Total Views: 1527
"குட்டி அந்தப் பாப்பா பொழைச்சிடும் தானே, பொழைச்சிடும், நான் பொழைக்க வெச்சிடுவேன்".
"சாமி. அந்த பாப்பா பொழைச்சிடும் நீங்க இப்படியே பேசிட்டு இருந்தா நான்தான் போய் சேரணும்னு போல.. கேட்டதுல இருந்து நெஞ்சே பதறுது" என பட்டென்று கண்களைத் திறந்துவிட.
'இவ்வளவு நேரம் தான் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்' என்றதுமே நந்தன் அவளை விழிக்காமல் பார்க்க. நிலா என்ன நினைத்தாளோ எழுந்து அவன் கன்னத்தில் அழுத இதழ் பதித்தாள்.
"இப்படி பார்க்காதீங்க விஜய்,அப்புறம் ஏதாவது தப்பு தண்டா நடந்தா நான் பொறுப்பு இல்ல.வெளியே தான் முரட்டு பீஸ் போல,உள்ள மனசு பஞ்சு மாதிரி ரொம்ப சாப்ட்டா இருக்கு. இதுல தான் நான் விழுந்துட்டேனோ". என அவன் இருப் பக்க கன்னத்தையும் பிடித்து ஆட்டியவள்.
"என்னைய எப்போவோ மன்னிச்சிட்டிங்க போல.. " என்றாள்.
"நான் மன்னிச்சிட்டேன்னு யாரு சொன்னா?"
"உங்க குட்டிங்கற வார்த்தை தான் சொல்லுது."
"ஹா அதுக் கூப்புட்டா கோவம் இல்லைன்னு அர்த்தமா?"
"ம்ம்ம்"
"நான் கேட்டது கிடைச்சா தான் என்னோட மன்னிப்பு கிடைக்கும்."
"இப்போ எதுக்கு அதைப் பத்தி பேசறீங்க?".என்றவள் "இது தரீங்களா?" என அவன் கீழுதட்டைப் பிடித்து இழுக்க..அவள் கையைத் தட்டி விட்டவன்
"போடி"
"லிவிங்ல இருக்கலாம்ன்னு சொன்னிங்க" என வெட்கம் விட்டு கேட்டே விட்டாள்.
"அது நோம்பி முடிஞ்சதுக்கு அப்புறம்."
"அப்போ அது வரைக்கும் வீட்டுக்கு வராதீங்க."
"ஓ வர வேண்டாம்னு சொல்ற அளவுக்கு வந்துட்ட. குட்"
"தேங்க்ஸ் இது நீங்க சொல்லிக் குடுத்தது தான்".
"தூக்கம் வருது. தூங்குடி" என்றவன் அவள் இடுப்பின் மீது கையைப் போட்டு அழுத்தினான்.
காலையில் இருந்து சாப்பிடாத வயிறு வேறு சத்தம் போட்டது . நந்தன் எழுந்து அமர்ந்து விட்டான்
"என்னாச்சி.?"
"ஏன் உன்னோட வயிறு கத்துது.?"
"அது எதுக்கு கத்துதோ".
"சாப்புடியா?"
"நீங்க தராம நான் எப்படி சாப்புடுவேன்".
"அறிவு இருக்காடி வெளியே போறவனுக்கு ஆயிரம் வேலை இருக்கும்,நான் வந்து தான் எல்லாம் பண்ணனும்ன்னு இருக்கக்கூடாது.நான் அப்பாவை பேசினேனா அவரு அம்மாவைப் பார்க்கவே மாட்டாரு, அதனால பேசுனேன் அதை புடிச்சிட்டு காலையில் இருந்து திங்காம இருக்க,கூறுக்கெட்டுப் போச்சா?".
"இவ்வளவு பேசுனதுக்கு பதிலா சோறு போட்டு எடுத்துட்டு வந்துருக்கலாம்".என்றதும் நந்தன் அந்த இடத்தை விட்டு நகரவே இல்லை
"பசிக்குதுங்க."
"நீ பண்றது தப்பு," போலீஸ்காரனாக அவளைப் போட்டு படுத்தி எடுத்தப்,பின்பு தான் அவனே அவன் கையால் தோசை சுட்டு எடுத்து வந்து கொடுத்தான்.
