இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -123 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 10-09-2024

Total Views: 1378

"உன்னைய  தான்டா அடிக்கணும். இதுக்கு எல்லாம் காரணம் யாரு நீதான். நீ அவசரப்பட்டு அவசரப்பட்டு எடுக்கற முடிவால தான் இவ்வளவு பிரச்சனையும், உன்னோட அவசரதால எத்தனைப் பேர்த்தோட வாழ்க்கை பாதிக்கப்படுத்துன்னு கொஞ்சமாவது யோசிச்சியா?"  என மார்த்தி அவனை அடிக்கப் போக.

நந்தன் இவர்கள் பேசுவதைக் கேட்டவாறு அப்படியே நின்றான். அவன் என்ன யோசிக்கிறான் என்ன செய்யப் போகிறான் என எதுவுமே தெரியவில்லை யாருக்கும்.

கவி தான் விஷம் கொடுத்தாள் என யுகி சொன்னதும் அவள் மறுத்துப் பேசவேயில்லை அப்படியே நின்றாள்.

"நந்து நீ எதுமே பேசலை மாட்டிங்கிறப்பா" என மணி அவனின் அருகில் வர.

அவன் அவர் அருகில்  வருவதற்குள் கவியிடம் சென்று,  "எதுக்கு இப்படி பண்ணுன? கொல்ற அளவுக்கு அவ மேல உனக்கு என்ன கொலைவெறி?" என்றான்.

அதில் கோவம் மிகுந்து இருந்தாலும்  தன் வீட்டிலையே பாம்பு இருந்ததை எப்படி கவனிக்க தவறினேன்  என அவனை நினைத்து அவன் மீதே  தான் கோவம் வந்தது.

கவி பேசாமல் இருக்க.

"உன்னைய தான் கேட்டேன்" என நந்தனின் குரல் ஓங்கி வரவும்.

"என்ன கோவமில்ல,  எல்லாத்துக்கும் கோவம் தான்.இவர்  எப்போ பாரு பூனை பூனைன்னு அவப் பின்னாலையே சுத்துனது, இதோ இப்போக்கூட அவளை லவ் பண்ணிட்டு அவ வாழ்க்கை கெட்டுடக் கூடாதுன்னு என்னைய கல்யாணம் பண்ணிட்டு வந்து பொம்மையா வெச்சிருந்தது. அவ நல்லா இருக்கணும் நான் நாசமா போகணுமா? இதுக்குலாம் கோவப்படாம எப்படி இருக்க முடியும்?" என கவி வீடே அதிரக் கத்த.

"அப்போ நீ உன் புருசனுக்கு தான் விஷம் வெச்சிருக்கணும். என் பொண்டாட்டிக்கு எதுக்கு வெச்ச?, நீங்க அடிச்சிக்கிட்டு  சாவுங்க அவ என்னப் பண்ணுனா?" . என இன்னும் நந்தனுக்கு ஏதோ நெருட அவன் விடாமல் கேட்டான்.

"இவர் எப்படி என்னய ஏமாத்துனாரோ அதேமாதிரி தானே நீங்களும் சரஸ்வதியை ஏமாத்திருக்கீங்க. நாங்க ரெண்டுபேரும் பாதிக்கப்பட்டது யாரால எல்லாம் இவ ஒருத்தியால தான். அவ இல்லாம போய்ட்டா நாங்க ரெண்டுபேர் ஆசைப்பட்டதும் கிடைச்சிடும்ன்னு தான் சரஸ்வதி கொடுத்த விஷத்தை ஜூஸ்ல கலந்துக் கொடுத்தேன்" என்றாள் தைரியமாக

எந்த இடத்திலும் அவள் பார்வை குற்றவுணர்வுச்சியில் கீழ் இறங்கவேல்லை.

அதைக் குறித்துக் கொண்ட நந்தன்.

