இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -111 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 21-08-2024

Total Views: 1556

அவள் பேசிய வார்த்தைகள் இன்னும் கூட காதில் ஒலிக்க

"ராட்சசி நான் சும்மா இருந்தாலும் நியாபகப் படுத்தி என்னைய சும்மா இருக்கவிட மாட்டா போல" என்று மீசையை நீவியவனுக்கு சுகமாக வீசியது அவனின் தென்றல் வாசம்.

யுகி சொன்னதை நந்தன் நம்பவில்லை என்பது வேறு விஷயம், ஆனால் அதைப் பற்றிய கவலை இப்போ இல்லை. அவனது ராட்சசி அவனிடம் வந்து சேர்ந்துவிட்டாள். அதுப் போதாதா அவனுக்கு?.

புன்னகையுடன் செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருந்தவனை எட்டாவது அதிசயத்தைப் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டுப் போனான் வளவன்.

"யுகி"

"ம்ம்" என்றவன் கதவை திறக்க.

உள்ளே வந்த வளவன். "என்னடா உன் அண்ணன் எப்போமே மூஞ்சுல முள்ளைக் கட்டுன மாதிரி இருப்பான் இப்போல அடிக்கடி சிரிக்கிறான் ஏதாவது விசியமா இருக்குமா?"

"நாயே என்னோட பிரச்சனைக்கு வழி சொல்லுனா, நீ அவன் கிட்ட போய்ட்டியா ஒழுங்கா சொல்லு".

"என்னடா சொல்றது?"

"இப்போ நிலாங்கற பேர்ல எங்க போய் பொண்ணு தேடறது?".

"பொண்ணுலா கிடைக்கும் ஆனா அது உனக்கு ஒத்து வராது"

"ஏன் அப்படி சொல்ற?".

"நீ என்ன வேலைக்காகப் பொண்ணு தேடற?, நீ கேட்ட பேர் இருந்தா போதும்ன்னு சொல்ல. நீ லவ் பண்ண பொண்ணு தேடற?"

"வாயைக் கழுவு, லவ் பண்ண பொண்ணுன்னு காட்ட தான் தேடறேன்".என்றவனை வினோதமாக பார்த்தான் வளவன்.

"என்னடா அப்படி பார்க்கற.?"

"நீ இன்னும் அம்முவையே நினைச்சிட்டு இருக்கியா?".

"அவளை எப்போ மறந்துருக்கேன். காதலியா என் மனசுல இருந்து போய்ட்டா.இனி அவ நந்தனோட பொண்டாட்டி.மத்தபடி எனக்கு எல்லாமே அவ தான்"

"அப்புறம் என்ன?".

"அவ இருந்த இடத்தை அவ்வளவு சீக்கிரம் இன்னொருத்திக்குக் குடுக்க என்னால முடியாது".

"அதை நீ வாய் வார்த்தைக்குக் கூட சொல்ல விரும்பாதப்பையே தெரிஞ்சிகிட்டேன்".

"லவ்ங்கற கேட்டகரியை விட்டுட்டுப் பார்த்தா எனக்கு எல்லாமே அவ தான்".

"இதை நந்தனுக்கு முன்னாடி சொல்லிடாத".

"ஏன் சொன்னா என்ன பண்ணிடுவான்? நியாயப்படிப் பார்த்தா அவன்தான் இப்போ வந்தவன்", என்றவன், "அந்தக் கதையை அப்புறம் பேசுவோம் இப்போ எனக்கு நிலாங்கற பேர்ல பொண்ணு வேணும். நடிக்கிறதுக்கு பணம் கூடக் கொடுத்துடலாம் ஏதாவது பண்ணுடா."

"நடிக்க யாருடா வருவா? அப்படியே வந்தாலும் நாளப் பின்னால இதை வெச்சி பிளாக் மெயில் பண்ணா என்ன பண்ணுவ?".

"ஹா ஆமா"

"நடிக்கலா வேண்டா நிலாங்கற பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ".

"வாழ ஐடியா கேட்டா சாக ஐடியா கொடுக்கறியா?" 

"ஒரு தடவை சாகர வரைக்கும் போனவன் தானே இதையும். செஞ்சிப் பாரு"

"முடியாது".

