இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
சிவ நடனம்-2 அனைத்து பாகங்கள் படிக்க
By பரணி உஷா Published on 18-08-2025

Total Views: 108

பாகம்-2
"ஏம்மா!  இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படியே வாடகை கட்டாமலேயே இருக்க முடியும்? மரியாதையா இன்னும் ரெண்டு நாளில் மொத்த  வாடகையும் கட்டிட்டு வீட்டைக் காலி பண்ண சொல்லிடுன்னு ஹவுஸ் ஓனர் கறாரா சொல்லிட்டாரு. நீங்கக் காலி பண்ணலேன்னா அவரே வந்து எல்லாத்தையும் வெளியே போட்டுட்டு  சாவி எடுத்துக்க தெரியும்ன்னு கன்னாபின்னான்னு கத்தறாரும்மா. புரிஞ்சுக்கோம்மா!"
"புரியுது அங்கிள்! நீங்கப் பாவம்! என்ன பண்ணுவீங்க? அதே சமயம் நான்  என்ன வச்சுக்கிட்டா இல்லன்னு சொல்லறேன்? எல்லா தடவையும் கரெக்ட்டா தானே கொடுக்கறேன். இந்தத் தடவைதான் வந்த மொத்த பணமும் அப்பாவுக்கே செலவாகிடுச்சு. அடுத்தது ஒரு ப்ராஜக்ட் பண்ணி முடிச்சுட்டேன். அதுக்கு பணம் கிடைச்ச ஒடனேயே கொடுத்துடுவேன். எப்படியாவது அவரு கிட்ட சொல்லி இந்த ஒரே ஒரு தடவை எனக்கு டைம் வாங்கி கொடுங்களேன் ப்ளீஸ். இல்ல நானே கூட அவரு கிட்ட பேசுறேன். நம்பர் வாங்கி குடுங்க."
"இல்லம்மா! அது வேண்டாம். நானே அவருகிட்ட ஏதாவது சொல்லி அட்ஜஸ்ட்  பண்ணறேன்."
ஓனரைப் பற்றி நன்றாகவேத் தெரியும். பாவம்! மகள்போல இருக்கும் இந்தப் பெண்ணையும் தெருவில் விட இஷ்டமில்லை.இந்தப் பெண் மட்டும்தான் என்றால் கூடப் பரவாயில்லை. ஏதாவது மகளிர் விடுதியில் சேர்த்து விடலாம். படுத்த படுக்கையாக இருக்கும் தந்தையை என்ன செய்வது?அவரும்தான் என்ன செய்வார் பாவம். அந்த ஓனர் இந்தப் பெண்ணைப் பார்க்காதவரைக்கும் அந்தப் பெண்ணிற்கு நல்லது. இல்லையென்றால் கிழவனுக்கு இளமையின் வேகம் வந்து விடும். பலவிதமான யோசனைகளுடனே தன்  வீட்டிற்கு வந்து சேர்ந்தார் தயாவின் வேலையாள் ரவி.
   தனக்கு நடக்கப் போகும் விபரீதங்களைப் பற்றி அறியாதவளாக இனி அடுத்து பணம் சம்பாதிக்க என்ன வழி என்று தேடிக் கொண்டிருந்தாள் உமையாள் என்கிற உமா. எப்படியாவது இந்த முறை பேசி வீட்டுக்காரரிடம் சம்மதம் பெற்று விட்டால் அடுத்த முறை முதல் எப்படியாவது முன்னதாகவே பணத்தை கொடுத்து விட வேணும் என்பது அவள் எண்ணம். அது நடக்குமா?
  மதியம் இவள் தனது  தந்தைக்கு டயப்பர் மாற்றிக்கொண்டிருந்தாள்.
'நம் வீடு தானே வேறு யார் இருக்கிறார்கள்?' லேசாகச் சாற்றப்பட்டு இருந்த கதவைத் தள்ளிக் கொண்டே வந்து விட்டார், ஹவுஸ் ஓனர்.
உள்ளே வந்தவன் கண்கள் அவளைக் கச்சிதமாக அளவெடுத்தது ஆடைக்கு உள்ளே இருக்கும் அங்கங்களை மட்டும். 
