Total Views: 95
ஆடவல்லானின் நடனம்-4
கோனேரி ராஜாபுரம் கோவில் பற்றிக் கதை சொல்லிக்கொண்டிருந்தார் பாட்டி.இந்தக் கதை படிக்கும் வாசகர்கள் நிறையவே படித்திருப்பார்கள் அதனால் நாம் மேற்கொண்டு வேறு விஷயங்களுக்குப் போகலாம்.
"பாட்டி நீங்க நடராஜர் பத்தியே சொல்லறியே அவர் கைல இருக்கற ட்ரம்ஸ் எதுக்கு? அதுக்கு ஸ்டிக் இல்லையா? தொலைச்சுட்டுரா ?"
"இல்லடி குட்டி. அது ட்ரம்ஸ் இல்ல டமரு. அவரோட ஒரு கையில நெருப்பும், இன்னொரு கையில டமருவும் இருக்கும். அது ஒளி, ஒலியைக் குறிக்கும். அதாவது
"சவுண்ட் அண்ட் லைட் கரெக்ட்டா பாட்டி "
"கரக்ட்"
அவர்தான் இந்த உலகத்தை உருவாக்குபவர், காப்பவர், அழிப்பவர் "
"காட் நம்மளை படைச்சுட்டு எதுக்கு அழிக்கணும் ? புராணங்களில் எதுக்கு அசுரர்களைக் கடவுள் அழிக்கணும் ?"
பேத்திக்குப் புரிந்துவிட்டது. பிறகு அந்த உருவத்தின் அர்த்தம் முழுவதும் பேத்திக்கு விளக்கினார் அவளுக்குப் புரியும்படிக்கு. கேட்டுக் கொண்டிருந்தவள் அப்படியே உறங்கிப் போய் இருந்தாள்.
=====================================================================
அன்று வழக்கம்போலத் தனது வேலைகளை முடித்து விட்டு ருத்ரன் கிளம்பவே மிகவும் நேரமாகி விட்டது. அன்னைக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான் அதனால் கவலை இல்லை. அவன் அன்னைக்கு அவன் ஒரு மருத்துவன் என்பது மட்டுமேத் தெரியும். மற்ற விஷயங்கள் தெரியாது. தெரிந்தால் பயந்து விடுவாள், அதனால் தெரியாமல் இருப்பதே நலம். அதைத் தவிரவும் அவனுக்கு ஏனோ அந்த விஷயங்களைப் பற்றி வாயில் வந்ததே இல்லை. மருத்துவமனை விட்டு வெளியில் வரும்போது அத்தகைய விஷயங்கள் மறந்து விடும்.
பல விதமான உடல்கள் அவனுக்கு வரும். அதைப் பற்றியும் அவன் அன்னையிடம் கூறியது இல்லை. தனக்கேத் தெரியாமல் தன்னையும் அறியாமல் சில விஷயங்கள் வாயில் வந்து விடும் நொடியில் சுதாரித்துக் கொள்வான்.
அவள் பெண்மணி என்பது அல்ல காரணம். தந்தை இறந்த பிறகுத் தனி ஆளாக நின்று தைரியமாகத் தன்னை வளர்த்தவர். தான் பல சம்யங்களில் உடன் இருக்க முடிவதில்லை. சில சமயங்களில் சில நாட்கள் கூட மருத்துவமனையில் தங்கி விடும் நிலைமை வந்து விடும். அப்போதெல்லாம் அவன் தோழன் அசோக் வந்து அன்னையுடன் இருப்பான். அவனுக்குத் திருமணம் ஆகும் முன்பு வரை இவர்கள் வீட்டில்தான் இருந்தான். இப்போது தான் சில தினங்களுக்கு முன்பு ஒரு அன்பான பெண்ணைத் திருமணம் செய்துக் கொண்டான். காதல் திருமணம். செய்து வைத்தது என்னவளோ ருத்ரனின் அம்மா தான். அசோக்கும் ருத்ரனும் கல்லூரியில் சேருவதற்கு முன்பு அட்மிஷனில் பார்த்துப் பழகிய நண்பர்கள்.