"அப்போ வாய்ப்பில்லை, அவ நாளைக்குப் பொண்ணை காமின்னும் சொல்லுவா மாட்டிக்கிட்டு சாவு."

"அப்போ வழி சொல்ல மாட்ட"

"இருந்த வழியை சொல்லிட்டேன் யுகி இதுக்கு மேல நீதான் முடிவு பண்ணனனும், அவ உன் மனசுல இல்லைன்னு சொல்ற,அப்புறம் கல்யாணம் பண்ணிக்கறதுல என்ன பிரச்சனை உனக்கு?".

"அவளால உண்டான காயத்தை யாராலயும் சரிப் பண்ண முடியாது வள்ளு புரிஞ்சிக்கோ".

"எல்லா காயத்துக்கும் மருந்து இருக்கு, வரப் பொண்ணு உனக்கு மருந்தா இருக்கலாம்ல".

"நீ நல்லா பிரைன் வாஷ் பண்ற?"

"நான் சரியா தான் பண்றேன் ஒழுங்கா கல்யாணம் பண்ணிக்கோ".

"என்னோட மனவலியை அவகிட்ட காட்டி அவளை கஷ்டப் படுத்திடுவனோன்னு பயமா இருக்குடா"

"என்னோட யுகியால ஒரு பொண்ணை காயப்படுத்த முடியாதுடா, கொஞ்ச நாள் விலகி இருப்ப அப்புறம் சரியாகிடும்"

"இல்ல வள்ளு இது சரியா வராது".

"அப்போ என்னமோ பண்ணு. போ" என்றவன் கதவை திறந்துக் கொண்டு வெளியே வர. அப்போதும் அங்கேயே இருந்த நந்தன்.

"என்ன பொண்ணை தேடற படலம் பயங்கரமாக நடக்கும் போல.."என நந்தன் புருவத்தை உயர்த்த.

"இவனுக்கு எப்படி தெரியும் ஒட்டு கேட்டுருப்பானோ,?" என வளவன் சந்தேகமாகப் பார்க்க 

"போலீஸ்காரனுக்கு நாலுப் பக்கமும் கண்ணு இருக்கு" என வளவனின் எண்ணவோட்டத்தை வைத்து நந்தன் சொல்ல,

"இங்க இருந்தா என்னோட வாயை புடுங்கிடுவான்" என்று வளவன் பதிலும் சொல்லாமல், நிற்கவும் செய்யாமல் செல்ல

"அவன்கிட்ட சொல்லு எந்த பிராடு வேலைப் பார்த்தாலும் என்னைய மீறி தான் பார்க்கணும்னு" என்றான்.

வளவன் அவனை திரும்பிப் பார்த்துவிட்டு சென்றுவிட்டான்.

நிலா பேசியது, யுகி பேசியது என இன்றைய நாள் ஏதோ மனதில் ஒருவித இனிமையான மனநிலை தோன்ற சந்தோஷமாக வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தான் நந்தன்.

யுகிக்கு தான் ஒரே மண்டை குடைச்சலாக இருந்தது, என்ன செய்வது? யாரை காதலி என அழைத்து வருது? ஒரேக் குழப்பம். அறையை விட்டுக் கூட வெளியே வராமல் யோசித்தான்.

கிளம்பி கீழே வந்த நந்தன்,மணி முடியாமல் வேலை செய்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் இவ்வளவு நேரம் விடுப்பு எடுத்திருந்த கோவம் ஓடி வந்து  அதன் வேலையைச் சிறப்பாகச் செய்ய மேஜையில் இருந்த கண்ணாடி ஜக்கைத் தூக்கி வீசினான்.

அது விழுந்து சிதறிய சத்தத்தில் அறையில் இருந்த மார்த்தாண்டம் ஓடி வந்தவர்.

"என்னாச்சி தம்பி?" என்றார் 

அதுவரை அறைக்குள் இருந்த யுகிக் கூட மெதுவாக எட்டிப்பார்த்தான்.

"என்ன பண்ணிட்டு இருக்கீங்க நீங்கலாம்?. இவ்வளவு வருஷம் தான் பொண்டாட்டியை பார்க்கல இப்போ காலுல அடிபட்டு நடக்க முடியாம இருக்கும் போதுக் கூட,அவங்க தான் வேலை செய்யணுமா? ஏன் நீங்க செஞ்சா என்ன?"

