இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -118 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 02-09-2024

Total Views: 1316

நிலா தட்டைத் தூக்கிக் கொண்டு சாமியின் அருகில் இடம் பிடிக்கப்போக,அவளுக்கு முன்பு அங்கு கவி, செல்வராணி, மணி, கிருஷ்ணம்மாள்  என நால்வரும் இருந்தனர்.

நிலாவிற்கு அவர் அருகில் செல்லலாமா? வேண்டாமா? என்ற தயக்கம் எழ.. அவர்களுக்கு எதிரில் இடம் இருக்கவும்,அங்குச் சென்று நின்றுக்கொண்டாள்.

"நிலாம்மா இங்க வா.. ஷாலு எங்க?" என மணி அவளை தன் பக்கம் இழுக்கப் பார்க்க.

"இல்ல அத்தை இங்கையே இருக்கேன்,அண்ணி மாலை வாங்க போயிருக்காங்க" என்று சொல்ல அவளை உரசியப்படி வந்து நின்றான் நந்தன்.

"ஏங்க கோவில வெச்சி என்ன பண்ணிட்டு இருக்கீங்க? நகர்ந்து போங்க". என்றாள் மெதுவாக.

நிலா ரகசியம் பேச நந்தன் அதை குனிந்து காதுக் கொடுத்து கேக்க, என்ன பார்ப்பவர்களுக்கு அவ்வளவு வயிற்றேரிச்சலாக இருந்தது.

கவி ஒருப் படி மேல போல் அவர்கள் சிரிக்கவேக் கூடாது என்று எண்ணினாள் .

யுகி இதுப்போன்று எல்லாம் செய்வதில்ல, அவள் பேசினால் பதில் சொல்லுவான் அவ்வளவு தான் அவர்களுக்குள் இருக்கும் உரையாடல், அப்படி தாங்கள் இருக்கும் போது இவர்கள் மட்டும் இவ்வளவு அன்னோனியமாக இருந்தால் எப்படி.?

"இந்த சேலை நல்லாவே இல்ல. என்னடி சேலைக் கட்டிருக்க?"

"இது நீங்க வாங்கிக் குடுத்தது தானே."

"இருந்தாலும் நான் இருக்க வேண்டிய இடத்துல அது இருக்குல்ல அதான் புடிக்கல."

"ஐயோ சாமி முன்னாடி என்ன பேசறீங்க?கன்னத்துல போடுங்க"

"முடியாது."

"போடுங்க இல்லை சாமி கண்ணை குத்திடும்."

"என் பொண்டாட்டிக்கிட்ட மட்டும் தான் அதெல்லாம் நடக்கும்."

"நீங்க ரொம்ப பண்றீங்க..?".என நிலா  சொல்லிகொண்டிருக்கும் போதே நந்தனின் பார்வை அவள் கைக்குச் சென்றது.

"யாரு வளையல்டி இது?".

"போச்சி பார்த்துட்டான்.. அது ஷாலு தான்"

"யாரை கேட்டு வாங்குன?".

"வெறும் கையா இருக்குன்னு ஷாலு தான் போட்டுவிட்டா, நான் வேணா கழட்டிக் கொடுத்தரேன்".என்றாள் பயத்துடன். நந்தனை எதிர்த்து பேசும் அளவிற்கு தைரியம் வந்துவிட்டாலும் அவளால் அவனுக்கு ஒரு அவமரியாதை என்றால் எப்படி அவளால் தாங்கிக்கொள்ள முடியும்.

"கொடுத்துடு" என்றான் குரல் இறுக.

"ம்ம்" என்றவளுக்கு அவன் கழட்ட சொல்லிவிட்டானே என்ற ஆதங்கமெல்லாம் இல்லை, "இதை பிரச்சனை பண்ணாமல் விட்டு விட்டானே" என்று தான் இருந்தது.

அவள் கழட்டுவதற்குள் ஷாலினி வந்துவிட.

"கோவில வெச்சி என்ன பண்ற? கம்முனு போடு வீட்டுல போய் கழட்டிக்கோ" என ஷாலினி மிரட்டிக் கொண்டே அவள் அருகில் வந்தாள்.