அவன் மட்டுமா? உடன் இருந்தவர்களும் தான்.
"என்னம்மா! இந்தச் சின்ன வயசுல ஒனக்கு இவ்ளோ பெரிய கஷ்டமா?" முதலை கண்ணீர் வடித்தது. கைகள் அவள் தலையை மெதுவாக வருடிக் கொடுத்தது, தப்பான எண்ணத்துடன். அடுத்து கைகள் தானே கீழே இறங்கி தோளில் படர்ந்தது. அவனேத் தொடர்ந்தான்.
"ரவி வந்து சொல்லும்போதெல்லாம் நான் கூட வேற என்னவோ, அவன்தான் வாடகைய  வாங்கிட்டு பணத்தை திருடிட்டானோன்னு நினச்சேன். அதான் நேர்லயே வந்து பார்த்துடலான்னு வந்தா, சின்னப் பொண்ணு நீ படர கஷ்டத்தை பார்த்து என்னோட மனசு தாங்கலையே.  வேற யாரும் சொந்தகாரங்க இல்லையா பாப்பா ?"
சொல்லிக் கொண்டே வெகு அருகில் வந்து நின்றான் . அவனின் மூச்சுக் காற்று அவளின் கழுத்தில் பட்டு கழுத்துக்கு கீழ் படர்ந்தது. அவளுக்கு பின்னே நகரவும் இடமில்லால் அவனின் அருகாமை அருவருப்பைத் தந்தது. 
"இல்ல அங்கிள்! நான் பாப்பா இல்ல. என்னோட பேரு உமா" சொல்லிக் கொண்டே அவன் கைகளிலிருந்து தோளை நகர்த்திக் கொண்டாள்.
"அது சரி! ஆளு பார்த்தா என்ன பாப்பா மாதிரியா இருக்கா ?" தயாவின் இடது கை அவளின் வலது கன்னத்தைத் தீண்டக் கண்களாலேயே அவளை ஏதோ செய்தான்.
"டேய்! ஏதாவது சொல்லாதடா, பாப்பா! சாரி! உமா கோச்சுக்கிட போகுது. இங்கப் பாரு கண்ணு! இந்தச் சின்ன வயசுல உனக்கு எதுக்கு இந்தக் கஷ்டம். நல்லா படிச்சுருக்க. அழகா வேற இருக்க. சின்ன வயசு. சரின்னு சொல்லு. உன்ன ராணி மாதிரி பார்த்துக்கறேன். உங்க அப்பாவுக்குப் பெரிய ஆஸ்பத்திரில வைத்தியம் பாக்கலாம்" சொல்லிக் கொண்டே அவள்கீழ் உதட்டைக் கைகளால் அழுத்தினான்.
"சீ!" அருவறுப்புடன் முகத்தைத் திருப்பினாள் உமா.
திருப்பிய முகத்தைத் தன்னை நோக்கிப் பார்க்க வைத்தவன்,
"உன்ன மாதிரி எத்தனை பிகர கரெக்ட் பண்ணி இருக்கேன். முதல்ல கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும். மாமா மட்டும் உனக்குச் சொர்க்கத்தை காட்டினா நீ மாமனோட சொகத்துக்கு ஏங்குவடி ! கைகள் அவள் முகத்தில் கோலமிட்டது. நான் கொஞ்சம் முக்கியமான வேலையா வெளியூருக்கு போகிறேன். திரும்பி வரப் பத்து நாள் ஆகும். யோசிச்சு முடிவைச் சொல்லு. வரட்டா" அவள் கன்னங்களில் தன் கைகளால் அழுத்தி முகத்தை அருகே கொண்டு வந்தவன் கன்னத்தின் வழியாக உதடுகளைக் கிள்ளி கழுத்தின் வழியே ஷால் போடாத சுடிதாரின் மேல் பாகத்தில் வந்து நின்றது.
எந்த உணர்வும் இல்லாமல் அவனின் கையாட்கள் அவளையே முழுங்கி விடுவது போலப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போதே அவளை என்னென்னவோ செய்ய வேண்டும் போல இருந்தது தயாவுக்கு.இருப்பினும் அடக்கிக் கொண்டு கிளம்பி விட்டான்.