ருத்ரன் கல்லூரியில் சேர்ந்தது முதல் நன்றாகவேத் தான் இருந்தது. பாடம் படிப்பு அரசு மருத்துவமனை ஏராளமான நோயாளிகள். பார்ப்பவர்களும் அதிகம் கற்றுக் கொள்வதும் அதிகம். அதற்கு ஏற்ற உழைப்புத் தேவைதான். இவன் மெரிட் சீட்டில் மருத்துவம் சேர்ந்தவன். பல தனியார் கல்லூரிகளில் படிப்பதை விட இந்த மாதிரி பெரிய பெரிய அரசு மருத்துவமனைகளில் படிப்பதும் வேலை செய்வதும் பல விதமாகப் புது புது அனுபவங்களை நமக்குக் கற்றுத் தரும். என்றோ ஒரு நாள் ஏதோ ஒரு கேசு என்பது இல்லாமல் நொடிப் பொழுதில் செயலாற்ற வேண்டிய நிர்பந்தம் எப்போதும் இருக்கும். கேன்சர் மருத்துவமனையும் அப்படித்தான்.
மெல்லிய ஆண் மகனைப் பெண்ணுக்குப் பிடிக்காது. முரடா உன்னை ரசித்தேன். நிச்சயம் இந்த வரிகள் கேன்சர் மருத்துவமனையில் வேலை பார்பவர்களுக்குப் பொருந்தும். எந்தப் பாலினமாக இருந்தாலும் சரி. எந்த வேலை செய்பவர்களாக இருந்தாலும் சரி. உள்ளேச் செல்ல இரும்பு இதயம் நிச்சயம் வேண்டும். மற்ற மருத்துவமனைகளைவிட அங்கே மருத்துவம் குறைந்த விலை. இருந்தாலும் கண்ணுக்குத் தெரியாமல் நிறையவே காசு செலவாகி விடும். நான் இதைப் பற்றியும் வெளிப் படையாக கூறவில்லை.
அடிக்கடி நண்பன் அசோக்கை பார்க்கச் சென்றவனுக்கு பல நாட்களுக்குப் பிறகே தெரியும் அவன் யாரும் இல்லாதவன் என்பது. பிறகு அழைத்துத் தன் வீட்டிலேயே வைத்துக் கொண்டான். அவர்கள் இருவரும் சகோதரப் பாசம் கொண்டவர்களாகவே இருந்தார்கள். இளங்கலை முடித்து அவரவர் மேற்படிப்பு படித்தார்கள்.
சிவகாமியும் இருவருக்கும் எந்த வேறுபாடும் இல்லாமல் சமமாகவே இருவரையும் நடத்தினார். இவன் ஒரு அறையில் படிக்கும்போது அவன் வேறொரு அறையில் படிப்பான். இருவருக்கும் அறைகளை விட்டு விட்டுச் சிவகாமி ஹாலில் படுத்துக் கொள்வாள். முக்கியமான வேலை இருக்கும்போது சில சமயங்களில் ருத்ரனுக்கு உணவை ஊட்டுபவள் பல சமயங்களில் அசோக்குக்கும் சேர்த்தே ஊட்டி விடுவார். அப்போது எல்லாம் அவன் நிறையவே சாப்பிட்டு விடுவான். சிறு குழந்தைக்குச் செய்வது போல அவனுக்கும் தட்டைச் சுற்றி திருஷ்டி கழிப்பர் சிவகாமி.
நாட்கள் வருடங்களாக மாறி ஓடிக் கொண்டிருக்க அவர்களின் வாழ்வில் ஒரு சம்பவம் நடந்தது. அவர்களின் வாழ்க்கையை மாற்றி அமைக்கப் போகும் அதி முக்கியமான சம்பவம் என்றும் சொல்லலாம்.