"என்ன ஷாலு அவப் போட்டுருக்கறது உன்னோட வளையல் போல..ஒரு வளையல் போட கதி இல்லாத வீட்டுல தான் பொண்ணு வேணும்னு எடுத்துருக்கான் நந்து" என செல்வராணி சத்தமாக சொல்ல. கோவிலுக்கு வந்த எல்லோரும் அவர் சொன்னதைக் கேட்டுவிட்டனர்.

"என்னடி பண்ற? வாயை மூடறியா இல்லையா?" என கிருஷ்ணம்மாள் செல்வராணியை கடிய.

"நீ சும்மா இரும்மா" என்று அவர் கையை அழுத்தியவர். "என்ன இருந்தாலும் பிரத்தில பொண்ணு எடுக்கும் போது இதெல்லாம் எதிர்பார்க்காம கல்யாணம் பண்ணிக்கிட்ட எங்க பையன் தான் தங்கம்"  என பேச வேண்டும் என்றே கண்டதையும் பேசினார்.

நந்தன் பல்லைக் கடித்துக் கொண்டு நின்றவன். நிலா இன்னும் வளையலை கழட்டாமல் அவர்கள் பேசுவதைப் பார்த்துக்கொண்டிருக்க

"அங்க என்ன வேடிக்கை ஆடுது? கழட்டுன்னா கழட்ட வேண்டியது தானே" என்றான் கடுமையாக.

அவன் கடுமையில் நிலாவிற்கு கண்ணீர் துளிர்த்து விட்டது, வேகமாக கழட்டி ஷாலினியிடம் கொடுத்துவிட்டாள்.

"சாமி இதை பூஜையில வைங்க" என நந்தன் ஒரு பையை பூசாரியிடம் கொடுக்க, அதை வாங்கி சாமியின் காலடியில் வைத்தார்.

"என்னடி அது?"

"எனக்கு மட்டும் என்னமா தெரியும்?"

"ஏதாவது கேஸ் பைலா இருக்கும்" என செல்வராணியே நினைத்துக் கொண்டார்.

மாவிளக்கு பூஜை ஆரம்பித்தது. நிலாவிற்கு சாமிக் கும்பிடும் எண்ணமே போய்விட. நந்தன் கோவமாக இருக்கிறானோ என அவன் முகத்தை தான் பாவமாக பார்த்துக்கொண்டிருந்தாள்.

அனைவரின் தேங்காயையும் உடைத்து பூஜை ஆரம்பிக்க அரைமணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது. அதுவரைக்கும் நிலா நந்தனின் முகத்தைப் பார்த்தவாறு தான் நின்றிருந்தாள்.

"இங்க என்ன பார்வை?அங்கப் பார்த்து சாமியைக் கும்பிடு"

"என்மேல கோவமா..?"

"வீட்டுக்கு போய் பேசிக்கலாம்"
பூஜை முடிந்து அனைவர்க்கும் ஆரத்தியை பூசாரிக் காட்ட, அதைத் தொட்டுக் கும்பிட்ட நந்தன் நிலாவிடம் நெற்றியைக் காட்டினான்.

கோவம் இல்லையா என்றால் அது வேற டிபார்ட்மென்ட். அவள் தானே அனைத்தும் செய்ய வேண்டும்.

நெற்றியில் திருநீறு வைத்து ஊதிவிட்டாள். அவளைப் போலவே அவனும் நிலாவின் நெற்றி மட்டும் தாலியில் வைத்துவிட்டான்.

"அண்ணா. நான்தான் வளையலைப் போட்டுக்கச் சொன்னேன் நீ அவளை எதுவும் சொல்லாத அண்ணா.."என ஷாலினி நிலாவிற்கு சார்பாக பேச.

"அண்ணி.."

"அண்ணா" என்றாள் புரியாமல்.

"அண்ணின்னு சொல்லிப் பழகு"என்றான் அழுத்தமாக.

"ம்ம்" என்றவளுக்கு கோவம் வருவதற்கு பதில் சிரிப்பு தான் வந்தது.

அவன் மனைவிக்கான அங்கீகாரத்தை எந்த இடத்திலும் விட்டுக் குடுக்க மாட்டான் என்று.

பூஜை முடிந்து கூட்டம் கலைய. சாமி பாதத்தில் வைத்த பையை பூசாரி எடுத்து வந்து நந்தனின் கையில் கொடுத்தார்..