"என்னய சமைக்க சொல்றியாடா?"

"உங்களால முடியலைன்னா ஆயாவ செய்ய சொல்லுங்க, இல்லனா ஷாலுவை வரச் சொல்லி அவளை செய்ய சொல்லுங்க, அவங்களை எதுக்கு செய்ய சொல்றிங்க?" என கழுத்து நரம்புகள் வெடித்து விடும் போல் கோவத்தில் கத்த.

எல்லோருமே ஒரு நிமிடம் பயந்துப் போய்விட்டனர்.

சத்தம் பின்னால் வீட்டினருக்கு நன்றாக கேக்க.. அங்கிருந்த ஷாலினி வளவன் கூட என்னமோ ஏதோ என்று ஓடி வந்தனர்.

வீதியில் நின்று பூங்கொடியிடம் பேசிக்கொண்டிருந்த நிலா தான் முதலில் வந்ததே..

நந்தன் பேசும் வரை அவனையே வெறிக்க வெறிக்கப் பார்த்தாள்.

"தம்பி வலி இல்ல, தோசை தான் ஊத்துறேன்"  என நந்தனின் கோவத்தில் மணிமேகலை மென்று விழுங்க.

"உங்களைய கேட்டனா?" என்பது போல் திரும்பி ஒரு பார்வை பார்க்கவும் கப்பென்று வாயை மூடிக் கொண்டார்.

"ஆபிஸ் டென்சன்ல இருந்துட்டேன் நந்து." என மார்த்திக்கு குற்றவுணர்வில் வார்த்தைகள் வரவில்லை. தட்டுதடுமாறி பேசினார்.

"எப்போதான் உங்களுக்கு டென்சன் இல்லாம இருந்துருக்கு. இந்த முப்பது வருசத்துல ஒரு தலைவலி காய்ச்சலுன்னாக் கூட அவங்களே தான் பார்த்துகிட்டாங்க, உங்ககிட்ட வந்து கூட்டிட்டுப் போன்னு நின்னாங்களா?. இப்போக் கூட அவங்களுக்கு ரெஸ்ட் குடுக்காம கஷ்டப்படுத்தறீங்க, என்ன பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது அவங்க கால் சரியாகற வரைக்கும் நீங்கதான் அவங்க தேவை எல்லாத்தையும் பார்த்துக்கணும்". என்றவன் மணியைப் பார்த்து.

"போய் ரெஸ்ட் எடுங்க, அப்பா தோசை ஊத்தி எடுத்துட்டு வருவாங்க என்ன ஊத்துவீங்க தானே?" என மணியிடம் ஆரம்பித்து மார்த்தியிடம் முடிக்க.

அவரும் "ம்ம்" என தலையை ஆட்டினார்.

'எல்லோரையும் கண் அசைவுல கட்டிப் போட்டுடுவான்' என வளவன் முனவ.

"ஹெலோ மிஸ்டர் விஜய் நீங்க சொன்ன உபதேசம்லாம் மாமாவுக்கு மட்டும் தானா? உங்களுக்கு இல்லையா?. உங்க பொண்டாட்டி காலுலக் கூட தான் பால் ஊத்திருக்கு".

"உன்னைய மொதல்ல பொண்டாட்டி லிஸ்ட்லயே சேர்த்துல போடி" என்று அங்கிருந்து நகர.

"நீங்க வந்து செய்யாம நானும் சாப்பிட மாட்டேன்" என்றாள்.

"நீ தின்னா எனக்கு என்ன? திங்கலைன்னா எனக்கு என்ன?" என்றவன் சொல்லிக்கொண்டே வெளியேப் போய் காரில் ஏற,அவன் பின்னாலையே சென்றவள்,

"நான் திங்கலைன்னா உங்களுக்கு கவலை இல்லையா?" 

"இல்ல"

"சரி போ"

"என்னடி மரியாதை தேயுது."

"போதும் போதும் பொண்டாட்டியை பார்க்காதவனுக்குல்லா மரியாதை குடுக்க முடியாது"

"அடிங்க" என நந்தன் காரை விட்டு இறங்க.