இன்று நாம் சுகமான குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து லேஸ் சிப்ஸ் சாப்பிட்டுக் கொண்டு கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் அங்கிருப்பவர்கள்(கேன்சர் மருத்துவமனை) வாழ்வு யாருக்கும் வரவேக் கூடாது. அப்படிப்பட்ட கொடூரமான வாழக்கையைக் கொண்ட ஒரு பாட்டியைப் பற்றித் தான் இப்போது நாம் பார்க்கப் போவது(மனதிடம் இல்லாதவர்கள் படிக்க வேண்டாம். உண்மைச் சம்பவத்தைத் தழுவி எழுதப் பட்டது)
யாரோ ஒரு வயதானப் முதியவர். அவருக்கு என்ன ஆயிற்றுத் தெரியாது. கண்கள் சரியாகத் தெரியாது. காதுகள் கேட்கவில்லை. மூளை? பைத்தியமாம். ரோட்டில் கிடந்தவரை யாரோக் கொண்டு வந்து போட்டு விட்டுப் போனார்கள். அவர் இருந்த நிலைமை! அப்பப்பா கொடூரம். ஒரு மூலையில் குப்பைகள் போடும் இடத்தில உடல் முழுவதும் கழிவுகள். அதில் புழுக்கள் மிதக்க, சொல்ல முடியாதது துயரம். தினமும் அவரைக் கடந்து தான் பலரும் செல்கிறார்கள்." அயோ பாவம்!" உச்சு கொட்டுவார்கள். இந்த மாதிரி நிலைமை யாருக்கும் வரக் கூடாது. மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரியுமா தெரியாதா? நமக்குத் தெரியாது. அஷோக்கைப் பார்க்க வந்த ருத்திரன் இந்தக் காட்சிக் கண்டு அதிர்ந்துப் போனான். பல விதமான வாந்தி பேதி கேசுகளைக் கண்டவனுக்கு இது ஒன்றும் அருவறுப்பாக இல்லை போல. உடனடியாக ஓடிச் சென்று நிர்வாகத்திடம் பேசி, அந்தப் பாட்டியை எடுத்து உடல் முழுவதும் சுத்தப்படுத்தி தலையைக் கோதி விட்டு டயப்பர் மாட்டி விட்டார்கள். அந்த நேரம் பாட்டியின் கை உயர்ந்து அவர்களை ஆசீர்வாதம் செய்தபடியே நின்றுப் போனது. இவர்களைப் பார்த்து ஆசீர்வாதம் செய்து தூக்கிய கைகள். இவர்களையே பார்த்துக் கொண்டு உயிரை விட்ட கண்கள். கண்களின் ஓரம் கண்ணீர் மட்டும் வழிந்துக் கொண்டிருந்தது. சில்லென்று இருந்தது. ஆனந்தக் கண்ணீர். பார்த்த இவர்களுக்கு மட்டும் அதிர்ச்சியில் தானாகவே கண்கள் நீரைக் கொட்டியது. பல நாட்களாகப் பார்க்க ஆள் இல்லாமல் கிடந்தவர் சம்பாதித்தது இறுதியில் கண்ணீர் விடச் சில ஆத்மாக்கள்.
அன்று அசோக்கும் ருத்ரனும் வீட்டிற்கு வந்தபின் அசோக் குலுங்கி குலுங்கி அழுதுக் கொண்டிருந்தான். ருத்ரனோ பிரமை பிடித்தவன் போல அமர்ந்திருந்தான். இருவருக்குமே அன்னையின் அரவணைப்பு மிகவும் தேவைப் பட்டது. நடுவில் சிவகாமி படுத்திருக்க ருத்ரன் எதுவும் பேசாமல் விட்டத்தை பார்த்துக் கொண்டே உறங்கி விட்டான். அசோக், "ஏன் முன்னாடி அந்தப் பாட்டிய நான் முன்னாடியே பார்த்திருக்கக் கூடாதா? எந்த நிலமைல நான் அவங்க பார்த்தேன். உடம்பெல்லாம் புழு நெளிஞ்சுதே! பாவி நான் பாவி. அவங்க இன்னும் கொஞ்ச நாள் உயிரோட இருந்திருக்கக் கூடாதா? அந்த அனாதைக்கு இந்த அனாதை துணையா இருந்திருப்பேனே!' தலையில் தலையில் அடித்துக் கொண்டான். இன்னும் ஒரு நாள் முன்னாடி பார்த்திருக்க கூடாதா? அந்த உடமப சுத்தப் படுத்த தான் அந்த ஆவி கஷ்டப்படணுமா ? அயோ! இந்தப் பாவி கைல தான் அவங்க உயிரை விடணுமா? எத்தனை அழுதும் சமாதானம் ஆகவில்லை. என் இந்தப் பேசாம என்பதும் தெரியவில்லை.
