட்டாள்.
அவளைத் தொடர்ந்து ஷாலினியும் போய்விட வளவன் அங்கேயே படுத்துவிட்டான்
நந்தன் யுகியை படுக்க வைத்து கழுத்து வரை போர்வையை போர்த்திவிட்டு வந்தவனின் கண் மீண்டும் நிலாவை தேடியது.
“இந்தாங்க பாலு குடிச்சிட்டுப் போய் படுங்க” என பின்னால் இருந்து குரல் கேக்க நந்தன் சட்டென்று திரும்ப.,
அவன் வேகத்தில் விழப்போன நிலாவை பிடித்துக் கொண்டவன்.
“உன்கிட்ட கேட்டனா?” என்றான்.
“கேட்டா தான் கொடுக்கணுமா..? புருஷன் கேக்கறதுக்கு முன்னாடி செய்யறது தானே பொண்டாட்டி கடமை சக்கரையிலா சரியா தான் போட்டுருக்கேன், குடிங்க” என அவள் ஒரு வாய் குடித்து விட்டு அவனிடம் கொடுக்கப், பல்லைக் கடித்தவன் “வேற கொண்டு வாடி” என்றான் அதிகாரமாக.
“ஏன் என்னோட எச்சிப் பட்டதுல பால் விசமா மாறிடுமா என்ன?” என்றவள் ஒரு வாய் முழுவதும் பாலை குடித்துவிட்டு நந்தன் எதிர்பாரா நேரம் எக்கி அவன் கழுத்தைப் பிடித்து உதட்டோடு உதடு வைத்து பால் அனைத்தையும் அவன் வாய்க்கு மாற்றி விட்டாள்.
இதை விட அமிர்தம் கிடைக்குமா என்ன..?நந்தன் கடவுளே நேரில் வந்து அமிர்தத்தை வாரி வழங்கியது போல் ஆனந்ததில் திக்கு முக்காடி நின்று விட்டான்.
அவளை தள்ளுவது போல் இன்னும் நெருக்கிக் கொண்டவன். எல்லாவற்றையும் இடம் மாற்றி விட்டு தான் அவனை விட்டு தள்ளி வந்தாள் நிலா.
“என்னைய வேண்டா வேண்டான்னு விலக்கி வெச்சின்னா இப்படி தான் வந்து ஒட்டிப்பேன், ஒழுங்கா நீயே வந்து ஒட்டிக்கோ எப்படி வசதி?”
‘அவன் வசதிக்கு என்ன குறைச்சல்? வேண்டாம் வேண்டாம் என விருந்தே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்’.
அவளை முறைக்க முயன்று தோற்றுவிட்டான் அதுக் கூட இப்போதெல்லாம் வரமாட்டேன் என்றுவிட. “ச்சீ போடி” என அவன் அறைக்குப் போய்விட்டான்.