Total Views: 1244
நந்தனை எந்த லிஸ்டிலும் சேர்த்த தேவையில்லை.அவன் தான் எந்த ரியாக்சனையும் முகத்தில் காட்டவே மாட்டானே.
"ஏய் மணி இப்படியே பாராக்கு பார்த்துட்டு இருந்தா என்ன அர்த்தம்? போய் ஆரத்தி கரைச்சி எடுத்துட்டு வா".என அதிகாரம் செய்தார் கிருஷ்ணம்மாள்.
"நான் எதுக்கு அத்தை?அதான் பெரிய மருமகளா நிலா இருக்காள?" என மணி நிலாவை கோர்த்து விட.
நிலா மணியை அப்பட்டமாக முறைத்தாள்.
"போ நிலா"
"முடியாது. நீங்களே பண்ணுங்க"என்றவள் பின்னால் நகர்ந்து நின்றுக் கொள்ள.
யுகி நிலாவின் முகத்தையே தான் பார்த்தான்.
"இப்போ எதுக்கு ஓவரா ரியாக்ட் பண்ணிட்டு இருக்க?" என நந்தன் நிலாவின் அருகில் வந்து அவள் காதில் கேட்டான்.
அவனையும் முறைத்தவள். "நான் ஓவரா தான் பண்றேன், அதுல உங்களுக்கு என்ன பிரச்சனை.? உங்ககிட்டையா பண்ணுனேன் உங்க வேலையைப் பாத்துட்டு போங்க" என்றாள் கோவத்தில் யாரைக் கடிக்கலாம் யாரை கொதறலாம் என வெறியாக இருந்தது நிலாவிற்கு.
"அவன் லவ் பன்றேன்னு சொன்னான்,இப்போ கல்யாணமே பண்ணிட்டு வந்துட்டான், இது சந்தோசப்படற விசியம் தானே அவன் கல்யாணம் பண்ணுனா உனக்கு எங்க வலிக்குது?".
"எனக்கு எங்கையோ வலிக்குது உங்ககிட்ட நான் எதுக்கு சொல்லணும்?. அவனை தேடுங்கன்னு சொன்னப்ப குடும்பமே அவன் எங்கப் போய்டப் போறான்னு சாதாரணமா சொல்லும்போதே நான் சுதாரிச்சிருக்கணும், குடும்பமா இது?"என்றவள், "இங்க இருந்தா எனக்கு பைத்தியம் பிடிச்சிடும்" எனத் திரும்பி அவள் வீட்டிற்கே சென்றுவிட்டாள்.
வளவனிற்கும், ஷாலினிக்கும் விசியம் பறக்க, ராஜியுடன் ஷாலினி உடனே வந்துவிட்டாள்.
கவிநிலாவின் குடும்பத்திற்கு செய்திப் போனது. அடுத்த ஒருமணி நேரத்தில் வீடே கோலாகலமாக இருந்தது.
எத்தனை பேர் வீட்டில் இருந்தாலும் யுகியின் கண்கள் நிலாவைத் தான் தேடியது.அவள் இல்லாத வீடு அவனுக்கு வெறுமையாக இருந்தது.
"அப்புறம் புது மாப்பிள்ளை. உன்னோட காதல் பொண்டாட்டி பக்கத்துல இருக்கும் போது நீ யாரை தேடுற.?"என அவன் அருகில் வந்து அமர்ந்தான் நந்தன்.
"இவன் ஒருத்தன் பேசுன்னு சொல்றப்ப பேசாம உயிரை வாங்குவான், இப்போ பேசியே உயிரை வாங்குறான்" என மனதுக்குள் திட்டிக்கொண்டவன்.
"பூனையைக் காணல அதான் பார்த்தேன்,"
"பக்கத்துல இருக்கற மயிலைப் பாருடா, அப்புறம் பூனையைப் பார்ப்ப,லவ் பண்ணி தானே கல்யாணம் பண்ணிக்கிட்ட, என கேள்வியாக யுகியைப் பார்க்க.
"ஏன்? லவ் பண்ண மாதிரி தெரியலையா என்ன?".
