இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அன்பெனும் தீயா நீ 19 அனைத்து பாகங்கள் படிக்க
By Sathya kumar "கவிவருணி" Published on 14-09-2025

Total Views: 147

அத்தியாயம் 19

தன் கன்னத்தில் விழுந்த அடியில் ஒரு நிமிடம் அதிர்ந்தவன் அந்த கரத்திற்கு சொந்தக்காரரை கண்டதும் அவன் மனம் லேசாகியது.

"அரவிந்த்.. சொல்றது உண்மையாடா..?" என வேலமூர்த்தி கேட்க.

அவனோ அமைதியாக இருந்தான்.

"அவன் எப்படிப்பா சொல்லுவான்.. அவன் பொண்டாட்டி கூட சேர்ந்து வாழனும்ங்கிறதுக்காக பெத்த பையன் உயிரையே பணயம் வச்சிருக்காம்பா..." என்றபடி அரவிந்த் உள்ளே வர.

அவனை பார்த்தவன் எதுவும் பேசவில்லை.

"நல்லா உரைக்கிற மாதிரி சொல்லுங்க மச்சான்..." என்றபடி நாகராஜனும் அங்கு வந்து சேர்ந்தான்.

"என்னடா குடும்பம் இது... தனித்தனியா இப்படி ஒவ்வொருவருத்தரா வரானுங்க..." என புனித் கேட்க.

"ஏன்னா.. அவங்க எல்லோருமே அவங்கவங்க பொண்டாட்டிங்களுக்கு  தெரியாம வந்துருக்காங்க..." என்றான் தீனாவின் நண்பன் கிருஷ்ணா.

"நாங்க இத்தன பேர் மட்டும் பேசிட்டு இருக்கோம்... நீ அமைதியா இருக்க...?" என வேலமூர்த்தி கேட்டார் தீனாவின் தந்தை.

"இதுல சொல்றதுக்கு என்னப்பா இருக்கு.. எனக்கு அவக்கூட வாழனும்.. இதுதான் இப்போதைக்கு என் மண்டைல ஓடிட்டு இருக்க ஒரு விஷயம்..." என தீனா கூற.

"எனக்கு ஒரு சந்தேகம்..?" என அரவிந்த் கேட்க.

என்ன என்பதுபோல அவனை பார்த்தான் தீனா.

"நீ நிஜமா உன் பொண்டாட்டி வேணும்னு நினைச்சு வாழ நினைக்குறியா... இல்ல.. அந்த மதன பழி வாங்க இப்படிலாம் பண்ணிட்டு இருக்கியா..?" என கேட்க.

"எனக்கும் அதே சந்தேகம்தான் மச்சான்...என நாகராஜன் கூற 

இருவரையும் முறைத்து பார்த்தவன் "அவன்லாம் எனக்கு ஒரு ஆளே கிடையாதுன்னு உங்க ரெண்டு பேருக்கும் தெரியும்.. அப்பறம் எதுக்கு இந்த கேள்வி..?" என அவன் கேட்க.

"இல்ல உன் பொண்டாட்டி எப்பவும் அவனதான் நம்புது அதுக்குத்தான் கேட்டேன்..." என்றான் நாகராஜன்.

"அவன்தான் அவ தனியா இருந்தப்ப கூட இருந்து பத்திரமா பார்த்துட்டு இருந்து இருக்கான்.. அவளுக்கு பாதுகாப்பு கொடுத்து என் பையனுக்கும் ஆதரவா இருந்து இருக்கான்... இப்போ வரைக்கும் அவள எங்கிட்ட கூட விட்டுக் கொடுத்தது இல்ல.. அதுக்காகவே அவன ஒன்னும் பண்ணாம வச்சுருக்கேன்.. இல்லனா என் முன்னாடி நின்னு பேசினாவே சும்மாவிட மாட்டேன்.. என் மேலயே கைய வச்சவன சும்மா விடுவேன்னு எப்படி நினைச்சிங்க..?" என்க.

"அதெல்லாம் சரிதான்டா என் பேரன பாக்கனும்போல இருக்குடா..?" என வேலமூர்த்தி கேட்க.

"இப்போதான் இங்க இருந்து கிளம்பினாங்க..." என்றான் கிருஷ்ணா.

"சீக்கிரமா உங்க மடியில உக்காந்து விளையாடுவான்பா உங்க ஆசைய கொஞ்சம் அடக்கி வைங்க..." என தீனா கூற.

"அதெல்லாம் இருக்கட்டும்.. உங்க அம்மா அங்க உனக்கு வேற பொண்ணு பார்த்துட்டு இருக்கா.. நீ பன்ற வேலை தெரிஞ்சா வீடு ரெண்டாகிடும் தீனா.. எக்காரணம் கொண்டும் குடும்பம் உடையக்கூடாது தீனா அத மட்டும் பார்த்துக்கோ..." என அவர் கூற.

"அதுமட்டும் இல்லப்பா மாலினி அண்ணி அவங்க தங்கச்சி அஞ்சலிய எனக்கு கட்டி வைக்க ஏற்பாடு பண்ணிட்டு இருக்காங்கன்னும் தெரியும் எனக்கு..." என்க.