"ஊட்டி விடல".
"காலுல தானே பிரச்சனை காலையில திங்கறதுக்கு என்ன?".
"அப்போ ஊட்டி விட மாட்டிங்களா..?" என ஏக்கமாக கேக்க, அதன்பிறகும் அவன் வீம்பை இழுத்துப் பிடித்துக் கொண்டு நிற்பனா என்ன.?
அவளை சாப்பிட வைத்துவிட்டு, தட்டைக் கீழே கொண்டுபோய் வைத்துவிட்டு வந்தவன். "என்னோட வீட்டுலக் கூட இவ்வளவு வேலைச் செஞ்சது இல்லடி நானு" என்றான்.
"பொண்டாட்டின்னா சும்மாவா போலீஸ்கார்"
"மத்தப் பொண்டாட்டிங்க எப்படின்னு தெரியல, ஆனா நீ புருஷன் கேக்கற ஒன்னையக் குடுக்க இவ்வளவு யோசிக்கறனா லேசுப்பட்டவ இல்லைன்னு மட்டும் தெரியும்"
"நீங்க ஏன் அதுலையே இருக்கீங்க எனக்கு நீங்க மூணுப்பேருமே வேணும்."
"என்னய கேட்டா நீ மட்டும் போதும் சொல்லுவேன்."
"அது நீங்க வளர்ந்த விதம் அப்படி. நாங்க நாலுப் பேர் சேர்ந்து இருந்தா நீங்க மட்டும் தனியா இருப்பிங்க. அதனால உங்களால ஈஸியாச் சொல்ல முடியுது நான் தான் வேணும்னு. என்னால அப்படி ஈஸியா சொல்ல முடியல, எனக்கு அண்ணாவா வளவனை தவிர வேற யாராலும் இருக்க முடியாது, யுகியும் அப்படி தான் ஒரு பிரண்ட்டா, ஒரு அப்பாவா அவனை தவிர வேற யாரும் இருக்க முடியாது அதே மாதிரி தான் நீங்க,மத்தவீங்களுக்கு நீங்க எப்படியோ, எனக்கு நீங்க பக்கா ஹஸ்பண்ட் மெட்ரியல் தான்" என்றவள் "வேணுனா ஒன்னு சொல்வா?" என்றாள்.
"என்ன?" என்பது போல் நந்தன் பார்க்க.
"அவங்களை விட நீங்கதான் முக்கியம்ன்னு தான் என்னால வர முடியாது. ஆனால் அவங்களை விட நீங்க என்னய ஒருப் படி மேலப் பார்த்துப்பிங்கன்னு நம்பிக்கையா என்னால சொல்ல முடியும். அதைச் சொல்றேன் என்னய நீங்க குட்டி குட்டின்னு தாங்குவீங்க,இவ்வளவு வருஷம் என்னைய படுத்துன பாட்டுக்கும் சேர்த்து இப்போ கீழே விடாம தாங்குவீங்க" என்று அவன் மார்பில் முகம் புதைத்தாள்.
"இது. மட்டும் போதும்" என நந்தனால் நினைக்க முடியவில்லை. "இப்போதைக்கு இது போதும்", என்கின்ற மனநிலை தான் உருவாகியது.
"சரி படு"
"இவ்வளவு சொல்லியும் உங்களுக்கு புரியலையா விஜய்?".
"புரிஞ்சிது" என்றவன் கண்களை மூடிக் கொண்டான்
அதற்கு மேல் காதலை யாசகமா கேக்க முடியும்.அவளும் படுத்து விட்டாள்.
அடுத்த நாள் காலை அனைவருக்கும் பெரிய இடியை வைத்திருக்கிறது என தெரியாமல் அவரவர் உறங்கினர்.
காலைப் பொழுது அழகாக விடிய. நந்தன் எழுந்ததும் நடைப்பயிற்சி செய்வதுக்கு சென்று விட. யுகியைப் பார்க்க நிலா பின்புறமாக அவன் அறைக்குப் போக அறை வெறுமையாக இருந்தது
"அத்தை. அத்தை"
"சொல்லு நிலா. ம்மா"
"இந்த யுகி எங்கப் போனான்?".