"உங்க கைல தான் அந்தப் பாட்டி போகணுமா என்னவோ? ஏம்பா இதை அந்தப் பாட்டியோட முடிவுன்னு எடுத்துக்கறீங்க. ஏதாவது ஒரு நல்லது செய்ய ஆரம்பம்னு நினைச்சுக்கோங்க."
அன்னையின் வார்த்தைகளில் சடேரென நிமிர்ந்த ருத்ரன் ஒரு முடிவுக்கு வந்து விட்டான். அசோக் அவன் உடன் சேர்ந்து கொண்டான். இருவருமே இன்னும் படித்து முடிக்கவில்லை. மனம் ஆசைப் பட்டாலும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது புரியவில்லை. தானே இந்தக் காரியத்தைத் தனியாக எடுத்துச் செய்வதை விட வேறு யாராவது செய்பவர்கள் இருந்தால் அவர்களுடன் சேர்ந்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து அதன் படியே ஒரு என்ஜீ வோடு சேர்ந்து சேவை செய்து கொண்டிருக்கிறார்கள்.
"மனம்போல வாழ்வு'
பிள்ளைகளை வைத்துக் கொண்டு பெண் கிடைக்கவில்லை என்று ஏங்கும் இந்தக் காலத்தில், ஒரு அழகான அன்பான பணக்கார வீட்டுப் பெண் அசோக்கை விரும்பி மணம் செய்துக் கொண்டாள். அதுவும் அந்தப் பாட்டியின் ஆசிர்வாதம் தானோ! ருத்ரனின் வாழ்க்கை வேறு விதமாக மாறத் தொடங்கி இருந்தது. அவனிடம் ஒரு தேஜஸ் கூடி இருந்தது.எப்போதுமே கலகலப்பாக இருப்பவனின் பேச்சு குறைந்துப் போனது. நிறைய படிக்க ஆரம்பித்தான். கிட்டத்தட்ட ஒரு தவ வாழ்க்கை போல இருந்தது. குடல் நோய் சம்பந்த பட்ட படிப்பு தான் படிக்க வேண்டும் என்பது அவனின் சிறு வயது ஆசை. அவனும் வளர்ந்தான். அவனின் ஆசையும் வளர்ந்தது. அதே போலப் படித்தான். பிறகு ஏனோ உடற் கூறாய்வு பகுதியில் தான் வேலை செய்வேன் என்று அதற்க்கு தேவையானதையும் படித்துப் பயிற்சியும் எடுத்துக் கொண்டான். சிவகாமிக்கு அதில் துளியும் விருப்பம் இல்லை. பிணங்களுடன் தினம் தினம் தன் மகன் இருக்க எந்தத் தாய் தான் விரும்புவாள்? சூடு காட்டில் வெட்டியான் என்றால் மருத்துவமனைகளில் இது போன்ற மருத்துவர்கள். இப்படி நினைத்துக் கொண்டிருந்த அன்னையை ருத்ரன் என்ன செய்தும் அன்னையை சமாதானப்படுத்த முடியவில்லை. தினமும் மகனுக்கும் அன்னைக்கும் வாக்குவாதம் நடப்பதுதான்.
"ஏன்டா! உனக்கு எதுக்குடா இந்த வேலை. வேண்டாண்டா. வேற ஏதாவது டிபார்ட்மெண்டுக்கு மாத்திக்கோடா. சும்மா ஓபி போயிட்டு வா. யாருகிட்ட பேசணுன்னு சொல்லு. நான் பேசறேன். "
"ம்ஹும் ! அவனிடம் பதில் இல்லை.