"சிவன் சொத்து குல நாசம்"

அவன் சென்றதும் ஓரமாக அமர்ந்து குலுங்கி குலுங்கி அழுதாள். மகளின் இந்த நிலை படுக்கையில் இருந்தவருக்குத் தெரியுமா தெரியாதா? கண்களின் ஓரம் கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது.
'நான் பண்ண பாவம் என் பெண்ணை இப்படி துரத்துதே' மனம் தான் அழுதது. வாயால் எதுவும் பேச முடியாது. அவருக்கு ப்ரெயின் பராலிஸிஸ். அவருக்கு தான் முன் பிறவியில் செய்த வினைப் பற்றித் தெரியாது. இந்தப் பிறவியில் செய்தது தெரியும்தானே !

அவர் மகளைப் பொறுத்தவரை தந்தை ஒரு ஆண்கள் (முடி திருத்தகம்)ஸ்பாவில் வேலை பார்த்தவர். அவளுக்குத் தெரியாதது அவர் செய்த தொழில். பின்னாளில் அவருக்கு உடம்பு வந்தபோது அதுவும் தெரிந்துதான் போனது. அவர் ஒரு ஆண் ***** அந்தத் தொழில் செய்ததில் அவரின் சக்தி அனைத்தும் உறிஞ்சப்பட்டு விட்டது. இந்த மாதிரி தொழிலில் வேலை பார்க்கும் பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் சிரமம்தான். அப்படிப்பட்ட ஆண்களிடம் பேசும்போது தான் அவர்களின் வலியும் வேதனையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும். பொதுவில் ஆண்கள் என்றால் எதற்கும் தாங்குவார்கள் என்றே நாம் நினைத்துக் கொள்கிறோம். 
அவரிடம் வந்த பெண்கள் பலர், பல வருடங்களாக அனுபவிக்காத ஆசை மொத்தமும் அன்றே அனுபவித்து விட வேண்டும் என்ற வெறியில் வருவார்கள். ஆண்களைச் சக்கையாகப் பிழிந்து எடுக்கும் பெண்களும் உண்டு. அவர்களின் காம வெறியாட்டம் அவர் உடலின் வெளியில் தெரியும். உடலின் உள்ளுறுப்பில் பட்ட காயங்கள் அப்பப்பா. அதிலும் பல பெண்கள் மாடர்ன் என்ற பெயரில் விதவிதமாக இப்படி பன்னு அப்படி பன்னு ! உக்காந்து, நில்லு, நாய் மாதிரி இரு. பேய் மாதிரி என்ன கொல்லு ! வலியில் உடல் நொறுங்கி போகும். மனம் கதறி அழுதாலும் யாரிடமும் சொல்ல முடியாமல் அழுத்தி அழுத்தி, மகளிடம், மனைவியிடம் நெருங்காமல் தனக்கு தானே தண்டனை கொடுத்துக்கொடுத்து தாங்க முடியாமல் இன்று இப்படிப் படுத்த படுக்கையாகிவிட்டார்.
முதலில் எல்லாம், அப்பாமீது பாசம் மட்டுமே வைத்திருந்த பெண்ணுக்கு அப்பா தன்னையே தியாகம் செய்து தான் மனைவியையும் மகளையும் வாழ வைத்திருக்கிறார் என்பது புரிந்தபோது அன்னையையும் இழந்த பெண்ணிற்கு இன்னும் இன்னும் அதிகமாகத் தந்தையின் மீது அன்பு அதிகமானது. தன்னை சிறு வயதில் மடி மீது அமரக் கூட அனுமதிக்காத தந்தைக்கு அன்னையாகி அனைத்தும் செய்தாள். என்ஜினீயரிங் முடித்திருந்தவள் தந்தைக்காக வெளியில் எங்கும் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்த படியே ப்ரீலான்சராக வேலை செய்து கொடுத்தாள். நினைத்த அளவிற்கு பெரியதாக வருமானம் இல்லை என்றாலும் ஏதோ வந்தது. வந்ததைக் கொண்டு சிக்கனமாக வாழ்ந்து தந்தையையும் பார்த்துக் கொண்டிருக்கிறாள். 