"ஏன்? ரூமில தான் இருப்பான்".
"அங்க தான் இல்லையே".
"வேற எங்கப் போய் பார்க்கறது?.கார் இருக்கா பாரு?"
"அத்தை இன்னும் அவன் சரியாவே நடக்கல அதுக்குள்ள கார் ஓட்டப் போறானா? . சும்மா இருங்க".
"மணி என்ன?"
"ஏழு இருக்கும்"
"பக்கத்துல எங்கையாவது வாக்கிங் போயிருப்பானா இருக்கும்.
இல்லை நேத்து நான் கேட்டதுல இருந்து அவன் என்கிட்ட சரியாவே பேசல.
நீயா எதையாவது யோசிச்சிட்டு இருக்காத.
அவரிடம் சொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லை என வெளியே வந்தாள்.
அப்போது தான் நந்தனும் வர, நிலா முகத்தைப் பார்த்தே எதோ பிரச்சனை என புரிந்துக் கொண்டவன்.
அவள் அருகில் சென்று "என்னாச்சி?" என்றான்.
"யுகியைக் காணல"
"வாக் எதாவது போயிருப்பான்."
"என்ன எல்லோரும் இதையே சொல்லிட்டு இருக்கீங்க அவன் வாக் போற அளவுக்கு நடக்க ஆரம்பிச்சிட்டானா?".
"இப்போ எதுக்கு டென்ஷன் ஆகற?, அவன் என்ன சின்னக் குழந்தையா?" என்றதும் நிலா விருக்கென்று பார்த்தாள்.
அவளுக்கே தெரியல. சாலையைக் கடக்கும் போது அவன் சரியான கடக்க மாட்டான் என இவளும்,இவள் சரியாக கடக்க மாட்டாள் என அவனும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு தான் கடப்பார்கள், இதில் யார் குழந்தை என்று எப்படி சொல்ல முடியும்?. இருவருமே அடுத்தவரை அப்படி தானே பார்த்தார்கள்.
"என்ன?"
"ஒன்னுமில்ல" என்றவள்,அங்கு இருந்தால் நந்தன் ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பான் என வீட்டின்னுள் சென்று, யுகியின் எண்ணிற்கு அழைத்தாள்.
அதுவோ அணைக்கப் பட்டிருந்தது. அன்று அணைக்கப்பட்டப் போது வெட்டுப் பட்டு மருத்துவமனையில் கிடந்தான்,இன்றும் அணைக்கப்பட்டிருக்கிறது என்ன நடக்கப் போகிறதோ? நினைக்கும் போதே உடலும் உள்ளமும் ஒரு சேர நடுங்கியது.
வீட்டில் யாரிடம் சொன்னாலும் மணி சொன்னப் பதிலையே தான் சொன்னார்கள்.
"போங்கடா யாருக்கும் அவன் மேல அக்கறை இல்ல. அண்ணாகிட்ட சொல்லுவோம்" என அங்குப் போக. வளவனோ காலையில் நேரமாக கிளம்பிக் கேரளா சென்று விட்டான்.
"அண்ணா எங்க ஷாலு?".
"அந்தக் குழந்தை விசயமா கேரளா போறேன்னு சொன்னாரு நிலா."
"ஓ"
"எதுக்கு கேக்கற?"
"யுகியைக் காணா மணி எட்டு ஆகிடுச்சு, நானும் வீடு முழுக்கப் பார்த்துட்டேன், அதான் அண்ணாவை ஒரு எட்டு தேடச் சொல்லலாம்னு தான் "என சொல்லிக்கொண்டிருக்கும் போதே.
ராஜி, "அவன் என்ன குழந்தையா?" என ஆரம்பிக்க.
"எனக்கு குழந்தை தான்,எல்லோரும் இதையே சொல்லாதீங்க எரிச்சலா இருக்கு,நாளைக்கு நான் காணாம போனாலும் இதையே தான் சொல்லுவீங்களா?" என்று கோவத்தில் கத்தினாள்.