"டேய் இந்த வேலை பாக்கறவங்களுக்கு கல்யாணம் பண்ணி செக்ஸ்ல கூட ஆர்வம் இருக்காதாம். ரொம்ப மனசு மாறிப் போய்டுவாங்களாம். ஸ்ட்ரெஸ் ரொம்ப அதிகமா இருக்குமாண்டா. வேண்டாண்டா"
இப்போதும் பதில் இல்லை. ஆனால் அன்னையின் கண்ணீரை அவன் கைகள் துடைக்கத் துடித்தன. இருந்தாலும் அன்னைக்கு சரி சொல்ல வாய் வரவில்லை. நிச்சயம் அது பிடிவாதம் இல்லை.
எத்தனையோ பெற்றவர்கள் வேண்டாம் என்று அழுதாலும் பிடிவாதமாக ரானுவத்திற்கு செல்வார்களே அதுப் போல . நல்லக் காரியம் என்று எடுக்கவும் முடியாது. வேண்டாம் என்று தூக்கிப் போடவும் முடியாது.
"மா! ப்ளீஸ்! நீங்க அழாதீங்கம்மா. நீங்கப் பயப்படற மாதிரி எல்லாம் ஒன்னும் ஆகாது. நீங்கச் சொல்லறது சரிதான். பட் எல்லா மருத்துவர்களும் அப்படி இல்லை. என் கூட படிச்சவங்க கூட சிலர் கல்யாணம் பன்னி குழந்தையோட இருக்காங்க. எனக்கும் ஸ்ட்ரெஸ் இருக்கு. இல்லன்னு சொல்லல. ஆனா அத எப்படி ஹாண்டில் பண்ணனும் எனக்கு நல்லவேத் தெரியும். எந்த வேலைலதான் ஸ்ட்ரெஸ் இல்ல?"
"அப்ப ஏண்டா உனக்கு எந்தப் பெண்ணையும் பாக்க தோணல?இந்த வயசுக்கு வர வேண்டிய ஆசை எதுவும் வரல?"
"அதுக்குக் காரணம் என்னோட வேலை இல்ல. எனக்கு எந்தப் பொண்ணை பார்த்தாலும் இவள் எனக்குத் தான்னு தோணல. மேபீ அதுக்கு சரியான பொண்ண நான் இன்னும் பாக்காம கூட இருக்கலாம். நீயோ நானோ என்ன பண்ணாலும் நம்ம தலை எழுத மாத்தவே முடியாதும்மா. மத்தவங்க எப்படியோ? இந்தப் பீல்டுக்கு இருந்துகிட்டே நான் ரொம்பவே தலை எழுத்த நம்ப ஆரம்பிச்சுட்டேன்."
தான் என்னதான் சொன்னாலும் ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்து கொண்டு பிள்ளைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். அதுவரை தன்னுடைய எந்த வார்த்தையும் அம்மாவைச் சமாதானப்படுத்த முடியாது. வழக்கம்போலவே மனதை தேற்றிக் கொள்ள முடியாதவள், கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவளும் தன் அறைக்குச் சென்று விட்டாள்.' என்னால் முடிந்தது அவ்வளவுதானே!' மனம் சமாதானம் ஆகவில்லை. வழக்கம்போலவே இந்த முறையும் சாமி அறைக்குச் சென்று தன்னுடைய பாரத்தை எல்லாம் கொட்டினாள். சிவகாமியின் மனப் பாரத்தைத் தாங்க அந்த வில்வநாதர் எப்போது வருவார்?