"அவ முகத்தப் பார்த்தா அப்படி தான் தெரியுது, உன்னோட முகத்தப் பார்த்தா தான்" என நந்தன் இழுக்க யுகி வேகமாக தன் முகத்தை துடைத்துக் கொண்டான்.
"ஹா இப்போ ஓகே தான்". என்ற நந்தன், "என்னோட பொண்டாட்டியைப் பத்தி கவலைப் பட நான் இருக்கேன், நீ உன்னோட பொண்டாட்டியைப் பத்தி மட்டும் கவலைப்படு சரியா?" என அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டு சோபாவில் சாய்ந்து அமர்ந்துக் கொண்டான்.
தங்கள் இருவருக்கும் இடையில் வேறு ஒருவர் வரும் போது தங்களுக்குள் இருக்கும் பிணைப்பு பாசம், அன்பு, எல்லாம் பாதிக்கப்படும் என்று தான் இவ்வளவு நாளும் அவர்களுக்கு இடையில் யாரையும் வர விடாமல் பார்த்துக் கொண்டான். இன்று அவளுக்கு என்று நந்தனும் தனக்கு என்று கவிநிலாவும் இருக்கிறார்கள்,இனி "பூனை" என்று அழைக்கவே அனுமதி வாங்க வேண்டிய நிலை வந்தாலும் வரும், இப்படி ஒரு நிலை வந்து விடக்கூடாது என்று தானே இவ்வளவு நாளும் பயந்தான்.
நேற்று வளவன் சொல்லிவிட்டு சென்றதும் மூளைப் போட்டு குழப்பி நன்றாக யோசித்தான்.
அவன் அறிவுக்கு எட்டியது இந்த கவிநிலா மட்டும் தான். நிலா பெயரில் அவள் இருக்கிறாள் என தெரிந்த யுகிக்கு கவிநிலாவிற்கு நிலாவை சுத்தமாக பிடிக்காது என்று தெரியவில்லை. பிரச்சனையை விலைக் குடுத்து வாங்கி வந்து சாரி விலை இல்லை தாலிக் கொடுத்து வாங்கி வந்து தன் வாழ்க்கைக்குள் புகுத்திக் கொண்டான். இதனால் யார் தன்னை விட்டு விலகிடக் கூடாது என இவ்வளவும் செய்தானோ அவளே இவனை விட்டு நிரந்தரமாக பிரியும் நிலையும் வரலாம். பின்னால் வரும் பிரச்சனைகளை என்ன வென்று சொல்வது?.
கவிநிலா மனதில் தோன்றியதும் அவன் முகம் சுளிந்தது. அவளா? என்ற திருப்தியின்மை தோன்ற. 'வேண்டா வேறப் பொண்ணைப் பார்த்து கேக்கலாம்' என எண்ணிக் கொண்டான்.
எண்ண மட்டும் தான் முடிந்தது. அவன் தேடிய பெயரிலும், பெண் கிடைக்கவில்லை, நடிக்கவும் யாரும் ஒப்புக்கொள்ளவில்லை.
கடைசியில் கவிநிலா தான் என முடிவு ஆனது.அவளிடம் நடிக்கச் சொல்ல முடியாது காதலிக்கிறேன்னு சொல்லி அப்புறம் பிரேக் அப் பண்ணிடுவோமா?' என்று தான் யோசித்து வைத்திருந்தான்.
ஆனால் இதனால் மீண்டும் நிலாவின் வாழ்க்கையில் எதாவது பிரச்சனை வந்து அவள் பாதிக்கப்படுவாள் என மனம் சொல்லிக் கொண்டே இருக்க, என்ன நினைத்தானோ கவிநிலாவிற்கு அழைத்தான்.
"சொல்லுங்க மாமா"
"உங்கிட்ட கொஞ்சம் பேசணும்"
"என்னடா இது அதிசயமாக இருக்கு எப்போமே முகம் குடுத்து பேசக்கூட மாட்டான், இன்னைக்கு அவனா கால் பண்ணி பேசணும்னு சொல்றான்?" என கவிக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தாலும் "பேசலாம் மாமா" என்றாள்.
"ம்ம் நான் உன்னை லவ் பன்றேன் நீ என்னைய லவ் பண்றியா?"
