Total Views: 64
அத்தியாயம் 21
வாடிய கொடியாய் ஓய்ந்து படுத்திருந்தவளை காண உள்ளம் துடித்து கலங்கியது தீனாவிற்கு.
ஏற்கனவே இருக்கும் பிரச்சனையில் இவள்வேறு மருத்துவமனைக்கு வந்து படுத்துக் கொண்டாள் என நினைத்தவனுக்கு மகனை பார்ப்பதா இல்லை மனைவியை பார்ப்பதா என தெரியவில்லை.
ஐசியு வாசலில் அவன் அமர்ந்து நாகுவிடம் பேசிக்கொண்டு இருக்க மதனும் பூரணியும் பதட்டமாக வருவதை பார்த்தவன் அவர்களது பதட்டம் தன் மகனிற்காக என தவறாக எண்ணினான் அவர்கள் பின்னால் இரண்டு மருத்துவமனை ஊழியர்கள் ஸ்ட்ரெக்சரை தள்ளியபடி வருவதையும் மதனும் நொடிக்கொருமுறை பின்னால் திரும்பி பார்த்தபடி வருவதையும் பார்த்து சந்தேகம் கொண்டவன் சற்று எக்கி அவர்கள் பின்னால் பார்க்க அங்கு வாடி வதங்கிய நிலையில் தன் மனையாள் படுத்திருப்பதை கண்டவன் ஒருநிமிடம் கூட தாமதிக்காது முன்னால் ஓடி வர அவனை தடுக்கும் பொருட்டு மதனும் எகிறிக்கொண்டு வந்தான்.
இடையில் பூரணிதான் "மதன், அவசரப்படாத முதல்ல அவளுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கட்டும்... எதுக்கெடுத்தாலும் சண்டை போடாத ப்ளீஸ்..."என்க.
அவளை விசித்திரமாக கண்டான்.
"ஆமாப்பா... கொஞ்சம் அமைதியா இரு... என் பையனால ஒரு தொந்தரவும் இருக்காது..." என வேலமூர்த்தியும் கூற.
அன்புவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவனும் அமைதி காத்தான்.
அவள் அருகில் ஓடியவன் அவள் கன்னத்தில் தட்டி "அன்பு.. அன்பு.." என அழைக்க அவளோ கண்விழித்தபாடில்லை.
"அன்பு.." என அவன் மீண்டும் அழைக்க "டேய் இருடா... டாக்டர்ஸ் பாக்கட்டும் நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு.." என அவனை வேலமூர்த்தி அடக்க "அப்பா...அவளுக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி பேச்சு மூச்சு இல்லாம கிடக்கா..?" என கேட்க.
"வாயமூடிக்க தீனா... இந்த உலகத்துலயே நீ மட்டும்தான் அறிவாளி மத்தவன்லாம் முட்டாளுன்னு பேசுவியே இன்னைக்கு நீதான் அடிமுட்டாளா நடந்துருக்க அந்தப்பொண்ணுக்கிட்ட பொறுமையா சித்துவோட ஹெல்த் பத்தி சொல்லி இருக்கலாம் அதவிட்டுட்டு அடாவடியா நடந்து ஏதோ பையன கடத்தற மாதிரி பில்டப் பண்ணி அவன தூக்கிட்டு வந்துருக்க அதுலயே அந்த பொண்ணு ரொம்பவே உடைஞ்சிட்டா இதுல அவ பையனோட ஹெல்த் பத்தி தெரிஞ்சு மயக்கம் போட்டவதான் இன்னும் முழிக்கல என்னய ரொம்ப பேச வைக்காத தீனா போய் அமைதியா நின்னுக்க.." என அவர் அவனை கடிந்து கொள்ள ஷிட் என தலையில் அடித்துக் கொண்டான் அவன்.
மருத்துவர்கள் அவளுக்கு உள்ளே சிகிச்சையளித்துக் கொண்டிருக்க தீனாவிற்கு ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு யுகமாக கடந்தது.
ஒருமணி நேரம் கழித்தே மருத்துவர்கள் வெளியே வந்தனர்.