அரவிந்தோ, "என்னடா சொல்ற மாலினியா எங்கிட்ட எதும் சொல்லலியே...?" என கேட்க.

"என்னைக்குடா உங்கிட்ட அவங்க ஷேர் பண்ணியிருக்காங்க..." என கேட்க.

"அதுவேணா உண்மைதான் என் பொண்டாட்டி கூட எங்க சொந்தத்துல பொண்ணு ஏதாச்சும் இருக்கான்னு விசாரிச்சிட்டு இருக்கா..." என நாகராஜன் கூற.

"ஏன்டா தீனா.. நீயே எப்போ பார்த்தாலும் ஜிஞ்ஜர் ஈட்டிங் மங்கி மாதிரி உர்ருன்னு இருப்ப உனக்கு எவ்ளோ டிமாண்ட் பாரு..." என்க.

"உதை வாங்க போற இப்போ நீ முதல்ல உனக்கு வச்ச வேலைய பாரு..." என கூற.

"ஒன்னு சொல்ல விட மாட்டியே..." என்றபடி அவன் வெளியேற.

"ஏன்டா உன் பொண்டாட்டி கூட சேர்ந்து வாழனும்னு நீ எடுத்த முடிவெல்லாம் சரிதான்.. ஆனா அதுக்கு பையன உயிர வச்சு என்ன விளையாட்டுடா இது..." என கேட்க.

"ஏன்னா.. இதவிட்டா எனக்கு வேற வழி தெரியலப்பா இது ஒரு விஷயத்துக்குத்தான் அவள அசைக்க முடியும்.. இல்லனா.. கடைசி வரைக்கும் அவ என்கூட சேர்ந்து வாழ வரவே மாட்டாப்பா..." என்க.

"உங்க அம்மாட்ட என்ன சொல்லப்போற..?" என அவர் கேட்க.

"இதுல அவங்க சொல்ல என்னப்பா இருக்கு... இது என்னோட வாழ்க்கை..இதுல நான்தான் முடிவெடுப்பேன்.. ஒருதடவ அவங்கப் பேச்சு கேட்டு நான் எடுத்த தப்பான முடிவே போதும்..இனியும் அந்த தப்ப பண்ண நான் தயாரா இல்ல.. அதும் சித்து..." என்றவனின் கண்கள் லேசாக கலங்க அவனின் தோளை ஆதரவாக பற்றினான் அரவிந்த்.

"அவன் என்னையே உறிச்சு வச்சிருக்காம்பா... அவன பார்த்தா நானே திரும்ப பிறந்து வந்த மாதிரி இருக்குப்பா.. என்னால கண்டிப்பா அவன விட்டுட்டு இருக்க முடியாது நான் அவன் இல்லாம நம்ம ஊருக்கு திரும்ப வரதா இல்ல அவனோடதான் வீட்டுக்கு வருவேன்..."என்க.

"உன் ஆசைப்படி எல்லாம் நடக்கட்டும்பா..." என அவர் கூற.

"ம்ம்ம்ம்... நீங்க என்ன சொல்லிட்டு இங்க வந்தீங்க..?" என அவன் கேட்க.

"என்ன சொல்லுவோம்.. ஆயிரெத்தெட்டு கேள்வி.. எங்க போறீங்க...என்ன வேலைன்னு... சமாளிச்சுட்டு வரதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு..." என்க.

"இங்கயும் அதே கேள்விதான்..." என்றனர் மற்ற இருவரும்.

இவர்கள் உரையாடல் எதிலும் கலந்து கொள்ளாமல் அமைதியாக ஏதோ யோசனையில் டாக்டர் புனித் இருக்க.

"என்ன டாக்டர் அமைதியா இருக்கீங்க..?" என தீனா அவரை கேட்க.

"நான் ஒன்னு சொல்லனும் தீனா..." என்க.

அவரின் முகத்தை வைத்தே ஏதோ சரியில்லை என அறிந்தவன் "சொல்லுங்க டாக்டர்..." என்க.

"சித்துவுக்கு அவன் மூளைக்கு போற நரம்புல வீக்கம் இருக்கு தீனா..." என்க.

"என்ன சொல்றீங்க.. அவனுக்கு உடம்புக்கு ஏதும் இல்ல.. என் மனைவிய பயமுறுத்தி அவன வச்சு எங்கூட சேர்ந்து வாழ வைக்கனும்னுதான் இந்த பிளானே...நீங்க திடீர்னு இப்படி சொல்றீங்க... அதனால அவன் உயிருக்கு ஏதும் ஆபத்து இருக்கா..." என கேட்க.

"அவன் மூளைக்கு போற நரம்புல வீக்கமும் இருக்கு... அதேசமயத்துல அதுல லேசா ரத்தக்கசிவும் இருக்கு தீனா... இத இப்படியே விட்டா ரொம்ப டேஞ்ஜர்... பின்னாடி பெருசா அவனுக்கு ஏதாச்சும் ப்ராப்லம் வர வாயப்பு இருக்கு..." என்க.