"என்னது?" என்றவளுக்கு உச்சக்கட்ட அதிர்ச்சி.அவளுக்கு யுகி என்றால் மிகவும் பிடிக்கும், அவனிடம் பேச சென்றாலே அவன் பூனை பூனை என நிலாவின் பின்னால் சென்று விடுவான். இத்தனை வருடத்தில் நந்தனிடம் கூடப் பேசியிருக்கிறாள். யுகியிடம் பேச வாய்ப்பே அமைந்ததில்லை. இன்று அவனே வந்து காதல் சொன்னால் அதிர்ச்சியாகாமல் என்ன செய்வது.?
"என்ன திடீர்னு ..?" என்றாள் தயக்கமாக.அவன் காதலை நம்புவதா வேண்டாமா என்ற தயக்கம் இருக்க தானே செய்யும்.
"காதல் சொல்லிட்டா வரும்?. இப்போ வந்துடுச்சி, நீ என்ன சொல்ற?"
"எனக்கும் உங்களை பிடிக்கும் மாமா".
"அப்போ நாளைக்கு கல்யாணம் பண்ணிக்கலாம்".
"நாளைக்கேவா!!!"உஞ்ச பட்சமாக அதிரந்தாள்.
%ஏன் கல்யாணம் பண்ணிக்க மாட்டியா?"
எங்கு விட்டால் ஓடிவிடுவானோ என்ற எண்ணத்தில் "பண்ணிப்பேன்" என்றாள்.
அவளுக்கு நிலாவை மட்டும் தான் பிடிக்காது,அதற்கு காரணம் கூட யுகி பூனை பூனை என்று சொல்வது தான்.
"சரி காலையில ஆறு மணி ரெடியா இரு நாளைக்கு முக்கூர்த்த நாள் தான் கோவில வெச்சி சிம்பிலா தாலிக் கட்டிடறேன் அப்புறம் ரிஜிஸ்டர் பண்ணிப்போம்".
"என்ன இவ்வளவு அவசரம்?
ஏன் சொன்னா தான் கல்யாணம் பண்ணிப்பியா
அதெல்லாம் இல்ல.
ம்ம்
நீங்க நிஜமா தானே சொல்றிங்க,
உன்னைய வெச்சி விளையாடற அளவுக்கு எனக்கு நேரமும் இல்ல ஆசையுமில்ல என்றவன் பட்டென்று அழைப்பைத் துண்டித்துவிட்டான்.
எல்லோரும் அந்தக் குழந்தை விசயத்தில் மும்முரமாக இருந்ததால் இவனை யாரும் கவனிக்கவில்லை
விடிந்ததும் கவி தயாராகி நிற்க.
"இவ்வளவு காலையில எங்க கிளம்பி நிற்கர கவி?". என்றார் செல்வராணி.
"பிரண்ட்க்கு இன்னைக்கு கல்யாணம்மா,"
"போறேன்னு நேத்து வரைக்கும் சொல்லல்ல'.
"திடீர்னு போகணும்ன்னு தோணுச்சு கிளம்பிட்டேன்" என்றாள்.
வீட்டில் சொன்னால் யாரும் இவர்கள் கல்யாணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள், பிறகு எதற்கு இந்த அவசரக் கல்யாணம் என மனதிலும் கேள்வி எழாமல் இல்லை, அதைக் கேட்டால் எங்கு யுகி கிடைக்காமல் போய்விடுவானோ என்ற பயத்தில் அவன் ஆட்டி வைக்கும் பொம்மையாக ஆடினாள்.
சொன்னது போல் யுகி ஆறு மணிக்கு வந்து விட,அவனுடன் சேர்ந்து கோவிலுக்குச் சென்றாள்.
இருவரும் திருமணம் முடிந்து இதோ இப்போது வீட்டில் இருந்தனர்.
யுகி அவசரப்பட்டுவிட்டோமோ என இத்தோடு ஆயிராவது முறையாக நினைத்துவிட்டான்.
கவி, நிலாவைப் பேசும்போதே யுகியால் கோவத்தை அடக்க முடியவில்லை. வந்ததும் கவியை எதிர்த்து பேசினால் எல்லோருக்கும் சந்தேகம் வந்துவிடும் என்ற ஒரேக் காரணத்திற்காக பொறுமையாக இருந்தான்.