சொன்னபடிக்கு அவள் வேலை செய்து கொடுத்த கம்பனி ஒன்று பணம் தரவில்லை. இதோ அதோ என்று இழுத்தடிக்கிறார்கள். இல்லை என்றால் இதுபோல வாடகை கொடுக்கப் பணம் இல்லாமல் அவள் நின்றது இல்லை. இப்போது அப்போது என்று இதோ மூன்று மாதங்கள் கடந்து விட்ட நிலையில் தான் இன்று இந்துபோலச் சம்பவம் நடந்து விட்டது. இது போன்ற பொறுக்கிகளுக்குப் பணத்தை எந்த விதத்தில் வசூல் செய்ய வேண்டும் என்பது நன்றாகவேத் தெரியும்.

மனிதர்கள் நீங்கள் நினைப்பதையே நடத்திக் கொடுத்தால் நான் எதற்கு? 
ரவிக்கு போன் செய்துப் பார்த்தாள். கிடைக்கவில்லை. பேசாமல் ஓனர் அம்மாவிடம் சென்று கேட்டுப் பார்த்தால் என்ன? அருகே இருந்தவர்கள் அறிவுரையைக் கேட்காமல் கிளம்பியவளுக்கு நல்ல மரியாதை. தெருவில் நிற்க வைத்தே துரத்தப்பட்டாள். தயாவின் செய்கையைவிட இதுமேல். தானாக அந்த எண்ணம் வந்தது.
வீட்டிற்கு வந்தவளுக்கு பயங்கர பசி. காலையில் வைத்த சாதம் இருந்தது. வேறு ஏதும் செய்திருக்கவில்லை. பக்கத்துக்கு வீட்டு அக்கா காரக் குழம்பு கொடுத்திருந்தார்கள். போட்டுக் கொண்டு ஒரு வாய் வாயில் வைத்தாள். வாய் எறிந்தது. எல்லாம் அவனின் கை வண்ணம்தான் . அதைவிட மனம் காந்தியது. என்னோட நிலைமை இப்படியா ஆகணும்? ஒரு பிடி கூட இறங்கவில்லை. அதிலேயே தண்ணீரை ஊற்றிக் கரைத்துக் குடித்தாள். ஒவ்வொரு மணி அரிசியின் மகத்துவம் தெரிந்தவள். ஆம்! அரிசி மணிகள் தான். உழவனுக்குத்தான் அதன் அருமை புரியும். அவளுக்கு அதை அத்தனை சுலபத்தில் தூக்கி அடிக்க மனம் வராது. உணவைக் குடித்து முழுங்கியவள் இன்னும் எதை எல்லாம் முழுங்க வேண்டுமோ ? குளியல் அறைக்குச் சென்று தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்.
" அழாத! உனக்காக நன் இருக்கிறேன்" சொல்ல ஆள் இல்லை. மனம் தாயின் மடிக்காக ஏங்கியது. அதே சமயம் தந்தை உயிரோடு இருந்தாலும் தன் நிலை புரியாது. இறந்து விட்ட தாய்க்கு தன் நிலை தெரியாது. பேசாமல் தானும் தந்தையும் விஷம் குடித்துவிட்டால் என்ன? 
நினைத்த அடுத்த நிமிடம், பெற்றவனுக்கு விஷம் கொடுக்க மனம் வரவில்லை. முகம் மூடி அழுதாள் இயலாமையை எண்ணி.
தந்தைக்காக என்ன கஷ்டப்பட்டு பலன்தான் என்ன? முன் பிறவியில் தாயாக மடி ஏந்தியவள் இப்பிறவியில் தந்தையாக வந்தவனை எப்படிக் கரை சேர்ப்பாள் ?

என்னடா வெங்கிட்டு எப்படி இருக்க ? ஆத்துல எல்லாரும் சௌக்கியமா ?
"வாங்கோ மன்னி! வாண்ணா ! நாங்க எல்லாரும் சௌக்கியம். அங்க ஆத்துல எல்லாரும் எப்படி இருக்கா ?"
"எல்லாரும் சூப்பரா இருக்கோம் வெங்கி ! இந்தா முதல்ல ஸ்வீட் சாப்பிடு"
"எண்னண்ணா என்ன விசேஷம் ? திடிர்னு சுவீட்டோட?"