நிலா அவனிடம் சிக்காமல் இருக்க அந்தக் காலை வைத்துக் கொண்டு ஓட  "ஆஆஆஆ "  கால் பிசகி அப்படியே அமர்ந்து விட்டாள்..

"என்னடி ஆச்சி..?"பதறிக் கொண்டு அவள் அருகில் போக 

"காலு பிசகிடுச்சுப் போல ஆஆஆஆ வலிக்குது" என்றவளின் கண்களில் நீர் கோர்த்து விட்டது 

"இப்போ உன்னைய புடிச்சி காலையா உடைக்கப் போறேன், எதுக்கு இவ்வளவு வேகமா ஓடுன?" என்றவன் அவளின் காலைத் தூக்கி மடியில் வைத்தான்

"ஐயோஓஓ டிரஸ்லா அழுக்காகிடும்".என அவள் காலை இழுக்க,

"ஏதாவது சொல்லிடப் போறேன் காலை வைடி" என்றவன்.

"குட்டி ஒரு செகண்ட் என்னோட கண்ணையேப் பாரு".

"எதுக்கு?" என்றவள் அவன் கண்ணைப் பார்த்தாள்.

அதில் தான் எத்தனை எத்தனை உணர்வுகள். காதல், கனிவு, தாய்மை, கோவம், ஆதங்கம், என அனைத்தும் இருக்க, காதல் ஒருபடி மேலே இருந்தது என்பது தான் உண்மை.

அவன் கண்ணை ஒரு நொடிக் கூடப் பார்க்க முடியவில்லை அடிவயிற்றில் யாரோ கிச்கிச்சு மூட்டுவது போல் இருக்க கண்ணை தாழ்த்திக் கொண்டாள்.

"பாருன்னு சொன்னேன்"

"முடியல"

"ஏன்.?"

"என்னமோ பண்ணுது"

"என்னோட காதுல பச்சையா சொன்னப்ப, இந்த வெட்கம்லா எங்கடிப் போச்சி?" என்றவன் பேசிக்கொண்டே காலில் இருந்த சுளுக்கை எடுக்க.

"ஆஆஆஆ"  என கத்தி விட்டாள் நிலா.

'அவ்வளவு தான் எழுந்து நட."

"அப்போ தூக்கிட்டுப் போக மாட்டிங்களா?" என ஏக்கமாக அவனைப் பார்க்க

"டியூட்டிக்கு டைம் ஆச்சிடி"

"ம்ம் சரி போங்க நானே போய்கறேன்" என முகத்தை சுருக்கி சொன்னால்,அவனால் எப்படி அங்கிருந்து போக முடியும்?. சட்டென்று அவளைத் தூக்கிக் கொண்டவன் வேக வேகமாக பின்புறம் ஓடினான்.

"நேரமாகிடுச்சுன்னா உங்க ரூம்லையே விட்டுடுங்க அங்கையே இருந்துக்கறேன்"

"ஒன்னும் தேவையில்ல..நான் கேட்டது கிடைக்காம என்னோட ரூமுக்கு வர முடியாது" என்றவன் அவளை அவளது அறையில் படுக்க வைத்துவிட்டு நாலு நாலுப் படியாக இறங்கி அலுவலகம் சென்றான்.

சரஸ்வதியும் உஷாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தனர்.

"என்னைய என்ன பண்ண சொல்ற?. இப்போ நான் உயிரோட இருக்கறேனா அதுக்கு காரணம் நந்து தான், அவன் வாழ்க்கையில இவ்வளவு தூரம் விளையாடதே நான் அவனுக்கு பண்ண துரோகம்ன்னு நினைக்கறேன், என்னய போய் மறுபடியும் விளையாட சொல்ற? இதுக்கு மேல நான் எதுவும் பண்ண மாட்டேன் என்னய விட்டுடு" என்றாள்.

"அப்போ வேற எப்படி அவங்களை பிரிச்சி என்னைய உள்ளக் கொண்டுபோறது.?"

"ரெண்டுமே ரொம்ப கஷ்டம்.என்னோட அனுபவத்துல சொல்றேன் உன்னோட முடிவை மாத்திட்டு வேற  நல்ல மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ".