மதியம் போய் இரவும் வந்து விட்டது. அதுவரைக்கும் நிலா இங்கு வரவில்லை அவளை வா என யாருமே அழைக்கவில்லை.
நந்தனும் அவன் வேலையைப் பார்க்கச் சென்று விட்டான்.
செல்வராணிக்கு சந்தோசத்திற்கு அளவே இல்லை. அவர் ஆசைப்பட்டது அதுதானே. மகளை எப்படியாவது இங்கு சேர்த்துவிட வேண்டும் என்று.
என்ன முதல் மருமகளாக வந்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் இப்போது மட்டும் என்ன நிலாவை மட்டம் தட்டி தன் பிள்ளையின் கைக்கு ராஜ்ஜியம் வருவது போல் பார்த்துக் கொள்ளலாம் என விட்டுவிட்டார்.
பெரியவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து இதை பெரிய விஷயமாக வெளியேப் போகாமல் அமுக்கி வீட்டில் பார்த்து திருமணம் செய்வது போல் வரவேற்பு நிகழ்ச்சி வைத்துவிடலாம் என முடிவு செய்தனர்.
அதையும் ரொம்ப நாள் தள்ளிப் போடாமல் உடனே வைக்க வேண்டும் என மண்டபம், சாப்பாடு என்று ஆளுக்கு ஒரு ஐடியா சொல்லி கடைசியில் வீட்டிலையே பெரிய பந்தல் போட்டு அங்கையே ரிசப்ஷன் வைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. அதற்காக வேலையை செய்ய மார்த்தியும், செல்வராணியின் கணவனும் சென்றுவிட்டனர்.
யுகியின் கல்யாண விசியம் தெரியும் போது வளவன் ரதியோடு அந்தக் குழந்தையின் சிகிச்சையைப் பார்த்துக் கொண்டிருந்தான் வளவன்.
ஷாலினி அவனுக்கு அழைக்க
அழைப்பை ஏற்றவன். "சொல்லு ஷாலு" என்க.
"ஏங்க இந்த யுகிப் பையன் கவியை கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டாங்க."
"என்னடி சொல்ற!!! யாருடி அந்த கவி?"
"அதாங்க ராணி அத்தையோட ரெண்டாவது பொண்ணு"
"இவனுக்கு என்ன புத்திக் கெட்டுப் போச்சா? உங்க அத்தையே விஷக் குடோன்னு, அதோட பொண்ணு எப்படி இருக்கும்?தேவையில்லாம அவன் லைப்பை சிக்கல் ஆக்கி வெச்சிருக்கான்."
"நீங்க வரீங்களா?"
"வரணும் ஆனா இங்க அந்தப் பாப்பாவுக்கு டிரீட்மென்ட் போய்ட்டு இருக்கு, ரதியால தனியா மேனேஜ் பண்ண முடியாது, ஏதாவது மருந்து தேவைப் பட்டா வாங்கி தரணும்ல".
"ம்ம்"
"நைட் எவ்வளவு நேரம்னாலும் வீட்டுக்கு வந்துடுவேன். அம்மு என்ன பண்றா? யுகி மேர்ஜை அக்ஸப்ட் பண்ணிட்டாளா?".
"இல்ல அவதான் முதல்ல பார்த்தது அவனை காணலன்னு வீடு முழுக்க தேடிட்டு இருந்தா,அப்போதான் இவங்க கல்யாணம் பண்ணிட்டு வந்து நின்னாங்க. அப்போ வீட்டுக்கு வந்தவ தான் அதுக்கு அப்புறம் போகவே இல்ல".
"சரி ரெண்டு நாள் அப்படி தான் இருக்கும்.அவளை டிஸ்டர்ப் பண்ணாதீங்க. நான் வந்து பேசி சமாதானம் பண்ணிக்கறேன்" என்று அழைப்புத் துண்டித்து விட்டான்.
அவன் பேசியதை அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த ரதி." உங்க வீட்டுல யாருமே உருப்படியா கல்யாணம் பண்ண மாட்டிங்களா? " என சிரிக்க.