"நீ எடுப்பார் கைபிள்ளையா இருந்து சுயமா யோசிக்க மறந்துட்ட. சரஸ்வதி என்னய காதலிச்சது எனக்கு நிலாவை மிரட்டற வரைக்கும் தெரியாது. அப்படியே தெரிஞ்சாலும் அவளை என்னால கல்யாணம் பண்ணிருக்க முடியாது ஏனா.. நிலா தான் என்னோட உசுரு, அவள இப்போ இருந்து லவ் பண்ணல,  இது தான் லவ்ன்னு விவரம் தெரிஞ்ச வயசுல இருந்தே லவ் பண்றேன் அதனால தான் அவளை யாருக்கும் விட்டுக் குடுக்க முடியாம அடம்பிடிச்சி கல்யாணம் பண்ணிகிட்டேன்,இதெல்லாம் இப்போக்கூட உங்களுக்கு சொல்லனும்னு இல்ல. இனி ஒரு பஞ்சாயத்து அவளை வெச்சியோ என்னைய வெச்சியோ வரக்கூடாதுன்னு தான் சொல்றேன். 
அந்த சரஸ்வதி சொன்னான்னு விஷம் குடுக்கற அளவுக்கு போன பார்த்தியா உன்னோட லவ்வை நான் பாராட்டுறேன்",என்றவன் "ஆனா அந்த காதல் இனி உனக்கு கிடைக்குமான்னு தெரியாது. நீ மட்டும் பொண்ணா இல்லாம இருந்திருந்தின்னா உன் பக்க நியாயத்தைக் கூட கேக்காம கொன்னு புதச்சிட்டுப் போயிட்டே இருந்திருப்பேன், பொண்ணா போய்ட்ட. நீ விஷத்தை கொடுத்தும் அவ உன்னையக் காட்டிக் கொடுக்கல, அதெல்லாம் இந்த நாய்க்காக தான்.  அவமேல கை வெச்சதுக்காக அவ்வளவு சீக்கிரம் உன்னய சும்மா விடுவேன்னு மட்டும் நினைக்காத" , என நந்தன் கர்ஜனையோடு சொல்ல, முதன் முறையாக கவியின் மனதில் பயம் பிறந்தது.

யுகியின் காதலை கவி அடைய நினைத்திருந்தால்,  அதற்கு நிலாவைக் கொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை, அவன் மனதில் இருக்கும் நிலாவைத் தூக்கிப் போட்டு அவன் மனதின் காயங்களுக்கு மருந்திட்டிருந்தாலே போதுமானது. இனிமையான வாழ்க்கை அமைந்திருக்கும். எப்போதும் அடுத்தவர்களை காயப்படுத்தியே பழகிய செல்வராணியைப் போலவே அவளது மகளும் நிலாவை காயப்படுத்தவதாக நினைத்துக் கொண்டு அவளை கொல்ல  முயன்று இப்போது கொலையாளியாக அனைவரின் முன்பும் நிற்கிறாள்.

யுகி மனம் தளர்ந்து அவள் முன் வந்து நின்றவன்

"உன்னைய கல்யாணம் பண்ணப்ப  லவ் பண்றேன் பொய் சொல்லி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன், அதுக்கு அப்புறம் என்னோட மனசாட்சி உறுத்தவும் உடனே உங்கிட்ட என்னோட நிலைமையை சொல்லி டைம் கேட்டேன் தானே, கல்யாணம் ஆன நாள்ல இருந்து இப்போ வரைக்கும் உன்னைய எங்கையும் விட்டுக் குடுக்கலையே. அப்புறம் எதுக்காக அவளை கொல்ல முயற்சி பண்ணுன?" என்றவனின் கண்கள் ரத்தமாக சிவந்துகிடந்தது.

அன்று பொய் சொல்லி தான் திருமணம் செய்து வந்தான்.ஆனால் அந்த பொய்யே அவனை வாட்டி எடுத்துவிட்டது. இதுநாள் வரையிலும் பெரிதாக யாரிடமும் பொய் சொல்லியதில்லை  வாழ்க்கையில் முக்கியமான இடத்தில் பொய் சொன்னால் அது உறுத்ததானே செய்யும்.

இரண்டு நாளில்லையே கவியிடம் அனைத்து உண்மையையும் சொல்லியவன்.

"இங்கப் பாரு கவி. நான் சொன்ன ஒத்த வார்த்தைக்கு உன் மொத்த வாழ்க்கையையும் யோசிக்காம தூக்கிக் கொடுத்தவ. உன்னய எதுக்காகவும் யாருக்காகவும் விட்டு குடுக்க நினைக்கல. ஆனா உன்னோட வாழ எனக்கு கொஞ்சம் டைம் குடு. கண்டிப்பா நான் மாறிடுவேன்". என தெளிவாக எடுத்துச் சொல்லிருந்தான்.

இருந்தாலும் கவியால் அவன் சொன்னதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. "அவ வாழ்க்கை நாசமாப் போகக் கூடாதுன்னா என் வாழ்க்கை நாசமா போலாமா?,நீ என்னைய ஏமாத்திட்ட அதுக்கு காரணம் அவ தான்"  என மொத்த கோவமும் நிலாவின் மீது திரும்பியது.