"டேய் ! என் பொண்ணுக்கு டாக்டர் சீட் கிடைச்சுருக்கே. அதுக்குதாண்டா"
"அடடே ! கங்கிராஜுலேஷன்ஸ்.ரொம்ப சந்தோஷம் அண்ணா. 
நம்மாத்துல முதல் டாக்டர். பொறந்தபோது குட்டிக் குழந்தையைக் கையில வாங்கினது திடீர்னு இப்போ டாகடர் கோட் போட்டுண்டு வந்து நிக்கப் போறது கொழந்தை. இயர்ஸ் போகிறதே தெரியல " கைக்குலுக்கினான்.
கைகள் இன்னும் பிணைந்து தான் இருந்தன. அதையே உறவுகளின் அடையாளமாக அவர்கள் நினைத்துக் கொள்ளட்டும்.
"அவளையும் கூட்டிண்டு வந்துருக்கலாமே மன்னி ! "பாதாம் சுவீட்டை துளி எடுத்துக் கொண்ட பத்மா கேட்டாள்.
"எங்க பத்து அவளுக்கு டைம் இருக்கு? இன்னிக்கு ஏதோ பார்ட்டியாம். அவ பிரண்ட்ஸு எல்லாம் சேர்ந்து துணி எடுக்கப் போய் இருக்கா."
"எங்க?"
"நம்ம ரமீ மால்ல இருக்கே ஷாப்பர்ஸ் ஸ்டாப் அங்க தான்"
"ஆனா இப்ப அங்க டெகதலான் வரப் போறதுன்னு சொன்னாளே ?"
"ஆமாம் ! நீ சொன்னதும் தான் நினைவுக்கு வருது. அடையாருக்கு போகறேன்னு சொன்னா ."
மாறி மாறிப் பேசிக் கொண்டிருந்தார்கள். அன்று சனிக்கிழமை என்பதால் மதியமே வீட்டிற்கு வந்து விட்டான் நம் ஹீரோ.
"அடடே! வாடாக் கண்ணா வா! இந்தா ஸ்வீட் எடுத்துக்கோ "
"சௌக்கியமா பெரியம்மா? எப்படி இருக்கேள் பெரியப்பா?"
"சூப்பரா இருக்கோம்டா கண்ணா! "
"நான் இதோ வந்துடறேன் !" சொல்லி விட்டு வேகமாகக் குளித்து விட்டு வேஷ்டியில் வந்து நின்றான்.
சமையல் அறையில் அன்னையும் பெரியம்மாவும் பேசுவதுக் கேட்டது.
"என்ன பத்து நடராஜன் படிப்பு எல்லாம் எப்படி போகறது?"
உண்மையில் அந்தக் குரலில் இருப்பது அக்கறையா? அல்லது கேலியா? யாராலும் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் சொந்த ஓர்படியை அறிந்தவள் பத்து, எளிதில் கண்டுக் கொண்டாள். அதுதான் இதுபோலப் பல அனுபவங்கள் இருக்கின்றதே! சொந்தம் தானே என்று மனதில் இருப்பது கொட்டி விட முடியாது பத்மாவுக்கு நன்றாகவேத் தெரியும்.
"ஏதோ போகறது மன்னி"
"ஏதோ எட்டு வரைக்கும் எல்லாரும் பாசுங்கறதுனால சரி. அதுக்கப்புறம்? சொல்லறேன்னு தப்பா நினைச்சுக்காத பத்து. உன் பிள்ளைக்கு இன்னும் பொறுப்பே வரல. நீ இப்பவே அவனைக் கையில பிடிக்கலைன்னா அப்புறம் வாழ்க்கை வீணா போய்டும். பார்த்துக்கோ"
தன் வேலை முடிந்து விட்டது. நிம்மதியாக வெளியில் வந்தார். பெரியம்மா.
"நில்லுங்கோ பெரியப்பா. நமஸ்காரம் பண்ணிக்கறேன் " அழகாய் நமஸ்காரம் செய்தவன் அழகாக அபிவாதையும் சொல்லி முடித்தான்.
