இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அன்பெனும் தீயா நீ 20 அனைத்து பாகங்கள் படிக்க
By Sathya kumar "கவிவருணி" Published on 01-10-2025

Total Views: 49

அத்தியாயம் 20

என்ன ஏதென உணரும் முன் நடந்துவிட்ட நிகழ்வில் ஸ்தம்பித்து நின்ற அன்புவால் ஆண் அரிமாவான அவனை எதிர்த்து தன் மகனை வாங்க முடியவில்லை.

சோர்ந்து போனவள் கடைசி ஆயுதமாக அவன் முன் கைக்கூப்பி மண்டியிட்டாள் "ப்ளீஸ்.. எனக்குன்னு இருக்கறது அவன் மட்டும்தான்.. அவனையும் எங்கிட்ட இருந்து பிரிச்சிடாதீங்க..." என கதற அவளையும் கையில் இருந்த குழந்தையையும் ஒருநிமிடம் பார்த்தவனுக்கு இப்போது எதுவும் முக்கியமில்லை மகனின் உடல்நிலையே கண்முன் வர எதுவாக இருப்பினும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என நினைத்தவன் அவ்விடம் விட்டு அகன்றான்.

அவனிடம் தோற்றுப் போனவள் அப்படியே மயங்கி சரிய "அன்பு..." என கத்தியபடியே பூரணி ஓடிவர அவள் குரல் கேட்டு மதனும் ஓடிவந்தான்.

அவளை தூக்கி அங்கிருந்த சோபாவில் படுக்க வைத்து முகத்தில் தண்ணீர் தெளிக்க மெல்ல கண்விழித்தவள் அவளுக்கு அருகில் இருந்த மதனின் முகத்தை கண்டு பட்டென எழுந்து அவன் சட்டையை கொத்தாக பிடித்தாள்.

"சித்துவ அவனோட அனுப்பிட்ட இல்ல... இனி நான் உயிரோட இருந்து என்ன பிரயோஜனம்..." என கதறி அழ.

"அன்பு.. ப்ளீஸ்.. அழாத.. நீ தைரியமா இருந்தாதான்.. அவன்கிட்ட இருந்து  பையன வாங்க முடியும்... என அவளை தேற்ற.

சித்துவை நினைத்து அவள் கண்களில் கண்ணீர் வழிந்த வண்ணம் இருக்க பூரணியோ "அன்பு, அழாத எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்.." என்க.

"பூரணி..அவன் இல்லாம நான் ஒருநிமிஷம்கூட உயிரோட இருக்க மாட்டேன்..." என்க.

"அம்மா அன்பு..."என்ற குரலை கேட்டு மூவரும் வாசலை பார்க்க அங்கு வேதமூர்த்தியும் அரவிந்தும் நின்றிருந்தனர்.

அவர்களை கண்டதும் விலுக்கென எழுந்தவள் "நீ.. நீங்க...?" என இழுக்க..

"உன் குழப்பம் புரியுதுமா... நாங்க..?" என அவர் ஏதோ கூறும்முன் அவர்கள் முன் வந்து நின்றான் மதன்.

"ஓ..இதெல்லாம் குடும்பமா போட்ட நாடகமா... உங்க வீட்டுல அவ இருக்கும்போதுதான் அவள நிம்மதியா வாழவிடுல.. இங்கயும் அவள நிம்மதியா வாழ விடக்கூடாதுன்னு நீங்களும் உங்க குடும்பமும் கங்கனம் கட்டிட்டு இருக்கீங்களா... அவ அப்படி என்ன பண்ணா உங்களுக்கு... அவள லவ் பன்றேன்னு ஏமாத்தி கல்யாணம் பண்ணி ஒரு குழந்தையும் கொடுத்து அவ வாழ்க்கையவே கெடுத்துட்டான் உங்க பையன்... இப்ப அவளுக்குன்னு இருக்கறது அந்த குழந்தை மட்டும்தான் அவனையும் தூக்கிட்டு போய்ட்டான் உங்க பையன்.. அதுக்கு அவள உயிரோட கொன்னுடலாம் இல்ல எதுக்கு இப்படி அவள அணுஅணுவா கொன்னுட்டு இருக்கீங்க...?" என மதன் கோபமாக கேட்க.

"உண்மை என்னென்னு தெரியாம பேசாத மதன்.." என அரவிந்த் கூற.