தன் அறைக்குச் சென்று ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்துக் கொன்டு அமர்ந்தவனுக்கு மனம் அலைபாய்ந்தது. அம்மா சொல்வதும் சரிதானா? கடந்த சில வாரங்களாக நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை நினைத்துப் பார்த்தான். பொதுவாகவே யார் இருந்தாலும் இல்லை என்றாலும் அவன் தனியாகக் கூட அந்தப் பிரேத பரிசோதனை கூடத்தில் வேலை பார்ப்பான். உதவிக்குக் கூட யாரையும் எதிர்ப் பார்ப்பதில்லை. என்னதான் இருந்தாலும் அந்தப் பிணவறையில் பிணங்களுடன் இருக்க மற்றவர்கள் பயப்படுவார்கள். இவனோ பரிதாபப்படுவான். அப்படிதான் அவன் அன்று தனியே அந்த அறைக்குள் நுழைந்தான். பிணவாடை. வெறும் மாஸ்க் அணிந்து கொள்வது போதுமா? அதிலேயே இருந்து பழக்கப் பட்டவன் என்பதாலோ என்னவோ அவன் மூளையும் மூக்கும் அதை அருவருப்பாக எண்ணவில்லை. அந்த மாஸ்கேப் போதுமானதாக இருந்தது.
அங்கே வந்திருந்த புதுப் பிணத்தை வழக்கம்போலவே கை உறை அணிந்து அந்த மருத்துவ உபகரணங்களைப் பயன்படுத்தி கிழித்து உள்ளே இருந்தவைகளை ஆராய்ந்துக் கொண்டிருந்தார். இள வயது வாலிபன். கஞ்சா போதை ஏறித் தாங்க முடியாதவன் இறந்து போய் இருந்தான். பெற்றவள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுவாள். பாவம்தான். இருப்பினும் இந்த நேரம் தன் சொந்த எண்ணங்கள் எதையும் நினைக்கக் கூடாது. இயல்பிலேயே நூற்றுக்கு நூற்று ஐம்பது சதவீதம் உழைப்பான். அதிலும் வேலை என்று வந்து விட்டால் வேற லெவல் தான். கூர்மையாக அவன் நுரையீரலை பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு அதிர்ச்சி. அவனுக்கு இந்தப் பழக்கம் புதிதாக வந்திருக்க வாய்ப்பில்லை. எப்படியும் ஐந்து ஆறு வருடங்களாக இந்தப் பழக்கம் இருந்திருக்கும். அப்படி என்றால் பள்ளி காலத்திலிருந்தே! யோசனை நீண்டது. பள்ளி மாணவர்கள் பொதுவாக உண்ணும் சாக்கலேட், மிட்டாய், குச்சி ஐஸ் இது போன்ற ஏதாவது ஒன்றில் இந்தப் பழக்கம் ஆரம்பித்திருக்கலாம். கம்பனியின் சேல்ஸ் வளர இப்போதெல்லாம் கம்பனிகள் தான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று செய்கிறார்களே? அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் கொடுக்க வேண்டியதைக் கொடுத்துவிட்டால் விஷயம் முடிந்தது. மனம் விரக்தியானது. ஒரே நொடிக்கும் குறைவான நேரத்தில் மூளையை இந்தப் பக்கம் கொண்டு வந்து விட்டார். அப்போது அங்கே ஒரு அழுகுரல்.
யார்? ஜன்னல் வழியே வருகிறதா? இல்லை. அந்தப் பிணவறைக்குள் அவர் மட்டும். நினைக்கும்போதே திக்கென்று இருந்தது. அது ஒரு சிறு பிள்ளையின் குரல்போல இருந்தது. இந்தப் பையனா ? அவன் முகத்தை உற்று நோக்கினார். அவன் இவரைப் பார்த்து ஹீ ஹீ இளித்தான். ஓர் நொடி தான். அது பிரமை என்றுப் புரிந்தது பெரு மூச்சு விட்டார். நெற்றியின் ஓரம் வியர்வை வழிந்தது.
இப்போதும் அழுகை சத்தம் நிற்கவில்லை அழுகையும் விசும்பலும் மாறி மாறி வந்தது. எச்சில் விழுங்கிக் கொண்டார். உதடு உலர்ந்துப் போனது. மெதுவாகச் சத்தம் வந்த திசையில் லேசாகத் திரும்பினார். முழுவதும் திரும்பத் தைரியம் வரவில்லை. இந்தப் பயம் அவருக்கேப் புதியது தான். அங்கே அவர் கண்ட காட்சி பார்த்த யாரையுமே உடல் உறையச் செய்து விடும்.