இவளோட பைத்தியத்துக்கு நம்ப மருந்தாக முடியாது என அவரவர் வேலையைப் பார்க்க, நிலாவே பக்கத்து ஏரியா முழுவதும் தேடிப் பார்த்தாள்.
அதற்குள் யுகி இருக்கும் இடம் நந்தனுக்கு தெரியவர . அவன் வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை அவனும் சென்றுப் பார்க்கவில்லை. அவனே வரும் போது வரட்டும் என விட்டுவிட்டான்.
மணி பத்தை தாண்டி விட்டது நிலா தேடி தேடி சோர்ந்து போனவள் நந்தனின் வீட்டிற்கு வர, நந்தன் இன்னும் கிளம்பாமல் இருப்பதைப் பார்த்ததும்.
"நீங்க இன்னும் போகலையா?" என்றாள்.
அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல் கால் மேல் கால் போட்டு செய்தித்தாளைப் புரட்டிக் கொண்டிருக்க.10.30 என்னும் போது வீட்டின் அழைப்பு மணி அடித்தது.
"போய் கதவை திற".
"நீங்க திறந்தா, கதவு திறக்க மாட்டேன்னு சொல்லிடுதா?".என முனவிக் கொண்டே கதவை திறந்தவள், அங்கு நின்றவர்களைப் பார்த்து நெஞ்சைப் பிடித்துக் கொண்டாள்.
"அத்தை அத்தை.. இங்க வாங்க.. விஜய்.. " என கத்திவளால் 'இது உண்மை தானா?' என்று தெரியாமல் கண்களைத் தேய்த்துக் கொண்டாள்.
"யுகி".
அவள் சத்தத்தில் எல்லோரும் ஓடி வந்தார்கள். நந்தன் மட்டும் தான் அலட்டிக் கொள்ளாமல் வந்தான்.
"ஏண்டா இப்படி பண்ணுன?". என நிலா யுகியின் சட்டையைப் பிடிக்க.. "கையை எடு நிலா அவர் சட்டைப் பிடிக்க நீ யாரு?" என நிலாவின் கையை விலக்கி விட்டது ஒரு கரம்
நிலா உடைந்து போய் யுகியைப் பார்க்க,அவன் எதுவும் பேசாமல் நின்றான்.
யுகி செல்வராணியின் இரண்டாவது மகள் கவிநிலாவை கல்யாணம் செய்து அழைத்து வந்திருந்தான்.
அதைப் பார்த்ததும் நிலாவின் இதயம் இரண்டாக பிளந்ததுப் போல் வலித்தது.
நியாயப்படிப் பார்த்தால் அவள் சந்தோசம் தானே பட்டிருக்க வேண்டும் என தோன்றும். நிலா வேண்டுமானால் நந்தனைப் பற்றி யுகியிடம் சொல்லாமல் இருப்பாள். ஆனால் யுகி நிலாவிடம் ஒன்றையும் மறைப்பதில்லை. அவனுக்கு தலைவலி என்றால் கூட முதலில் தெரிவது நிலாவிற்கு தான். அப்படி இருக்கும் போது அவன் காதலித்ததை மறைத்ததே அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை, இதில் கல்யாணமே பண்ணினால் அவளால் எப்படி தாங்க முடியும்?.
"யுகி நீயா இது?. என்கிட்ட சொல்லாம ஒரு சட்டைக் கூட வாங்க மாட்டியேடா இப்போ கல்யாணமே பண்ணிட்டு வந்துருக்க?". என்றவளுக்கு நிற்காமல் கண்ணீர் வழிந்தது
அவளைத் தவிர யாருமே யுகியின் திருமணத்தை அதிர்ச்சியாகப் பார்க்கவில்லை.
கிருஷ்ணமாளுக்கு பேத்தி பேரனையே முடித்தது சந்தோசமா இருந்தது.
மணிக்கும்,மார்த்திக்கும் அவன் காதல் தெரியும் என்பதால், கவிநிலாவை திருமணம் செய்ததை நினைத்து மகன் வாழ்க்கை பிழைத்துக் கொண்டது என்ற சந்தோசம் தான் எழுந்தது.