"முடியாது எனக்கு நந்து சார் தான் வேணும், அவர்கூட குடும்பமே நடத்திட்டேன்.எப்படி விட்டுக் குடுக்க சொல்ற?"

"என்னடி சொல்ற? லவ் பண்ண என்னையவே அவன் தொட்டது இல்லை."

"நான் கனவுல சொன்னேன்" என சரஸ்வதி பல்லைக் கடிக்க.

"ஓ ட்ரீம் இமேஜினரா நீ?".

"நான் கேட்டதுக்கு பதில் சொல்லு".

"விட்டுக் குடுக்க முடியாது தான், ஆனா நந்தன் யாருக்குமே அடங்கிப் போக மாட்டான், அவனை மாதிரி ஆளுங்களை தூர இருந்து பார்த்து ரசிச்சிக்கலாம். கூட சேர்ந்து குடும்பம் நடத்த முடியாது".

"நான் நடத்துவேன்".

"இதுக்கு மேல உன் விருப்பம், சின்ன வயசுல பழகுனா பாவத்துக்கு நீ சொன்னதைச் செஞ்சிட்டேன். இதுக்கு மேல ஏதாவது பிரச்சனைன்னா எனக்கு தெரியாது".என எழுந்துப் போக அவளது மேடிட்ட வயிறைப் பார்த்தாள் சரஸ்வதி.

"ஏய் உஷா எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் இதை மட்டும் செஞ்சிட்டுப் போ"

"என்ன..?"

"உன் வயித்துல வளர குழந்தைக்கு நந்து தான் அப்பான்னு அந்த நிலாக் கிட்ட சொல்லு ப்ளீஸ்".

"என்ன விளையாடறியா?. அவனுக்கு தெரிஞ்சா என்னோட முதுகு தோளை உறிச்சி உப்புக் கண்டம் போட்டுடுவான்".

"அதெல்லாம் அவருக்கு தெரியாம பார்த்துக்கலாம்".

"நீ நந்துவைப் பத்தி சாதாரணமா நினைச்சிட்டு இருக்க சரஸ், அந்த நிலாவோட முடி அசைஞ்சாக் கூட அவனுக்கு தெரிஞ்சிடும். இவ்வளவு பெரிய விஷயம் தெரியாம இருக்குமா சொல்லு?"

"அவச் சொன்னா தானே.. சொல்ல மாட்டா".

"இது ரிஸ்க், அந்த பொண்ணை அவன் உயிரா லவ் பன்றான்."

"நானும் தான் அவரை உயிரா விரும்பறேன், அவர் அவளை மிரட்டி உருட்டி தானே கல்யாணம் பண்ணிக்கிட்டாரு, அது மாதிரி நானும் அதே ரூட்டுல போது அவரை வாங்கிப்பேன்".

"அவனை லவ் பண்ண நானே சொல்றேன் அவனுக்கு அந்த நிலாவை தவிர வேற எவளும் செட்டாக மாட்டாங்கன்னு உனக்கு ஏன் புரியல?"

"அவ என்ன தேவலோக கன்னியா, அவ மட்டும் செட்டாக?".

"அவ எப்படி இருந்தாலும் அவன் விரும்புவான், அவளை தூக்கி வெச்சி கொண்டாடுவான். அதனால அவ செட்டாகுவா, இதுவே அந்த இடத்துல வேறப் பொண்ணோ நீயோ, நானோ இருந்தோம்ன்னா ஒரு சின்ன விஷயத்துக்கு கூடத் தூக்கிப் போட்டு மிதிப்பான். இங்க நீ காதலிக்கறது முக்கியமில்லை அவன் காதலிக்கணும்,அது தான் முக்கியம், அவளை நீ விபச்சாரக் கேஸ்ல உள்ளே தள்ளிடுவேன்னு சொன்னதுக்கே உன்னைய டிரான்ஸ்பர் பண்ணிட்டான். உன்னோட இடத்துல ஒரு ஆம்பள இருந்திருந்தா கண்டிப்பா அவனை கொன்னுப் போட்டுருந்தாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்லை. இதுல அவளோட லைஃப்லையே விளையாடப் பார்க்கற சும்மா விடுவான்னு நினைக்கறியா?".