அங்கே அவர் கண்டது ஒரு சிறு பெண் குழந்தை. குழந்தையாய் பிறந்த இல்லை இல்லை. திறந்த மேனியாகக் கால்களைக் குறுக்கி முட்டியில் முகம் புதைத்து அழுது கொண்டிருந்தாள். புதிதாக வயதுக்கு வந்தவள் அவளின் பிஞ்சு முலை சொன்னது. ஒரு குழந்தையை வெளியில் கொண்டு வர வேண்டிய இடம் பிய்ந்து தொங்கி கொண்டிருந்தது. அவளை இவர் பிரேதப் பரிசோதனை செய்யவில்லை. மனதில் பயத்தை தாண்டி இப்போது பரிதாபம் வந்தது.
"யார் நீ! "
சரேலென நிமிர்ந்தது அந்த உருவம். "யாரா? என்கிட்டையா கேள்வி கேக்கற?என்ன இந்த நிலைமைக்குக் கொண்டு வந்தானுங்களே அவங்க கிட்ட கேளு யாருன்னு? என்னோட கற்பை, உடம்பை சிதைச்சானுங்களே அவங்க கிட்ட கேளு நான் யாருன்னு, உன்ன மாதிரி ஒரு வந்து என் உடம்பைப் பார்த்துட்டு ஒன்னுமே இல்லன்னு பொய்யா சான்றிதழ் கொடுத்துருக்கானே அந்த டாக்டர்கிட்ட கேளு நான் யாருன்னு. கோபமாக வந்தது அதன் குரல். இரட்டை இரட்டையாக. பேசிக் கொண்டே இருந்த உருவம் சரேலெனப் பாய்ந்து அவரின் முன் முகத்தை நீட்டி "ஆ!" என் பெரியதாக வாயைத் திறந்தது அது.
மனிதர்களின் கோபமே கொடூரமானதாக இருக்கும். இறந்தவர்களின் கோபம். அதுவும் இந்த சிறு வயதில் கொடூரமாக கொலைச் செய்யப்பட்டால்?
அதன் கோபம் ருத்ரனுக்குப் புரிந்து விட்டது. இந்த நிலையில் அது தன்னை என்ன வேண்டுமானாலும் செய்யும். பயத்தில் முகம் முழுவதும் வியர்வை. சட்டையும் நனைந்து விட்டது. அவரின் முகத்திற்கும் அதன் முகத்திற்கும் ஒரே ஒரு நூலிழைதான் இருக்கும். அதன் உடம்பிலிருந்து வந்த நாத்தம்
குடலைப் பிரட்டியது.
அத்தனைக் கோபமாக அவர் அருகே அது வந்த வேகத்தில் தான் இன்னும் உயிருடன் இருப்பது தனக்கே அதிசயம் தான் என்றே எண்ணினார்.
"என்னால உங்களை ஒன்னும் பண்ண முடியாது. என்னோட தீய சக்தியைவிட உங்க கிட்ட நல்ல சக்தி அதிகமா இருக்கு. நான் உங்கள ஒன்னும் செய்யக் கூடாது. என்னால உங்கள ஒன்னும் செய்ய முடியாது. நீங்க நல்லவர். உங்கள மட்டும் இல்ல. என்னால யாரையும் எதுவும் செய்ய முடியாது. உயிரோட இருந்தபோது ஏழை. இப்ப?" குலுங்கி குலுங்கி அழுதது.
உயிருடன் இருந்திருந்தால்"நீ இப்ப அழாத எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம். தைரியமாக இரு" என்று சொல்லி இருப்பார். உயிரே போனபின் என்ன சொல்ல வேண்டும். தெரியாமல் தவித்தார்.