"நன்னா படிக்கிறியா கண்ணா ?"
"படிக்கிறேன் பெரிப்பா "
"நன்னா படிக்கனும்டா கண்ணா. நமக்குச் சொத்தே படிப்புதான். நம்மளவாளுக்கு படிப்பு மட்டும்தான். வேற ஒன்னும் கிடையாது. படிக்கறது மட்டும்தான் உன்னோட வேலை. நீ பர்ஸ்ட் மார்க் வாங்கினாத்தான் அம்மா அப்பாவுக்குச் சந்தோஷம். சரியாடா கண்ணா" பெரியப்பா மிகவும் வாஞ்சையாக அறிவுறுத்தினார். 
இவர்கள் சொல்லும் பர்ஸ்ட் மார்க் என்பதன் அர்த்தம் தான் என்ன? புரியாதவன் 
"சரி சரி" என்று மண்டையை ஆட்டிக்கொண்டிருந்தான் நடராஜன்.
"சரி! நன்னா படிக்கறேன்னு அழுத்தமா வாயைத் திறந்து சொல்லுடா" மகனைத் திட்டிக் கொண்டே, வந்தவர்களுக்கு மாம்பழ ஜூஸை கொண்டு வந்து நீட்டினாள் பத்மா.
"வெயிலுக்கு அந்த இதமான குளிர் பழச்சாறு இதமாகத் தான் இருந்தது.
"சரி டா வெங்கி! நான் கிளம்பறோம். அப்புறம் பாக்கலாம்"
"முடிஞ்சா அவளைப் போனாவது பண்ண சொல்லுங்கோ மன்னி" இது பத்மா.
"சொல்லறேன் மா!"
"இது என்ன புது காரா அண்ணா !"
"டேய் ஆமாண்டா ! உன்கிட்ட சொல்லல? ஆச்சு வாங்கி ரெண்டு மாசம் ஆகறது "
"ஓ ! சூப்பரா இருக்கு"
கிளம்பி விட்டார்கள். அவர்கள் வந்தது எதற்காக? அவர்களின் பெண் அதிக மதிப்பெண் வாங்கி விட்டாள் என்பதைச் சொல்லவா? அவர்கள் அதை வெளிப்படுத்தியதில் நிச்சயம் அன்போ ஆசையோ இல்லை. மன்னியின்
பேச்சில் நிச்சயம் டாம்பீகம் இருந்தது.
"பாருங்கோண்ண! புத்தம் புது காரு. முப்பது அஞ்சு லட்சமாம். அதுவும் லோனே இல்லாம வாங்கி இருக்காளே. உங்க அண்ணா புள்ள ரவி(இவன் வேறு) கூட இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ்க்கு தான் போவேன்னு அடம்மா நிக்கறானாம். மன்னியோட அண்ணா புள்ளை இந்த வருஷம் செலக்ட் ஆகி இருக்கானாம். ம்! எல்லாத்துக்கும் ஒரு குடுப்பினை வேணும். நமக்குன்னு இருக்கறது ஒத்த புள்ள. இவனும் நன்னா படிச்சா நமக்கு எவ்ளோ பெருமையா இருக்கும்?"
இந்தப் புலம்பலும், வசை படும் எப்போதுமே இருப்பதுதான். பத்மா ஒரு பள்ளி ஆசிரியை. பன்னிரண்டாம் வகுப்புக்கு இயற்பியல் ஆசிரியை. சில நேரங்களில் வேறு ஆசிரியர்களுக்குப் பதில் இவள் வேதியல், கணக்கும் எடுப்பாள். எந்த வேலையாக இருந்தாலும் திறமையாகச் செய்பவள்.அதில் தலைக் கணம் நிறையவே இருந்தது. அது அவள் கட்டிக் கொள்ளும் புடவையில் கூடத் தெரியும் தான் யார் என்று. அவளின் அலட்சியப் பார்வையும் மிடுக்கான நடையும் மாணவர்களுக்கு வயிறு கலங்கி விடும்.