"கடைசி முயற்சியா ஒரு தடவை இதைப் பண்ணிப் பார்க்கறேன் உன்னால முடியுமா முடியாதா?".

"முடியாது."

"சரிப் போ அவளை என்ன பண்ணணுமோ பண்ணிக்கறேன்".

"என்ன பண்ணுவ?"

"நீ ஹெல்ப் பண்ணா அவளே விலகிப் போய்டுவா, இல்லனா அவளைக் கொன்னாவது அந்த இடத்தைப் பிடிச்சேத் தீருவேன். நீ என்ன சொல்ற?"

"நீ மாற மாட்ட."

"அதுக்கு வாய்ப்பே இல்ல".

"சரி இதுதான் கடைசி, இந்த முறையும் அவ போகலைன்னா நீ உன்னோட முயற்சியைக் கைவிட்டுறனும்."

"ம்ம் " என்றவள் மனதிற்குள் 'அதற்கு வாய்ப்பே இல்லை'  என்று சொல்லிக்கொண்டாள்.

"நானே பேசறேன்".

"ரொம்ப ஸ்ட்ராங்கா சொல்லணும். உன் குழந்தைக்கு நந்தன் தான் அப்பான்னு".

"ம்ம் சொல்றேன்.அவ நம்பலைனா எனக்கு தெரியாது "

"அவ நம்பற மாதிரி சுச்சுவேஷனை நான் உருவாக்கிக்கறேன்".

"என்னமோ பண்ணு" என்றவள் அங்கிருந்து சென்று விட்டாள்.

எவ்வளவு அமைதிபடுத்தினாலும்,நந்தனின் மனதில் இடம் பிடித்த நிலாவை கொல்லாமல் அடங்க மாட்டேன் என அடம்பிடித்தது மனது.

உஷாவும் நந்தனை காதலித்தால் தான்,ஆனால் அவளை எதுவும் செய்யத் தோன்றாததுக்கு காரணம் நந்தன் அவளை விரும்பாதாது தான்.

உஷாவும்,சரஸ்வதியும் பள்ளித் தோழிகள். பள்ளி நட்பு, பள்ளியோடு முடியாமல் தொடர்ந்து வந்துக் கொண்டே இருந்தது.

உஷா நந்தனை விரும்புகிறேன் என சொன்னப் போது சரஸ்வதியின் மனதில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

அன்று பேக்கரியில் இருந்து உஷா கோவப்பட்டுப் போகும் போனப்பிறகும் நந்தன் உஷாவிடம் சென்று பேசவில்லை.உஷாவாக தான் நந்தனிடம் மன்னிப்பு கேட்டு பேசினாள்.

அப்போதே நந்தனுக்கு அவள் காதல் மீது அதிருப்தி ஏற்பட்டு விட்டது. நிலா வேறு பெங்களூரு சென்று விட, அவளுடைய பிரிவில் காதலை உணர்ந்துக் கொண்டவன், உஷாவின் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. அவளும் தலைகீழ் நின்று தண்ணீர் குடித்துப் பார்த்துவிட்டாள்.

நந்தனிடம் அவளது பாட்சா பலிக்கவில்லை.

"உஷா நீ லவ் சொல்லும் போது மறுக்க காரணம் இல்ல, அதனால ஓகே சொல்லிட்டேன், பட் இப்போ உனக்கும் எனக்கும் ஒத்து வராதுன்னு தோணுது. என்னோட கேரக்டர் வேற உன்னோட கேரக்டர் வேற. நான் கொஞ்சம் கோவப்பட்டாலும் சப்பு சப்புன்னு இழுத்துடுவேன். உனக்கு அதெல்லாம் செட்டாகுது என்றவனின் மனமோ என்னோட குட்டி நான் எவ்வளவு அடிச்சாலும் எனக்காக இருப்பா யார்கிட்டையும் என்னைய விட்டுக் குடுக்க மாட்டா தப்பே செஞ்சாலும் யார்கிட்டையும் என்னைய மாட்டிவிட மாட்டா. அவ தான் எனக்கு வேணும் அவளை தவிர வேற எவளும் தேவையில்ல என்று சொல்லிக் கொண்டது.


Leave a comment


Comments


Related Post