குரல் இப்போது வேறு மாதிரி மாறியது
"ஆனால் அது அப்பதான். இப்ப இல்ல இப்ப என்னால யார வேணாலும் என்ன வேணாலும் செய்ய முடியும் அவங்கள நான் பழி வாங்காம விடமாட்டேன்."
கொடூர முகம் கொடூர குரல் சில நிமிடம் பயந்து தான் போனார் ருத்ரன்.அது எதைப் பற்றியும் கவலைப்படாமல் கைகளில் வழிந்து கொண்டிருந்த ரத்தத்தை தானே நக்கிக் கொண்டிருந்தது. ருத்ரனின் மனதில் அவருக்கே தெரியாமல் வந்து அமர்ந்து கொண்டார் அவரின் பகவான். உடலில் வழியும் வியர்வை நீங்கி அவர் உடல் இயல்பு நிலைக்கு வந்தது.
"சார்! அவனுங்கள சும்மாவே விடக் கூடாது சார். அவங்களை பழி வாங்கணும். என்ன எப்படி எல்லாம் சித்திரவதை செஞ்சு கொன்னாங்களோ அதைவிடக் கொடூரமா என்னோட கையாலேயே அவங்களை நசுக்கி சாகடிக்கணும். என்னோட ********கொடூரமா நக்கினாங்களே. என்னோட கதறலைக் கூடக் கேக்கலையே, எப்படி அழுதேன் , கத்தினேன், கதறினேன். அவனுங்க ரத்தத்தை குடிக்கணும்"
"நீ சொல்லறது சரிதான் ஆனா அதுனால என்ன ஆகும் ?"
"என்னோட ஆத்மாவுக்கு சாந்தி கிடைக்கும்."
"அப்படி அல்ல" ஆத்மாவின் தத்துவத்தைப் புரிய வைத்தார். அவனுக்கு அப்படிப்பட்ட பேச்சாற்றலை தந்தது நிச்சயம் அவன் வணங்கும் பகவான் ராமணராகத் தான் இருக்க முடியும். இல்லை என்றால் இவனின் சொல்லுக்கு ஒரு ஆத்மா அதுவும் கொடூரமாகக் கொலை செய்யப் பட்டுப் பழி வெறியில் அலையும் ஆத்மாவால் கேட்க முடியுமா? ஆனால் அவர் சொல்வதை எல்லாம் கேட்கக்கூடிய அளவிற்கு அந்த ஆத்ம நல்லதாகத் தான் இருந்தது.
ருத்ரன் பேசப்பேச அந்தக் குழந்தை இப்போதும் அழுதுக் கொண்டு தான் இருந்தது.
"நீங்கச் சொல்லறது எல்லாம் சரிதான். ஆனா என்ன அவங்க இப்படி பண்ணிட்டாங்களே. என்னோட அம்மா அப்பா எவ்ளோ அழுவாங்க ?. படிச்சுp பெரிய ஆளா வரணுன்னு ஆசைபட்டேனே ? எப்பவுமே நான்தான் வகுப்புல பர்ஸ்ட் மார்க். எனக்கேன் இந்த நிலமை? என்னோட சாவுக்கு நீதி தான் என்ன?"
"கிடைக்கும். நிச்சயம் கிடைக்கும். சட்டத்தின் மூலாமா என்ன பண்ண முடியுமோ அதை நான் பண்ணறேன்."
"நான் ஒரே ஒரு தடவை என்னோட அம்மா அப்பாவைப் பார்த்துட்டு வரட்டுமா?
"என்னம்மா நீ ஏதோ ஹாஸ்டல்ல இருக்கறமாதிரி என்கிட்டே பர்மிசன் கேக்கற?"
நொடியில் பறந்து போனது ஆவி. அது அங்கே வைக்கப் பட்டிருந்த ஒரு பொம்மையில் சென்று அமர்ந்துக் கொண்டதும், தொப்பெனச் சத்தத்துடன் விழுந்திருந்தது உடல். பிய்ந்து தொங்கி கொண்டிருந்த இடங்கள் இப்போது சரியாக மூடப் பட்டிருந்தன.
பகவானின் லீலைகள் தொடரும்..