"உருப்படியா கல்யாணம் பண்ணணும்னா உன்னையும் அண்ணனையும் மாதிரி 60 வது கல்யாணம் தான் பண்ணனும்" என கிண்டல் செய்ய,அவன் முதுகிலையே நாலு மொத்து மொத்தினாள் ரதி.
இந்த இரண்டு நாட்களில் அவர்களுக்குள் தோழமை உருவாகி இருந்தது,அதனால் சகஜமாக பேசிக்கொண்டனர்
நிலா தன் அறையின் தரையில் படுத்து அழுதுக் கொண்டிருந்தாள்.
இப்போது வரைக்குமே யுகி செய்ததை அவளால் நம்பவும் முடியவில்லை,ஜீரணிக்கவும் முடியவில்லை.
மனம் ரணமாகியது. நிலாவிற்கு தெரியும் கவிக்கு தன்னைப் பிடிக்காது என்று, நாளையில் இருந்து யுகி தன்னிடம் பேசக்கூடாது என கவி சொன்னாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை.
"ச்சை இவருக்கு நான் அவன் கூட பேசறது புடிக்கல அவளுக்கு அவன் என்னோட பேசறது புடிக்காது. இதுக்கு எதுக்குடா கல்யாணம் பண்ணிக்கணும், எப்போவும் போல எங்கக் கூட்டுக்குள்ளயே நாங்க இருந்துருப்போம்ல, ஒரு கல்யாணம் பண்ணி 25 வருஷ பாசப் பிணைப்பை அத்துட்டாங்களே. இனி பழைய வாழ்க்கை கிடைக்குமா?. அதற்கு வாய்ப்பே இல்லை" என மனம் உறுதியாக சொல்ல. கண்ணீர் வெள்ளமாக கரையை உடைத்துக் கொண்டு பாயிந்தது.
"நீ கல்யாணம் பண்ண மாதிரி அவனுக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு நிலா. அதை அவன் சந்தோசமா வாழனும்னா, நீ விட்டுக் குடுத்து போகணும், யாரு அவன் உன்னோட யுகி தானே, சொல்லிட்டு பண்ணிருந்தா உனக்கு சோறு கிடைச்சிருக்கும் அவ்வளவு தான், அந்த சோறை கேட்டு வாங்கிடலாம் பிரீயா விடு". என மனம் அவளை தேற்றியது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த விசயத்தில் இருந்து வெளியே வந்தாள்.ஆனால் திரும்ப அங்கு சென்று யாரையும் பார்க்க விரும்பவில்லை.
மணமக்களுக்கு என இரவு சடங்கை ஏற்பாடு செய்யச் சொல்லி கிருஷ்ணம்மாள் ஆர்ப்பாட்டம் செய்ததால், வேறு வழியில்லாமல் இன்று இரவே முதலிரவுக்கும் ஏற்பாடு செய்தனர்.
இன்று முழுவதும் நிலாவைப் பார்க்க முடியவில்லை, போனிற்கு அழைத்தாலும் அவள் எடுக்காமல் சுவிட்ச் ஆப் செய்துவிட. யுகிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்ல.
அவளுக்காக தான் இந்தக் கல்யாணம் என அவனுக்கு மட்டும் தானே தெரியும், வளவனிடம் கூட இதைப் பற்றி யுகி சொல்லவில்லை.அவளே அவனிடம் பேசாமல் விலகிப் போனால் என்ன செய்வான்?.
அவன் மனமோ."நீ பண்ணது தப்போ,சரியோ உனக்குன்னு ஒருத்தி உன் வார்த்தையை நம்பி அவள் வாழ்க்கையையேக் கொடுத்து இருக்கா, அவளுக்காகவாது நீ பூனையை விட்டு கொஞ்சம் தள்ளி இருக்கனும்" என சொல்ல
பூனையை விட்டு தள்ளிப் போகணும்னு நினைக்கும் போதே வலித்தது, அதை எப்படி நடைமுறைப் படுத்துவது என்று தெரியாமல் தடுமாறினான்.
இரவு பால் சொம்புடன் கவி உள்ளே வர. யுகிக்கு மனம் தடத்தடவென அடித்துக் கொண்டது.