அவர்களை கண்டதும் பதறியடித்து ஓடியவன் அவளை பற்றி விசாரிக்க நீங்க என டாக்டர் எதிர் கேள்வி கேட்டார்.
"அவ ஹஸ்பண்ட்..." என நொடியும் தாமதிக்காத் கூற.
"யாருடா புருஷன்..?" என மதன் இப்போதும் எகிறிக் கொண்டு வந்தான்.
அவனை அடக்கி அமரவைக்கவே பூரணிக்கு போதும் போதும் என்றானது.
"எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருங்க... முதல்ல இங்க எதுக்கு இத்தன பேர் கூடி இருக்கீங்க... வெளிய போங்க.. நர்ஸ்..."என அவர் கத்த தாதி ஒருவர் ஓடி வந்தார் "இங்க ஏன் இத்தனை பேர அலவ் பண்ணி இருக்கீங்க...?" முதல்ல கிளம்ப சொல்லுங்க..." என கத்த "இதோ.. இதோ.. சொல்றேன் டாக்டர்.." என்றவர், "சார், கிளம்புங்க ப்ளீஸ்.. இங்க நின்னு சத்தம் போடாதீங்க பேஷன்ட்ஸ் அபெக்ட் ஆவாங்க..." என கூற.
இப்போதும் வேலமூர்த்திதான் பேசினார் "அம்மா அவனோட மனைவி பையன் ரெண்டு பேருமே உடம்புக்கு முடியாம இருக்காங்கம்மா அதான் அவன் கொஞ்சம் டிஸ்டர்ப்டா இருக்கான் இதோ நாங்க இப்ப கிளம்பிடுவோம்..."என்க.
"சார் டாக்டர் எங்களதான் திட்டுவாரு நீங்க முதல்ல இங்க இருந்து கிளம்புங்க.." என்க.
"சிஸ்டர் நான் உங்க டாக்டர்ட்ட பேசிக்கிறேன்..."என்றான் தீனா.
"நீ வேற சும்மா இருடா என்றவர் அம்மாடி என் மருமக எப்படி இருக்கான்னு மட்டும் தெரிஞ்சிட்டு கிளம்பிடறேன்மா..." என்க.
மற்றவர்களும் அதை ஆமோதிப்பதாய் அமைதியாக நின்றனர்.
"சார் அவங்க ஓவர் டிப்ரஷன்ல மயங்கி விழுந்துருக்காங்க அவ்ளோதான் ஆனா அவங்க ஹெல்த் வச்சு பார்த்தா இப்படி அடிக்கடி மயங்கி விழுந்துருங்காங்க போல ட்ரீட்மென்ட் கொடுத்து இருக்கேன் பார்ப்போம் நல்லாவே தூங்காம இருந்துருக்காங்க அதிகப்படியான மன அழுத்தம் அவங்களுக்கு அடிக்கடி மயக்கம் வர காரணமா இருந்து இருக்கலாம் சோ நீங்க அவங்கள டிஸ்டர்ப் பண்ணாம இருங்க அவங்க நல்லா தூங்க இன்ஜெக்ஷன் கொடுத்து இருக்கேன் தூங்கட்டும் நர்ஸ் அதான் அந்த பொண்ணுக்கு என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சி டுச்சி இல்ல...கூட்டம் கூடாம பார்த்துக்குங்க.."என்றவாறு மருத்துவர் அங்கிருந்து கிளம்ப "சார் அதான் டாக்டர் சொல்லிட்டாரு இல்ல.. கிளம்புங்க சார்.. இல்லனா எங்க வேலை போய்டும்.." என தாதிப்பெண் கையெடுத்து கும்பிடாத குறையாக கேட்க.
வேலமூர்த்தியோ "அரவிந்த் நாம போகலாம் அவன் பார்த்துட்டு வரட்டும் மாப்பிளை நீங்களும் வாங்க.. என நாகுவையும் அழைக்க "இல்ல மாமா நீங்க போங்க நான் தீனாவுக்கு துணையா இருக்கேன்..."என்றான்.