"ஓ... நீங்களா வாங்க சார்... ஒரு கர்ப்பிணி பொண்ணுன்னு கூட பார்க்காம கழுத்துல இருந்த தாலிய பிச்சிட்டு நடுராத்திரி கொட்டற மழையில வெளிய தள்ளினான் உங்க தம்பி... அன்னைக்கு நீங்களும் வேடிக்கை பார்த்துட்டுதான இருந்தீங்க இன்னைக்கு என்ன புதுசா அக்கறை..?"என கேட்க.

"மதன், உன் கோபம் புரியுது சித்துவ பாக்கனும்னு கேட்டது நான்தான்..." என வேலமூர்த்தி கூற.

"அதான் சார்.. இத்தன நாளா உயிரோட இருக்காங்களா இல்லையான்னு தேடாத உங்களுக்கு இப்ப திடீர்னு என்ன பாசம் அந்த பையன்மேல..?" என கேட்க

"மதன், இப்ப எதுக்கு ஆர்க்கியூ பண்ணிட்டு... இருக்க நாம முதல்ல சித்துவ கூட்டிட்டு வரலாம் வா.." என பூரணி அழைக்க.

அவளை பார்த்த வேலமூர்த்தி "நாங்களும் அதத்தான் சொல்ல வந்தோம் சித்துவ பார்க்க உடனே போகனும் அன்பு வா..." என அழைக்க.

"போதும் உங்க நாடகம்... உங்க பையன்ட்ட இருந்து சித்துவ எப்படி வாங்கனும்னு எங்களுக்கு தெரியும் அன்பு நீ ஓகேதான நாம போலாம்..." என்க

"மதன், எதுலயும் அவசரம்தான் உனக்கு... நாங்க என்ன சொல்ல வரோம்னே புரிஞ்சிக்காம என்ன பேச்சு பேசிட்டு இருக்க... இப்ப உடனே நாம ஹாஸ்பிடல் போகனும்.." என அரவிந்த் கூற.

அதுவரை அழுதுகொண்டு இருந்தவள் விலுக்கென நிமிர்ந்து பார்க்க.

மதனும் கண்களை சுருக்கி அவனை பார்த்தான்.

"எ...என்ன சொல்றீங்க... நாங்களே அங்கதான கிளம்பிட்டு இருக்கோம்..?" என பூரணி கேட்க.

"இப்ப பேச நேரம் இல்லம்மா உடனே கிளம்பனும் நீங்க ட்ரீட்மென்ட்டுக்கு ஒரு ஹாஸ்பிடல் போனீங்க இல்ல அங்கதான் சித்துவுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கனும்..." என்க.

"என்ன உளறிட்டு இருக்கீங்க... நாங்களும் அங்கதான அவன கூட்டிட்டு வர ரெடியாகிட்டு இருந்தோம் அதுக்குள்ள உங்க பையனுக்கு என்ன அவசரம்..?" என மதன் கேட்க.

"அவனுக்கு அவசரம் இல்ல மதன் சித்துவுக்கு அவசரம்.." என்றார் வேலமூர்த்தி.

பட்டென எழுந்துவிட்டாள் அன்பு அவர் அருகில் வந்தவள் "எ..என்ன சொல்றீங்க.. சித்துவுக்கு பெருசா எதும் இல்லன்னு டாக்டர் சொன்னாரே... நீங்க சொல்றது எனக்கு பயமா இருக்கு எதுவா இருந்தாலும் சொல்லுங்க..." என கேட்க.

"அவனுக்கு மூளைல ரத்தக்கசிவு இருக்கு அவனுக்கு உடனே ட்ரீட்மென்ட் கொடுக்கனும் இல்லனா அவன் உயிருக்கு ஆபத்துன்னு டாக்டர் சொல்லிட்டாரு அதான் தீனா சித்துவ கூட்டிட்டு போயிருக்கான்..." என அவர் கூறி முடிக்கும்முன் அவர் காலடியிலேயே வேரறந்த மரம்போல சாய்ந்தாள் அன்பு.

மருத்துவமனை

மருத்துவ உபகரணங்களுடன் ஒரு தனி அறையில் படுக்க வைக்கப்பட்டு இருந்தான் சித்து.

அவன் முகத்தில் ஆக்ஸிஜன் கருவிகள் பொருத்தப்பட்டு இருக்க மருந்தின் வீரியத்தில் நல்ல உறக்கத்தில் இருந்தான்.

அறைக்கு வெளியே தீனாவும் நாகராஜும் சோகமே உருவாக அமர்ந்து இருந்தனர்.