"புனித் அன்புவ பயமுறுத்ததான அவன் உடம்புல இல்லாத ஒன்ன நாமளா க்ரியேட் பண்ணோம் ஆனா அதுவே உண்மைன்னு சொல்றீங்க..." என அவன் அதிர்ந்து கேட்க.

"இதோ அவன் ஸ்கேன் ரிப்போர்ட் தீனா பாரு..." என அவனிடம் காட்ட
அவசரமாக அவர் கையில் இருந்ததை பறித்தவன் அதை படித்து பார்க்க நாகராஜன்,அரவிந்த் மற்றும் வேலமூர்த்தி என அனைவருக்கும் அத்தகவல் அதிர்ச்சியை கொடுத்தது.

"தீனா அவரு என்ன சொல்றாரு..?" என வேலமூர்த்தி கேட்க.

அதை படித்து அதிர்ந்தவன் பொத்தென இருக்கையில் அமர.

அவனை உலுக்கினார் வேலமூர்த்தி.

"அவரு என்னடா சொல்றாரு... அவரு சொல்றது எல்லாம் உண்மையா...?" என கேட்க.

"சொல்லுடா.. அவரு சொல்றது உண்மையா..?" என கேட்க.

"ஆமாம்..." என்றவன் இருகைகளால் தலையை தாங்கியபடி குனிந்து அமர்ந்து கொண்டான்.

வந்ததே வேலமூர்த்திக்கு கோபம் "பைத்தியக்காரா... பைத்தியக்காரா... நீ விளையாட்டுக்கு சொன்னது இப்போ நிஜமாவே உண்மையாகிடுச்சு.. பார்த்த இல்ல.. இதுக்குத்தான் இந்த மாதிரி விஷப்பரிட்சையெல்லாம் வேணாம்னு சொன்னேன்... கேட்டியா இப்போ நிஜமாவே பையனுக்கு பிரச்சனை வந்துடுச்சு.. இப்ப என்ன பன்றது..." என கேட்டு அவர் தீனாவை திட்ட ஆரம்பிக்க "அப்பா அமைதியா இருங்க அவனும் இத எதிர்பார்த்து இருக்க மாட்டான்... முதல்ல நாம டாக்டர்ட பேசுவோம்..." என்ற அரவிந்த் "புனித் இதனால பையன் உயிருக்கு ஏதும் ஆபத்து இருக்குமா..?" என கேட்க.

"கண்டிப்பா இத கவனிக்காம விட்டா பின்னாடி அவன் உயிருக்கே கூட ஆபத்தா முடியலாம்..."என அவர் கூற

அவரின் சட்டையை கொத்தாக பிடித்தவன் "புனித் நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது என் பையன் எனக்கு உயிரோட வேணும் அதும் எந்த பிரச்சனையும் இல்லாம இன்னைக்கே ட்ரீட்மென்ட் ஆரம்பிங்க நான் என் பையனோட வரேன்..." என்றவன் அங்கிருந்து கிளம்ப "டேய்... என்னடா பண்ண போற.." என கத்திய வேலமூர்த்தியின் வார்த்தைக்கு பதில் கூற அவன் அங்கு இருந்தால்தானே..!

அவன்தான் தன் மகனை காண புயல் வேகத்தில் கிளம்பிவிட்டானே.

ஹோட்டல் அறைக்கு வந்து சேர்ந்திருந்தனர் மதனும் பூரணியும் அன்புவும்.

சித்தார்த் உறக்கத்தில் இருக்க மருத்துவமனையில் தீனாவுடம் தைரியமாக பேசிவிட்டு வந்தாலும் அன்புவிற்கு தீனா இதை அத்தனை சுலபமாக விடுவான் என்பதில் நம்பிக்கை இல்லை. 

ஆளுக்கொரு மூளையில் அமர்ந்து யோசனையில் இருக்க அறைக்கதவு வேகமாக தட்டும் சத்தம் கேட்டு அனைவரும் திடுக்கிட்டு பார்த்தனர்.

விடாது கதவு தட்டும் ஓசையில் சித்துவும் உறக்கம் கலைந்து எழுந்தான்.

பூரணி வேகமாக கதவருகே செல்ல பார்க்க.

"ஏய்.. இரு.. நான் பாக்கறேன்..." என்றபடி மதன் கதவை திறக்க .

திறந்த வேகத்தில் உள்ளே நுழைந்தான் தீனா.

அவர்கள் அவனை பார்த்து சுதாரிக்கும் முன் புயல் வேகத்தில் அன்புவை அடைந்தவன் கையில் இருந்த சித்துவை ஒருநிமிடம் பார்த்துவிட்டு தலையை வருடியவன் பட்டென அவள் கையில் இருந்தவனை இழுத்து தூக்கிக்கொண்டு அவ்விடம் விட்டு அகல மதனின் தடுப்பும் பூரணியின் எதிர்ப்பும்  வேலைக்கு ஆகாமல் போனது அதிரடிக்காரனிடம்.

நொடியில் நடந்த நிகழ்வில் அன்பு அதிர்ந்து சித்து சித்து என கத்தியபடி அவ்விடத்திலேயே மயங்கி சரிந்தாள்...


Leave a comment


Comments


Related Post