வேங்கடசுப்ரமணியம். சி ஏ. ஐ.சி.டபிள் யூ ஏ, ஏ சீ எஸ் எல்லாம் முடித்து விட்டு அரசு அதிகாரியாக வேலை செய்பவர். அண்ணனைவிட அதிகமாகப் படித்து, திறமையாக இருந்தாலும் நீதி, நேர்மை, தேசப்பற்று கொண்டவரால் பெரியதாக எல்லாம் சம்பாத்திக்க முடியவில்லை. அதில் மனைவிக்கு ஒரு புறம் சந்தோஷம் என்றாலும் அடிக்கடி மற்றவர்களுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்த்துத் தாழ்வு மனப் பான்மையில் கலங்கிப் போவாள். இது இத்தனைக்கும் அவர்களும் நல்ல நிலையிலேயே தான் இருந்தார்கள். இருந்தாலும் வழக்கம்போல ஒப்பிட்டுப் பார்த்து வருத்தப் படுவாள். இவளுக்கு நேர் எதிர்மறையாகச் சிவகாமி. அவரையும் நாம் பார்க்கலாம். இவர்களையும் சந்திக்க வைக்கலாம் ஒரு நல்ல நாளில்.
அவர்கள் சென்றதும் மதியம் குடும்பமாக அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார்கள்.
பத்துவிடம் மீண்டும் அதே பாட்டு தான். உண்டு முடித்துப் பாத்திரங்களை ஒழித்துப் போட்டுக் கொண்டிருந்தவள் மனதின் ஆதங்கத்தை கத்தி சொல்லிக்கொண்டிருந்தாள்.
"ஊர்ல இருக்கறவாள்லாம் எப்படியோ சம்பாதிக்கறா. இங்க பாரு. ஒண்ணுத்துக்கும் வழி இல்ல. புள்ளையாவது நன்னா படிக்கறதா. இப்படி இருந்தா உங்க புள்ளய பாஸ் பண்ண மாட்டோம். நீங்க வேற ஸ்கூல் பார்த்துக்கோங்கன்னு சொல்லிட்டா" அவள் எங்கே ஆரம்பித்தாலும் அது என்னவோ நடராஜனின் படிப்பில் தான் வந்து நிற்கிறது.
"அப்பா அம்மா சொல்லறான்னு நீ தப்பு வழில காசு பண்ண வேண்டாம்பா. பகவான் நமக்குக் குடுக்கறதே போறும்."
மகன் சொன்னதை நிச்சயம் இப்போது ஏற்க மாட்டாள் பத்மா. அவள் ஏற்கும்போது அவள் மகன் அவளிடம் இருக்க மாட்டான்.
இப்போது வாருங்கள் பாட்டி பேத்தி கதைக்குப் போகலாம்.....
===========================================================================
"அதுவே பெரும்பற்ற புலியூர் அப்படிங்கற ஊரு எது "
பெம்ப புலி ஊர் மற்ற வார்த்தைகள் வந்து விட்டாலும் அவளுக்கு இந்த ர எழுத்துக்கள் இப்போதும் தகராறுதான்.
குழந்தைகள் எல்லாரும் சேர்ந்து, பின்னாடி புடிச்சுக்கோங்க. பஸ்ஸு புறப்படப் போகுது டுர்ர்ர் என்று சத்தமிடும்போதும் இவள் பின்னாலேயே நின்று கொள்வாள். ட்ரைவராகஇருந்து டுர்ர்ர் என்று வண்டியைக் கிளப்ப அவள் என்றுமேத் தயாராக இல்லை.
பெரும்பற்ற புலியூர் என்ன ? அவள் அறிந்து கொள்ள சிறிது கால அவகாசம் தேவைப்படும். உங்களுக்குத் தான் தெரியுமே. நம் அம்பலவாணனின் சிதம்பரம் தான் அது. உங்களுக்கு அத்திருத்தலத்தை பற்றி என்னைவிடவும் நன்றாகவேத் தெரியும் அதனால் நாம் வேறு ஒரு இடத்திற்குப் போகலாம்... இன்று அல்ல அடுத்தப் பகுதியில்
இன்னும் நாம் பார்க்க வேண்டிய வேறுசில நபர்களும் இருக்கிறார்களே.. வாருங்கள் அறிமுகம் பார்க்கலாம்.


Leave a comment


Comments


Related Post