"ம்ம்ம்ம்.. பார்த்துக்குங்க.. என்றுவிட்டு ஏதாச்சும்னா கால் பண்ணு தீனா.."என்றவர் அரவிந்திடம் போலாம் என கண்ணசைக்க "டேய், பார்த்து பத்திரமா இரு நாங்க ஊருக்கு போகல சித்துவுக்கு என்னென்னு பார்த்துட்டு எல்லோருமே போகலாம் மனச தளரவிடாம இரு என்ன ஆனாலும் பார்த்துக்கலாம்.." என்றுவிட்டு மதனையும் பூரணியையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்ப "அவங்கள அனுப்பிட்டு வரேன் தீனா நீ இங்கயே இரு.." என நாகு கூறிவிட்டு அவர்களுடன் சென்றான்.
மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு ஆளுக்கொரு இருக்கையில் அமர்ந்தனர்.
அந்நேரம் மதனுக்கு கால் வர அங்கு சிக்னல் கிடைக்காக காரணத்தினால் அவன் சற்று தொலைவிற்கு சென்றான் கையில் மொபைலை ஏந்தியபடி.
இப்போது இருவரும் மட்டும் அமர்ந்து இருக்க "சோ... இப்ப மட்டும் எப்படி மதனோட குழந்தை வயித்துல..." என கேட்ட குரலில் அதிர்ந்து பார்த்தாள் பெண்ணவள்.
"என்ன முழிக்கிற எனக்கு எதும் தெரியாதுன்னு நினைச்சின்னா அது உன்னோட மிஸ்டேக்...?" என்க.
"அதுக்காக எங்க பெட்ரூமுக்கு கூட ஆள் வைப்பியா நீ... இவ்ளோ கேவலமான ஜென்மமா நீ...?" என கேட்டாள் அவள் அத்தனை கோபம் அவளுக்கு.
"ச்சே.. ச்சே.." அந்தளவுக்கு கீழ்த்தரமானவன் இல்ல நீ செக்கப் போற ஹாஸ்பிடல்ல இருந்து மெஸேஜ் வந்துச்சு.."என்க.
"எங்கதான் உனக்கு ஆள் இல்ல..?" என அவள் கேட்க.
"பணக்காரனா இருக்கவனுக்கு எல்லா இடத்துலயும் கண்ணு வச்சிக்கனும் இல்லனா தூக்கிப்போட்டு போய்ட்டே இருப்பானுங்க இந்த உலகத்தை பத்தி தெரியல உனக்கு இங்க பணம்தான் முக்கியம் பணம் இல்லனா தெருவுல போற நாய்கூட மதிக்காது..." என்க.
"போதும் உன் பிரசங்கத்த நிறுத்து உங்கூட பேச எனக்கு விருப்பம் இல்ல...' என்க.
"ஓகே.. ஆனா என்னைக்காவது என் உதவி தேவைப்பட்டா நீ தயங்காம எங்கிட்ட வரலாம்.." என்க
"ஒருநாளும் அப்படி வரமாட்டேன்.." என அவள் கூறி முடிக்கவும் மதன் போன் பேசிவிட்டு வரவும் சரியாக இருக்க அவள் முக மாறுதலை வைத்தே ஏதோ சரியில்லை என உணர்ந்தவன் "பூரணி ஏன் ஒரு மாதிரி இருக்க இவன் ஏதாச்சும் பேசினானா சொல்லு இன்னைக்கு அவன உண்டு இல்லன்னு பண்ணிடறேன்.." என சண்டைக்கு போக அதெல்லாம் "ஒன்னும் இல்ல மதன் வா நாம கொஞ்ச நேரம் வெளிய போலாம்.." என அவனையும் அழைத்துக் கொண்டு தீனாவை முறைத்துவிட்டு சென்றாள் பூரணி.
தீனாவின் கண்களில் ஒரு எள்ளலோடும் உதட்டில் இகழ்ச்சியோடும் போகும் இருவரையும் பார்த்துக் கொண்டு இருந்தான்.
சென்னையிலோ தீனாவின் அன்னையின் முன் தீனாவும் அன்புவும் மருத்துவமனையில் சண்டையிட்டுக் கொண்டது புகைப்படமாக கிடந்தது..
உபயம் மாலினி மற்றும் அஞ்சலி