அடுத்த இரண்டு நாளையே கவியின் நடவடிக்கையில் மாற்றம் கண்டுக் கொண்டான் யுகி, அதனால் தான் நிலாவிடம் பேசுவதை தவிர்த்து வந்தான்.

உண்மையான அன்பிற்கு வார்த்தைகள் தான்   வடிவம் கொடுக்க வேண்டும் என்பதில்லை, மொவுனங்கள் கூட வடிவம் கொடுக்கும்..

அவன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என நிலாவும்,  நிலா சந்தோசமாக இருக்க வேண்டும் என யுகியும் தங்கள் கவலைகளை தங்களுக்குள்ளையே மறைத்துக் கொண்டு, அடுத்தவர் முன்பு அதைக் காட்டாமல் இருந்துக் கொண்டனர்.

ஆனால் இவ்வளவு வருடம் பழகியவர்களுக்கு தெரியாதா? நிலாவின் முகத்தை வைத்தே யுகியும்,யுகியும் முகத்தை வைத்தே நிலாவும் பிரச்சனையின்  மூலத்தை உணர்ந்துக் கொண்டனர்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் அல்லவா?.

இங்கிருந்தால் நிலா காயப்படுவாள் என புரிந்துக் கொண்ட யுகி நந்தன்  வீட்டை  விட்டுப் போகிறேன் என்றப் போது மறைமுகமாக அனுமதி கொடுத்து விலகி நின்றான்.

அதை யார் புரிந்துக் கொண்டார்களோ இல்லையோ நந்தன் புரிந்துக் கொண்டான். அதனால் தான் நந்தனும் கிளம்புவதில் தீவிரமாக இருந்ததுக்கு காரணம்.

ஏற்கனவே யுகி பேசியதில் குழம்பி தவித்த கவியின் மனதை, மேலும் குழப்பி அவள் ஆதயத்திற்கு மீன் பிடிக்க நினைத்தாள் சரஸ்வதி..

நிலாவைப் பற்றி தப்பு தப்பாக சொல்லி கவியின் மனதில் நஞ்சை விதைத்து,நிலாவிற்கு நஞ்சை புகட்டி விட்டாள் சரஸ்வதி.

"எனக்கு நிலா மேல கோவம் இருந்தது,அதை அந்த சரஸ்வதி யூஸ் பண்ணி என்ன குழப்பி விட்டுட்டா மாமா" என யுகியின் கையைப் பிடிக்கப்போக.

அவன் தள்ளி நின்றுக் கொண்டான்.

"என்னைய தொடரதுக்கு கூட உனக்கு அருகதை இல்ல. என்னோட தப்பை சொல்லிட்டேன்  நீ தண்டிக்கணும்ன்னா என்னய தான் தண்டிச்சிருக்கனும், நானும் அதை சந்தோசமா  வாங்கிருப்பேன் எங்களோட உயிர் அவ தான்னு தெரிஞ்சி  அவ மேல கை வெச்சப் பார்த்தியா?  உன்னைய என் உயிர் இருக்கற வரைக்கும் மன்னிக்க மாட்டேன் தயவு செஞ்சிப் போய்டு.என் முகத்துலயே முழிக்காத" என்றான் அழுத்தமாக.

நிலாவை என் உயிர் என்றவன் இன்று எங்கள் உயிர் என்னும் போதே. அவன் தெளிவாக தான் இருந்திருக்கிறான் என வளவன் நந்தன் இருவருக்குமே  புரிந்தது.

"நந்து."

"ம்"

"இவளை  என்னப் பண்ண போற?"

"அரெஸ்ட் தான் பண்ணனும் எனக்கு இருக்கற ஆத்திரத்துக்கு கொன்னுப் போட்டாலும் அடங்காது உனக்காக பார்க்கறேன்" .என நந்தன் ஆங்காரமாக நிற்க.

"எனக்காக பார்க்காத நீ செய்ய நினைச்சதை செய்". என  யுகி  விலகிக் கொண்டான்.

கிருஷ்ணமாளிற்கு அடிவயிறு பதறியது.  பேரன் என்ன செய்யப் போகிறானோ என்று.

அரைமணி நேரத்தில் கொலை முயற்சி வழக்கில் கவியை கைதி செய்துவிட.

வீட்டில் இருப்பவர்கள் பதறிப் போனார்கள்.


Leave a comment


Comments


Related Post