அதை நிலாவின் கையில் கொடுத்தவன் "பிரி" என்றான்.

கோவினுள் அவர்கள் குடும்பமும், ஒரு சில மக்களும் மட்டும் தான் இருந்தனர்.

பூஜை ஆரம்பிக்கும் வரை யுகி மார்த்தி வளவன் மூவரும் வெளியே இருந்ததால் இங்கு நடந்த பேச்சுவார்த்தை எதுவுமே அவர்களுக்கு தெரியாது.

நிலா நடுங்கிய விரல்களுடன் பிரித்தாள்.

"என்ன அண்ணி இவ்வளவு ஸ்லோவா பிரிக்கிற சீக்கிரம் பிரி" என ஷாலினி அவசரப்படுத்த மொத்தக் குடும்பத்தின் பார்வையும் அதில் தான் இருந்தது.

ஷாலினி சொன்னதற்காக அவசர அவசரமாக பிரித்தாள்.

அதில் நிறைய நகை பெட்டி இருக்க பையை ஷாலினியிடம் கொடுத்துவிட்டு ஒரு பெட்டியை எடுத்து திறந்தாள்.

வெள்ளைக் கல் பதித்த பிளாட்டின வளையல் இருக்க.வளையலையும் அவனையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு, அதையும் ஷாலினியிடம் கொடுத்தவள் அடுத்த பெட்டியை திறந்தாள்.

அந்த வளையலின் செட்டாக செயின் இருந்தது.

"அண்ணா இதெல்லாம் வெள்ளியா?"

"இல்ல பிளாட்டினம் வித் டைமண்ட்."

"பிளாட்டினமா?" என கவி வாயை பிளந்தவள், அருகில் இருந்த யுகியிடம் "ஒருநாளாவது எனக்கு நீங்க வாங்கி குடுத்திருக்கிங்களா?"என்றாள் கடுமையாக.

"இப்போதானேடி கல்யாணம் ஆச்சி நாளைக்கே மாப்பிள்ளை வாங்கிட்டு வருவாரு கவலைப்படாத" என செல்வராணி சொல்ல.

யுகி இருவரையும் அற்ப புழுவை பார்ப்பதுப் போல் பார்த்தான்.

வளையல், மோதிரம் செயின் என ஒரு செட் வைரத்திலும் ஒரு செட் தங்கத்திலும் என இரண்டும் தனி தனியாக இருக்க.

பார்த்தப் பெண்கள் அனைவரும் வாயைப் பிளந்து விட்டனர்.

வைர செட்டை அவனேப் போட்டு விடுகிறேன் என கையில் எடுக்க.

"வேண்டா வீட்டுலப் போய் போட்டுக்கறேன் அதில்லாம இவ்வளவு எனக்கு வேண்டா, இந்த மோதிரம் மட்டும் போதும்" என தங்கத்தில் இருந்ததை எடுத்துக் கொண்டவள்.

"இதை ஷாலுக்கும் அத்தைக்கும் குடுத்துடுங்க" என்றாள்.

அவர்களுக்கு என தனியாக நிச்சியம் எதுவும் நடக்காததால் அவன் கையால் மோதிரம் போட்டுக்கொள்ள ஆசைப்பட்டவள் அதை மட்டும் எடுத்துக்கொண்டாள். மற்றதை வாங்க தயக்கமாகவும், பயமாகவும் இருந்தது.

அவள் எதற்கு பயந்தாளோ அது செல்வராணியின் வாயில் இருந்து வந்துவிட்டது.

"ஏண்டி கவி புருஷனை முந்தானையில முடிஞ்சிக்கிட்டு நகையா வாங்கிப் போடற திறமையிலா உன்கிட்ட இல்லடி. அதுக்குலாம் நீ நிலாக்கிட்ட தான் டியூசன் போகணும். பாரு கண் பார்வையில  எப்படி வளைச்சிப் போட்டுட்டா" என சொல்ல

நந்தன் அவ்வளவு நேரமும் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையாக இருந்தவன். இதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியாது என பொங்கிவிட்டேன்.

"என் பொண்டாட்டி புருஷனை தானே முந்தானையில"  என ஆரம்பிக்கும் போதே அவன் கையைப் பிடித்து தடுத்த நிலா.