சற்றுமுன் நடந்ததது அனைத்தும் அவன் கண்முன் வந்து போனது.

சித்துவை அன்புவிடம் இருந்து பறித்துக் கொண்டு வந்ததும் அவன் காலடியில் அவள் மண்டியிட்டு கைக்கூப்பி அவனிடம் இறைஞ்சி கேட்டதும் வந்துபோக தன்னை நினைத்து நொந்து போனான் தீனா.

தனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என நொந்தவன் கோபம் தாளாது இருக்கையில் ஓங்கி குத்த அவனை அமைதிப்படுத்தினான் நாகராஜன்.

"நீயே இப்படி உடைஞ்சிட்டா... உன் பொண்டாட்டிக்கு என்ன ஆறுதல் சொல்லுவ... கொஞ்சம் உன் கோபத்தை கன்ட்ரோல் பண்ணு... இப்போ நீயும் எமோஷனலா இருந்தா உன் பையனையும் உன் பொண்டாட்டியையும் எப்படி பார்த்துப்ப... இன்னும் ஊருக்கு போனா உன் அம்மாவையும் சமாளிக்க உனக்கு தெம்பு வேணும் தீனா... கூடவே  இன்னும்  நீ நிறைய பாக்க வேண்டியது இருக்கு தீனா.. இப்பவே உடைஞ்சிட்டா அப்பறம் சரியாகவே முடியாது... அதனால கொஞ்ச நாளைக்கு உன் கோப முகமே எல்லோருக்கும் தெரியட்டும்.. நீ உன் மனைவியை அழைச்சிட்டு வரேன்னு இப்போதைக்கு உன் அம்மாட்ட சொல்ல வேணாம்..." என்க.

"நானும் இத யோசிக்காம இல்ல மச்சான்.. இத்தன நாளா என் பொண்டாட்டியையும் பிள்ளையையும் பிரிஞ்சி இருந்ததுக்கு என் அம்மாவே காரணமா இருந்துருக்காங்கன்னு நினைக்கும் போது அவ்ளோ வலிக்குது நாகு.." என்க.

"விடு மச்சான்... இதுக்கு பின்னாடி இன்னும் ஏதோ இருக்குன்னு மட்டும் எனக்கு தோணிட்டே இருக்கு.. அது என்னென்னு கண்டுபிடிக்கனும் தீனா.. முதல்ல சித்துவோட பிரச்சனை முடியட்டும் உன் பொண்டாட்டி உன்ன புரிஞ்சிக்கட்டும்..இனி சேர்ந்து வாழற வழிய பாரு தீனா... குடும்பம் ஒரு கோவில் தீனா அது உடைஞ்சிடாம பாத்துக்கனும்..." என்க.

"பொண்டாட்டியா....அவள நான் பண்ண கொடுமைக்கு அவ எங்கூட வருவான்ற நம்பிக்கை இல்ல நாகு... சித்துவ சரி பண்ணி அவக்கிட்ட ஒப்படைக்கனும்... மதனால முடியாது அவன் வொய்ஃப் வேற கன்சீவா இருக்காங்கன்னு கேள்விப்பட்டேன்... அதும் இல்லாம சித்துவுக்கு ஆகற செலவ அவனால மேனேஜ் பண்ண முடியாது நாகு... அதனாலதான் அவன தூக்கிட்டு வந்துட்டேன்..."என்க.

அவனை தோளை ஆதரவாக அணைத்துக் கொண்டான் நாகராஜன்.

"நீ குடும்பம் குழந்தைன்னு சந்தோஷமா வாழுவ தீனா நாங்க அதப்பார்ப்போம் நீ கவலைப்படாம இரு...." என்க.

"ம்ம்ம்ம்..."என்றவன் கண்களை தாண்டி வெளியே வர துடிக்கும் கண்ணீரை கட்டாயமாக உள்ளிழுத்துக் கொண்டான்.

அப்போது அதே இடத்தில் அன்புவையும் ஸ்டெரக்சரில் வைத்து தள்ளிக்கொண்டு வந்தனர் மதனும் பூரணியும் அவர்கள் பின்னால் வேலமூர்த்தியும் அரவிந்தும் பதட்டமாக ஓடி வர அவர்களுடன் லேடி டாக்டரும் ஓடி வர அவர்களை பார்த்த அதிர்ந்து எழுந்தான்... 





Leave a comment


Comments


Related Post