"காதலிக்கிறேன்னு சொல்லிட்டு எப்படி தள்ளி இருக்கறது..? "
"மாமா பால்"
"எனக்கு வேண்டா நீ குடி."
"எனக்கு வேண்டா.."
"சரி இப்படி உக்காரு" என்றவனுக்கு அவனது அறையில் வேறு ஒருப் பெண், இதை ஏற்றுக்கொள்ள சற்று கடினமாக தான் இருந்தது வேறு வழி. அவன் தேர்ந்தெடுத்த பாதை தானே, சென்று தான் ஆக வேண்டும்.
யுகியின் அருகில் கவி உக்கார.மனதைக் கல்லாக்கிக் கொண்டு அவள் கையைப் பிடித்தான்.
"மாமா.." என்றவளுக்கு வார்த்தை அரைவை எந்திரத்தில் மாட்டியது போல் சிக்கி தவிக்க.
"நம்ப யார்கிட்டயும் சொல்லாம கல்யாணம் பண்ணிகிட்டோம்."
"ம்ம்."
"அவங்க ஏத்துக்கிட்டாங்க தான்".
"ம்ம்"
"நேத்து தான் என்னோட விருப்பதையே உன்கிட்ட சொன்னேன் நீயும் நான் இப்படி சொல்லுவேன்னு எதிர்பார்த்து இருக்க மாட்ட.. நான் சொன்னதுகாக்க நீ சரின்னு சொல்லிருப்பேன்னு உன்னோட நிலைமை எனக்கு புரியுது. அதுக்காக தான் உன் மனசு இதுலாம் ஏத்துக்க பழகற வரைக்கும் நம்ப கொஞ்சம் விலகி இருப்போம்."என அவளிடம் சொல்வது போல் தனக்கு தானே சொல்லிக் கொண்டான்.
"மாமா..."
"ப்ளீஸ் கவி காலையில இருந்து அலைஞ்சது வேற, உடம்பை என்னமோ பண்ணுது,நீ தூங்கு நம்ப மனசளவுல நெருங்குனதுக்கு அப்புறம் இதெல்லாம் வெச்சிக்கலாம்" என்று பொறுமையாக எடுத்துச் சொன்னவன்,ஒரு புறம் படுத்துவிட நேற்று இரவில் இருந்து பலக் கனவுக் கண்டவளுக்கு ஏமாற்றமாக இருந்தது.
அப்பறம் கவி சொல்ல மறந்துட்டேன். "பூனையை இப்படி பேசுறதை இதோட விட்டுரு, அவளும் இந்த வீட்டு மருமக. அவளுக்கான மரியாதையை நீ கொடுக்க மறந்தராத . அதை நியாபகம் வெச்சிட்டு செய் போதும். இன்னைக்கு நீ பேசுனதை நந்தன் வேடிக்கைப் பார்த்துட்டு இருந்தான், எனக்கும் அப்படியே இருப்பான்னு சொல்ல முடியாது" என்றவன் "இந்த வீட்டுல எந்த பிரச்சனை நடந்தாலும் உன் பக்கம் நியாயம் இருந்தா உன் பக்கம் இருப்பேன், இல்லனா பொண்டாட்டியாவே இருந்தாலும் போடின்னு சொல்லிட்டு போயிடுவேன், நான் எந்தப் பக்கம் இருக்கனும்ங்கறது கூட உன் கையில தான் இருக்கு" என்றவன் திரும்பிப் படுத்து உறங்கிவிட.
அவன் சொன்ன வார்த்தைகள் மனதில் நெருஞ்சி முள்ளாக குத்தியது கவிக்கு
"நிலா, நிலா,நிலா இந்தப் பேரைக் கேட்டாலே எரிச்சலா இருக்கு, அவளுக்கு நான் மரியாதை கொடுக்கனுமா? பெரிய மருமகளா இருந்தா மட்டும் போதுமா?அவ தகுதி தராதரம் என்ன? என்னோட தகுதி தராதரம் என்ன? நான் அவளுக்கு மரியாதை கொடுக்கணுமா?" என மனதில் வஞ்சம் கொண்டாள் கவி.