"இது கோவிலுங்க என்ன பேசறீங்க? ஊர் வேடிக்கைப் பார்க்க வீட்டு மானம் போகணுமா?. ஏற்கனவே அவங்க பேசி ஊர் வாயிக்கு அவல் ஆகிட்டாங்க, நீங்க மேலும் பேசாதீங்க" என மெதுவாக சொல்ல.

"எல்லா உன்னால தாண்டி மூடிட்டு குடுக்கறதைப் போட வேண்டியது தானே" என்றவன். அவன் வாங்கிய அனைத்தையுமே நிலாவிற்கு போட்டுவிட்டு தான் அடங்கினான்.

அவன் கோவம் இன்னும் அடங்கவில்லை, வீட்டிற்குப் போனதும் பாரபட்சம் இல்லாமல் அனைவரையும் வெளுத்து வாங்குவான். 

"வா"  என யாரையும் பார்க்காமல் நிலாவை இழுத்துக் கொண்டு வெளியேப் போனவன்.

"இங்கையே இருக்கற", என கார் எடுக்கப் போய்விட்டான்.

அப்போது தான் கூட்டம் கலைய தொடங்கியதால் நந்தனால் காரை சீக்கிரம் எடுத்து வர முடியாமல் போனது.

அந்த வாய்ப்பை பயன்படுத்தி நிலாவை நெருங்கி விட்டாள் உஷா.

"ஏய் நிலா"

"ஹா நீயா?"

"ம்ம் நேரா விசயத்துக்கே வரேன் இங்கப் பாரு"

"அங்க என்ன?"

"நான் மாசமா இருக்கேன்"

"ஓ எத்தனை மாசம் குழந்தை நல்லா இருக்கா?"

"நீ நலம் விசாரிக்கிறதுக்கு இதை சொல்லல"

"அப்புறம் எதுக்குச் சொன்ன?"

"இந்தக் குழந்தைக்கு நந்தன் தான் அப்பா."

"ஓ அப்டியா சரி"

"என்னடி கதையா சொல்றேன்?".

"இருக்கலாம்".

"இங்கப் பாரு நிலா இது விளையாடற விசியமில்ல, நந்தன் வரதுக்குள்ள உனக்கிட்ட பேசணும்ன்னு தான் வந்தேன். நான் மாசமா இருக்கேன் நாளைக்கு இந்த குழந்தை பிறந்து அப்பா எங்கைன்னு கேட்டா நான் என்ன பண்ணுவேன்?. தயவு செஞ்சு நந்தனை எனக்கு விட்டுக் குடுத்துடு".

"அப்படிங்கறியா?, அவர் வந்தா கூட்டிட்டுப் போ யாரு வேண்டாம்னு சொன்னா?".

"நீ வேண்டாம்னு சொல்லாம அவர் வர மாட்டாரு."

"அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?, நான் தான் கூட்டிட்டுப் போன்னு சொல்லிட்டேன் இதுக்கு மேல என்ன பண்ணனும்னு எதிர்ப்பார்க்கற?.

"நீயே டிவோர்ஸ் குடுத்துட்டா அவன் என் பக்கம் வந்துடுவான்"

"ஓ இந்த நினைப்பு வேற இருக்கா?" என நினைத்தவள்."சரி நான் டிவோர்ஸ் குடுத்தரேன். பட் அதுக்கு முன்னாடி நான் சொல்ற இடத்துக்கு நீ வரணும்".

"எங்க?"

"ம்ம் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க தான், என் புருஷன் உன் குழந்தைக்கு அப்பான்னு நீ சொன்னதும் நான் எப்படி நம்பறது?".

"அது அது.."

"ரொம்ப தடுமாறாம அடுத்து என்ன பிளான் பண்ணி என்னையும் அவரையும் பிரிக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டு வா" என அனுப்பி வைத்துவிட்டாள்.

நந்தன் அவள் மீது எந்த அளவிற்கு உயிராக இருக்கிறான் என இனி ஒருத்தர் வந்து சொல்லி தான் புரிய வேண்டுமா என்ன?. அவளை தவிர அவன் கண்கள் யாரையும் தீண்டுவதில்லை,இதில் உடலை தீண்டினான் என்று சொன்னால் எப்படி நம்புவாள்?.

உஷா நேராக சரஸ்வதியிடம் சென்றவள், "வேலைக்கு ஆகல சரஸ் அவ ரொம்ப ஷார்ப்பா இருக்கா,டெஸ்ட் பண்ணலாம் வான்னு கூப்பிடறா இதுக்கு மேல போனா நானும் மாட்டிப்பேன்,நீயும் மாட்டிப்ப அதான் வந்துட்டேன்"  என சொல்ல

"உன்னைய நம்புனேன் பாரு என்னைய சொல்லணும்" என உஷாவிடம் சொன்னாலும் அவள் இன்னொரு திட்டம் வைத்திருப்பதை உஷாவிடம் கூடச் சொல்லவில்லை.

அப்படி இப்படி என அனைவரும் வீடு வந்து சேர்ந்து விட்டனர்.

நந்தன் நிலாவுடன் வீட்டிற்கு வந்ததும், எல்லோரையும் ஹாலில் கூடச்சொல்லிவிட்டான்.

எல்லோரும் வந்துவிட.

"இனி இந்த வீட்டுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. இவரோட சொத்து எதுவும் எனக்கு வேண்டாம் என் உடம்புல வலு இருக்கு என்னால உழைச்சி சம்பாரிச்சிக்க முடியும்". என முடிக்கும் முன்னே கிருஷ்ணம்மாள் அழுதுவிட்டார்.

"ராசா நீ இல்லைன்னா இந்த வீடு வீடே இல்ல ராசா. அவ ஒரு கேன சிறுக்கி பிள்ளைக்கு இல்லாதது இவளுக்கு இருக்கேனு, ஆத்தரத்துல ஏதோ பேசிப்புட்டா அதை மனசுல வெச்சிக்காம விடு ராசா" என அழுக..

"இந்த கண்ணீருக்குலாம் நான் மசிய மாட்டேன். போய்டுங்க. எனக்கு என் பொண்டாட்டியோட சுயமரியாதை தான் முக்கியம்,இங்க உங்க ஜாதி மருமக இருக்கும் போது என் பொண்டாட்டி எப்படி நிம்மதியா இருப்பா?, ஒரு வாரம் நான் வீட்டுல இல்லைனாலும் இங்க நடக்கற விசியம் எனக்கு தெரியாதுன்னு நினைச்சிட்டு இருக்கீங்களா.?.நான் இல்லைனு மட்டும் அவ இங்க இருக்கறதில்ல, நீங்க பேசறதை தாங்க முடியாம, அவளால எந்த பிரச்சனையும் வந்துடக் கூடாது, அது இதோ இந்த நாயே பாதிச்சுடும்ன்னு எல்லோரையும் பத்தி கவலைப்பட்டு தான் இங்க வராம இருந்தா. போதும் இதுக்கு மேல நான் இங்க இருந்தா நான் அவளை விட்டுக் குடுக்கற மாதிரி"  என்றவன்

"வாடி" என அவள் கையைப் பிடித்து இழுக்க.

"நிலா சொல்லு நீ சொன்னா அவன் கேப்பான்" என ஆள் ஆளுக்கு அவளைப் போட்டு பிராண்ட, யுகி எதிலையும் தலையிடவில்லை.

நிலா ஏக்கமாக நந்தன் முகத்தைப் பார்க்க.

"அப்படி பார்த்த கண்ணை நோண்டிடுவேன். இவங்களுக்கு இரக்கம் பார்த்தினா மறுபடியும் உன்னைய தான் காயப்படுத்துவாங்க."

"அப்படிலாம் பண்ண மாட்டாங்க விஜய் ப்ளீஸ்".என்றவள் யுகி எதுவும் பேசாமல் இருப்பதைப் பார்த்து,  "நீ எதுமே சொல்ல மாட்டிங்கிற யுகி" என்றாள்.

அவன் திருமணத்திற்கு பிறகு இன்று தான் பேசுகிறாள் அதற்கே கவி அவளை முறைக்க.

"என்னோட பொண்டாட்டி பேசுனதும் பண்ணுனதும் தப்பு தான். அதுக்காக வேணா நான் மன்னிப்பு கேட்டுக்கறேன், ஆனா இங்க இருக்கறதும் போறதும் உங்க விருப்பம் அதுல நான் தலையிட முடியாது" என்றுவிட்டான்.



Leave a comment


Comments


Related Post